ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏
ஓம் நமோ நாராயணாய🙏
ஸ்ரீநரசிம்மர் ஜெயந்தி சிறப்பு பதிவு
திருநெல்வேலி பிரகலாத வரதன்
பழமை வாய்ந்த கோயில் எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.
நெல்லையப்பர், காந்திமதி அம்பிகை கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப் பட்டதாக தகவல் உள்ளது.
இந்த சன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன.
இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது.
ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
வைணவ மகான் ஸ்ரீ கூரத்தாழ்வார் கோன் இதை மீண்டும் கண்டுபிடித்தார்.
அப்போது நரசிம்மர் அளவற்ற சக்தியுடன் ஆர்ப்பரித்து தனது சக்தியை வெளிப்படுத்தினாராம்.
வைணவ பக்தர்களான பேரருளாளர் கோன், திருமங்கையாழ்வார் கோன் ஆகியோர் பல திருப்பணிகள் செய்து நிர்வாகத்தையும் கவனித்து வந்தனர்.
செவ்வாய் தோஷ நிவர்த்தி:
கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கும், மகாலட்சுமி தாயாருக்கும் நீராஞ்சன தீபம் செலுத்தும் வகையில் பக்தர்கள் அரிசி, தேங்காய், நல்லெண்ணெய் எடுத்து செல்கின்றனர்.
ஒரு தட்டில் அரிசியை பரப்பி தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹர் திருவடிகளே சரணம் 🙏
No comments:
Post a Comment