*பாகற்காயின் கசப்பு குறைய வேண்டுமா.?*
*சமையல் டிப்ஸ் !!*
👉 வாழைப்பழத்திலிருந்து வெளிபடும் வாயு பிற பழங்களை விரைவாக பழுக்கவைத்துவிடும் ஆதலால் வாழைப்பழங்களை தனியே வைப்பது உகந்தது.
👉 ஆரஞ்சு பழத் தோல்களை தேநீர் தயாரிக்கும் போது சிறிதளவு சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
👉 பீட்ருட் பொரியல் செய்யும் போது அதனுடன் ஒரு கேரட் நறுக்கி சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
👉 கீரை, வெண்டைக்காய், வேக விடும்போது பாத்திரத்தை சிறிது திறந்து வைத்தால் காயின் பசுமை நிறம் மாறாமல் இருக்கும்.
👉 தக்காளி, வெங்காயம் போன்ற சாலட் தயாரிக்கும் போது தயிருக்குப் பதிலாக இரண்டு ஸ்பு ன் தேங்காய் பால் ஊற்றி பிசைந்து செய்யலாம்.
👉 சு ப் தயாரிக்கும் போது நன்றாக வேகவைத்த பீட்ரூட் துண்டு ஒன்றை அதில் போட்டு விட்டால் சாப்பிட சுவையாக இருக்கும்.
👉 பாகற்காயின் கசப்பு குறைய சிறிது புளி அல்லது எலுமிச்சம்பழ சாற்றை சேர்த்து வேக வைக்கவும்.
👉 காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது .
No comments:
Post a Comment