கமகம வாசனையுடன் இப்படி முருங்கைக்காய் மசாலா குழம்பு
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1, தக்காளி – 1, முருங்கைக்காய் – 2, தேங்காய் – 3 சில்லு, வெள்ளை எள் – 2 ஸ்பூன், வேர்க்கடலை – 2 ஸ்பூன், கசகசா – 2 ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், தனி மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து. -
செய்முறை:
முதலில் மூன்று சில்லு தேங்காயை பொடியாக நறுக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் வெள்ளை எள், 2 ஸ்பூன் வேர்க்கடலை, நறுக்கிய தேங்காய் மற்றும் 2 ஸ்பூன் கசகசா இவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.
பின்னர் இவற்றை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், தக்காளி முருங்கை காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் இவற்றுடன் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். - பிறகு இதனுடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் வதக்கவும். பிறகு இவற்றுடன் தக்காளி மற்றும் முருங்கைக்காயை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, கடையின் மீது ஒரு தட்டு போட்டு மூடி, முருங்கைக்காயை வேக விட வேண்டும். அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதையும் சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின்னர் இவை அனைத்தையும் சேர்த்து பத்து நிமிடத்திற்கு நன்றாக கொதிக்கவிட வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலந்து விடவும்
பகிர்வு
No comments:
Post a Comment