Monday, May 16, 2022

சென்னை ஸ்பெஷல் மெனு


சாப்பாட்டு பிரியர்களுக்கு அறுசுவை உணவு சாப்பிட்டு மகிழுங்கள்  

சென்னை  ஸ்பெஷல் மெனு*   

நாம் எவ்வளவோ இடங்களில் ருசித்திருப்போம். அதில் குறிப்பிட்ட மெனு சிறப்பாக இருக்கும். 

அவற்றில் *சில மெனுக்கள்... veg

1. சர்க்கரைப் பொங்கல்... முருகன் இட்லி கடை, தி.நகர்

2.ரசமலாய்....அகர்வால் பவன், கோவிந்தப்ப நாயக்கர் தெரு.

3. பொங்கல்..ராயர் கடை, மைலாப்பூர்.

4. பொடி தோசை.. கற்பகாம்பாள் மெஸ், மைலாப்பூர்.

5. கட்லட்..அடையாறு சிக்னல் அருகே. பெயர் பலகை கிடையாது.

6.திரட்டுப் பால் (பால்கோவா) .. ஆவின். 

7. வடைகறி..சைட் டிஷ் உணவு..மாரி ஓட்டல், சைதாப்பேட்டை. இவர்களால் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. சைதாப்பேட்டை வடை கறி சினிமா பாடலால் பிரபலமானது.

8.போளி ..வெங்கடேஸ்வரா போளி கடை, மே. மாம்பலம்.

9. மெட்ராஸ் மிக்சர்.. அடையாறு ஆனந்த பவன்

10. வத்தல் குழம்பு.. தஞ்சாவூர் மெஸ், 

11. கோதுமை அல்வா..கோமதி சங்கர் சுவிட், தி நகர்

12. அல்வா.. இருட்டு கடை,தி.வேலி

13. பாதாம் அல்வா..ராம கிருஷ்ண லஞ்ச் ஹோம், பாரி முனை. டிரேஸ் பேப்பரில் வைத்து முன்பு கொடுப்பார்கள்.

14. கூம்பு தோசை‌‌... சங்கீதா OMR. தட்டில் கூம்பு வடிவில் இருக்கும். உடைத்து சாப்பிடும்படி முறுகல் ஆக இருக்கும்.

15. மைசூர் பாக்கு.. கிருஷ்ணா சுவிட்.

16. மோதி லட்டு, ஷி மிட்டாய், சேத்துபட்

17.முறுக்கு..கிராண்ட் சுவிட் அடையார்.

18. அரிசி உப்புமா..காமேஸ்வரி டிபன் கடை, மே.மாம்பலம். உப்புமாவா என்று சிரிக்காதீங்க. இங்கு சுவையாக இருக்கும். லேட்டாக போனால் கிடைக்காது.

19. அசோகா அல்வா.. ஆண்டவர் கடை, திருவையாறு. சிறிய ஊரில் இருந்தாலும் அங்கு வரும் கர்நாடக இசை ரசிகர்களால் பிரபலமானது.

20. ரவா இட்லி..ராமா கஃபே, காஞ்சிபுரம். இவர்களால் காஞ்சிபுரம் இட்லி என்று பிரபலமானது.

21.வெங்காய சாம்பார்..காளியாகுடி ஓட்டல் மாயவரம். இங்கு சாம்பாரை வாங்கி குடிப்பதாக சொல்வார்கள்.

22.சோன்பப்டி...முராரி சுவிட். கும்பகோணம்.

23.மில்க் பேடா..ராஜா சேட் சுவிட், கும்பகோணம். சிறு கோலி சைசில் இருக்கும். சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். வேறு கடைகளில் இதை பார்த்ததில்லை.

24. மசாலா தோசை..MTR பெங்களூர்.

25. சாம்பார் இட்லி..ரத்னா கபே, திருவல்லிக்கேணி. மயிலாப்பூர் மற்றும் அடையாறு

26. கடப்பா... சாம்பார் போல் சைடு டிஷ், வெங்கட்ரமணா ஓட்டல் கும்பகோணம். குறிப்பிட்ட கிழமைகளில் மட்டுமே கிடைக்கும்.

===

No comments:

Post a Comment