Tuesday, April 30, 2024

பிரண்டை முழுமையான பதிவு...

 பிரண்டை முழுமையான பதிவு...

வேறுபெயர்கள் -: வச்சிரவல்லி.

 ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன.

முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது மலைப் பகுதியில்தான் அதிகம் காணப்படும்.

இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண் பிரண்டையின் கணுவு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும், காரத்தன்மையும். எரிப்புக் குணமும், மைக்ககும் இயல்பும் உடையது.இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது.

பிரண்டை உப்பு -: பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டிஅரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.

பேதி, வாந்தி -: குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.

வாய்ப்புண் - :வாய் புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேழை மூன்று நாள் கொடுக்க கணமாகும்.

வயிற்றுப்புண் -: தீராத வயிற்றுப்புண், குன்மக்கட்டி, வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 - 96 நாள் இரு வேழை சாப்பிட குணமாகும்.

மூலம் -:நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வெண்ணெயில் 24 -48 நாள் இரு வேழை கொடுக்க குணமாகும்.

பிரண்டை பற்பம் - : 300 கிராம் பிரண்டை100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்துபுடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.

உடல் பருமன் -: பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.

ஆஸ்துமா -: இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.

சூதகவலி - : மூன்று வேழை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.

தாதுநட்டம் -: பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.

செரியாமை -: பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக் கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவரு உடலுக்கு வன்மை தரும்.

நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.

பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேழையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.

காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்துஇரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்கஇந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்றுதுளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வரபெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.

பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு,முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.

முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.

பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊரவைத்து வேழைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.

பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.இதனை உணவில் சேர்த்துவர மூலநோய், மலச்சிக்கல், வயிற்றெரிவு, குடற்புண் என்பன நீங்கும். செரியாமை, சுவையின்மை நீங்கிப் பசியுண்டாகும்.

வஜ்ஜிரவல்லிச் சூரணம் செய்யப் பயன்படுகிறது.

உடல் தேற

சிலர் உடல் மெலிந்து எப்போதும் சோகமாகக் காணப்படுவார்கள். இவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.

வயிற்றுப் பொருமல் நீங்க

வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

இரத்த மூலநோய் குணமாக

மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.

செரிமான சக்தியைத் தூண்ட

சிலருக்கு மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

முதுகு வலி, கழுத்து வலி குணமாகk

சிலர் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இவர்களின் எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.

இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.

இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.

எலும்பு முறிவுக்கு

எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.

இதயம் பலப்பட

உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர் களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன.

பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பெண்களுக்கு சூதக வலியின்போது ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.

பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும். 

கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.

மெலிந்த உடல் குண்டாக

ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.

வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

பிரண்டை துவையல்

எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். அவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.

இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம். 

மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்

GL

Monday, April 29, 2024

தன்வினை....32

 தன்வினை....32

By N Krishnamurthy 

ஆற்றங்கரையிலிருந்து அனைவரும் திரும்பி வந்தனர். இரவு உணவு உண்டதும் வீட்டிற்கு வெளியே இருந்த திண்ணையில் அனைவரும் கூடி நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அந்த காலத்தைப்பற்றி பேச்சு எழும்போது,சுமதி தன் மகன் ஜகன் சிறு வயதில் இன்னும் நல்ல கலராகவும், சுருள் முடியுடன் அழகாக இருப்பான் என குறிப்பிட்டாள். இதைக்கேட்ட சிதம்பரம் "நேக்கு ஓரு ஜோக் ஞாபகத்துக்கு வரது. இதை ஜோக்கா எடுத்துண்டு சிரிச்சூடுங்க.யாரும் தப்பா எடுத்துக்க வேணாம் "என்ற பீடிகையுடன் தொடங்கிய பின்  "ஒரு ஊர்ல ஒரு ஆளுக்கு கல்யாணம் ஆகி நாலு வருடம் கழித்து குழந்தை பிறந்ததாம். இந்த சமாஜாரத்தை எதிர் வீட்டிலிருந்த காமு பாட்டிகிட்ட அந்த ஆள் சந்தோஷமாக "பாட்டி எனக்கு ஆண் குழந்தை பொறந்திருக்கு"என்று சொன்னானாம்.  பாட்டி"ரொம்ப சந்தோஷம்டா. கொழந்த யார் ஜாடை "என்று கேட்டாளாம். அந்த ஆள் உற்சாகமாக "கொழந்த என் ஜாடை "என்றானாம். காமு பாட்டி "கவலைய விடு. ஆம்பள கொழந்த அழகாயில்லேன்னா பராவாயில்ல " என்றாளாம். இதைக்கேட்ட அங்கிருந்தவர்கள்,சுமதி உட்பட, வாய் விட்டு சிரித்தார்கள்.

மறுநாள் எழுந்து, குளித்த பிறகு, பிரேக்பாஸ்ட் முடித்து கிளம்ப தயாரானார்கள்.

கேசவதாசுக்கு ஜகனும், வினயாகவும் ஜோடியாக நமஸ்காரம் செய்தார்கள். 

" ஒத்துமையா இருங்கோ.சகல சௌபாக்யம் சித்தி ரஸ்து" என்று அவர் ஆசீர்வதித்தார். ஒரு தட்டில் பத்தாயிரம் ரூபாய் வைத்து கேசவதாசுக்கு  கணேசன் கொடுத்தார். அதே கேசவதாஸ் வாங்க மறுத்து விட்டார். " ஏற்கனவே உங்க கிட்ட வாங்கிண்ட வந்த பணமே எதேஷ்டம். உங்க பொண்ணு கல்யாணத்துக்கு என் சார்பில இதை ஓதி விட்டுடுங்க"என்றார். கணேசனும், விமலாவும்  "கல்யாண பத்திரிக்கை அனுப்புறோம். நீங்க அவசியம் வந்து நடத்திக் கொடுக்கணும்" என்றார்கள். அதற்கு கேசவதாஸ் "உங்க பொண்ணு கல்யாணம் பண்ற சமயத்துல எனக்கு இதுபோல வேற வேலை வந்தூட்டா நான் வரது கஷ்டம். இல்லன்னா அவசியம் கலந்துக்கறேன்" என்றார்.வினயாவை கவனித்துக் கொண்ட இருந்த பெண்மணிகளுக்கும், அர்ஜுனனுக்கும் சில ஆயிரம் ரூபாய்களை வெகுமதியாக அளித்தார் கணேசன். 

சுமார் மூன்றங்குல உயரமிருந்த ஒரு வெள்ளி பகவதி அம்மன் விக்ரஹத்தை வினயாவிற்கு அளித்த கேசவதாஸ் "ப்ரதி திவசம் குளிச்சதக்கப்புறம், மடி உடுத்திண்டு அம்மனை வேண்டிக்கோ. பாலோ,பழமோ, கல்கண்டோ நைவேத்யம் பண்ணு. அம்மன் உன் பங்குல இருப்பா"என்றார்.

எட்டு மணிக்கு திருசூர் செல்லும் பஸ்ஸில் அனைவரும் ஏறி திருசூரை அடைந்தார்கள். 

ஓன்பதரை பஸ் பிடித்து பதினோரு மணிக்கு சோட்டானிக்கரா சென்று பகவதி அம்மனை தர்சித்தார்கள்.

திரும்பவும் திருசூர் வர கிட்டத்தட்ட இரண்டு மணி ஆனது.ஹோட்டல் ஆர்யாவில் பகலுணவை முடித்தனர். பின்னர்  வடக்குநாதனை  தரிசித்தார்கள்.

மாலை ஒரு வேன் பிடித்து குருவாயூர் போய் சேர்ந்தனர்.கோவிலுக்கு அருகில் இருந்த ஒரு லாட்ஜில் ஜகன் மூன்று ரூம்கள் புக் செய்தான். சிறிது நேரம் லாட்ஜில் கழித்த பிறகு கோவிலுக்கு சென்று  குருவாயூரப்பனை கண்குளிர தரிசனம்  செய்தார்கள்.

மூன்று குடும்பமும் அங்கு இரவு தங்கினார்கள். மறுநாள் சீக்கிரமே எழுந்து, குளித்து நிர்மால்ய தரிசனமும் செய்தார்கள். பிறகு கிளம்பி திருசூர் வந்து அங்கிருந்து பஸ் பிடித்து கோயம்புத்தூர் வந்தார்கள். மதியம் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸில் அவர்கள் ஆறு பேருக்கும், சிதம்பரம் மூலம் EQ கோட்டாவில்,  ரிசர்வேஷன் கிடைத்தது. பின்பு சிதம்பரம் அவர்களிடம் "நானும், சாரதாவும் கெளம்பறோம்" என்றார். சிதம்பரத்தின் கைகளை பிடித்துக் கொண்ட கணேசன் கண்களில் நீர் பெருக"  அன்னிக்கு நீங்க என்ன சார்ங்கபாணி கோவில்ல அடையாளம் கண்டுபிடித்து பேசலேன்னா இது போல நான் இன்னிக்கி  நிம்மதியா இருந்திருக்க முடியுமான்னு நெனக்கறேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதூன்னே தெரியல" என்று கூறினார். இதைக் கேட்டு சிதம்பரம் சிரித்தார். "  தோ, பார். கணேசா நீ என்ன பாத்தது ஏதோ எதேச்சயா நடந்துதூன்னு  நெனைச்சுக்காத. எல்லாத்தையும்  பகவான் பிளான் போட்டு வச்சிருக்கான். அவன்தான் நான் உன்ன பாத்து அடையாளம் கண்டு பிடிக்கணும்னு நெனைச்சிருக்கான். அதேபோல  உன் பொண்ணுக்கு ஏற்பட்ட இந்த கஷ்டத்தை நிவர்த்தி பண்ணனும் அவன் தான் மனசுல நெனச்சிருக்கான். அதுக்கு என்ன ஒரு கருவியா பயன்படுத்தினான். நான் தான் உன் பொண்ண சரிப்படுத்தினேன்னு   நெனைச்சிண்டிருந்தா என்ன போல  முட்டாள் வேறு யாரும் கெடையாது" என்று கூறினார்.  சிதம்பரத்தை போன்ற ஒரு பரோபஹாரியை தனக்கு கணவனாக கொடுத்ததற்கு சாரதா மீண்டும் ஒருமுறை மனதிற்குள் கடவுளுக்கு நன்றி சொன்னாள்.

சிதம்பரம் அவர்களைப்பார்த்து "சீக்ரமேவ  விவாக பிராப்த்திரஸ்து" என்று ஆசீர்வதித்தார்.  சிதம்பரம், சாரதாவை  அழைத்துக் கொண்டு காந்திபுரம் பஸ் ஸ்டேண்ட்  சென்று கும்பகோணத்திற்கு  பஸ் பிடித்தார். 

அன்று மாலை கோவையில் இருந்து கிளம்பிய அனைவரும், இரவு பத்து மணிக்கு சென்னை  சென்ட்ரலை அடைந்தார்கள். அப்பொழுது ராஜா ராமன் கணேசனிடம் " இனிமே ஆத்துக்கு போய் என்ன பண்ண போறீங்க. வெறும தூங்கணும் ,அவ்வளவு தானே. பேசாம நம்பாத்துக்கு வந்துடுங்கோ. நாளைக்கு  ஜோசியரை பார்த்து கல்யாணத்துக்கு நாள் குறிக்கலாம்" என்றார். கணேசன் "அதெல்லாம் சரி.குறித்த நாளுக்கு  கல்யாண மண்டபம் கிடைக்க வேண்டாமா" என்று கேட்டார்.  இதைக் கேட்ட சுமதி "கவலைப்படாதீங்க மாமா. மண்டபம் கெடக்கலேன்னா கோவில்ல வெச்சு கல்யாணத்த முடிச்சிக்கலாம்.சிறிசுகள் ஏற்கனவே கஷ்டம் அனுபவிச்சூட்டா.சீக்ரம் அவா தம்பதிகளாகட்டும் " என்று கூறினாள். 

சென்ட்ரலில் இறங்கி  ஒரு டாக்ஸி வைத்துக் கொண்டு எல்லோரும் ஜகனுடைய வேளச்சேரி வீட்டிற்கு விரைந்தார்கள் .

தன்வினை....-30 & 31

தன்வினை....-30

By N Krishnamurthy 

அன்று  மாலையே எல்லோரும் விடை பெற்றுக் கொள்வதாக தீர்மானித்தார்கள்.

கேசவதாஸ் அவர்களிடம் "பிரயாணத்திற்கு நாளைக்கு நாள் நண்ணாயிருக்கு. காலைல ப்ரக்பாஸ்ட் முடிச்சதும் புறப்படுங்கோ" என்றார்.

மாலை சிதம்பரத்தை தவிர மீதி அனைவரும் ஆற்றங்கரைக்கு கிளம்பி போனார்கள்.

கேசவதாஸ் சிதம்பரத்திடம்பேச வேண்டும் என்று சொன்னதால் அவர் போகவில்லை.

எல்லோரும் ஆற்றுக்கு கிளம்பிச் சென்றவுடன், கேசவதாஸ் சிதம்பரத்திடம் நான் "ஒண்ணு, ரெண்டு முக்கியமான விஷயங்களை உங்ககிட்ட பிரஸ்தாபிக்கலாம்னு தான் உங்களை இருக்க சொன்னேன்" என்றார். உடனே சிதம்பரம் "சொல்லுங்க கேட்டுக்கறேன்" என்று கூறினார்.

 உடனே கேசவதாஸ் "நான் சொல்ற விஷயங்களை நீங்க மனசுல வச்சிண்டிருந்தா போதும். அவாளுக்கு சொல்லணம்னு அவசியம் இல்லை" என்று கூறினார்.

"ஆஹா, அப்படியே ஆகட்டும்" என்றார் சிதம்பரம். கேசவதாஸ் அவரிடம் " இதை ஒரு ஆண் கேட்டுக் கொண்டதின் பேரில் ஒரு மாந்திரீகர். செஞ்சிருக்கார் . அந்த ஆண், இவா கூட ஒரு பையன் இருக்கானே,  இவா மாப்பிள்ளை, அவனுக்கு தாய் வழியில் சொந்தமா இருக்கலாம்னு தெரியறது" என்றவர் சிதம்பரத்திடம் "நிறைய கேரளத்து மாந்திரீகர்கள் இதுபோல செய்தவர்களுக்கு திருப்பி இந்த செய்வினையை ஏவி விட்டூடுவா.  ஆனா எங்க வம்சத்தில் நாங்க அதுபோல பண்றது இல்ல. அது பண்றதும்  ஒண்ணு தான், செய்வினை செய்யறதும் ஒண்ணு தான். செய்வினை செய்தவனும் சரி, செய்ய சொன்னவனும் சரி, பிற்காலத்தில் நசிச்சு  போயிடுவா. ஒரு வேடிக்கை என்னன்னா அவாளுக்கு ஒண்ணுமே ஆகாது . அவ ரொம்ப அதிகமா நேசிக்கிற அவ பரம்பரையில் இருக்கிற பேரனையோ, பேத்தியையோ  இது ரொம்ப படுத்தும். செய்வினை பண்ணவனையும்,பண்ண  சொன்னவனையும் இது ஒண்ணு பண்ணாது .ஆனா அவ ரொம்ப நேசிக்கிற அவ சொந்தக்காரா  மேல இது தன் வேலையை காட்டிடும். சில சமயம் அவ பரம்பரையே நாசமா போறதும் உண்டு " என்றார்.

இதைக் கேட்டு சிதம்பரம்"அப்படி பண்றவாளுக்கு பகவான் மன்னிப்பு கொடுக்க மாட்டானா" என்று கேட்டார். இதைக் கேட்ட கேசவ தாஸ் "பகவான் கருணாஸ்வரூபிதான்.  நம்ம பண்ற தப்பு எல்லாம் மன்னிப்பான். ஆனா இது மகா தப்பு. இதை மன்னிக்க  அவன் மனசுல இடமே இருக்காது. எப்பவாவது  ரேரா  யாருக்காவது கருணை காட்டுவான். ஒண்ணு , ரெண்டு வருஷம் அனுபவிச்சிட்டு அவா சரியாயிடுவா. அதுக்கு கூட பூர்வ ஜென்மத்தில் அவாளுக்கு அந்த பலன் இருக்கணும். மத்தபடி யாருக்கும் மன்னிப்பு தர மாட்டான்" என்றார் கேசவ தாஸ்

" எனக்கு ரொம்ப நாளா ஒரு சின்ன சந்தேகம்" என்றார் சிதம்பரம். "சொல்லுங்க, என்ன சம்சயம்" என்றார் கேசவ தாஸ்.

"  இந்த செய்வினையை எல்லார் மீதும் ஏவி விட முடியுமா" என்று கேட்டார் சிதம்பரம். அதைக் கேட்ட கேசவ தாஸ் கிட்டத்தட்ட 98% ஜனங்க மேலே இதை ஏவி விட முடியும். மீதி 2% பேர் இருக்காளே, அவ கிட்ட இதனுடைய பாச்சா பலிக்காது. அப்படிப்பட்டவா மகா யோகியா இருக்கணும். இதுபோல ஆபீசாரம்  ஏற்பட்டால் கூட உடனடியாக நிவர்த்தி பண்ணிக்க அவாளால முடியும் " என்று கூறினார்.

தன்வினை ....-31

"உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்னு நெனக்கறேன். நான் சொல்லப்போற விஷயத்த நான் காது வழியாத்தான் கேட்டிருக்கேன். இது உண்மையிலேயே நடந்துதான்னு நேக்கு தெரியாது" என ஆரம்பித்த கேசவதாஸ் தொடர்ந்தார்.

