ராமேஸ்வரத்தின் காவல் தெய்வங்களின் ஒருவராக விளங்கக்கூடிய அருள்மிகு நம்புநாயகி யின் மகத்துவம்.....
மருத்துவர்களால் கைவிடப்பட்ட எத்தனையோ தம்பதிகள் கூட இந்த சன்னதியில் வந்து மஞ்சள் பிரசாதம் உட்கொண்டு குழந்தை செல்வம் பெற்றுள்ளனர் என்பது பல்வேறு வருடங்களாக இங்கு நடந்து வரும் ஒரு அதிசயமாகும்.....
சுற்றிலும் மணல்மேடு மற்றும் தாழம்பூ காடுகள் நிறைந்து இருக்க அதன் மத்தியிலே அமர்ந்து அருள் புரிந்து வருகின்றார் ஸ்ரீ நம்புநாயகி....
ஆலயத்தின் பிரசாதம் மஞ்சள் பிரசாதமாகும்...
குழந்தை பிறக்க வேண்டி இந்த சன்னிதிக்கு வந்து அங்குள்ள தீர்த்தத்தை எடுத்து அந்த தீர்த்த நீரை உபயோகித்து ஆலயத்தின் வளாகத்தில் இருக்கக்கூடிய அம்மிக்கல்லில் விரலி மஞ்சளை அரைத்து அந்த சார்ந்த அம்பாளுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர் பக்தர்கள் பின்னர் அர்ச்சனை செய்து வழிபட்டு உள்ளிருந்து அர்ச்சகர் தரும் அம்மனின் கையில் ஏற்கனவே சார்த்த பட்ட மஞ்சள் காப்பினை பிரசாதமாகப் பெற்று உட்கொண்டுவர சிறிது நாட்களிலேயே குழந்தை செல்வம் அவர்களுக்கு கிடைத்து விடுகின்றது...
பின்னர் கருவுற்ற பெண்ணை ஆலயத்திற்கு அழைத்து வந்து அம்பாளுக்கு வளையல் சார்த்தி பின்பு அந்த பெண்ணுக்கு சந்நிதியிலேயே வளைகாப்பு நடத்தப்படுகின்றது....
இத்தகைய நிகழ்வுகளுக்கு சான்றாக கோவிலின் முன்பு நிறைய மணிகள் கட்டப்படுகின்றன....
மேலும் இந்த நம்பு நாயகி இரண்டு முனிவர்களுக்கு காட்சி தந்தவள் மேலும் ஒரு மன்னனின் தீராத தோல் நோயை மஞ்சள் பிரசாதம் தந்து தீர்த்தவள் என்றெல்லாம் ஆலய வரலாறு கூறுகின்றது.....
இத்தனைக்கும் காரணமாக இங்குள்ள கிணற்று நீர் தேவ தீர்த்தம் என்று வழங்கப்படுகின்றது அந்த நீரிலுள்ள மகத்துவம் தான் இந்த ஆலயத்தின் சக்திக்கு காரணம் என்று கூட நாம் கூறலாம்...
இன்றும் கூட அந்த கிணறு எனது வலை பொருத்தப்பட்டு மிகவும் சுத்தமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது ஏனெனில் அம்மனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுப்பதும் அந்தக் கிணற்றிலிருந்து தான் அதுமட்டுமின்றி இங்கு அழைக்கப்படும் மஞ்சள் அந்த நீரைக் கொண்டே அரைக்கப்படுகின்றது....
சிவந்த மேனி கொண்டவளாக இரண்டு கரங்களுடன் கன்னிப் பெண்ணாக விளங்கி வருகின்றார் அம்பிகை....
இந்த அன்னைக்கு மிகவும் பிடித்த மலர் தாழம்பூ ஆகும்.....
மேலும் இந்த ஆலயத்தின் அருகே தொட்டில் கட்டப்படுகின்ற ஆலமரம் ஆனது நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒரு பெரிய வீடு போன்று ஆயிரக்கணக்கான விழுதுகளை பூமியில் ஊன்றி நிற்கின்றது அந்த ஆல விருட்சம்...
அன்னையின் பரிவார தெய்வங்களாக முனியப்பசாமி மற்றும் பேச்சியம்மன் ராக்காயி அம்மன் ஆகியோர் விளங்கி வருகின்றனர்......
ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ளது ஸ்ரீ நம்புநாயகி கோவில்....
ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் சுற்றுவட்டாரங்களில் நம்பு என்ற அடைமொழி கொண்ட பெயர்களை நாம் ஏராளமாக காணமுடியும் அவற்றிற்கெல்லாம் மூலமாக விளங்கி வருகின்றார் ஆதிசக்தி நம்புநாயகி அம்மன்....
இந்த திருக்கோவில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலின் உப கோவிலாக விளங்கி வருகின்றது...
No comments:
Post a Comment