தன்வினை .... - 8
By N Krishnamurthy
இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு சௌஜன்யா, வினயா நட்பில் பெரும் விரிசல் விழுந்தது. இருவரும் அதிகம் பேசிக் கொள்வதே இல்லை. ஜகனுடைய தங்கை திருமணத்திற்கு சென்ற போது கூட இருவரும் தனித்தனியாகவே சென்று வந்தார்கள்.
ஜகன் தங்கை திருமணம் முடிந்த மூன்றாவது மாதம், ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை குளித்துவிட்டு, தனது அறையில், தலையை துவட்டிக் கொண்டிருந்தாள் வினயா.
ஹாலில் கணேசன் தினமலரை படித்துக் கொண்டிருந்தார். உள்ளே சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் விமலா.
காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு கணேசன் வாசலுக்கு சென்று பார்த்தார் . ஒரு தம்பதிகள் நின்று கொண்டிருந்தார்கள். "வினயாவின் வீடு இதுதானே" என்று கேட்டார் வந்திருந்தவர். "ஆமாம். சொல்லுங்கள். நான் தான் வினயாவின் அப்பா. நீங்க யார் என்று தெரிஞ்சிகலாமா" என்று கேட்டார் கணேசன்.
"வந்தவர்களை வாங்க என்று உள்ளே கூப்பிட மாட்டீர்களா "என்று சிரித்துக்கொண்டே கேட்டார் வந்தவர்.
"சாரி. உள்ள வாங்கோ"
என்று கூறி அவர்களை உள்ளே வர வழித்து சோபாவில் உட்கார வைத்தார் கணேசன். இதற்குள் தலையை துவட்டிக் கொண்டிருந்த வினயா கிடுகிடுவென சமையல் ரூமுக்கு சென்றாள். "ஏண்டி இப்படி ஓடி வர. யார் வந்திருக்கா ஹால்ல" என்று கேட்டாள் விமலா.
"யாரே ஒரு மாமாவும், மாமியும் வந்திருக்கா. அவா என்ன பாக்கல.நான் அவாள பாத்துட்டேன்.எங்கயோ பாத்த மாதிரி நெனப்பு இருக்கு. ஆனா சரியா ஞாபகத்துக்கு வரல" என்றாள் வினயா.
ஹாலில் அமர்ந்திருந்த புதிதாக வந்தவர்" என் பெயர் ராஜாராமன். இவ என் மனைவி சுமதி. என்னுடைய பையன் ஜகன் உங்க பொண்ணு வினயா வேலை செய்யும் ஆபீஸ்ல வேலை பண்றான். கரெக்டா சொல்லணம்னா அவன் தான் வினயாவுக்கு பாஸ்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்
"அப்படியா. உங்களையெல்லாம் பாத்தது ரொம்ப சந்தோஷம்" என்றார் கணேசன்.
"இதுக்கே சந்தோஷப்பட்டா எப்படி. நான் இன்னும் வந்த விஷயத்தையே சொல்லலயே." என்றார்.
இதற்குள் விமலா கையை துடைத்துக் கொண்டு, துணியை சரி செய்து , தலையை கோதிக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
"இது விமலா. என் ஒய்ப்"என்று அவளை அவர்களை அறிமுகப்படுத்திய கணேசன் விமலாவிடம் "இவா ரெண்டு பேரும் வினயா ஆபிஸ்ல வேல பண்ற ஜகன்றவரோட பெத்தவா" என்று கூறினார். வந்த இருவரும் விமலாவைப்பார்த்து"நமஸ்காரம் "என்றனர்
.பதிலுக்கு அவர்களுக்கு விமலாவும் நமஸ்காரம் சொன்னாள்.
ராஜாராமன் தொடர்ந்து "சுத்தி வளச்சி பேச நாங்க இஷ்டப்படல. ஜகனுக்கு உங்கள் பெண் வினயாவை ரொம்ப பிடிச்சு போய்ட்டது. அவனோட தங்கை அதிதிக்கு கல்யாணம் ஆகி 3 மாசம் ஆறது. அவனக்கு பெண்பார்க்க. ஆரம்பிக்கலாம்னு இருக்கறப்போ அவன் இந்த விஷயத்தை எங்ககிட்ட சொன்னான்" என்றார். கணேசனும் விமலாவும் இந்த எதிர்பாராத ந்யூசால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நிற்க, அதிலிருந்து முதலில் விடுபட்ட விமலா சுதாரித்து கொண்டு "காப்பி சாப்படறேளா"என்று கேட்டாள். இதற்கு சுமதி "பேஷா சாப்பிடலாம். இவருக்கு ஹாஃப் ஷுகர். காப்பியை உங்க பொண்ணுகிட்ட கொடுத்தனுப்புங்கோ" என்றாள்.
ஐந்து நிமிஷத்தில் இரண்டுடம்ளர் காபியை ஒரு ட்ரேயின் மேல் வைத்து, விமலாகூட வர, வினயா ஹாலுக்கு வந்தாள். அவளைப் பார்த்த சுமதி "அதிதி கல்யாணத்துக்கு நீ வந்திருந்தேன்னு ஜகன் சொன்னான். அப்பவே விஷயம் தெரிஞ்சிருந்தா உன்னை நான் நண்ணா பாத்திருப்பேன். விஷேஷமா கவனிச்சிருப்பேன்" என்றாள் சிரித்துக்கொண்டே.
இதைக்கேட்ட வினயா புன்னகைத்தாள்.விமலா வினயாவின் காதை கடிக்க,வினயா கையிலிருந்த காலி ட்ரேயை அருகிலிருந்த டீப்பாயின் மேல் வைத்துவிட்டு, அவர்களை விழுந்து நமஸ்கரித்தாள். "சௌபாக்யவதியா இருக்கணம் "என்று ஆசீர்வதித்தாள் சுமதி
No comments:
Post a Comment