 "நீலகண்ட ஸ்வரூபமான காஞ்சி மஹா  பெரியவர் ஏதோ ஓர் ஊரில முகாம் பண்ணியிருந்தாளாம். அங்கு இருந்த ஒரு வம்பன் , ஆபிசாரம் எனப்படும் வேலைகள் செய்து மக்களுக்கு மருந்து வைப்பது, மந்திரம் வைப்பது, பில்லி, சூனியம் என்று பணம் பண்ணுபவனுக்கு ஒரு விபரீத எண்ணம் வந்தது. பெரியவர் அங்கு வந்திருப்பது தெரிந்து, ‘நான் பெரியவனா, இல்லை அவரா, பாத்தடறேன்" என்று, "என் சித்து மற்றும் வசியம் முன் அவர் என்ன செய்ய முடியும், இன்று அவரை என் வசியத்தால் கட்டிப்போடுகிறேன்" என்றெல்லாம் ஆர்பரித்திருக்கிறான்.

பலர் எடுத்து சொல்லியும் அவன் கேட்பதாக  இல்லை.

அவன அன்னிக்கு திருத்தணும்னு பகவான் முடிவு பண்ணீட்டான் போல இருக்கு.

அன்று பெரியவர் பண்ற சந்த்ரமௌளீஸ்வரர் பூஜையை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தாளாம். இந்த ஆளும்  சென்று  கடைசியாய் இருந்துண்டு கையில் மையை வெச்சிண்டு என்னென்னவோ செய்தானாம். அங்கே அந்த பரப்ரம்மம் பூஜையில் ஒன்றி விட்டிருந்தார்.

பூஜை முடிந்தது. தீர்த்த  பிரசாத விநியோகம் நடந்தது. ஸ்வாமிகள் கை சொடுக்கி இவனை அழைத்தார் . இவனுக்கோ ஒரே ஆச்சிரியம். எப்படி இந்த  ஜனக்கூட்டத்தில்  நம்மை குறி வைத்து அழைக்கிறார் என்று. " யாரை வசியப்படுத்துவேன் என்றானோ, அவரிடமே வசியப்பட்டு, யாரை பொம்மை ஆக்குவேன் என்றானோ அவரிடமே பொம்மையென சென்றான், அமர்ந்தான்.

"பின்னாடி திரும்பி பார்’.என்றாராம் பெரியவா.

பின்னாடி திரும்பியவனுக்கு பிரமை பிடித்தது போலானது.பின்னால் இருந்த மொத்த அடியார் கூட்டமும், பெரியவராய் தெரிந்தது அவருக்கு. ஆம், *எங்கெங்கு காணினும் பெரியவா.

கதறி கதறி அழுதான் நம்ப ஆள். பெரியவா   காலில் விழுந்தான்.  மன்னிக்க கோரினான்.சரணாகதி பண்ணிணான்.

 பெரியவா சொன்னாராம் ‘சித்து பெரிய விஷயமே இல்லை. ஒருத்தர் கிட்ட கூட ஒனக்கு நல்ல பேரு இல்லே.  கெட்ட வழிலே இவ்வளவு பணம் பண்ணிருக்கே’ என்றாராம்.

‘அத்தனையும் விட்டுடறேன். பெரியவா கூட மடத்துக்கு வந்து சொச்ச காலத்தையாவது சேவகம் பண்ணி பாவத்தை  போக்கிகறேன்’ என்றான் அவன்.

‘இல்லே, இன்னும் நிறைய இருக்கு ஒனக்கு. பாவ வழிலே சம்பாதிச்சாலும் பணம் பணம் தான். அதனாலே அத்தன பணத்தையும் நல்ல வழிலே செலவு செய். நெறைய கல்யாணம் பண்ணி வை, ஏழை கொழந்தளை படிக்க வை, அம்பாளை சதா  ப்ரார்த்திச்சிண்டே இரு.

நீ இதுவரை பண்ணியிருக்க பாவத்தை நெனச்சு,நெனச்சு, வருந்தி, அதுக்கு பரிஹாரம் பண்ணு. எல்லோரோட க்ஷேமத்துக்காகவும் உழச்சயான்னா , நீயும் க்ஷேமமா இருப்பே’என்றாராம் அந்த கருணாமூர்த்தி.

'பார்த்த மாத்திரத்தில் பாவத்தை பொசுக்கற அந்த அக்னி, அப்படியே குளிர்ந்த நீரா அவனுக்கு சாதிச்சதாம்" என்று முடித்தார் கேசவதாஸ்.

சிதம்பரம் கண்ணில் நீர் பெருக " ஹர ஹர  சங்கர,சிவ சிவ சங்கர "என்று கூறி உள்ளம்நெகிழ்ந்தார்.

திருப்போரூர் ஸ்கந்தனின் பெருமை:

 திருப்போரூர் ஸ்கந்தனின் பெருமை:

"முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். 

திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை (உலகம் நிலையானது என்ற எண்ணம்) அடக்கினார். 

திருப்பரங்குன்றத் தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை (வினைப்பயன்) அழித்தார். 

திருப்போரூரில் விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார்.

இதனால் திருப்போரூரில் கந்தசுவாமி என்ற பெயரில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. 

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோவில் உள்ளது.

இத்தலத்தில் தமிழ்க் கடவுள் முருகன் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் ஓம் எனும் பிரணவ மந்திர மலை மீது அமைந்து இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் கிழக்கு நோக்கியுள்ள இத்தலத்தில் முருகனை மனம் உருகி வழிபட்டால் முருகரின் அறுபடை வீடுகளையும் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

இத்தலத்தில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் உள்ளார். இங்குள்ள முருகர் தன்னை சுயம்பு உருவாக வெளிப் படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்போரூருக்கு “யுத்தபுரி” என்றும் ஒரு பெயர் உண்டு. திருச்செந்தூரில் கடலோரத்திலும், திருப்பரங்குன்றத் தில் தரையிலும் அசுரர்களுடன் மோதி, சண்டையிட்டு வென்ற முருகன், இத்தலத்தில் அசுரர்களை விண்ணில் போர் புரிந்து அழித்தார்.

போர் நடந்த தலம் என்பதால் அந்த வரலாற்றுப் பின்னணியில் இந்த ஊர் “திருப்போரூர்” என்று அழைக்கப்படுகிறது. 

ஒருசமயம் விருத்தாசலத்தில் சிதம்பர சுவாமிகள் என்பவர் சமாதி நிலையில் தியானம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரின் தவத்தில் முருகபெருமான் காட்சி தந்தார்.

திடுக்கிட்டு கண் திறந்து பார்த்த சிதம்பர சுவாமிகள், “இதற்கு என்ன காரணம்? கனவில் முருகப் பெருமான் வந்தாரே. தூக்கத்தில்தானே கனவு வரும். நாம் தியானம்தானே செய்தோம். அப்படியானால் என் மனம் முருகனை நினைத்து தியானிக்காமல் அமைதியாக உறங்கியதா?.” என்று மனதில் பல சந்தேக குழப்பங்கள் ஏற்பட்டது சிதம்பர சுவாமிகளுக்கு.

இதனால் மதுரைக்கு சென்று மீனாட்சியம்மனை வேண்டி 45 நாள் கடும் தவம் இருந்தார் சிதம்பர சுவாமிகள். அத்துடன் “கலிவெண்பா” பாடினார். இதை கேட்டு மகிழ்ந்து அவர் தவத்தை ஏற்று அன்னை மீனாட்சி காட்சி தந்து, “தேவையில்லாமல் மன குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம்.

முருகன் உன் தவத்தை ஏற்றுதான் உன் கனவில் காட்சி தந்தான். நீ திருப்போரூருக்கு செல். அங்குதான் அகத்திய முனிவர் முருகபெருமானிடம் ஞானோபதேசம் பெற்றார். அத்துடன் அலைமகள் அவ்விடத்தில் தவம் செய்து அவருக்கு இருந்த சாபத்தை நீங்கி திருமாலுடன் இணைந்தார்.

இவ்வாறான சிறப்பு வாய்ந்த இடத்தில் முருகனும் அவருடைய தேவிகளும் மண்ணுக்குள் மறைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு கோவில் கட்ட இதற்கு முன்பு 6 தடவை முயற்சிகள் நடந்து தோல்வியில் முடிந்து விட்டது.

எனவே நீ அவர்களை பூமியில் இருந்து எடுத்து அந்த இடத்தில் கோயில் கட்டு” என்றாள் அன்னை மீனாட்சி. அன்னை அருளியதை போன்று சிதம்பர சுவாமிகள் உடனே திருப்போரூருக்கு திரும்பினார்.

அங்கு பல இடங்களில் முருகப் பெருமானின் சிலையை தேடினார். பனை மரகாடாக இருந்த அந்த ஊரில் அன்னை கூறியது போல் ஒரு இடத்தில் முருகபெருமானும் அவருடன் வள்ளி – தேவயானை சிலையாக தோன்றினார்கள். அந்த இடத்திலேயே ஆலயத்தை கட்டும் பணியை தொடங்க நினைத்தார்.

ஆனால் தன்னிடம் அத்தனை பணவசதி இல்லை. அப்படி இருக்கும் போது அன்னை மீனாட்சி தன்னிடம் இப்படி ஒரு திருப்பணிப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாரே என்று தவித்தார். அப்போது, திண்டிவனத்தை அடுத்து கிளியனூரிலிருந்து ஒர் அம்மையார், பொன் ஒன்றை எடுத்து வந்து, “சுவாமி நீங்கள் கோயில் கட்டுவதாக கேள்விபட்டேன்.

என்னுடைய சிறு காணிக்கை.” என்று கூறி சிதம்பர சுவாமிகளிடம தந்தார். மறுநாளே சென்னை பாளைத்தா செட்டியார் என்பவர் இரண்டு பை நிறைய தங்க நகைகளை திருப்பணிக்காக சுவாமிகளிடம் கொடுத்தார். இதுபோல் இறைவனின் சக்தியால் பலர் சிதம்பர சுவாமிகளுக்கு உதவ முன் வந்தார்கள்.

இதன் மூலம் சிதம்பர சுவாமிகள் கோவிலை கட்டி முடித்தார்.

பனை பாத்திரம் :

இத்தலத்தில் ஸ்ரீ சிதம்பர சுவாமிகளால் முருகன் சிலை கண்டறியப்பட்ட போது அது ஒரு பனை மரத்தில் செய்யப்பட்ட பாத்திரத்தால் மூடப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்தை தற்போது கோவில் அலுவலகத்தில் வைத்துள்ளனர். அட்சய பாத்திரத்தைப் போல இந்த பனை பாத்திரம் செல்வத்தை தருவதாக ஐதீகம். நைவேத்தியத்திற்கான அரிசியை இதில் தான் வைத்துள்ளனர்.

மருமகள்களுக்கு நவராத்திரி :

நவராத்திரி நாட்களில் வள்ளி, தெய்வானைக்கு ஒன்பது விதமான அலங்காரம் செய்யப்படும். சிவனைப்போல இங்கு ஐப்பசி பவுர்ணமியில் முருகனுக்கு அன்னா பிஷேகமும், சிவராத்திரியன்று இரவிலும் நான்கு கால பூஜையும் நடக்கிறது.

முருகன் உருவ அமைப்பு :

கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப் பட்டுள்ளன.

முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் விளங்குகிறார்.

அருள்பாலிக்கும் குக்குடாப்தஜர் :

மூலவர் சன்னதி பக்கவாட்டில் அவரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது.

 *பாஸ்போர்ட், விசா கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் இருந்தால், வெளிநாடு செல்ல முடியாதவர்கள், இவருக்கு அர்ச்சனை செய்து வேண்டினால், உடனே நிறை வேறும் எனவும், வெளி நாட்டில் உள்ள உறவினர்கள் நலமாக இருக்கவும் இவரை வேண்டிக் கொள்கிறார்கள்.*

திருபூவனூர்_சதுரங்க_வல்லபநாதர்

 திருபூவனூர்_சதுரங்க_வல்லபநாதர் 🙏

சதுரங்கம்_தோற்றுவித்தவர்_சிவபெருமானே    சதுரங்க விளையாட்டு  தோன்றிய  நமது தமிழகத்திலேயே என்கிறது  புராணம்.  நம் பிரதமர் முன்பொருமுறை குறிப்பிட்ட திருப்புவனூர் சதுரங்க வல்லபநாதர் ஆலய தலவரலாற்றை இங்கே காண்போம்.  பிரதமர் கூறியதற்கு   ஆதாரமாகத் திகழ்கிறது திருபூவனூர்   திருத்தலம்.

        தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரையோரமாக அமைந்துள்ள 103 வது  திருத்தலமே  #பூவனூர். இது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  சைவ  திருத்தலமாகும். நறுமணம் வீசும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் வனமாக இந்த ஊர் முற்காலத்தில்  இருந்ததால் இதற்கு ‘புஷ்பவனம்’ என்ற பெயர் ஏற்பட்டது.   பிற்காலத்தில் அது பூவனூர் என்றானது.

    இத்தலத்து  சிவபெருமானுக்கு ஶ்ரீசதுரங்க வல்லபநாதர் என்பது பெயர். உற்சவர்_ புஷ்பவனேஸ்வரர்   இங்கு  சிவபெருமானுடன் கற்பகவல்லி,  இராஜராஜேஸ்வரி ஆகிய இரு அம்பிகையர்  உண்டு.  இந்த ஆலயத்தில் அன்னை சாமுண்டீஸ்வரியும் கோயில் கொண்டுள்ளார்.

தலவிருட்சம் __ பலா

தீர்த்தம்__க்ஷீரபுஷ்கரிணி

        இத்தலத்தைப் பற்றி  அப்பபெருமான், தேவாரப் பதிகத்தில் __

"ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே"என்று போற்றிப் பாடியுள்ளார் . 

உமாபதி சிவாச்சாரியார் எழுதிய "திருப்பதிகக் கோவை" மற்றும் இராமலிங்க அடிகளார் இயற்றிய  #திருவருட்பா ஆகியவற்றிலும்  பூவனூர் தல மகிமை  கூறப்பட்டுள்ளது.

தலவரலாறு__

     வசுசேனன் என்ற மன்னருக்கு மகளாகத் தோன்றிய அம்பிகையை சதுரங்கப்போட்டியில் வெற்றி கொண்டு  சிவனார் மணந்தாராம். எனவே  இத்தலத்தில் சிவனாருக்குச் சதுரங்க வல்லபேசுவரர் என்ற திருநாமம்  ஏற்பட்டது.  

இங்கு அருளும் ஈசனுக்கு சதுரங்கவல்லபர் என்று திருநாமம் ஏற்பட்ட தலவரலாறு__

      முற்காலத்தில்  தென்பாண்டி நாட்டை வசுசேனன் என்னும் மன்னர்  ஆண்டுவந்தார். அவருக்கு  நீண்ட காலமாக வாரிசு இல்லை.  மன்னரும் அவர் மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள். பரிபூரண ஆயுள் கொண்ட இருவருக்கும் இந்தப் பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்த அன்னை  உமாதேவியார்,     அவர்களுக்கு அருளும்படி வேண்டினார். நம்மை  அனுதினமும்   பூஜிக்கும் பக்தர்களை இப்படி மனம் வாடவிடலாமா?  என பார்வதி தேவி, மகேஸ்வரனை வேண்ட,  அதற்குச் சிவபெருமானும்,   இநதப் பிறவியில் அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது விதி. ஆனால், நீ பூலோகத்தில் பிறந்து, அவர்களுடைய குழந்தையாக வளர்ந்து வா. உரிய நேரத்தில்  நான்  வந்து உன்னை மணப்பேன்!  என்றார்.

      வசுசேனரும் காந்திமதியும்,  வாரிசு  வேண்டி ஒவ்வொரு சிவாலயங்களாக வழிபட்டு வந்தார்கள் .  ஒருநாள்  அவர்கள்  தாமிரபரணி ஆற்றில் நீராடும் போது, தாமரை மலரின் மீது  ஒரு அழகிய சங்கு  இருப்பதைக் கண்டு, அதையெடுக்க,   அது  ஓர் அழகிய பெண் குழந்தையாக மாறியது.  இது  அந்தச் சிவனாரே  தங்களுக்கு அனுப்பிய குழந்தை; இது உமா தேவியின் அவதாரம்!  என எண்ணி அக் குழந்தைக்கு  #இராஜராஜேஸ்வரி  என்று பெயரிட்டு பேரன்புடன் வளர்த்து வந்தனர்

            .சக்தியே குழந்தை வடிவாக பூமியில் இருப்பதால், குழந்தையை கவனிப்பததற்கென சப்தமாதாக்களில் ஒருவரான சாமுண்டிதேவியையும் பூமிக்கு அனுப்பினார் சிவபெருமான்.  . குழந்தையின் வளர்ப்புத்தாயாக உருவெடுத்து வந்த சாமுண்டீஸ்வரி, ஆய கலைகள் அனைத்தையும் குழந்தை இராஜராஜேஸ்வரிக்குக் கற்றுக்கொடுத்தாள். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தள் இளவரசி   இராஜராஜேஸ்வரி   ஆனால் சநாதனதர்மம் ( =இந்து சமயம்) கூறும் 64 ஆயக்கலைகளில் சதுரங்க விளையாட்டில் தன்னிகரற்று விளங்கினாள் அம்பிகை_இராஜராஜேஸ்வரி.

