ஸ்ரீநரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்
நாடினேன்; நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.
நல்லதை நாடி அருளும் நிம்பாசல *நரசிம்மர் திருவடி சரணம்
ஆந்திர மானிலம் நிஜாமாபாத் மாவட்டத்தின் பீம்கல் பகுதியில் அமைந்துள்ளது நிம்பாசல நரசிம்மர் கோயில். நிம்பம் என்றால் வேப்பமரத்தைக் குறிக்கும். அசலம் என்றால் மலை. இந்த நிம்பாசலம் முற்காலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காட்டுப்பிரதேசமாக விளங்கியதால் நிம்பாசலம் என்று அழைக்கப்பட்டது. நிம்பாசலத்தில் ஒவ்வொரு இடத்துக்கும் புராண ரீதியான ஒரு கதை உண்டு. மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனை வதம் செய்த பிறகும் கோபம் அடங்காமல் சீற்றத்துடன் இருந்ததாகவும் அப்போது பிரஹலாதனின் வேண்டுகோளை ஏற்று அமர்ந்த நிலையில் தன் மடியில் மஹாலட்சுமி தாயாரை அமர்த்திக்கொண்டு அருள்பாலித்ததாகவும் பிரஹலாதனின் வேண்டுகோளின்படி அதே கோலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாலிக்க சம்மதித்து ஸ்வயம்புவாக அமர்ந்ததாகவும் ஐதீகம்.
ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே:
ஸ்ரீநரசிம்மர் திருவடிகளே சரணம் 🙏
ஓம் நமோ நாராயணாயா

No comments:
Post a Comment