மாப்பிள்ளை
கல்பனாவுக்கு பொண்ணு பார்க்கும் அனுபவம் புதுசு. அம்மா சாரதாவிடம் மொலுமொலுவென்று பிடித்து கொண்டாள். அப்பா தலையிட்டு விளக்கவும் ஏனோ தானோ என்று ஒத்துக் கொண்டாள். பர்மிஷன் கேட்ட போது பாஸ் முறைத்தபடியே சரின்னு சொல்லவும் கோவம் இன்னும் ஜாஸ்தியானது. வாசலில் வந்து படக்குன்னு ஒரு ஆட்டோவ பிடிச்சு வந்து சேர்ந்தப்ப வீடே திமிலோகப்பட்டது.
அப்பாவும் தம்பியும் வீட்ட சுத்தம் பண்ணி அலங்கரிப்பதில் முனைந்து கொண்டிருந்தார்கள்.
நெய் மணத்துடன் கேசரியின் வாசனையும் எண்ணெய் புகையும் extra fittingஆக மோதியது. கிச்சனில் எட்டி பாத்த போது ஒரு பெரிய அடுக்கில் பஜ்ஜி மாவும் எண்ணையில் குதிக்க தயாரான காய்களும் தென்பட்டன. "சீக்கிரம் போய் ரெடியாகு"ன்னு விரட்டிய அம்மாவை முறைத்துவிட்டு ரூமுக்குள் சென்றாள். ஒரு மஞ்சள் நிறப் புடவையைத் தேர்ந்தெடுத்து வேண்டா வெறுப்பாக மினிமம் அலங்காரம் செய்து கொண்டு வெளியில் வந்தாள். சாரதா அவசரம் அவசரமா வந்து சிவப்பு கல் அட்டிகையை போட்டு விட்டாள். இயல்பிலேயே கல்பனா நல்ல அழகி. அந்த அலங்காரமே அவளை எடுப்பாக காட்டியது.
அஸ்வின் குடும்பம் வந்து இறங்கியது. எண்ணி மூணே பேர். அப்பா அம்மா அவன். சாராதாவோ " பத்து பேராவது வருவான்னு பாத்தா இப்பிடி மூணே பேர் வந்து நிக்கறாளே"ன்னு முனகினாள். அஸ்வின் பேசறதுக்கே காசு கேப்பான் போல இருந்தான். மெத்த படிச்சவன். அவன் அம்மாவோ "அவன் ரொம்ப reserved அதிகம் பேச மாட்டான். பழகினா சரியாயிடும்" ன்னா. மற்றவர்கள் எல்லாம் கலகலப்பாக பேச கல்பனா அம்மா அப்பாக்கு குடும்பம் பிடித்து போயிற்று. அஸ்வினோ அவளிடம் பேசணும்னு ஒரு சின்ன விருப்பம் கூட காட்டலே.
அவள் அப்பாவோ 25 வயதாகும் கல்யாணமே வேண்டாம்னு சொன்ன தன் பெண், பெண் பார்ப்பதற்கு கூட தடா போட்டவளை எப்படியாவது ஒத்துக்க வைப்பதற்க்கான முயற்சிகளில் இறங்கினார். அஸ்வின் ஜாதகப்படி இன்னும் 30 நாள்ல கல்யாணம் நடக்கணும்ங்கிறதுனால அவசரமா கிடைச்ச மண்டபத்தை புக் பண்ணி எல்லா ஏற்பாடும் நடந்தது. கல்பனாவுக்கு மனசுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. அப்பா சின்ன குழந்தை போல ஒவ்வொண்ணுக்கும் குதூகலப் படுவதை பார்த்து தன் சந்தேகங்கள மனசுக்குள்ள புதைத்தாள்.
அந்த நாளும் வந்தது.கல்யாண மண்டபத்தில் ஒரு பக்கம் நாதஸ்வரம் , மேள தாளம் . வாசித்துக் கொண்டு இருக்க ..பரபரப்பாக பட்டு புடவைகள் , பட்டு வேஷ்டிகள் கட்டிக்கொண்டு இங்கும் அங்கும்.மனிதர்கள் ஒடிக்கொண்டு இருந்தார்கள் பரபரப்பாக பையன் அஸ்வினின் அப்பா தொடர்ந்து ஒலித்த மொபைலலின் திரையில் அஸ்வினின் நம்பரைக் கண்டு ஸ்வைப்பினார். கால் கட்டானதும் மேலே தெரிந்த மெசேஜைப் படிக்கலானார். அவரின் முகம் மாறியது.தலைசுற்றியது.மணவறையை பார்த்தார். கல்யாண பெண்ணாக கல்பனா.
அஸ்வின் அனுப்பிய மெசேஜின் சாராம்சம் இது தான். "தன் உயிர் தோழன் சஞ்சய்க்கு நடந்த கல்யாணம் தோல்வியில் முடிந்ததால் தனக்கு கல்யாணம் ஒத்து வராதுன்னு தோன்றுவதாகவும் கல்பனாவை தன்னால் சந்தோஷமா வைத்துக் கொள்ள முடியாது என்று நினைப்பதால் இந்த கல்யாணம் வேண்டாம் கல்பனா ஒரு நல்ல பையனை பாத்து கல்யாணம் பண்ணிக்கட்டும் "
கேட்ட கல்பனாக்கு தலைகால் புரியவில்லை. அவள் அப்பாவுக்கு எதிர்பாராத ஏமாற்றம் கோபத்தின் உச்சத்துக்கே போயி கத்த ஆரம்பிச்சு விழப் போன அவரைத் தாங்கிப் பிடித்தது சுரேஷின் கரங்கள். சுரேஷ் அதே தெருவில் வசிப்பவன். அஸ்வின் அளவுக்கு படிக்கவில்லை என்றாலும் நல்ல வேலையில் இருப்பவன். கல்பனாவின் சின்ன வயது சிநேகிதன். தீவிர புத்தக காதலன் அவளை மாதிரி.
சுரேஷ் சற்றுத் தொலைவில் இருந்த அம்மாவிடம் பேசி விட்டு வந்து "உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா கல்பனாவை நான் கல்யாணம் பண்ணிக்கறேன்" என்று சொன்னவுடன் அப்பா அவன் கைகளைப் பிடித்து மேடை ஏற்றினார்.
கல்பனா சுரேஷ் கல்யாணம் இனிதே நடைபெற்றது.
பி.கு: ஒரு தோழியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தில் கொஞ்சம் கற்பனைக் கலந்து எழுதப்பட்டது.
Picture credits: Govindaraj Lakshminarayanan ji
No comments:
Post a Comment