       இளவரசி  திருமண வயதை எட்டியபோது, "என் மகளை சதுரங்க விளையாட்டில் யார் வெல்கிறார்களோ, அவர்களுக்கே அவளை மணம் முடித்துத் தருவேன்" என்று  முரசறைந்து தெரிவித்தார்    #மன்னர்_வசுசேனர்.பல நாட்டு இளவரசர்களும் போட்டிக்கு  வந்தபோதிலும், யாராலும்  இராஜராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வெல்ல முடியவில்லை.  அனைவரும் தோற்றுப் போய்விட, வருந்திய மன்னர்,   தனது அறிவிப்பினாலேயே  தன் மகளுக்கு திருமணமாகாதோ ? என்று கவலையடைந்து சிவபெருமானே இதற்கு ஒரு வழியைக்  கூற வேண்டுமென வேண்டினாராம் .

          தன் குடும்பத்தோடு காவிரியின் தென்கரையிலுள்ள சிவாலயங்களையெல்லாம்   தரிசிக்க தல யாத்திரை கிளம்பினார் மன்னர். பல சிவாலயங்களைத் தரிசித்தப்  பின்னர் *திருபூவனூர் வந்தனர். புஷ்பவன நாதரைத் தரிசித்து, தன் மனக்குறையை,  சிவபெருமானிடம் முறையிட்டு,  புலம்பி விட்டு அங்கேயே சிறிது காலம் குடும்பத்துடன் தங்கினார் மன்னர். 

        மறுநாள் காலையில், ஒரு  வயோதிகர்  மன்னரைச் சந்தித்து, ‘‘என்னுடன் உங்கள் மகளால் சதுரங்கம் ஆடமுடியுமா?’’ என்று கேட்டக. அரசனும்  சம்மதிக்க,  சதுரங்க ஆட்டம் இராஜராஜேஸ்வரி யுடன்  தொடங்கியது. அதுவரை சதுரங்கத்தில் தோல்வியே கண்டிராத  இளவரசி இராஜராஜேஸ்வரி, அந்த முதியவரிடம் சதுரங்கத்தில்  தோற்றுவிட்டாள்.

       இந்நிலையில் மன்னருக்கு தனது அறிவிப்பு நினைவுக்கு வந்தது.  என் மகளை சதுரங்க ஆட்டத்தில் வெல்பவர்களுக்கு அவளை மணம் புரிந்து தருவேன்!   என்று கூறினோமே ?  இப்பொழுது எப்படி இந்த வயதானவருக்கு  தன்னருமை மகளை  மணம் முடித்துக் கொடுப்பது?  என்று பெரும் கவலையுடன் சிவபெருமானை நோக்கி மன்றாடினார்  மன்னர்.

      மறுகணமே   அங்கே முதியவர் மறைந்து செம்மேனி முக்கண்ணனான சிவபெருமானாக  இளமையோடு காட்சியளித்தார்.  உடனே மன்னரும் அவர் மனைவி காந்திமதியும் மகிழ்ந்து சிவபெருமானை   வணங்கித்  தன் மகள் அம்பிகையின் அவதாரம்!  என்றுணர்ந்து அம்பிகையைச்  சிவபெருமானுக்கு மணமுடித்துக் கொடுத்தனர்.

           சதுரங்க ஆட்டத்தில் வென்று,  இராஜராஜேஸ்வரியை மணந்ததால், அவருக்குச் ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் இங்குள்ள இறைவனுக்கு அது முதல் ஏற்பட்டது.(#சதுரங்க_வல்லீஸ்வரர் என்றும் கூறுவர்).   அன்னை  இராஜராஜேஸ்வரிக்கு  வளர்ப்புத் தாயாக வந்த சாமுண்டீஸ்வரிக்கும் தனியே  சந்நிதி உண்டு. இங்கே சாமுண்டீஸ்வரி தேவி மிகவும் சக்தி உடையவராக விளங்குகிறார் .

        சதுரங்க விளையாட்டில் நல்ல தேர்ச்சியடைய  விரும்புவோர்  திருபூவனூர்  வந்து சதுரங்க வல்லப நாதரை வேண்டி வணங்கினால்   சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்கலாம் என்பது  ஐதீகம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானது  திருபூவனூர்_ஆலயம். 

         ஆஸ்துமா தொந்தரவு,  பூச்சிக்கடி, விஷக்கடி,பிற  விலங்குகள் கடித்த விஷம்   போன்ற பிரச்னைகளையும் தீர்க்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது. கோயிலின் அகன்ற திறந்தவெளிப் பிராகாரத்தில், அருள்மிகு #கற்பகவல்லி_அம்பாளும் அருள்மிகு #இராஜராஜேஸ்வரி_அம்பாளும் தெற்கு நோக்கி அருள்கிறார்கள். அதே பிராகாரத்தில், தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது.  இங்கு கோயில் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி, மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லாக் கோயில்களிலும் சப்தமாதாக்களுள் ஒருவராக இருக்கும் சாமுண்டி, இங்கே தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறாள்.

          மைசூருக்கு அடுத்தபடியாக, சாமுண்டீஸ்வரிக்கென தனிச் சந்நிதி அமைந்திருப்பது பூவனூரில் மட்டும்தான். விஷ ஜந்துக்களின் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து பலனடைகின்றனர்.  ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை, சாமுண்டீஸ்வரி சந்நிதியில் இருக்கும் ஒரு வைத்தியர், எலிக்கடி மற்றும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு, மந்திரிக்கப்பட்ட ஒரு மூலிகை வேரைக் கையில் கட்டிவிடுகிறார். 

               அதற்கு முன்பாக பக்தர்கள் #க்ஷீரபுஷ்கரணியில் நீராடி,  சாமுண்டீஸ்வரி சந்நிதிக்கு வந்து, வைத்தியர் கொடுக்கும் மூலிகை வேரைக் கையில் கட்டிக்கொண்டு, சாமுண்டிக்கு அர்ச்சனை செய்யகிறார்கள். அதன் பிறகு வைத்தியர் கொடுக்கும் மந்திரித்த மிளகை வாங்கி  உண்கிறார்கள். அதன் மூலம் அவர்களுடைய உடலில் இருக்கும் விஷம் முழுவதுமாக குணமாகிவிடுகிறது  என்பதற்கு இங்கு கூடும் பக்தர்களே சாட்சி 

            பிரபஞ்சத்திற்கே நாயகியான அம்பிகைக்கு வளர்ப்புத் தாயாக விளங்கியவள் அல்லவா இந்தச்  #சாமுண்டீஸ்வரி.   எனவே அவரை வணங்கி மந்திரித்த மூலிகைவேரைக் கையில் கட்டிக்கொண்டு மந்திரித்த மிளகை உண்டு பக்தியோடு சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கிவர, அனைத்து விஷகடிகளும் முறிந்து, அனைத்து   நோய்கள் விலகி பக்தரகள் நலமோடு திரும்பிச் செல்கின்றனர். 

         முதன்முதலில்  இவ்வுலகிற்கே #சதுரங்க_ஆட்டம் என்றொரு  விளையாட்டுக் கலையை தோற்றுவித்தவர்  நம்  #தென்னாடுடைய_சிவபெருமானே. அதை அம்பிகையோடு அவர் விளையாடி #சதுரங்கவல்லபநாதர்    என்ற திருநாமத்தையும் பெற்று,  இங்கே விளங்குகிறார் ஈஸ்வரனார். எனவே அனைத்து கலைகளிலும் வெற்றி அடைய  நாம்  இந்தச் சிவபெருமானை  வேண்டி வழிபடுவது அவசியம்.

  சதுரங்கத்தின்_பூர்வீகம்_திருபூவனூர்_ஆன்மிகப்பூமியாம்_நமது_புனிதமான_தமிழகம்

 சதுரங்கவல்லப_நாதரே_போற்றி 🙏 #இராஜராஜேஸ்வரியே_போற்றி 🙏#சாமுண்டீஸ்வரியே_போற்றி 🙏

தன்வினை....-28 & 29

தன்வினை....-28

By N Krishnamurthy 

அதற்கு ஒரு வாரம் கழித்து சிதம்பரம் வந்திருந்தார். அவரும் இரண்டு நாட்கள் இருந்து விட்டு சென்றார்.

கிட்டத்தட்ட முப்பது நாட்கள் பூஜை முடிந்தது. வினயாவின் போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. முன்பு மாதிரி பூஜையின் போது எழுந்து செல்ல முயற்சிப்பதில்லை. முன்னம் மாதிரி அதிகம் கத்துவதும் இல்லை . ஆனால் மிகவும் சோர்வாக இருந்தாள். 

பூஜை நாற்பதாவது நாள் நடக்கும் பொழுது ஜகனும், சிதம்பரமும் சேர்ந்தே வந்திருந்தார்கள். ஜகனுக்கு வினயாவை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவள் மிகத் தெளிவாக இருந்தாள். அன்று மாலை கேசவ தாஸ் கணேசன், ஜகன், சிதம்பரம் மற்றும் விமலாவை கூப்பிட்டு அனுப்பினார். வினயா ரூமில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். அப்பொழுது கேசவதாஸ் அவர்களிடம் "பொண்ணு எப்படி இருக்கா" என்று கேட்டார். இதைக் கேட்ட விமலா "ரொம்ப நல்ல குணம் தெரியறது. அனேகமா முற்றிலும் சரியா போய்ட்டான்னு நெனைக்கிறேன்" என்றாள்.  அதற்கு கேசவ தாஸ் " அதே. பொதுவாக இதுபோல கேஸ்களில் 42 ஆவது நாளில்  பரிபூரண குணம் ஆகிவிடும். மீதி ஆறு நாட்கள் அவர்கள் பூஜையில் மிகுந்த ச்ரத்தையுடன் பங்கு கொள்வார்கள்" என்று கூறினார். சிதம்பரம் அவரிடம்"  48ம்  நாள் பூஜை முடிந்த உடனே நாங்கள் இவளை சென்னைக்கு அழைத்துக் கொண்டு சென்று விடலாமா" என்று கேட்டார். "தாராளமாக சென்றுவிடலாம். போகும் போது ஒரு முறை சோட்டானிக்கரா  பகவதி அம்மன், திருசூர் வடக்குநாதர் , குருவாயூர் கிருஷ்ணன் ஆகிய தெய்வங்களை  தரிசனம் பண்ணீட்டு போங்கோ. இதுவரை நீங்கள் கொடுத்த எண்பதாயிரம் போதும். மேல் கொண்டு நீங்கள் ஒன்றும் எனக்கு தர வேண்டாம்"என்று கூறினார்.

அன்று மாலை வினயா  கண் விழித்ததும் ஜகனைப் பார்த்து "கொஞ்சம் வாக்கிங் போயிட்டு வரலாமா" என்று கேட்டாள். ஜகன் மிக சந்தோஷமாக "தாராளமாக போய்ட்டு வரலாம்"  என்று கூறி அவளை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த ஆற்றங்கரை பக்கம் போய் சேர்ந்தான். 

ஆற்றங்கரையில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது . அதற்கடியில் கருங்கல்லாலான பெரிய மேடை இருந்தது. அதன் மேல் இருவரும் அமர்ந்து கொண்டார்கள். 

ஆற்றின் நீர் மேல் தவழ்ந்து வந்த தென்றல்,இவர்கள் இருவரையும்  ஜில்லென வருடிக் கொடுத்தது. வினயா அவனிடம் " இப்பல்லாம் நான் ரொம்ப ரிப்ரெஷிங்கா பீல் பண்றேன். மனசுல, இந்த ஆத்துல அடிக்கிற அலை மாதிரி சந்தோஷம் அலை பாயறது . இப்பல்லாம் தூக்க மாத்ரை இல்லாமலே நண்ணா தூங்கறேன். நேத்து தான் அப்பா, அம்மா கிட்ட பேசினேன். எனக்கு என்ன ஆச்சுன்னு சொன்னா. அவா சொன்னத கேக்கும் போது எனக்கு ஆச்சரியமா இருந்தது. யார் எனக்கு இப்படி செஞ்சிருக்க முடியும்னு நேக்கு தோணவே இல்லை. இதை  எல்லாம் விட ரொம்ப முக்கியமான விஷயம். ஒரு சராசரி ஆண் பிள்ளையா இருந்தா, நிச்சயமான ஒரு பெண்ணிற்கு இதுபோல ஆனவுடன் எப்படிடா தப்பிச்சிண்டு போகலாம்னு தான் யோசித்து இருப்பான்.  ஆனா நீங்க ஒரு சாதாரண ஆண்  இல்ல. என்னை எந்த சமயத்திலும் கைவிடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் எனக்கு உடம்பு சரியாக இவ்வளவு தூரம் உழைச்சு இருக்கீங்க. இதுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. நமக்குள்ள இருக்கிற பந்தம் பூர்வ ஜென்மத்திலேந்து  தொடரர்தூன்னு  நேக்கு தோணறது "என்றாள் உணர்ச்சி பெருக்குடன்.  ஜகன் " என்னைக்கு நீ ஆபீஸ்ல முதல்ல நுழஞ்சயோ அன்னைக்கே நீ என் மனசுல நொழஞ்சூட்ட. நீதான் என் மனைவீன்னு தீர்மானிச்சூட்டேன். அதன் பிறகு நடந்ததெல்லாம் என்னை பொறுத்தவரை தேவையில்லாதது என்று நினைக்கிறேன். நீ பரிபூரணமாக குணமாயிட்டத பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு.மெட்ராஸ்  போனதும் கூடிய சீக்கிரம் ஒரு நல்ல முகூர்த்த நாளாக பார்த்து, நாம் இருவரும் மணவாழ்க்கையில் அடி எடுத்து வைக்கணம்" என்று கூறி அவள் கைகளை பற்றினான்.

அவள், அவன் ஸ்பர்சம் பட்டதும், நாணத்தில் முகம் சிவந்தாள்.

தன்வினை....-29

வினயா " அப்பா மட்டும் இந்த சிதம்பரம் மாமாவ பாக்கலேன்னோ என்ன ஆயிருக்கும்னு நெனச்சாலே பயமாயிருக்கு" என்றாள். 

அதற்கு ஜகன் "சிதம்பரம் சாரை போல ஒரு பரோபகாரியை நான் பாத்ததே இல்லை. நேக்கும், உன்ன பெத்தவாளுக்கும் உன்ன சரி பண்ணறதுல ஒரு வெஸ்டட் இண்டரஸ்ட் இருக்கூன்னு வெச்சிகலாம். சம்மந்தமே இல்லாத சிதம்பரம் சார் நமக்கு பண்ணியிருக்கு உதவிக்கு நம்ப வாழ்நாள் பூரா கடமை பட்டிருக்கணம்.

நமக்கு பொறக்கற முதல் கொழந்தைக்கு சிதம்பரம்னு பேர் வெக்கணம். அவன் பேர சொல்லி கூப்பிடும்போதெல்லாம் நமக்கு சிதம்பரம் சார் செஞ்ச பெரும் உதவி ஞாபகம் வந்துண்டே இருக்கணம் "என்றான். 

வினயா வெட்கத்தை முகத்தில் கூட்டி, "அப்போ ரெண்டாவது கொழந்த பொண்ணா பொறக்கணமா" என்றாள்."உனக்கு அதுவே ஆசைன்னா நேக்கும் ஓ.கே தான் " என்று சொல்லி ஜகன் சிரித்தான்.

இருவரும் இப்படி சந்தோஷமா பேசிக்கொண்டே  திரும்ப அக்ரஹாரத்தில் உள்ள கேசவதாசின் வீட்டிற்கு திரும்பினார்கள்.

நாற்பதாவது நாள் பூஜையில் கலந்து கொண்ட ஜகனும், சிதம்பரமும் மறுநாள் கிளம்பி கோயம்புத்தூர் சென்று, அங்கிருந்து ஜகன்  மெட்ராஸுக்கும், சிதம்பரம் கும்பகோணத்துக்கும் சென்றார்கள். திருசூரிலிருந்து கோயம்புத்தூருக்கு பஸ்சில் செல்லும் பொழுது" சார் 48வது நாள் பூஜைக்கு நான் வருவதாக  இருக்கிறேன். நீங்களும் வரீங்களா"என்று கேட்டான். அதை  கேட்ட சிதம்பரம் "அடேடே.நானும் அதே மாதிரி தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.

"47 வது நாள் காலை டே எக்ஸ்பிரஸ் பிடித்து மதியம் ரெண்டு மணிக்கு நான் கோயம்புத்தூர் வந்து விடுகிறேன். அந்த சமயத்தில் நீங்களும்  கோயம்புத்தூர் வந்துவிட்டால் நாம் இருவரும் அங்கிருந்து பஸ் பிடித்து  இரவுக்குள் பெருவனம் சென்று விடலாம்" என்று கூறினான். "சரி" என்று  சம்மதித்தார் சிதம்பரம். 

47 வது நாள் மதியம் ஜகன் மற்றும் ராஜா ராமன், சுமதி ஆகிய மூவரும் கோயம்புத்தூர் வந்து இறங்கினார்கள். ஸ்டேஷனில் சிதம்பரம் காத்துக் கொண்டிருந்தார். சிதம்பரத்தின் அருகில் ஒரு கண்ணியம் மிக்க, அழகிய பெண்மணி நிற்பதை கண்ட ஜகன் "சார். இது ... "என்று கேட்டான். "இதுதாம்ப்பா என் சகதர்மிணி சாரதா" என்று தன் மனைவியை ஜகனுக்கும், அவன்பெற்றோர்களுக்கும்  அறிமுகப்படுத்தினார் அவர். பின்பு ஜகன் தன்னுடைய பெற்றோர்களை சிதம்பரத்துக்கும், சாரதாவுக்கும் அறிமுகப்படுத்தினான். 

