சமையல் டிப்ஸ் பகுதி 03
1) வாங்கி சில நாட்கள் ஆகிவிட்ட காலிபிளவர், முள்ளங்கி,முட்டைகோஸ், டர்னிப் ஆகியவை செய்யும் போது மிகவும்சகிக்க முடியாத வாடை ஏற்படும்.
இதை தவிர்க்க, சிறிது எலுமிச்சை சாறும், சர்க்கரையும் கலந்து சமைத்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
2) தயிர் பச்சடி நீர்த்துப் போய்விட்டால், சிறிது நிலக்கடலையை வறுத்து நைசாக பொடி
செய்து கலந்துவிடலாம். இதனால்,பச்சடி கெட்டியாவதோடு சுவையும், சத்தும் கூடும்.
3) கேரட், பீட்ரூட், முள்ளங்கி ஆகியவை உடலுக்கு அதிகம் நன்மை பயப்பவை. இவற்றில் தோலை அரிந்து எறிந்து விடக்கூடாது. தோலுடன் சமைப்பதே சிறந்த முறை.
4) கீரை வகைகள் வேகும் போது அதிலிருந்து ஒரு வித நச்சுக் காற்று வெளியேறும்.எனவே, வேகும் போது மூடி போட்டு மூடக் கூடாது.அவ்வாறு மூடினால் நச்சுக் காற்று கீரையிலேயே தங்கி உடலுக்கு கெடுதியைஉண்டு பண்ணும்.
5) அரிசி, தானிய வகைகளை அதிகளவில் நீரில் கழுவக் கூடாது. அதிலுள்ள தாதுக்கள்,வைட்டமின்கள் தண்ணீரில் கரைந்துவிடும்.
6) தக்காளி சூப் செய்து நீண்ட நேரம் வைத்திருந்தால், அதுஅமிலத் தன்மை உடையதாக மாறிவிடும். இதை தடுக்க சூப் இளஞ்சூடாக இருக்கும் போதே ஒரு சிட்டிகை சோடாமாவு சேர்க்க வேண்டும்.
7) பருப்புகளை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
8) உருளைக்கிழங்கை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது மஞ்சள்,எண்ணெய் சேர்த்து, வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
9) பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப்பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
10) காய்கறிகள் வாங்கும் போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும். புடலங்காய் கசப்பாக இருந்தால், அவை பாம்பு ஏறிய காய் என்பார்கள். ஆகவே சிறிது கிள்ளி சுவைத்து பார்த்து வாங்க வேண்டும்.
No comments:
Post a Comment