🥗தகவல் களஞ்சியம் 👩🍳
சமையல் குறிப்பு.
முருங்கைக்காய் வடை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு – 2 கப்
பச்சை மிளகாய் – 6
முருங்கைக் காய் – 4
பூண்டு – 2 பல்
பெரிய வெங்காயம் – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் (ரீபைண்ட்) – பொரிப்பதற்கு தேவையான அளவு
பச்சை மிளகாய் – 6
முருங்கைக் காய் – 4
பூண்டு – 2 பல்
பெரிய வெங்காயம் – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் (ரீபைண்ட்) – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
* முருங்கைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வேக வைத்து, ஆறியதும் நடுவிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
* கடலைப் பருப்புடன், மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
* அத்துடன் முருங்கைக்காய் சதைப் பகுதியையும் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பிசைந்து மாவு தயாரிக்கவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
* முருங்கைக்காய் வடை வித்தியாசமான சுவையுடன், சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
No comments:
Post a Comment