எல்லோரும் ஸ்டேஷன் எதிர்புற சந்தில் இருந்த கீதா ஹோட்டலுக்கு போய் வயிறார உண்ட பின்னர்,உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்கு ஆட்டோ பிடித்தார்கள். அங்கு அரை மணி நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டி இருந்தது. பின்னர் வந்த திருசூர் பஸ்ஸில் ஏறி மாலை 5:30 மணிக்கு திருசூரை அடந்தார்கள். ஜகன் அப்பொழுது சிதம்பரத்திடம் "சார் இங்க இருந்து பஸ் பிடிச்சு பெருவனம் போக வேண்டாம். ஒரு டாக்சி பிடிச்சுண்டு போயிடலாம்" என்றான். "சரி, ஜகன் .நீ என்ன சொல்றயோ அப்படியே செய்வோம்" என்றார் சிதம்பரம். டாக்சி பிடித்து அவர்கள் அவர்கள் நால்வரும் பெருவனம் போய் சேரும் போது இரவு மணி 8 ஆனது. இவர்களை பார்த்து "வாங்க" என்று வரவேற்ற கேசவதாஸ்"முதல்ல போய் சாப்டூட்டு வாங்க" என்றார். இலையின் முன் அமர்ந்ததும்,  அருமையான அரிசி உப்புமாவும், கத்திரிக்காய் கொத்சும் பரிமாறப்பட்டது. அன்று இரவு அவர்களுக்கு இரண்டு எக்ஸ்ட்ரா ரூம்களை கேசவதாஸ் அரேஞ்ச் பண்ணி இருந்தார். 

ராஜா ராமனையும், சுமதியையும் எதிர்பார்க்காத வினயா அவர்களை பார்த்தவுடன் "வாங்கோ" என்று கூறி, அவர்களுக்கு நமஸ்காரம் செய்தாள். "நல்லபடியா இரும்மா" என்றார் ராஜாராமன். சுமதி அவளை அணைத்துக்கொண்டாள். ராஜாராமனும், சுமதியும் , வினயாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவள் எப்படி இருந்தாள் என்று தெரியாததால், இப்போது அவளைப் பார்க்கும்போது அவர்களுக்கு ஒன்றும் வித்தியாசமே தெரியவில்லை. சிதம்பரம், சாரதாவை கணேசன்,விமலா, வினயாவிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் எல்லோரிடமும் " நான் கொஞ்சம் பூசின  மாதிரி இருக்கிறத்துக்கு  காரணம் சாரதா பண்ணி  போடுற சமையல் தான். நேக்கு கொஞ்சம் நாக்கு நீளம். சாரதா சாப்பாட்ட, சாப்ட்டு சாப்ட்டு  நான் இப்படி ஆய்ட்டேன்  " என்று கூறி சிரித்தார். இதைக் கேட்டு சாரதா உட்பட அனைவரும் சிரித்தார்கள்.சாரதா அவர்களிடம்  "எந்த சூழ்நிலையிலும் எதாவது ஜோக்கடித்து சுற்றி இருப்பவர்கள் மூடை லைட்டாக்குவதுதான் இவர் பலமும், பலவீனமும்" என்றாள்.

மறுநாள் 48வது நாள் பூஜை மிகப் பிரமாதமாக நடந்தது. ஹோமம் முடிந்து பூர்ணாஹுதி ஹோமாக்னியில் இடப்பட்டது. எழுந்த அக்னி ஜ்வாலையில் பகவதியின் ரூபம் தெரிந்தது. சிதம்பரமும் மற்றவர்களும் அம்மனை கண்டு பரவசமடைந்தனர். கேசவதாஸ் பெருங்குரலில் "அம்மே.பகவதி"என்று கூறி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தவர்,பின் மூர்ச்சையானார். இதை ப்பார்த்த  எல்லோரும் கவலை அடைந்தனர். அர்ஜுன் அவர்களிடம் "விசனிக்க வேண்டாம். தாஸ் சேட்டனுக்கு அம்மன் ரூபத்தை நோக்கினதும் இங்ஙனமே  சம்பவிக்கும். அஞ்சு நிமிஷத்தில் சரியாயிடும்"என்றான்.

கொஞ்ச நேரத்தில் கண்விழித்த கேசவதாஸ் விமலாவை பார்த்து பூஜையில் வைத்திருந்த இரண்டு குடங்களை காட்டி "இதை கொண்டு போய் உங்க பொண்ணுக்கு அபிஷேகம் பண்ணி மாத்து ட்ரெஸ் போட்டு அழச்சிண்டு வாங்கோ "என்றார். விமாலா பத்து நிமிடத்தில் வினயாவை அழைத்து வந்தாள். குங்குமத்தை கொடுத்து வினயாவை இட்டுக்கொள்ள சொன்ன கேசவதாஸ் அவள் மணிக்கட்டில் மந்தரித்த பகவதி அம்மன் படம் போட்ட டாலரை கட்டினார். பின்னர் அவளைப்பார்த்து அவர் "நீ ஈலோகத்தில் ஜீவத்திருக்கிற நாள் பர்யந்தம் எந்த துர்சக்தியும் உன்ன அணுகாது. இதுக்கு நான் கேரண்டி" என்றார்.

சிதம்பரத்திற்கு கேசவதாசின் குரலே வித்யாசமாக பட்டது.

தன்வினை....-27

 தன்வினை....-27

By N Krishnamurthy 

மறு நாள் காலை பிரேக்பாஸ் முடித்துக் கொண்ட பிறகு பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால், சிதம்பரமும், ஜகனும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு திருசூருக்கு பஸ் பிடிக்க கிளம்பிச் சென்றார்கள். 

கிளம்புவதற்கு முன் சிதம்பரம் கேசவதாசிடம் "வினயாவுக்கு தூக்க மாத்திரை கொடுத்திண்டிருக்கு.அதை தொடரணமா,நிறுத்தூடலாமா "என்று கேட்டார்.

அதற்கு கேசவதாஸ் "தோ பாருங்கோ. பல காரணங்களால மனக்லேசம் ஏற்படறது. சிலபேர் தங்க கஷ்டத்தை வெளியிலே சொல்லாம, மனசுலே போட்டு வெச்சிண்டு மருகிண்டிருப்பா.நாளாவட்டத்ல மனசு கொழம்பி போய், மன சிதைவு உண்டாகறது.

சிலருக்கு செய் வினையால இப்படி ஆறது. பாத்திரத்து தண்ணீல அடீல கலங்கியிருந்தா நம்ப என்ன பண்றோம்? படிகாரத்தை தண்ணீல சேக்கறோம். தண்ணி தெளிவாயிடறது.

அது போல கொழம்பி இருக்கற மனசு தெளிவடைய தூக்க மாத்ரை அவசியம் போட்டுக்கணம். நான் செய்யற பூஜைல இந்தபொண்ணுக்கு கொஞ்சம்,கொஞ்சமா குணமாகும் போது மாத்திரையின் அளவையும்,மாத்திரை போட்டுக்கும் காலத்தையும் கொறச்சுகலாம். முழுசும் குணமான பிற்பாடு ஈஸ்வர த்யானம்ற மகா ஔஷதம் தான் உதவும். நானே மாத்திரையை எப்ப கொறைக்கணம்னு சொல்றேன்" என்றார்.

அந்த இடத்தை விட்டு கிளம்பு முன் சிதம்பரம், தூக்க மாத்திரை பற்றி கேசவதாஸ் சொன்ன விளக்கத்தை கணேசனுக்கு சொன்னார்.

கிட்டத்தட்ட 10 நாட்கள் ரொட்டீனாக பூஜை போய்க்கொண்டிருந்தது. கணேசனுக்கும், விமலாவிற்கும் வினயாவுக்கு  கொஞ்சம் குணம் இருப்பது மாதிரி  தெரிந்தது. 

பதினைந்து  நாட்கள் போனதும் ஜகன் வந்திருந்து இரண்டு நாட்கள் இருந்து விட்டு சென்றான்.அவனும் வினயா உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக உணர்ந்தான்.

தினமும் காலையிலும், மாலையிலும் கணேசன் தவறாமல் சுப்ரமண்ய மாலா மந்திரத்தை ஒதிக்கொண்டிருந்தார்.

சில நாட்கள் ஆனதும்,கணேசனும், விமலாவும், மாலையில் அங்குள்ள மகாதேவர் கோவிலுக்கு வினயாவை அழைத்துச்சென்றனர்.

துணைக்கு அந்த இரண்டு பெண்களும் வந்தாலும், அவர்களுக்கு வேலை தராமல் இருந்தாள் வினயா.

அங்கிருந்த குருக்கள் இவர்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்திருப்பதை அறிந்ததும், உற்சாகமாகி, தனக்கு தெரிந்த தமிழில் "பரசுராமர் உண்டு பண்ண அறுபத்தி நாலு கிராமங்கள்ல பெருவனத்துக்கு முக்ய இடம் இருக்கு.

ஹஸ்தினாபுரத்த ஆண்ட *யயாதி* ராஜாவின் குமாரரான   *பூரு மகரிஷி* இந்த அம்பலத்த  கட்டினாராம். ஆதில இந்த ஊருக்கு பூருவனம்தான் பேரு. நாளாவட்டத்ல பெருவனும்னு ஆய்ட்த்து.

இங்க சிவனுக்கு ரெண்டு சன்னதிகள் இருக்கு. வடவண்ட இருக்றது ரெட்டயப்பன் சன்னதி.ரெட்டயப்பன் சன்னதில ரெண்டு சிவ லிங்கங்கள் இருக்கு. 

தென்னண்ட இருக்றதுமாததிலப்பன் சன்னதி. இத தவிர பக்கத்ல பத்ரகாளி,சுப்ரமண்யர் கோவில்களும் உண்டு.

இங்க இருக்கற சிவன் மகா சக்தி வாஞ்சவர். அவர நண்ணா வேண்டிக்கோங்கோ.கர்ம வினையெல்லாம் அழிஞ்சு போய்விடும்  "என்றார்.

வினயாவிற்கு மனம் கொஞ்சம் கொஞ்சமாக  தெளிய ஆரம்பித்தது. 

தூக்க மாத்திரை தினம்  இரண்டு வேளை கொடுத்துக்கொண்டிருந்தவர்கள், கேசவதாஸ் சொன்னபடி, இப்போதெல்லாம் இரவு மாத்திரம், அதுவும், அரை மாத்திரை மட்டும் கொடுத்தார்கள்.

Thursday, April 25, 2024

அழகிய சாந்த மணவாளப் பெருமாள் திருக்கோயில்

 அருள்மிகு அழகிய சாந்த மணவாளப் பெருமாள் திருக்கோயில்,

அர்ஜுனாபுரம்,
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் – அழகிய சாந்த மணவாளப்பெருமாள்.
உற்சவர் – அழகிய சாந்த மணவாளப் பெருமாள்.
தாயார் – பத்மாவதி தாயார்.
தல விருட்சம் – உறங்காப்புளி.
தீர்த்தம் – இறங்காக்கிணறு.
பழமை – 500 வருடங்களுக்கு முன்.
புராணப் பெயர் – தர்மாரண்யக்ஷேத்திரம்.
ஊர் – வத்திராயிருப்பு.
மாவட்டம் – விருதுநகர்.
மாநிலம் – தமிழ்நாடு.

வத்திராயிருப்பு பகுதியை புராணகாலத்தில் தர்மாரண்ய க்ஷேத்திரம் என்று அழைத்தனர். இங்குள்ள மலைப்பகுதி  “தர்மாத்ரி” என்று குறிக்கப்படுகிறது. அர்ஜுனன் தீர்த்தயாத்திரை செய்தபோது, இப்பகுதிமக்கள் வறட்சியால் நீரின்றி தவித்ததைக் கண்டு வருந்தினார். உடனே, தன் வில்லை எடுத்து பூமியை நோக்கி அம்பு தொடுத்தார். அந்த இடத்தில் அழகிய பொய்கை உருவானது. அப்பொய்கை அர்ஜுனப் பொய்கை என்றும், அங்கிருந்து உற்பத்தியான நதி “அர்ஜுனாநதி” என்றும் பெயர் பெற்றது. ரிஷிகளிடம் ஸ்ரீதேவியான லட்சுமி தாயார், “பூலோகத்தில் தவம் செய்வதற்கு சிறந்த இடம் எது?” என்று கேட்டாள். அவர்கள் இத்தலத்தைப் பற்றி சொன்னதும், அங்கு வந்தாள். இடத்தைப் பார்த்தவுடனேயே அவள் முகம் மலர்ந்தது. “லட்சுமி முகம் மலர்ந்த இடம்” என்பதால் “”ஸ்ரீவக்தரம்” (திருமகள் திருமுகம்) என்னும் பொருளில் இத்தலம் அழைக்கப்பட்டுவந்தது. பின்னாளில் “ஸ்ரீ வக்த்ரபுரம்” என்றாகி வத்திராயிருப்பு என்று மருவியதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீதேவி தாயார் இவ்வூரில் தவம் செய்து, திருத்தங்கல் என்னும் திருத்தலத்தில் மகாவிஷ்ணுவை திருமணம் செய்ததாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.

14ம் நூற்றாண்டில் தென்காசியைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த, வீரபாண்டிய மன்னன், இக்கோயிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தியதாக கல்வெட்டில் செய்தி இடம்பெற்றுள்ளது. அதன்பின் வீரபாண்டியன், பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியன் ஆகியோரும் திருப்பணி செய்துள்ளனர். உச்சிக்கால நைவேத்யம் மற்றும் திருவிழாக்களுக்காக பராக்கிரம பாண்டியன் தானமாக நிலங்கள் வழங்கியதையும் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.

வெளிப்பிரகாரத்தில் நக்கன் மற்றும் சொக்கன் வில்லி என்பவர்களால் வெட்டப்பட்ட கிணறு உள்ளது. இதற்குள் இறங்கினால் உயிர் போகும் என்பதால் “”இறங்காக்கிணறு” என்று பெயர் உண்டானது. இக்கிணற்றின் அருகில் புளியமரம் ஒன்று இருந்துள்ளது. இம்மரத்திற்கு “”உறங்காப்புளி” என்று பெயர். இம்மரத்தின் இலைகள் சூரியன் மறைந்த பின்னும் மூடாமல் இருந்ததாகக் கூறுகின்றனர். இப்போது அந்த மரம் இல்லை.

நூறு ஆண்டுகளுக்கு முன் வரை இப்பெருமாள் கோயிலில் வழிபாடு நடந்து வந்துள்ளது. கோயிலைச் சுற்றி மக்கள் குடியிருந்து வந்துள்ளனர். அர்ஜுனா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் தற்போதைய வத்திராயிருப்பு பகுதிக்கு குடிவந்துவிட்டனர். மணவாளப் பெருமாள் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருந்து வந்துள்ளார். கோயிலின் உற்சவமூர்த்திகள் இங்குள்ள சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உற்சவர் மணவாளப் பெருமாள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருவீதியுலா வருகிறார்.

கோயிலின் உள்ளே அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஏகாதசி மண்டபம், கொடிமரம் ஆகியவை உள்ளன. பத்மாவதி தாயார் அர்த்தமண்டபத்தில் வீற்றிருக்கிறார். விஷ்வக்சேனர், ஆழ்வார்கள், இராமானுஜர், சக்கரத்தாழ்வாருக்கும் சன்னதிகள் உள்ளன. மூலவர் அழகிய சாந்த மணவாளப் பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தி கிழக்கு நோக்கியுள்ளார். ஒரு கை அபய ஹஸ்தமாகவும், மற்றொரு கை கதாயுதத்தை பிடித்தநிலையிலும் இருப்பது சிறப்பு. இங்கு இரண்டு கருடாழ்வார்கள் உள்ளனர். ஒருவர் பெருமாளை சுமந்து புறப்பட தயார் நிலையில் நின்ற கோலத்திலும், மற்றொருவர் பெருமாளை வணங்கிய நிலையில் அமர்ந்த கோலத்திலும் இருப்பது மற்றொரு சிறப்பு.

திருவிழா:

ஆடிப்பூரம், புரட்டாசி சனிக்கிழமைகளில் சுவாமி புறப்பாடு.

கோரிக்கைகள்:

தங்களது இல்லங்களில் மங்கல நிகழ்ச்சிகள் தங்குதடையின்றி நடைபெற இங்குள்ள பெருமாளை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

வேளச்சேரி தண்டீசுவரர் திருக்கோவில்.

வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் வரலாறு

செ‌ன்னையை அடு‌த்து‌ வேள‌ச்சே‌ரி‌‌க்கு செ‌ல்லு‌ம் மு‌க்‌கிய சாலை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது ஸ்ரீ த‌ண்டீ‌‌ஸ்வர‌ர் ‌திரு‌க்கோ‌யிலாகு‌ம்.

இழந்த பதவி கிடைக்க இங்கு வேண்டிக் கொள்ளலாம்.

திருக்கடையூரில் மார்க்கண்டேயனை காத்தருள எம் பெருமான் எமனின் தண்டத்தை பிடுங்கிக் கொண்டதாக புராணம் சொல்கிறது. 

 இழந்த பதவியைப் பெற எமன், பூலோகத்தில் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான்.

இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டான். 

அப்போது எமனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் கொடுத்து பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார். 

எனவே இத்தலத்து சிவன், "தண்டீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். 

இழந்த பதவி திரும்பக் கிடைக்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

இவர் சுயம்பு என்பது குறிப்பிடத்தக்கது

அம்பாள் கருணாம்பிகை சன்னதியில் அப்பைய தீட்சிதர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது.

 தண்டீஸ்வரர் எதிரேயுள்ள நந்தி, தலையை பணிவாக கீழே சாய்த்திருப்பது விசேஷமான அமைப்பு.

