தன்வினை....-13
By N Krishnamurthy
கோபாலன் நம்பூதிரியை பற்றி விவரிக்க முற்படும் போது கன பொருத்தமாக 13 ஆம் எபிசோட் வருகிறது.
நம்பூதிரிக்கு கேரளாவிலுள்ள ஆலப்புழா அருகில் ஒரு சிறிய கிராமம். படிப்பு அதிகமாக ஏறவில்லை. எஸ்.எஸ்.எல்.சி வரை தான் படித்து முடித்து இருந்தார். பார்ப்பதற்கு கொஞ்சம் சுமாராக இருப்பார். சென்னைக்கு போனால் சினிமாவில் நடித்து பேரும் , புகழும் பெறலாம் என்று ஆசையில் சென்னைக்கு ஓடி வந்தார். பல ஸ்டுடியோக்களில் ஏறி இறங்கியும் அவருக்கு சரியான ஆப்பர்சூனிட்டி கிடைக்கவில்லை. ஆனால் பலரின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. ஜோசியம் பார்த்து கொடுப்பது, சோழி பிரசன்னம் பார்ப்பது போன்ற வேலைகளில் அவர் ஈடுபடுவார். இதெல்லாம் அவருக்கு தெரியும் என்று நினைக்கவேண்டாம்.
ஆனால் நம்பூத்ரி என்ற பெயர் கை கொடுத்தது. குருட்டாம் போக்கில் இதை செய்து கொண்டிருக்க, ஒன்று இரண்டு சமயங்களில் இது பலித்து போனதால் அதை வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.
இதைத்தவிர டான்ஸ் சீன்களில் நடனமாட கேரளாவிலிருந்து இளஞ்சிட்டுகளையும் ஏற்பாடு பண்ணி, அதிலும் கொஞ்சம் பணம் தேற்றுவார்.
சௌஜன்யாவிடம் பேசிவிட்டு வந்த பிறகு இது விஷயமாக என்ன செய்வது என்று யோசித்துப் பார்த்தார். அவருக்கு தெரிந்த இன்னொரு மலையாள மாந்திரீகர், கோடம்பாக்கத்தில் இருந்தார். இவர் கோபலன் நம்பூத்ரியை போல அல்லாமல் கொஞ்சம் விஷயம் தெரிந்தவராக இருந்தார். அவரை சென்று பார்த்த போது அவர் இதற்கு ஒரு வழி சொன்னார். "அதற்கு எவ்வளவு ஆகும்" என்று கேட்டார் கோபாலன் நம்பூத்ரி. "என்ன ஒரு 3000 செலவழிக்க வேண்டும்" என்று கூறினார் மாந்த்ரீகர். "அவ்ளோ பணத்துக்கு நான் எங்கே போவேன். 2000 ரூபா பரவாயில்லையா" என்று கேட்டு ரெண்டாயிரம் ரூபாய்க்கு டீலை முடித்தார். சௌஜன்யாவிடமிருந்த பத்தாயிரம் வாங்கி, இவருக்கு ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்தது போக, மீதி இருக்கும் எட்டாயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு பதினைந்து நாட்கள் ஓட்டி விடலாம் என்று கோபாலன் நம்பூத்ரி நம்பினார்.
மறு நாள் மாலை சௌஜன்யாவிடமிருந்து பத்தாயிரத்தை வாங்கி,கோடம்பாக்கம் மாந்த்ரீகருக்கு இரண்டாயிரம் ரூபாயை கொடுத்தார். அடுத்தநாள் மாலை மாந்த்ரீகர் வேலை முடிந்ததாக கூறினார்.அவர் கொடுத்த பிளாஸ்டிக் கவரை சௌஜன்யாவிடம் கொடுத்து என்ன செய்ய வேண்டும் என விவரித்தார்.சௌஜன்யா பணம் கொடுத்து விட்டாளே தவிர உயிருக்குயிராக பழகிய தோழிக்கு த்ரோகம் செய்கிறோமே என்ற சிறு தயக்கம் இருந்தது.
இரண்டு துண்டு சீட்டுக்களை எடுத்து, ஒன்றில் எஸ் என்றும், மற்றொன்றில் நோ என்றும் எழதி,இரண்டையும் சுருட்டி, பகவதி அம்மன் படத்தின் முன் குலுக்கிப்போட்டு அதிலிருந்து ஒரு சீட்டை எடுத்து, அதன்மூலம் முடிவெடுக்கலாம் என எண்ணிணாள். பகவதி உத்தரவு தரவில்லை என்றால் என்னாவது என்ற பயம் பிடித்துக்கொண்டது.
நட்பை காதல் வென்றது.
மறு நாள் நம்பூத்ரி சொன்னமாதிரி செய்யலாம் என்று நினைத்து இரவு நன்றாக உறங்கினாள்.
No comments:
Post a Comment