எஸ்.ரங்காச்சாரி என்று ஒரு டாக்டர்.
பிராமின் என்ற ஒரே காரணத்தினால் மறைக்கப்பட்ட வரலாறு. 😭
1939 இல் சென்னையில் அவருக்கு மட்டும் தான் வெள்ளைக்காரன் ஆட்சியிலேயே சிலை வைக்கப்பட்டது. இன்றும் ஜெனெரல் ஆஸ்பத்திரியில் காணலாம்.
சைக்கிளில் சென்று மருத்துவம் பார்த்தவர், நிறைய பேருக்கு சேவை செய்ய வேண்டும் என்று ரோல்ஸ் ராய்ஸ் வாங்கி பின் puss moth என்ற சிறு ரக விமானம் வாங்கி அதில் சென்று மருத்துவம் பார்த்தார். அனுதினம் 18 மணி நேர உழைப்பு.
எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் இந்தியாவின் முதல் டெபுடி சுப்பரின்டென்டென்ட் ஆக இருந்தவர். அரசு மருத்துவராக இருந்த வரை ஒரு பைசா கூட சம்பளமாக வாங்காதவர். அப்படி ஒரு சேவை மனப்பான்மை.
சர்ஜரிக்காகவே பிறந்தவர் என்று சொல்லலாம்.. நீண்ட விரல்களும், க்ஷண நேரத்தில் உயிர்காக்கும் முடிவுகளை எடுக்கும் திறமையும் கொண்டு பல அசாத்தியமான அறுவை சிகிச்சைகளை செய்தவர். தான் மிகவும் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டதையெல்லாம் மற்றவர்களுக்கு எளிமையாக சொல்லிக் கொடுத்தவர். யாரையும் கடிந்து கொள்ளாத பண்பாளர்.
திருச்சி கல்யாணராமன் ஒரு உபன்யாசத்தில் Presence of mind என்பதற்கு இவரை தான் உதாரணம் காட்டினார்.
எவ்வளவு படித்திருந்தாலும் தேவையான நேரத்தில் மூளை வேலை செய்யல சார் என்று சொல்வோர் உண்டு. சிலதெல்லாம் படிப்பு சொல்லிக்கொடுக்காது. கடவுள் அருள் தான் அந்த நேரத்தில் நாம் சரியான நடவடிக்கை எடுக்க உதவும்.
அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. ஒரு நாள் நடந்து போகும் போது பெரிய கூட்டம்.. தரையில் ஒரு பெண். அவள் கணவன் அழுது கொண்டிருக்கிறான். இவர் விசாரித்தார்.. ரங்காச்சாரி போன்ற பெரிய மருத்துவரிடம் போக வசதியில்லை ஐயா என்று இவரிடமே சொன்னான் அந்த கணவன். நான் பார்க்கட்டுமா என்று கேட்டுவிட்டு என்னவென்று பார்த்தால் ஒரு நிறைமாத கர்ப்பிணி.. குழந்தை கால் வெளியில் வந்துவிட்டது. கொஞ்சம் தாமதித்தாலும் இரு உயிர்களுக்கும் ஆபத்து.
சட்டென்று தன் கையிலிருந்த சிகரெட்டின் முனையை குழந்தையின் காலில் வைத்து அழுத்தினார். இப்போது ஸ்மார்ட் போனில் ரொட்டேட் என்று இருக்கிறதே அது போல குழந்தை சூடு தாங்காமல் காலை உள்ளே இழுத்துக்கொண்டு ரொட்டேட் ஆகி சுகப்பிரசவம் ஆகிவிட்டது. தாய் சேய் இருவரும் நலம். அதற்காக எல்லா பிரசவத்தையும் சிகரெட் வைத்து பார்க்கவும் முடியாது. அந்த நேரத்தில் அப்படி ஒரு ஐடியா கடவுளையன்றி வேறு யார் கொடுக்க முடியும்.
இவர் சீடர் knife ramaswamy என்று இவரால் பாராட்டப்பட்ட அறுவை மருத்துவர் பழமார்நேரி Dr PS Ramaswami ஆவார்.இவர் புகழ் பெற்ற வயலின் மேதை பழமார் நேரி ஶ்ரீ சுவாமிநாத அய்யரின் மூத்த மகன் ஆவார்.
இவர்களைப் பற்றி எந்தப் பாட்ப்புத்தகத்திலாவது மாணவர்கள் படிக்கிறார்களா?
இப்படிப்பட்ட மகான்கள் வாழ்ந்த தேசமிது..
No comments:
Post a Comment