வேதங்கள் வழிபட்டு புனிதம் அடைந்த தலம், எமதர்மன் பேறு பெற்ற கோவில், பல்லவர்கள், சோழர்கள் திருப்பணி செய்த ஆலயம், மணி விழா உள்ளிட்ட திருமண விழாக்கள் நடத்த உகந்த இடம், சகல தோஷங்களையும் போக்கியருளும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, சென்னை வேளச்சேரி தண்டீசுவரர் திருக்கோவில்.

புராண வரலாறு :

சோமுகன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து பல அரிய வரங்களைப் பெற்றான். அதனால் ஏற்பட்ட அகந்தையால், அவன் பிரம்மாவின் சத்தியலோகம் சென்று, நான்கு வேதங்களையும் கவர்ந்துசென்றான். அந்த வேதங்களை ஆழ்கடலுக்குள் ஒளித்து வைத்தான். இதனால் வேள்விகள் நின்று போனது. கவலையடைந்த தேவர்கள், திருமாலிடம் சென்று முறையிட்டனர். வேதங்களை மீட்பதற்காக திருமால், மச்ச (மீன்) அவதாரம் எடுத்து காஞ்சீபுரம் வந்தார்.

அங்கே தீர்த்தக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் மச்ச அவதாரத்திலேயே கடலுக்குள் சென்று, சோமுகாசுரனையும், அவன் ஒளிந்து கொள்ள இடம் அளித்த சங்கு உருவம் கொண்டிருந்த பாஞ்சசனையும் கொன்றார். பின்னர் பாஞ்சசன் எலும்பை தனதாக்கிக்கொண்டார். வேதங்களை மீண்டு தேவர்களிடம் கொடுத்தார். காஞ்சியில் திருமால் வழிபட்ட தலம் ‘மச்சேசர் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.

புனிதம் பெற்ற வேதங்கள் :

அசுரனிடம் இருந்ததால் மாசுபட்டதாக கருதப்பட்ட வேதங்கள், தங்களைப் புனிதப்படுத்திக்கொள்வதற்காக பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மாவின் ஆலோசனைப்படி இன்றைய சென்னை திருவான்மியூர் அருகே சோலைகளில் நிறைந்த இடத்தில் தவக்குடில் ஒன்று அமைத்து சிவலிங்கம் நிறுவி வேதங்கள் வழிபட்டு வந்தன. மேலும் திருவான்மியூரில் அமர்ந்துள்ள மருந்தீசுவரரையும் வழிபட்டு வந்தன. வேதங்களின் வழிபாட்டில் மகிழ்வுற்ற சிவபெருமான், அவர்கள் முன்பாக தோன்றி வேதங்களுக்கு அருளாசி வழங்கினார். இதனால் வேதங்கள் மீண்டும் புனிதமாயின. வேதங்கள் தவக்குடில் அமைத்து வழிபட்ட இடம் ‘வேதஸ்சிரேணி. இதுவே நாளடைவில் மருவி வேளச்சேரி என்றானதாக கூறப்படுகிறது.

எமனுக்கு அருளல் :

துவாபர யுகத்தில் தோன்றிய மார்க்கண்டேயனுக்குப் பதினாறு வயதில் ஆயுள் முடியும் என்று விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தருணத்தில் மார்க்கண்டேயன், திருக்கடவூர் இறைவனை கட்டித் தழுவியபடி இருந்தான். அவனது உயிரை பறிக்க வந்த எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் கோபம் கொண்ட இறைவன், தன் காலால் எமனை எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார்.

எமன் இல்லாமல் பூமியின் பாரம் அதிகரித்தது. இதனால் பூமாதேவி கலக்கமுற்றாள். இதனையறிந்த இறைவன் எமனை உயிர்ப்பித்தார். மீண்டும் உயிர்பெற்ற எமதர்மன், நாரதரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் (வேளச்சேரி) சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டான். பிறகு ஆலயத்திருப்பணி, திருவிழாக்கள் நடத்தினான். அதன் பலனால், தன் இயல்புநிலையைத் திரும்பப் பெற்றான் என்று தலபுராணம் கூறுகிறது.

ஆலய அமைப்பு :

இந்த ஆலயம் கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று வாசல்கள் உள்ளன. என்றாலும், தெற்கு வாசலே புழக்கத்தில் உள்ளது. எளிய ஐந்துநிலை ராஜகோபுரம் தெற்கு வாசலில் அமைந்துள்ளது. நேரே அன்னை கருணாம்பிகை நம்மை வரவேற்க, அருகே கிழக்கு முகமாய் மூலவர் தண்டீசுவரர் காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நர்த்தன விநாயகர், உற்குடியாசன தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர் வீற்றிருக்கின்றனர். இதே சுற்றில் கணபதி, வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணியர், லட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி சன்னிதிகள் உள்ளன.

வெளிப்பிரகாரத்தில் அறுபத்துமூவர், வைத்தீசுவரர், சொக்கநாதர், மீனாட்சி, நவக்கிரகம், நாகர், தலமரமான வில்வம், கொடிமரம், பலிபீடம், நந்தி அருகே விநாயகர், முருகன் ஆகியோர் அமைந்துள்ளனர். இந்து சமய அறநிலையத் துறையினால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

இறைவன் தண்டீசுவரன் :

கிழக்கு முகமாய் எளிய வடிவில்அருளாசி வழங்கும் மூலவர், தண்டீசுவரர் என அழைக்கப்படுகின்றார். இவரே கல்வெட்டுகளில் திருத்தண்டீஸ்வரமுடைய மகாதேவர் என வழங்கப்படுகிறார். இவரின் பழமையான பெயர் தண்டபாணீஸ்வரர் என்பதாகும்.

எமன் சிவபூஜை செய்ய, தனது தண்டத்தை இங்கு ஊன்றி பூஜை செய்ததாகவும், பூஜை முடித்து, தண்டத்தை எடுக்க இயலாததால், அங்கேயே விட்டு விட்டதன் காரணமாக, இறைவன் தண்டீசுவரரானதாகத் தலபுராணம் கூறுகிறது. வேதங்கள் நிறுவி வழிபட்ட சிவனும் இவரே ஆவார். இவரே நமது தோஷங்களையும் நீங்கி நிம்மதி தருபவர். இறப்பின் பயம் நீங்கி இன்பம் அளிப்பவர். தண்டபாணி ஈஸ்வரர் என பழங் காலத்தில் அழைக்கப்பட்ட இவர் இப்போது தண்டீசுவரர் என மருவி வழங்கப்படுகிறார்.

இறைவி கருணாம்பிகை :

தெற்கு நோக்கிய நின்ற கோல அம்மனாக நான்கு கரங் களுடன் அருளாசி வழங்குபவள் அன்னை கருணாம்பிகை. திருவான்மியூர் மருந்தீசுவரருக்குத் துணையாகத் திரிபுரசுந்தரி இருப்பதைப் போல, தண்டீசுவரருக்கு ஒரு துணையை உருவாக்க விரும்பிய அப்பைய தீட்சிதர், ஸ்ரீசக்கரத்துடன் நிறுவிய தெய்வமே, கருணாம்பிகை என தலவரலாறு கூறுகிறது.

அப்பைய தீட்சிதர் :

வேலூர் மாவட்டம், ஆரணி அருகே, அடையபலம் என்ற தலத்தில் தோன்றியவர் அப்பைய தீட்சிதர். வேலூரை ஆட்சி செய்த விஜயநகர மன்னன் காலத்தில் புகழ்பெற்ற அறிஞராகப் போற்றப்பட்டவர். வேளச்சேரியில் தங்கியிருந்து, நாள் தோறும் திருவான்மியூர் இறைவனையும் ஒரு சேர வணங்கி வழிபட்டவர். இவரின் வழிபாட்டில் மயங்கி மருந்தீசன், கிழக்குநோக்கிய தன் திசையை மாற்றி, மேற்கு முகமாய் காட்சி தந்து அருளினார்.

ஆலயச் சிறப்புகள் :

வேதங்களுக்கு தோஷங்கள் நீக்கி பரிசுத்தம் அளித்தது போல, அடியார்களுக்கும் சகல தோஷங்கள் நீக்கும் தலமாக இது விளங்குகிறது. எமனுக்கு அருள் வழங்கியதால், இங்கு வந்து வழிபடுவோர் இறப்பு குறித்த பயம் நீங்கப்பெறுவர். சரஸ்வதிக்குத் தனிச் சன்னிதி கொண்டதும், தட்சிணாமூர்த்தி உற்குடியாசனத்தில் காட்சி தருவதும், இறைவனும், கொடிமர நந்தீசுவரரும் தலை சாய்த்து அமைந்திருப்பதும் இந்த ஆலயத்தின் தனிச் சிறப்புகளாகும். புராண வரலாற்றின்படி வேளச்சேரி, திருவான்மியூர் தலத்தை ஒரு சேர வழிபட்டால் பூரண பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

இவ்வாலயத்தின் தலமரம் வில்வம். தலத்தீர்த்தம், ஆலயத்திற்கு மேற்கே அமைந்துள்ள எமன் உருவாக்கிய திருக்குளம். இது எம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு சிவகங்கை திருக்குளம் என்ற பெயரும் உண்டு.

விழாக்கள் :

தமிழ்ப் புத்தாண்டு, சித்திராப் பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், பங்குனி உத்திரம் மற்றும் மாதக் கிருத்திகை, பிரதோஷங்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி, (வெள்ளிக் கிழமை நண்பகல் 12 மணி வரை), மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சுவாமியை தரிசனம் செய்யலாம்.

அமைவிடம் :

சென்னை மாநகரில், சைதாப்பேட்டைக்குத் தெற்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. தென்சென்னையின் முக்கியப் பகுதியான வேளச்சேரிக்கு, ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை கடற்கரை - வேளச்சேரி மெட்ரோ ரெயில் வசதியும் உள்ளது.

தன்வினை....-26

 தன்வினை....-26

By N Krishnamurthy 

எட்டு மணிக்கு பூஜை தொடங்கியது. அங்குள்ள மணையில் வினயாவை அமர்த்தி இருபுறமும் அந்த பெண்கள் பிடித்துக்கொண்டனர். 

முதலில் "கஜானம் பூத கணாதி சேவிதம் "என்று தொடங்கிய கேசவதாஸ்  பின்னர் உரத்த குரலில் பகவதியை பிரார்தித்து ஏதேதோ மந்திரங்களை உச்சாடனம் செய்ய ஆரம்பித்தார். சாம்பிராணி புகை அந்த கூடம் முழுக்க பரவியது. அவர் மந்திரங்களை சொல்லச்சொல்ல வினயா முரண்டு பிடிக்க ஆரம்பித்தாள். எழுந்து ஓட முயற்சித்தாள். ஏதேதோ கத்தினாள். கேசவதாஸை வெறித்துப்பார்த்தாள்.

எட்டு மணிக்கு ஆரம்பித்த பூஜை முடிய பதினொன்றறை மணி ஆனது. பூஜை முடிய பத்து நிமிடம் முன்னர் வினயா மூர்ச்சையானாள். பூஜை முடிந்ததும் அவளை தூக்கிக்கொண்டு போய்  அவர்களது ரூம் கட்டிலில் கிடத்தினர்.

ஒரு மணிக்கு முழித்து எழுந்தவள் விமலாவைப் பார்த்து "அம்மா. ரொம்ப பசிக்கறது அம்மா"என்றாள்.  பத்து நிமிடம் போனதும் கேசவதாசின் அஸிஸ்டண்ட் அர்ஜுன் "ஊனு கழிக்க வரலாம் "என்று கூப்பிட்டான். எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர். 

வீட்டு சாப்பாடு மாதிரி சமையல் ருசியாயிருந்தது. சமையலுக்கு தேங்காய் எண்ணை பயன்படுத்தியிருந்ததால் சுவை வித்யாசமாக இருந்தது. சாப்பிட்டவுடன் வினயாவிற்கு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டதால் அவள் தூங்க ஆரம்பித்தாள்.

மூன்றறை மணிக்கு அர்ஜுன் வந்து கேசவ தாஸ் விளிப்பதாக கூறினான். கணேசன்,சிதம்பரம்,ஜகன் மூவரும் சென்று கேசவதாஸை சந்தித்தனர்.

கேசவதாஸ் அவர்களைப் பார்த்து "இந்தப் பெண்ணுக்கு செய்வினை செய்திருக்கிறார்கள் என்று உறுதியாக விட்டது. நிச்சயம் இன்னும் கொஞ்ச நாட்களிலேயே உங்களுக்கு குணம் தெரிய ஆரம்பிக்கும். பொண்ணோட அப்பா, அம்மா, அந்தப் பெண் குட்டி ஆகிய மூவர்தான் வருவார்கள் என்று  நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது இரண்டு பேர் அதிகமா வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த இடம் கொடுப்பது என்று எனக்கு தெரியவில்லை" என்றார். அதற்கு சிதம்பரம் அவரிடம் ஜகனை சுட்டிக்காட்டி "நானும், இவரும் இன்று இரவு இங்கே தங்கி விட்டு நாளை காலையிலே திரும்பி சென்று விடுவோம்" என்று கூறவும் அதைக் கேட்ட கேசவதாஸ் "அப்ப செரி" என்றார். பின்பு அவர்களிடம் " நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க. இந்த பொண்ண நாங்க பாத்துக்கறோம். இந்தப் பெண்  இந்த மந்திர உச்சாடனம் தாங்க முடியாம அடிக்கடி தப்பிக்கிறதுக்கு முயற்சி பண்ணுவோ. ராத்திரில வீட்டு கேட் பூட்டப்பட்டு இருக்கும். அத்தோடு இல்லாம கேட்டுக்கு பக்கத்ல  இருக்க ஹால்லதான் ரெண்டு பொண்ணுங்களும் தங்கி இருப்பாங்க. அவங்கள மீறி இந்த பொண்ணு எங்கேயும் வெளில போக முடியாது. காலையில பக்கத்துல இருக்குற புழாவுக்கு இந்த ரெண்டு பெண்களும் உங்க பொண்ண குளிக்க அழிச்சிட்டு போவாங்க" என்று கூறினார் இதன்பின் ஜெகன் அவரிடம் "நாங்க நாளைக்கு போயிட்டு, முடிஞ்சா ஒரு பத்து நாளைக்கு அப்புறம் மறுபடியும் வந்து ரெண்டு நாள் வந்து தங்கி பார்த்துவிட்டு போவோம் "என்றான். "அதுக்கு என்ன நீங்க தாராளமாக செய்யலாம்" என்றார் கேசவதாஸ்.  சிதம்பரம் அவரிடம் "இப்ப எவ்வளவு பணம் தரணும், எப்ப தரணும்" என்று கேட்டார்.அதற்கு கேசவதாஸ் ஒரு 25 ஆயிரம் கொடுத்தூடுங்கோ. மீதியை நான் கொஞ்சம் கொஞ்சமா கேட்டு வாங்கிகறேன்" என்று கூறினார்.

Wednesday, April 24, 2024

கிணறு வெட்டும் முறை

 *கிணறு வெட்டுவதில் கில்லாடி நம் முன்னோர்கள்* ☝🏻👇🏻

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். 
அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாமகிணறு வெட்டு னாங்க??? . . .
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரிய மில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்உள்ளது . ஆனால் இவற்றிற் கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ :மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்அதிகளவு பச்சை பசேலென புற்கள்வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும.் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்கொண்டுசென்று சேர்த்தஅடையாளங்கள் , அதாவது தடயங்கள்இருக்குமாம் அந்த இடத்தில்கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்குமாம் .சரி தூய நீரும்கண்டு கொண்டாயிற்று. . .கோடைகாலத்திலும்வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்அடைத்து விட்டு பால் சுரக்கும்பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும்இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்கவனித்தால் அவை ஒரே இடத்தில்தொடர்ந்து படுக்குமாம் . 
அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.செம..கில்லாடிகள் ! இல்ல.....நம் முன்னோர்கள் !!!👍👍👍👍

பருப்பு உருண்டை குழம்பு

 பட்டுக்கோட்டை பக்கம் பருப்பு உருண்டை குழம்பு ஒன்னு வைப்பாங்க பாருங்க அப்படி இருக்கும். சாப்பிடலாம் சாப்பிடலாம் சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம். இந்த உருண்டைக்குழம்பு துவரம் பருப்பிலையும் செய்யலாம். கடலைப்பருப்பிலையும் செய்யலாம். இரண்டு பருப்பும் நல்லா இருக்கும் கொஞ்சம் வித்தியாசம் தெரியும் அவ்வளவு தான். 👇🏻👇🏻👇🏻

துவரம் பருப்பு அல்லது கடலைப்பருப்பை ஊற வைச்சு அரைச்சு  அதுல கொஞ்சம் வெங்காயம், முருங்கை கீரை,  சோம்பு எல்லாம் சேர்த்து பிசைந்து இட்லி பானையில் வைச்ச அவிச்சு எடுத்துட்டு. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், வெந்தயம், கறிவேப்பிலை. போட்டு நல்லா வாசனை வர்ற வரைக்கும் வதக்கி அதுல ரெண்டு தக்காளியை நறுக்கிப்போட்டு, அதோட , மஞ்சள் தூள், குழம்பு மசாலா,  போட்டு அது தலையில் கொஞ்சம் புளியை கரைச்சு ஊத்தி (புளி ரொம்ப.தேவையில்ல) கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு நல்லா கொதி வந்ததும் வேக வைச்ச உருண்டைகளை தூக்கிப்போட்டு அரைச்சு வைச்ச தேங்காயை போட்டு சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கினால் மணக்க மணக்க பருப்பு உருண்டை குழம்பு ரெடி ஆகிடும். 

