"என்னடி பானு இது ? ரெண்டு கட்டை பை நிறைய காய் கறிகள்? ஏதாவது சில்லறை வியாபாரம் பண்ண போறியா என்ன? "
"ஆமாம்,34 வருஷம் கவெர்மென்ட் ஆபிஸில், மாடா ஓழைச்சு, ஓடாய் தேய்ந்தது போதா தாக்கும்? சில்லறை வியாபாரம் வேற பண்ணணு மாக்கும்? ஆசை தான் அம்மா!"
" பின்னே எதுக்கு இத்தனை காய்கறிகள்? "
" ஐயோ!அம்மா! எங்க அம்மாவோட ஒன்னு விட்ட சித்தியோட, அத்தை பையன் சீமாச்சு இருக்கானோல்லியோ...!"
" இரு, இரு, உங்க அம்மாவோட ஒண்ணு விட்ட.... யாரோட பையன்? "
"சித்தியோட அத்தை பையன் மா!"
"அவன் உன் கல்யாணத்திற்கு வந்தானோ? "
" ம்க்கும்! விடிகாலை 4.30...6.00 முஹூர்த்தம் வச்சுட்டு, சண்டை போட்டுட்டு,கார்த்தாலை 10 மணிக்கு பஸ் பிடித்து வூருக்கு வந்து முஹூர்த்த சாப்பாடு உங்காத்திலேன்னா சாப்பிட்டோம்? "
" உங்காத்தா.....? "
"சரி, நம்மாத்து! போதுமா? "
"அப்போ... அந்த சீமாச்சு....? "
"அவன் அப்போ பொறக்கவே இல்லே, போதுமாம்மா?"
"அவ்ளோ சின்ன பையனா அவன்? "
"அந்த ஆராய்ச்சி எல்லாம் இருக்கட்டும். அவன் இப்போ நம்ம வீட்டிற்கு சாப்பிட வருகிறானாம், அதுக்கு தான் இந்த காய் கறிகள், போதுமா? "
"ஏண்டி! போன வாரம் என்னோட ஒண்ணு விட்ட மாமா பையன் வந்த போது வெறும் சுண்டைக்காய் வத்த குழம்பும், சுட்ட அப்பளமும் தானே போட்டே? "
"அது வந்தும்மா... அன்னைக்கு எனக்கு சுண்டு விரலில் சுளுக்கு பிடிச்சுண்டு இருந்தது! சமைக்க முடியலை!"
"இன்னைக்கு.... உடம்பு சரி ஆயிடுத்தாக்கும்? என்னமோ போ! நேக்கு கொஞ்சம் ஷீனமா இருக்கு! பியூஜ்ஜி ஆப்பிள் பிரிட்ஜிலே இருக்கே, நாலு எடுத்து, நன்னா அலம்பி, மிக்சியில் போட்டு, மய்ய அரைத்து, ரோஜா எஸ்ஸன்ஸ், பனம் கல்கண்டு சேர்த்து,பால் விட்டு, அந்த காசி சொம்பு நிறைய கொண்டு வா பார்ப்போம்!"
"அந்த சீமாச்சு இன்னைக்கு வர்றலியாம்! இப்போ தான் போன் பண்ணான்! நீ போய் பருப்பு உருண்டை குழம்பும், பீன்ஸ் உசிலியும் பண்ணிடு, கேட்டியா? "
No comments:
Post a Comment