சூட்டோட சூடா தட்டுல சோத்தைப் போட்டு அதுல நாம வைச்ச குழம்பும் ஒரு உருண்டையும் போட்டு சாப்பிட்டா சோறு உருண்டை உருண்டையா உள்ள போய்கிட்டே இருக்கும். அதுக்கு சாதம் சூடா இருக்கனும் அது ரொம்ப முக்கியம். சைடிஸ்ஸா வத்தலும் வடகமும் இருந்தால் அமோகம்... இந்த உருண்டை குழம்புல காய்கறி போட்டு வைக்கலாம். 

இப்பெல்லாம் இந்த குழம்பை மறந்தவங்க நிறைய பேரு இருப்பாங்க.  அவங்க எல்லாம் கொஞ்சம் இப்படிக்கா வாங்க நமது உணவு நமது ஆரோக்கியம்.

ஊறவைக்கும் நேரம் 3மணி மணி மொத்த நேரம் 3மணி மணி 50நிமிடங்கள் நிமிடங்கள்

கோப்பை அளவீடுகள்

தேவையான பொருட்கள்

உருண்டைக்கு

½ கப் தோர் பருப்பு /துவரம் பருப்பு
3 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம்/வெங்காயம் நறுக்கியது
4 சிவப்பு மிளகாய்
¼ தேக்கரண்டி பெருஞ்சீரகம் / சோம்பு விருப்பமானது
1 தேக்கரண்டி சீரகம்
4 தேக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
உப்பு சுவைக்க

குழம்புக்கு

1 தேக்கரண்டி புளி/புளி பெரிய நெல்லிக்காய் அளவு
½ கப் வெங்காயம் / சிறிய வெங்காயம் உரிக்கப்பட்டது
10 செதில்களாக பூண்டு உரிக்கப்பட்டது
1 தக்காளி சிறியதாக நறுக்கியது
1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி குவியல்
¼ தேக்கரண்டி மஞ்சள்
¼ தேக்கரண்டி வெல்லம் விருப்பமானது
உப்பு - சுவைக்க
அரைக்க
½ கப் தேங்காய்
1 வெங்காயம்

நிதானப்படுத்த

3 தேக்கரண்டி எள் எண்ணெய் / சமையல் எண்ணெய்
¼ தேக்கரண்டி வெந்தயம் / வெந்தயம்
¾ தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி சீரகம்
1 துளிர் கறிவேப்பில

வழிமுறைகள்

துவரம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். தனி பாத்திரத்தில் புளியை ஊற வைக்கவும்.

2 மணி நேரம் கழித்து, முதலில் சிவப்பு மிளகாய், பெருஞ்சீரகம் விதைகள் (சேர்த்தால்) சீரகம் மற்றும் உப்பு

பின்னர் தண்ணீரில் வடிகட்டிய ஊறவைத்த துவரம் பருப்பை சேர்க்கவும். கரகரப்பாக அரைக்கவும். மசாலா வடைக்கு அரைப்பதை விட இது கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும்.

அரைக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டாம். நான் அரைக்க துடிப்பு விருப்பத்தை மட்டுமே பயன்படுத்துகிறேன் (4-5 முறை). சமமாக அரைப்பதற்கு இடையில் உள்ள பக்கங்களை துடைப்பதை உறுதி செய்யவும்.

கலவை கிண்ணத்திற்கு மாற்றவும். நறுக்கிய வெங்காயம், உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலக்கவும்.

அரைத்த கலவையிலிருந்து சிறிய உருண்டைகளை உருவாக்கவும், நீங்கள் வேகவைக்கப் போகிறீர்கள் என்றால், 10 முதல் 12 நிமிடங்கள் வரை நெய் தடவிய இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவைக்கவும்.

சிறிது குளிர்விக்கவும் (ஆனால் அது இன்னும் சூடாக இருக்கட்டும்), மீண்டும் இறுக்கமாக வடிவமைக்கவும், அது சரியான வடிவ கோஃப்டாவாக இருக்கும். நேரடியாகச் சேர்த்தால் இந்தப் படிநிலையைத் தவிர்க்கவும்.

கிரேவிக்கு: புளி சாறு எடுத்து, மொத்தமாக 1 & ½ கப் தண்ணீரை சரிசெய்யவும், ஒரு பக்கமாக வைக்கவும்,

ஒரு கடாயை எண்ணெயுடன் சூடாக்கி, டெம்பரிங் பொருட்களை டேபிளுக்கு அடியில் சேர்க்கவும். 

பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

புளி சாறு, சாம்பார் தூள், மஞ்சள்தூள் மற்றும் 1 & ½ கப் மேலும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதற்கிடையில், தேங்காய் மற்றும் வெங்காயத்தை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து, அந்த பக்கத்தையும் வைக்கவும்.

கொதிக்கும் குழம்புடன் சேர்த்து 5-6 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

தீயை குறைத்து உருண்டைகளை ஒவ்வொன்றாக கவனமாக சேர்க்கவும். உருண்டைகளை சேர்ப்பதற்கு இடையில் 10 வினாடிகள் இடைவெளி கொடுங்கள் (பச்சையாக சேர்க்கும் போது)

அனைத்து தரை கலவையுடன் முடிக்கவும். எல்லா பக்கங்களிலிருந்தும் சேர்க்கவும், அதனால் அது ஒன்றாக சேராது. கிளற வேண்டாம்.

அனைத்து உருண்டைகளும் மேலே மிதக்கும் வரை மிதமான தீயில் வேகவைக்கவும் (தோராயமாக 6 நிமிடங்கள்), இந்த நேரத்தில் அது வெந்து இருக்கும். இந்த நிலை வரை கிளற வேண்டாம்.

4 நிமிடம் வதக்கி, இறுதியாக மல்லித்தூள் சேர்த்து கலக்கவும்.

தீயை அணைத்து, மேலும் சில புதிய உருண்டை குழம்பு செய்வது எப்படி

குறிப்புகள்

நீங்கள் சமைக்கத் தொடங்குபவர் என்றால், உருண்டையை ஆவியில் வேக வைப்பதை நம்பிக்கையுடன் பின்பற்றலாம்.

நேரடியாகச் சேர்க்கும் முறை நேரத்தை மிச்சப்படுத்துவதாகும், உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்கள் மேலே சென்று முயற்சி செய்யலாம்.

உருண்டைகள் செய்வதற்கும் சனா பருப்பைப் பயன்படுத்தலாம். அல்லது இரண்டு பருப்புகளின் கலவை, நான் எல்லா வழிகளிலும் முயற்சித்தேன், எந்த வித்தியாசமும் இல்லை.

நான் ¾ கப் பருப்பை குறிப்பாக ஸ்டீமிங் முறையில் ஊறவைக்கிறேன், அதனால் உருண்டையை அப்படியே சுவைக்கலாம் அல்லது ஒரு மாற்றத்திற்காக ஆழமாக வறுக்கலாம். இந்த குழம்புக்கு ½ கப் பருப்பு சரியாக இருக்கும்.

 

 

தன்வினை....-25

 நேற்றய Post 24,25 களை 23,24 எனப்படிக்கவும்.

தன்வினை....-25

By N Krishnamurthy 

ஆமாம். அவர்களுக்கு ஆச்சர்யம் சிதம்பரத்தை அங்கே பார்த்ததும் ஏற்பட்டது. சிதம்பரம் அங்கு வருவதாக சொல்லவில்லை. 

"என்ன சிதம்பரம் சார். இப்படி சர்ப்ரைஸ் கொடுக்கறீங்க"என்றார் கணேசன். "எனக்கு ஏற்பட்ட  சர்ப்ரைஸ்னால உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தூட்டேன்"என்றார். "புரியலையே சார்"என்றான் ஜகன்.

சிதம்பரம் "இன்னிக்கு நான் ஒரு கல்யாணம் அடண்ட் பண்ண கோயம்புத்தூருக்கு  வர வேண்டியிருந்தது.

லாஸ்ட் மினிட்ல கல்யாணம் கேன்சலாய்ட்த்து. கல்யாண பொண் நிச்சயதார்த்தத்துக்கு தான் வாங்கி கொடுத்த சேண்டல் கலர் சட்டையை போட்டுக்காம, மாப்பிள்ளை பையன் அவளுக்கு அவ்வளவா பிடிக்காத ப்ளு கலர் சட்டையை போட்டுண்டூட்டானம்.

இப்பவே என் சொல்லுக்கு இவன் மதிப்பளிக்காம இருந்தா,கொற நாளும் இவன் கூட குப்ப கொட்ட முடியாதூன்னு கல்யாணத்தை கால் ஆஃப் பண்ணீட்டா அந்த பெண்.நான் பாத்தேன். ஏற்கனவே புக் பண்ணியிருந்து ட்ரெயின் டிக்கட்டை வேஸ்ட் பண்ணாம கோவைக்கு வந்து, அங்ககேந்து பஸ் பிடிச்சு, நேத்து சாயங்காலம் குருவாயூர் போய் உன்னி கிருஷ்ணனை மனசார தரிசனம் பண்ணிண்டு, ராத்திரி திருச்சூர்ல ஒரு ரூம் எடுத்து தங்கீட்டு, கார்த்தால குளிச்சு ரெடியாய்ட்டு ஸ்டேஷன் வந்திருக்கேன் "என்று நீண்டதொரு விளக்கம் அளித்தார். ஜகன் அவரிம் "சார். காபி சாப்பிடலாமா" என்றான். "Never say no to coffee" என்றார் சிதம்பரம். VLR ல் நுழைந்து காபி அருந்தினர். "எப்படிம்மா இருக்கே "என்றார் சிதம்பரம்.

அவரது அதிர்ஷடம் வினயா  நார்மலாக இருந்தாள். "நண்ணா இருக்கேன் மாமா"என்றார்.(வினயாவிற்கு பரிகாரத்திற்காக கேரளா போகிறோம் என்று சொன்னால் ரகளை பண்ணி விடுவாள் என்று பயந்த கணேசன் ஒரு வாரம் கேரளாவை சுற்றிப்பார்க்க போவதாக அவளிடம் பொய்  சொல்லியிருந்தார். ஞாபகமாக இதை ஜகனிடமும், சிதம்பரத்திடமும் அவர் கூறியிருந்தார்). சிதம்பரம் கணேசனிடம், வினயாவிற்கு கேட்குமாறு "வந்தது தான் வந்தேன். உங்க கூட ஒரு நாள் இருந்து கேரளா பாத்தூட்டு போலாம்னு நெனக்கிறேன்  "என்றார்.

." You are most welcome மாமா"என்றான் ஜகன். "முதல்ல எங்கே போறோம் "என்றாள் வினயா ஆவலாக. "முதல்ல பெருவனம்ன்ற கிராமத்தை பாக்க போறோம்" என்றான் ஜகன். 

அவர்கள் அனைவரும் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும் ஜகன் பெருவனம் போக டாக்சி ஏற்பாடு பண்ணினான். ஒன்றரை  மணி  சுமாரான பாதையில் ஒடிய டாக்சி பெருமனம் கிராமத்தை அடைந்தது. அங்கிருந்த ஒருவரிடம்"கேசவதாஸ் க்ரஹம் எவ்விட"என்று கேட்க அவர் "அக்ராஹாரத்துல நுழுந்ததும்  வலப்புறம் மூணாமன்னம் வீடு"என்றார். வண்டி அக்ராஹாரத்தில் நுழைந்ததுதான் தாமதம், வினயா உடலை முறுக்கிக்கொண்டாள்.

கண்கள் சிவக்க கணேசனை பார்த்து "டேய். இங்க கூட்டிண்டு வந்தூட்டயா. நான் எறங்க மாட்டேன் "என்றவள், ட்ரைவரை பார்த்து "என்ன தைர்யம் இருந்தா என்ன இங்க கூட்டிண்டு வருவ. உன்னை கொல பண்ணிடுவேன்.வண்டிய திருப்புடா"என்று கத்தினாள். அவளை கணேசனும், விமலாவும் அழுத்திப்பிடித்தனர். ஒருவழியாக கேசவதாஸ் வீட்டை கண்டு பிடித்ததும், சிதம்பரம் வண்டியிலிருந்து இறங்கி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தவரிடம் "கேசவதாஸ் வீடு இதானே"என்றார். "அதே" என்ற அந்த நபர் "ஞான்தான் கேசவதாஸ்"என்றார்.

பரங்கிப்பழம் போன்ற நிறத்திலிருந்த அவர் காவி வேட்டி உடுத்தியிருந்தார். திறந்த மார்பில் பூணல் தொங்கியது. நெற்றியில் விபூதி பட்டையும், அதன் மேல் சிறிய ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு கருப்பு சாந்து பொட்டும்  தரித்திருந்தார். மொத்தத்தில் பார்த்தால்  கும்பிடத்தோன்றும் தோற்றம்.

 சிதம்பரம் "நான் சிதம்பரம் "என்றவுடன் "வாங்கோ" என்றழைத்தவர் அங்கிருந்த இரு வாட்டசாட்டமான பெண்களிடம் மலையாளத்தில் ஏதோ சம்சாரித்தார். அவர்கள் இருவரும் கார் அருகே போய், வினயாவை இழுத்து,கட்டித்தூக்காத குறையாக உள்ளே கொண்டு சென்றனர்.  

சிதம்பரம் அவருக்கு  எல்லோரையும் அறிமுகம் செய்தார். "எல்லோரும் ஸ்னானம் பண்ணீட்டு வாங்கோ. ப்ராபளம் இருக்கற பெண் குட்டி  தவிர மீதி எல்லோரும் டிபன் சாப்பிடுங்கோ. இன்னிக்கே பூஜைஆரம்பிக்க போறேன்"என்றார். அவர்களுக்கு அலாட் பண்ணியிருந்த அறையில் நுழைந்தனர். 

"வினயா காணோமே" என்றாள் விமலா.

அங்கு வந்த கேசவதாசின் உதவியாள் அர்ஜுன் "ஆ பெண் குட்டியை ஸ்னானம் பண்ண அந்த பெண்கள் கூப்டுண்டு போயிருக்காங்க" என்றார்.

 பின்குறிப்பு: பெருவனம் என்பது உண்மையிலேயே திருசூர் அருகிலுள்ள மலையாள பிராமணர்கள் வசிக்கும் கிராமம். கேசவதாஸும் அவரை சேர்ந்தவர்களும் வெறும் கற்பனை. இனி வினயாவிற்கு பரிஹாரத்திற்காக செய்யப்படும் பூஜைகளும் கற்பனையே.

Tuesday, April 23, 2024

தன்வினை ....-24

 தன்வினை ....-24

By N Krishnamurthy 

அன்று மாலை மூணு மணிக்கு சிதம்பரம் கேசவதாசுக்கு போன் செய்தார். போனை எடுத்த கேசவதாஸ் "ஆரானா சம்சாரிக்கன்னது "என்றார்.  "சார் நான் தமிழ்நாட்டிலிருந்து பேசறேன்" என்றார் சிதம்பரம். இதை கேட்ட கேசவதாஸ் " என்ன சொல்லுங்கோ" என்றார். சிதம்பரம் அவரிடம் விவரத்தை கூறினார் . அதைக் கேட்ட கேசவதாஸ் "எவ்வளவு நாளா இந்த பொண்ணுக்கு இப்படி இருக்கு" என்று கேட்டார். அதற்கு சிதம்பரம் கிட்டத்தட்ட மூணு  மாசமா இருக்கலாம்ன்னு நெனைக்கிறேன்" என்று கூறினார். அப்போது கேசவதாஸ்"  நீங்க ஒண்ணு  பண்ணுங்கோ. அந்த பெண்ணுடைய ஜாதகத்தை என் அட்ரஸ்க்கு அனுப்பி வையுங்கோ.நாலு நாள் கழிச்சு எனக்கு போன் பண்ணுங்க. நான் ஜாதகத்தை பாத்துட்டு,சோழி ப்ரசன்னமும் போட்டு பாத்தூட்டு, இந்த பொண்ணுக்கு பரிகாரம் பண்ணா  பலன் இருக்குமா, இருக்காதா என்று சொல்றேன்" என்றார். "சரி, அப்படியே செய்யறேன்" என்றார் சிதம்பரம். " அட்ரஸை  குறிச்சுக்கோங்க" என்று கேசவதாஸ்  சொல்ல சிதம்பரம் " உங்க அட்ரஸ்  எங்கிட்ட இருக்கு. நானே சொல்றேன் . அது சரியா இருக்கான்னு  பாருங்க" என்றார்.சிதம்பரம் அட்ரசை படித்து முடித்கும்," சரியா இருக்கு. நீங்க இந்த அட்ரஸுக்கு ஜாதகத்தை அனுப்பிச்சு வையுங்கோ" என்றார். 

இதன் பிறகு சிதம்பரம் கணேசனுக்கு போன் செய்தார். கணேசன் வீட்டு நம்பர் அடித்துக் கொண்டே இருந்தது . " "சரி இன்னும் கணேசன் மெட்ராஸ் போய் சேரவில்லை" என்று புரிந்து கொண்டார் சிதம்பரம்.

இரவு எட்டு மணி வாக்கில் மீண்டும் கணேசனை தொடர்பு கொண்டார் சிதம்பரம். "கணேசா. நான் தாண்டா சிதம்பரம் பேசறேன்" என்று கூறி அவரிடம் விவரத்தை கூறினார். நீ நாளைக்கு காலைல முதல் வேலையா ஏதாவது கூரியர் வழியா உன் பொண்ணு ஜாதகத்தை அந்த அட்ரஸுக்கு அனுப்பி வை. அப்புறம் ரெண்டு மூணு நாள் வெயிட் பண்ணு. நானே உன்ன கூப்படறேன் " என்றார். கணேசன் அது மாதிரியே அடுத்த நாள் காலை அவர் கொடுத்த கேரளா அட்ரசுக்கு தன்னுடைய பெண்ணின் ஜாதகத்தின் ஒரு நகலை அனுப்பி வைத்தார்.

அந்த வாரம் வியாழக்கிழமை அன்று சிதம்பரம் மீண்டும் கேசவதாசுக்கு போன் செய்தார். சிதம்பரம் தனக்குத் தெரிந்த மலையாளத்தில்" சாரே. எந்த ஜாதகம் கிட்டியோ" என்று கேட்டார் ." ஆமாம் கெடைச்சது. அத  நல்லா படிச்சுட்டேன். சோழி போட்டும் பாத்தூட்டேன். பகவதி உத்தரவு கொடுத்திருக்கா.இந்த பொண்ண நம்ப சரிப்படுத்தலாம். ஆனா ஒரு மண்டலம் அவ  பூஜைல இருக்கணும். அவ  அப்பா, அம்மா ரெண்டு பேரும் பொண்ணு கூட வரணும்" என்று கூறினார்.

 " எப்போலந்து  ஆரம்பிக்கலாம்" சிதம்பரம்   கேட்க கேசவதாஸ் "நேக்கு நாளக்கின்னா கூட செரி" என்றார். அதற்கு  சிதம்பரம்  " நாளைக்கு முடியாது. கூடிய சீக்கிரம் ஆரம்பித்து விடலாம்" என்று கூறி " எவ்வளவு செலவாகும்" என்று கேட்டார்.அதற்கு கேசவ தாஸ்"  என்ன பத்தி யார் மூலமோ கேட்டு தான் நீங்க என்ன கூப்பிட்டிருக்கேங்க. நான் எனக்ககாக  அதிகம் பணம் வாங்குவதில்லை. கிட்டத்தட்ட இது ஒரு பொது ஜன சேவையா செஞ்சிண்டு இருக்கேன். ஏழு பரம்பரையா எங்க குடும்பம் இந்த மாதிரி செஞ்சுண்டு இருக்கு. 48 நாள் அந்த பொண்ணு, அப்பா அம்மா வந்து தங்கும் போது,அவா  தங்கறதுக்கு எங்க ஆத்துலே ஒரு ரூம் கொடுத்துடுவோம். காலையும் ,ராத்திரியும் டிபன். மத்தியானம் சாப்பாடு கிடைக்கும். சுத்த வெஜிடேரியன் சாப்பாடு தான். காலைல 7.30 மணிக்கு பக்கத்தில் இருக்கும் புழாவுக்கு(புழா-ஆறு) போய் குளிச்சிட்டு வரணும். எட்டிலிருந்து   பதினனொண்ணு  மணி வரைக்கும் பூஜை நடக்கும் . அதுக்கப்புறம் அவளுக்கு ஃப்ரீ டைம் தான். இதுபோல இருக்கிற பொண்ணுங்க எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே ரகளை பண்ணுவா. அவளை சமாளிக்கிறதுக்கு ரெண்டு பொண்ணுங்க உதவியா இருப்பா. இதையெல்லாம் சேர்த்து நாள்பத்தி எட்டு  நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபா செலவழிக்க வேண்டி வரும்" என்று கூறினார். இதைக் கேட்டு சிதம்பரம் " நிச்சயமா குணம் ஆயிடுவாளா "என்று கேட்டார். அதற்கு கேசவதாஸ் " மனுஷ யத்தனம்ணு ஒண்ணு இருக்கு. தெய்வ சங்கல்பம்னு ஒண்ணு இருக்கு. தெய்வத்தை முழுசா நம்பணம். நான் அந்த பொண்ணுக்கு சொஸ்தம் ஆகாதூன்னு தெரிஞ்சா முதல்லே முடியாதூன்னுடுவேன். நான் இது வரை நூறு கேசுக்கு மேல குணப்படுத்தியிருக்கேன் "என்றார். சிதம்பரம் "அது போறும் நேக்கு " என்றவர் "சரி பொண்ண பெத்தவா, பொண் எல்லாம் மெட்ராஸ்ல இருக்கா. அவ கிட்ட கேட்டுட்டு நானே உங்களுக்கு போன் பண்றேன்"  என்று கூறி போனை வைத்தார். இதன் பின்பு அவர் கணேசனுக்கு போன் பண்ணி விஷயத்தை கூறினார். கணேசன் மிக உற்சாகமாக " ரொம்ப நல்லது சிதம்பரம் சார் என்னைக்கு போலாம்னு நீங்க சொல்லுங்க" என்று கேட்டார். சிதம்பரம்"  ஏற்கனவே நான் இதை குறித்து யோசித்து வெச்செட்டேன் . வர  திங்கக்கெழம நல்ல நாளா இருக்கு. நீங்க ஞாயிற்றுக்கிழமை ராத்திரி கெளம்பி  திங்கட்கிழமை காலைல அங்க போற மாதிரி இருக்கும். திருச்சூர் வரைக்கும் டிரெயின்ல போலாம் .அதுக்கப்புறம் பஸ் எடுத்துக்கணும். அங்கிருந்து பஸ் சரிபடாதூன்னு  நெனச்சா ஒரு டாக்ஸி வெச்சுகோங்கோ " என்றார். சிதம்பரம் அவர்களுக்கு போன் செய்து முடித்தவுடன் சிதம்பரத்தின் போன் ஒலிக்க ஆரம்பித்தது. அதை சிதம்பரம் எடுத்தவுடன் மறு முனையில் இருந்து ஜகன் " குட் ஈவினிங் சிதம்பரம் சார் . நான் தான் ஜகன் பேசுறேன். என்ன ஆச்சு" என்று கேட்டான். அவனிடமும் விவரத்தை கூறினார். பின்பு ஜகன்"  நான் மாமா கூட பேசிட்டு நானே டிக்கெட்டை புக் பண்ணிடறேன். நானும் போறதா இருக்கேன். நான் அங்க போயிட்டு ஒண்ணு, ரெண்டு நாள் தங்கீட்டு  திரும்பிடுவேன்" என்று கூறினார். "சரிப்பா அப்படியே செய்" என்று கூறினார்  சிதம்பரம். 

ஒரு மணி கழித்து மீண்டும் போன் செய்த ஜகன்"  டிக்கெட் புக் பண்ணிட்டேன் சார். திருச்சூருக்கு டிரெயின் திங்கள் காலையில் ஆறு  மணிக்கு போய் சேரர்து. அங்கேர்ந்து ஒரு டாக்ஸ் பிடிச்சு பெருவனத்துக்கு  ஏழே காலுக்குள்ள போய் சேந்துடுவோம்" என்றான்.

" ஓகே ஜகன். ஆல் த பெஸ்ட்" என்று கூறினார். 

பின்னர் சிதம்பரம் கேசவதாசுக்கு போன் செய்து திங்கட்கிழமை காலை யார் யார் வருகிறார்கள் என்ற விவரத்தை கூறினார்.

சுப்பிரமணிய சத்ரு சம்ஹார மாலா மந்திரத்தை தினமும்  கணேசன் சொல்வதின் விளைவோ, என்னவோ, இப்போதெல்லாம் வினயாவிடம் அந்த அளவுக்கு மூர்க்கம் இல்லை . ஓரளவுக்கு அவளை சமாளிக்க முடிந்தது. கொஞ்சம் அதிகமாக போனால் அந்த மந்திரத்தை மீண்டும் ஒருமுறை சொல்லி ,அவள் நெற்றியில் விபதியிட, அவள் அடங்கினாள். இரவில் கண்டிப்பாக தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டது. அதனால் அவள் இரவு  நன்றாக தூங்கினாள்.  இதனால்  கணேசனும் விமலாவும்  கூட நன்றாக தூங்க முடிந்தது.

திட்டமிட்டபடி ஜகன், கணேசன், வினயா, விமலா ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி  திங்கள் கிழமை காலை திருச்சூருக்கு   போய் சேர்ந்தார்கள். வண்டியை விட்டு  இறங்கி சிறிது தூரம் பிளாட்பாரத்தில்  நடந்த போது அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.

தன்வினை....23

 தன்வினை....23

By N Krishnamurthy 

சிதம்பரம் ராஜராஜபுரத்தை அடையும் போது இரவு மணி  ஒன்பதாகி விட்டது. சிதம்பரத்தை பார்த்த சாரதா "டின்னர் முடிஞ்சூட்த்தா"என்று கேட்டாள். "இல்லை" என்று உதட்டை பிதிக்கினார் சிதம்பரம்."பத்து நிமிஷம் முன்னாடிதான் சாதத்ல தண்ணிய கொட்டினேன் "என்றவள் "சித்த இருங்கோ. ரவா உப்புமா பண்ணீடறேன் "என்றாள். "வேண்டாம் விடு .பழம் சாப்டூடட்டு பால் குடிச்சிடறேன்!" என்றார் அவர். "வேண்டாம்.வேண்டாம். அப்புறம் பாதி ராத்ரில பசிக்கறதூன்வேள். பத்தே நிமிஷத்தில உப்புமா ரெடி ஆயிடும் "என்றாள். சாரதா உப்புமா கிண்டிக் கொண்டிருக்கும் போது, சிதம்பரம் அவளருகில் நின்று கொண்டு  கும்பகோணத்தில் தனக்கேற்பட்ட அனுபவத்தை சாரதாவிடம் பகிர்ந்து கொண்டார் .

உப்புமா ரெடியானதும்  சிதம்பரம் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சாரதாவிடம் "உன்னோட சொந்தகாராளோட பொண்ணுக்கு இத போல ஆயி அப்புறம் சரியாயிட்டதல்ல"

என்றார். இதற்கு பதிலளித்த சாரதா ".உங்களுக்கு ஞாபக மறதி அதிகமாய்ட்டது.  அது எங்க சொந்தகார பொண்  இல்லை. என் ப்ரண்ட் சரசாவோட கல்யாணம் ஆன பொண்ணுக்கு யாரோ சூன்யம் வெச்சூட்டா. கேரளாவிற்கு அவளை அழச்சிண்டு போய், ஒரு மாந்த்ரீகரை பிடிச்சு, ஒரு மண்டலம் பூஜை பண்ணி ,அவளுக்கு சரியாச்சு" என்றாள்.

அதற்கு சிதம்பரம் "நேக்கு வயசானதாலே முன்ன போல ஞாபகம் இருக்கறதில்ல. உன்ன போல இள வயசா இருந்தா பரவாயில்லை"என்றார். இதைக்கேட்ட சாரதா "இன்டேரக்ட்டா என்னையும் கிழவீன்றேள்"என்றாள்.

சிதம்பரம் சிரித்துக்கொண்டே "நீ கிழவி. ஆனா அழகான கிழவி" என்றார். இதைக்கேட்ட சாரதா "போறும். மூஞ்சிய தொடச்சிக்கோங்கோ. அசடு வழியறது" என்றாள். பின்னர் அவர்"சரசா கிட்ட பேசி அந்த மாந்த்ரீகர் விவரங்களை வாங்கி கொடு. கணேசன் பொண்ணு வினயாவுக்கு  அவர் மூலம் பரிஹாரம் பண்ண முடியுமான்னு பாக்கறேன்"என்றாள்.

சாரதா "பாதி ராத்திரில சரசாவை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு பாக்கறேன்"என்றவள் "நாளைக்கு கார்த்தால பேசறேன் "என்றாள். சிதம்பரம் சாப்பிட்டுவிட்டு  கை கழுவும் போது சாரதா "இந்த கெழவி பண்ண உப்புமாவை பத்தி கெழவன் கமண்ட்டே அடிக்கலயே " என்றாள் கேலிக்குரலில். சிதம்பரத்துக்கு பேசக்கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன."கெழவி பண்ணாலும் உப்புமா இளசா Fresh ஆ இருக்கு " என்றார்.

மறுநாள் ஞாயிறு காலை 10 மணிக்கு சாரதா, சரசாவை போனில் கூப்பிட்டாள். "என்ன சரஸ் எப்படி இருக்க" என்றாள் சாரதா. அதற்கு சரசா " என்ன அத்தி பூத்த மாதிரி இருக்கு உன் போன் கால்" என்றாள். "சும்மாதான். ரொம்ப நாளாச்சேன்னு பண்ணேன்" என்றாள் சாரதா. "அங்க எல்லோரும் சௌக்கியமா" என்று கேட்டாள் சரசா.

" இங்க எல்லாரும் சௌக்கியம்தான். உன் பொண்ணுக்கு முன்னாடி  உடம்பு ப்ராபளமா  இருந்ததே. இப்போ சரி ஆயிட்டாளா" என்று கேட்டாள் சாரதா. "கேரளா  போய், பூஜை பண்ணினதக்ப்புறம் அவ சரியாய்ட்டா.இது நடந்து  கிட்டத்தட்ட நாலு வருஷம் ஆயிடுதத்து. அவளுக்கு உடம்புக்கு வந்த போது ஒரு பெண் குழந்தை இருந்தது. உடம்பு சரியானதக்கப்புறம்  ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கு . அவளும், மாப்பிள்ளையும் பெங்களூர்ல இருக்கா.  போன வாரம் கூட இங்க  வந்துட்டு போனோ. ஆமாம், ஏன் இதெல்லாம்  இப்ப  கேக்கற" என்றாள் சரசா. "ஒண்ணும் இல்ல டி.  எங்க ஆத்துக்காரருக்கு தெரிஞ்ச ஒருத்தர்  பொண்ணுக்கு  இது மாதிரி ஒரு ப்ராப்ளம் இருக்கு. அவளுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனும்னு பாக்கறார் இவர்.  அந்த கேரளா மாந்திரீகருடைய அட்ரஸ், போன் நம்பர் வெச்சிருக்கயா? எனக்கு கொஞ்சம் தர முடியுமா" என்று கேட்டாள் சாரதா. " அவரோட எல்லா டீடைலும் எங்கிட்ட இருக்கு. அவர நாங்க குலசாமி மாதிரி தான் வழிபடறோம். அவராலதான் தான் இப்போ என் பொண்ணு நல்லபடியா இருக்கா. பேப்பர் எடுத்து வச்சுக்கோ. நான் அதுக்குள்ள என் டைரியை எடுத்து அவர்   அட்ரஸ் கண்டுபிடித்து கொடுக்கிறேன்" என்றாள். சாரதா சிதம்பரத்தை பார்த்து "ஒரு பேப்பரை

யும்,பேனாவும் எடுத்துக்கோங்கோ" என்றாள்.  "பேப்பரையும், பேனாவையும் எடுத்து வைத்துக்கொண்டார் சிதம்பரம். மீண்டும் லைனில் வந்த சரசா" குறிச்சிக்கோ.  அவர் பெயர் கேசவ தாஸ். சொந்த ஊர் பெருவனம். திருச்சூர் கிட்ட இருக்குற சின்ன கிராமம் இது. இப்போ போன் நெம்பர குறிச்சிக்கோ. முதல் அஞ்சு டிஜிட்  எஸ்.டி.டி கோட். அதுக்கப்புறம் இருக்கறது அவரோட போன் நம்பர் .(இதை சரசா சொல்ல சொல்ல சாரதா அதை ரீபீட் செய்ய சிதம்பரம் பேப்பரில் எழுதிக்கொண்டார்) காலைல பூஜை எல்லாம் போயிண்டு இருக்கும். பொதுவா போன் பண்ணினா   மத்தியானம் ரெண்டுலேந்து நாலு வரை பண்ணணம்" என்றாள் . "ரொம்ப தேங்க்ஸ் டி சரஸ்" என்று சொல்லி போனை வைத்தாள் சாரதா.

 *பின்குறிப்பு* :தமிழ் நாட்டிலிருந்து மலையாள தேசத்திற்கு புலம் பெயர்ந்த பிராமணர்கள், பாலக்காடு மட்டுமல்லாமல்  பெருவனம் போன்ற இதர சிறு கிராமங்களிலும் வசிக்க ஆரம்பித்தனர் என்று சரித்திரம் சொல்கிறது.

Monday, April 22, 2024

தன் வினை....-22

 தன் வினை....-22

By N Krishnamurthy 

"இதை யாராவது வேண்டாதவர்கள் செய்திருக்கலாம்" என்று சிதம்பரம்  சொன்னபோது ஜகனுக்கு என்னவோ  சௌஜன்யாவின் முகம் கண்ணில் தோன்றியது. இதற்குப் பிறகு ஜகன் சிதம்பரத்திடம் " நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்" என்றான். "சொல்லு ஜகன்" என்றார் சிதம்பரம். "வினயாவுக்கு சௌஜன்யான்ற க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒத்தி இருக்கா. இவா  ரெண்டு பேரும் நகமும், சதயும் மாதிரி இருப்பா. கொஞ்ச நாளாவே இவ ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்கா. நான் வினயாவுக்கு ப்ரொபோஸ் பண்ணினதக்கு அப்புறம் தான்  இவா ரெண்டு பேரும் பிரிஞ்சா. எனக்கு என்னவோ சௌஜன்யாவுக்கு என் மேல் ஒரு கண்ணு இருக்கும் என்று சந்தேகம். சௌஜன்யா அம்மாவுக்கு பூர்வீகம் கேரளா . ஒருவேளை சௌஜன்யா இத பண்ணி இருக்கலாமோ" என்று கேட்டான் ஜகன். 

இதைக் கேட்ட சிதம்பரம் " என்னால இத உறுதியாக சொல்ல முடியல. இருந்தா கூட ரொம்ப வருஷம் க்ளோசா இருந்த ஒரு பெண் தன்னுடைய பிரண்டுக்கு  இப்படி   பண்ணியிருப்பாளா? அப்படி பண்ணியிருக்கான்னு வெச்சிண்டாலும், நிச்சயம் தனி மனுஷியா இத பண்ணியிருக்க முடியாது. யாராவது வெளியில ஹெல்ப் எடுத்துண்டு இருக்கணம். இதையெல்லாம் வெச்சு பாக்கச்ச அந்த பெண் இதை பண்ணியிருக்கமுடியும்னு நேக்கு தோணல. ஆனா அந்த Possibility ஐ Rule out செய்யவும் முடியாது" என்றார். அதன் பிறகு சிதம்பரம்    " இதை யார் செய்தான்றது இப்போ முக்கியமில்லை . நம்ப என்ன செய்யணம்னு பாக்கணம். பேஷண்ட்க்கு என்ன வியாதி என்று தெரிஞ்சசூட்த்து. இனிமே அதுக்கு உண்டான  மருந்த நம்ம பாக்கணும். இதுக்கு மருந்து, செய்வினையை  திருப்பி எடுக்கிறதுதான்" என்று கூறினார். இதை கேட்ட கணேசன்"  நான் இதை கதைல படிச்சிருக்கேன் உண்மையிலே என் பொண்ணுக்கு இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கல. இதுக்கெல்லாம் பரிஹாரம் உண்டா. பரிஹாரம் பண்ணா சரியா போவாளா" என்றெல்லாம் கேட்டார். அதற்கு சிதம்பரம் " தோ பார்டா கணேசா. நம்பிக்கைதான் வாழ்க்கை. மொதல்ல நம்பணம். அதுக்கப்புறம் பகவான் இருக்கான். நம்ம யாருக்கும் மனுசால கூட கெடுதல் நினைக்கல. அப்படி இருக்கும்போது பகவான் நம்பளை  கை விட்டூட மாட்டான். நீங்க இப்போதைக்கு நிம்மதியா மெட்ராஸ் கிளம்பி போங்க. நேக்கு ரெண்டு நாள் டைம் கொடு. இது விஷயமா நான் ஆலோசனை பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன்' என்றார். கணேசன் அவர் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு " சிதம்பரம் சார் உங்களை தான் இந்த விஷயத்துல மல போல நம்பி இருக்கேன்" என்று கண்ணில் நீர் துளிக்க சொன்னார்.

அவர் தோளை தட்டிக் கொடுத்த சிதம்பரம் "என்னை நம்பாதே. அதுக்கு பதிலா அந்த பெருமாளை நம்பு. எல்லாம் சரியாயிடும்" என்று ஆறுதல் கூறினார். பின்பு மூவரும் ரூமை விட்டு கிளம்ப நினைத்தபோது சிதம்பரம் கணேசனிடம் "பரிகாரம் பண்ண கொஞ்சம் செலவாகும் கணேசா, உன்னால முடியுமா" என்று கேட்டார் உடனே கணேசன் "முடியர்தோ, இல்லையோ, பண்ணி தானே ஆகணும் .அவ கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம் சேத்து வச்சிருக்கேன்

.அதலேந்து எடுத்து பண்ணிட வேண்டியது தான்"என்றார்.  ஜகன் சிதம்பரத்திடம்" சார். நீங்க பணத்தை பத்தி கவலைப்பட வேண்டாம். எவ்வளவு செலவானாலும் நானே பாத்துகறேன். எனக்கு என் வினயா  நல்லபடியா திரும்பி வரணும் சார் "என்றான் குரல் தழுதழுக்க. இதைக் கேட்ட சிதம்பரம் அவனை இறுக அணைத்து கொண்டு " நீ ஒரு அதிசய பிறவிப்பா. வேற யாராவது இருந்தா, இப்படி நடந்திருந்தால், நிச்சயதார்த்தம் முடிஞ்சா என்ன, நல்லவேளை கல்யாணம் நடக்கலையேன்னு சொல்லி, அந்த பொண்ண கை விட்டுருப்பான்" என்று கூறினார் .இதைக் கேட்ட ஜகன்"சார் . உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். நிச்சயதார்த்தத்துக்கு முன்னாடியே  நான் இவதான் என் மனைவியின்னு மனசுக்குள்ள நிச்சயம் பண்ணிட்டேன். அப்பவே வினயா நேக்கு மனைவி ஆயிட்டா. அதனால இப்ப நான் வினயவை மனைவியா தான்  பார்க்கிறேன். என் மனைவி உடம்பு குணம் ஆகணும்னு எனக்கு அக்கறை இருக்காதா. நிச்சயதார்த்ததுக்கு அப்புறம் எனக்கே இப்படி ஆயிருந்தா கூட என் வினயா என்ன சரி பண்ண  நல்லபடியாக  முயற்சி எடுத்து இருப்பான்னு  நேக்கு தெரியும்" என்றான். இதைக் கேட்ட சிதம்பரம் " உனக்கோசரமாவது வினயா  நல்லபடியா  ஆகணம்னு பிரார்த்தன பண்ணிக்கறேன்" என்றார். மூவரும் திரும்பி கணேசன் ரூமுக்கு வந்தார்கள். "நான் போயிட்டு வரேன்"என எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார் . வினயா இன்னும் உறக்கத்திலிருந்தாள்.

ஜகன் " நானும் உங்க கூட பஸ் ஸ்டாண்ட் வர ரேன் சார்" என்றான். "அவசியம் வாப்பா" என்றார் சிதம்பரம். இருவரும் பேசிக் கொண்டே பஸ் ஸ்டாண்ட்டை  அடைந்தார்கள்

பவளமல்லிகை புஷ்பம்

 பவள மல்லி மரம் தல விருட்சமாக உள்ள கூறைநாடு  புனுகீஸ்வரர் சிவன் கோவில். 

பவளமல்லி பூவின் சிறப்புகள்:

பவளமல்லிகை புஷ்பம் ஒரு தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. 

தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் பவளமல்லிமரமும் ஒன்று என புராணங்கள் கூறுகிறது. 

பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும், நறுமணம் மிகுந்ததுமான அபூர்வமான மலராகும். 

இது சவுகந்தியா என்ற ஆபரணத்தை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம் ஆகும் . இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது. 

புட்ப விதி என்னும் நூலில் பவள மல்லிகையை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது.

பவள மல்லிகை பூஜைக்கு உரிய மலராகும்

அதாவது, நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவளமல்லியும் ஒன்று. 

இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும். 

பொதுவாக இந்த மரம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பூத்துக் குலுங்கும். 

இறைவனின் பூஜைக்குரிய மலர்கள் அனைத்தும் செடிகளில் இருந்துதான் பறிக்கப்படும். 

பொதுவாக மண்ணில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை பூஜைக்கு பயன் படுத்தமாட்டார்கள். ஆனால், இதற்கு பவள மல்லி விதிவிலக்காக உள்ளது. 

இது இரவில் பூத்து அதிகாலையில் உதிர்வதால் அப்படி உதிர்ந்த பவளமல்லிப் பூக்களை சேகரித்துத் தொடுத்து இறைவனுக்கு பயன் படுத்துவார்கள்.

பவளமல்லிமரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். 

மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது. 

பவளமல்லி சிறு மரமாகக் காணப்படுகிறது. இந்தியா முழுவதும் பரவலாக பவளமல்லியை பார்க்கலாம். 

1500 அடி உயரம் வரையுள்ள இடங்களில் வளரக்கூடியது. சுமார் 15 அடி உயரம்வரை வளரும். 

தண்டுபாகம் நான்கு பட்டைகளை உடையது. இலைகள் சற்றுநீண்டு முட்டைவடிவில் சொரசொரப்புடன் இருக்கும்.

பூக்கள் எட்டு இதழ்களுடன் வெண்மையாகவும், காம்பு பவள (சிவப்பு) நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும். இதன் கனிகள் வட்டவடிவில் உறைஅமைப்பில் இருக்கும். 

செடியில் இருந்து உதிரும்போது இருபகுதியாக பிரிந்து விழும். அதில் ஒவ்வொரு பாகத்திலும் சிறியவிதை இருக்கும். 

அந்த விதையை எடுத்து தொட்டிகளில் ஊன்றி புதிய செடியை உருவாக்கலாம்.

சூரியனை பார்த்து மலராத பவளமல்லி புஷ்பத்தின் காரணத்தை உணர்த்தும் புராணக் கதை.

இந்த அற்புதச் செடியைப்பற்றி வாயு புராணம் இவ்வாறு தெரிவிக்கிறது.

பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால், சூரியன் இளவரசியை ஏற்கவில்லை. 

இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள். 

இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்துதான் பாரிஜாதம் என்ற செடி உருவானது.

சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது. 

இதனால்தான் இதனை வருந்தும் மரம் என்றும் அழைப்பார்கள். 

தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதை தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் என்றும் விளக்குவார்கள்.

பாரிஜாதம் என்ற இந்த பவளமல்லி, திருமாலுக்கு உகந்தது. 

பவளமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருப்பதாக நம்புகிறார்கள்.

தேவலோகத்தில் இருந்த இந்த பாரிஜாதமலர் வேண்டும் என்று சத்யபாமா, ருக்மிணி இருவரும் கிருஷ்ண பகவானிடம் கேட்கவே கிருஷ்ணர் பவளமல்லிமரத்தை கொண்டுவந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம், 

ஆனால், மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களை உதிர்த்தது என்று கூறப்படுகிறது.

கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில்:

மிருகங்கள் இறைவனைப் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் நம் நாட்டில் பல உண்டு. U

குற்றாலம், திருவானைக்கா, மதுரை ஆகிய தலங்களில் யானையும், நல்லூரில் சிங்கமும், சாத்தமங்கையில் குதிரையும், கருவூர், பட்டீஸ்வரம, பேரூர் ஆகிய தலங்களில் பசுவும், சிவபுரத்தில் பன்றியும், தென் குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை ஆகிய ஊர்களில் குரங்குகளும், சோலூரில் மீனும், திருத்தேவன் குடியில் நண்டும் பூஜித்து பேறு பெற்றன. 

அதேபோல் புனுகுப் பூனை ஒன்று சிவபெருமானை மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள கூறைநாடு எனும் தலத்தில் பூஜித்துப் பேறு பெற்றது. 

அதனாலேயே இங்குள்ள ஈசன் புனுகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

அம்பாளின் பெயர் சாந்த நாயகி. 

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இது. U

ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. 

முகப்பில் நெடிதுயர்ந்த ஏழு நிலை ராஜ கோபுரம் உள்ளே நுழைந்ததும் விசாலமான மண்டபம். 

எதிரே பலிபீடமும், உயரமான கொடிமரமும். மண்டபத்தின் இடதுபுறம் அன்னை சாந்த நாயகியின் சந்நதியும் உள்ளது. 

அம்பிகை நான்கு கரங்களுடன், நின்ற நிலையில் புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள். 

மேல் இரு கரங்களில் மாலையையும், தாமரை மலரையும் தாங்கி, கீழ் இரண்டு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை திகழ்கிறாள். 

அடுத்துள்ள மகாமண்டப நுழைவாயிலில் துவாரபாலகர்கள் காவல் காக்க, இறைவனின் அர்த்த மண்டபம் விளங்குகிறது.

கருவறையில் இறைவன் புனுகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். 

இறைவனின் தேவக்கோட்டத்தின் வடபுறம் துர்க்கை, பிரம்மா, கிழக்கே லிங்கோத்பவர், தெற்கே தட்சிணாமூர்த்தி, ஜுரதேவர் போன்றோர் திருமேனிகள் உள்ளன. 

உட்பிராகாரத்தின் மேற்கில் பிள்ளையார், வடக்கில் நடராஜர், சிவகாமி, மகாலட்சுமி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தெற்கில் நேசநாயனார், கிழக்கில் பைரவர், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம். 

அம்மன் பிராகாரத்தின் வடக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரி அருள்பாலிக்கிறாள்.

வெளி பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் கலசமண்டபம் உள்ளது. 

இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி தரிசனம் அருள்கிறார். 

இந்த அமைப்பு அபூர்வமானது என்கின்றனர்.

இந்த ஆலயத்தின் தல விருட்சம் பவழமல்லி மரம். 

ஆலயத்தின் தீர்த்தமான திருக்குளம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது. 

இந்த ஆலயம் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தைப் போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். 

தல வரலாறு:

சிவபெருமான் எழுந்தருளியுள்ள மயிலாடுதுறைக்கு மேற்கே பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு காடு இருந்தது. 

அரசு, கொங்கு, தேக்கு, அகில், சந்தனம், மூங்கில், நாவல், மா முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து அது ஒரு அழகிய வனமாகத் திகழ்ந்தது. 

பறவையினங்களும், விலங்கினங்களும் பகையின்றி அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தன.

அங்கு தேவர்களும், திருமாலும், பிரம்மனும் வழிபடுவதற்காகவும், உயிரினங்கள் உய்யவும், பவழமல்லிகை நிழலில் லிங்க வடிவில் தானே தோன்றி சுயம்புவாக எழுந்தருளியிருந்தார் சிவபெருமான். 

அந்த வனத்தில் ஒரு புனுகுப் பூனை, தன் துணையுடனும், குட்டிகளுடனும் வாழ்ந்து வந்தது. 

அதனிடமிருந்து வெளிப்பட்ட புனுகு வாசனை அந்த வனம் முழுவதும் ரம்மியமாகப் பரவியிருந்தது. 

திடீரென்று ஒருநாள் அந்தப் புனுகு பூனைக்கு ஞானம் வந்தது. 

“இதுவரை சாதாரணமான செயல்களையே செய்து வாழ்ந்து விட்டோமே! 

இது என்ன வாழ்க்கை! 

சிவபெருமானை வணங்கி பேரருளைப் பெற வேண்டும்” என அந்தப்பூனை நினைத்தது. 

யானை, குதிரை, பசு, எருது, பன்றி, குரங்கு, பாம்பு, நண்டு, வண்டு, ஈ, எறும்பு, முயல், தவளை ஆகியன எல்லாம் இறைவனைப் பூஜித்து நற்பேறு பெற்றுள்ளன.

நாமும் அவ்வாறே நற்கதியடைய வேண்டும் என்று எண்ணிய அந்தப் பூனை சிவபெருமானின் லிங்கத் திருமேனியைத்தேடி அலைந்தது. 

வயல் சூழ்ந்த ஒரு சோலையில் பவழமல்லிகை மரத்தடியில் இறைவனின் லிங்கத் திருமேனியைக் கண்டது அந்தப் பூனை. மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு லிங்கத்திருமேனி முழுவதும் புனுகினை அப்பியது. 

வில்வத் தளிர்களை வாயினால் கவ்வி இறைவனின் முடியில் சாத்தியது. இறைவனை வலம்வந்து வணங்கியது. 

இப்படியே சிவபெருமானைப் பல நாட்கள் அந்தப் புனுகுப்பூனை வணங்க மனம் மகிழ்ந்த இறைவன் அதற்கு தேவ வடிவைக் கொடுத்து கயிலாயத்திற்கு அழைத்துக்கொண்டார். 

புனுகுப்பூனைக்கு இறைவன் அருள்புரிந்தமை அறிந்த பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் பவழ மல்லிகை நிழலில் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை வந்தடைந்து பணிந்து துதித்துப் பாடினர்.

‘இவரே புனுகீசர்’ என்று அந்த இறைவனுக்குப் பெயரிட்டு வணங்கினர். 

சோழ மன்னன் தன் காலத்தில் காட்டுப் பகுதியை அழித்து புனுகீசருக்கு அதே இடத்தில் ஒரு ஆலயத்தை அமைத்தான். 

இதுவே இந்த ஆலயத்தின் தல வரலாறு. 

இந்தப் புனுகுப்பூனை பற்றிய இன்னொரு தல வரலாறும் உண்டு.

சிவபெருமானை மதியாமல் தட்சன் யாகம் நடத்தினான். தேவேந்திரன் அந்த யாகத்தில் கலந்து கொண்டதால் சிவபெருமானின் சினத்திற்கு ஆளாகி சாபம் பெற்றான். 

அந்த தேவேந்திரனே இறைவன் மகிழும் வண்ணம் புனுகுப்பூனை வடிவெடுத்து பூஜை செய்து சாப விமோசனம் அடைந்து, இழந்த இந்திர பதவியை மீண்டும் பெற்றான் என இன்னொரு தல வரலாறு கூறுகிறது.

இந்த ஆலயத்தில் உள்ள சுவாமி விமானம் கருங்கல்லினால் ஆனவர்.

ஆலயத்தின் உள்ளே தென்புறம் மிகப்பெரிய கல்யாண மண்டபமும், சுமார் 1500 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவுக் கூடமும் உள்ளன. 

மிகவும் குறைந்த வாடகைக்கு இதை மக்கள் பயன்படுத்தி மனம் மகிழ்கிறார்கள். 

ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. 

ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். 

சித்திரை மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின்போது 13 நாட்களும் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுண்டு. 

இங்கு 63 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகள் கண்களைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுக்கு ஒருமுறை மூல நட்சத்திரத்தில் 63 நாயன்மார்களும் வீதியுலா வருவதுண்டு.

நவராத்திரி நாட்களில் தினசரி இங்குள்ள துர்க்கைக்கு விதவிதமாக அலங்காரம் செய்வதுண்டு. 

தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 6 முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். 

கன்னிப் பெண்கள் இறைவிக்கு மாங்கல்யம் செய்து அணிவிக்க அவர்களுக்கு விரைந்து திருமணம் நடைபெறும் எனவும், அம்மனை அங்கப்பிரதட்சணம் செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கு மேற்கே இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது கூறைநாடு.

பவளமல்லி மரம் தல விருட்சமாக இருக்கும் பிற ஆலயங்கள்:

தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருவைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தலவிருட்சமாக உள்ளது.