Thursday, May 26, 2022

ஆஸேது ஹிமாசலம்

 His Holiness is really great!"

"ஆஸேது ஹிமாசலம்,காது குத்திக் கொள்வது ஹிந்துக்கள் சம்பிரதாயமாயிற்றே!"

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சதாராவில் பெரியவா தங்கியிருந்த போது,உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். வெகு நேரம் பல விஷயங்களைப் பற்றி அவரிடம் பெரியவா பேசிக் கொண்டிருந்தார்கள்.

நீதிபதி தயங்கியபடியே கேட்டார். "கிறிஸ்தவர்கள் சிலுவை அணிந்து கொள்கிறார்கள். இஸ்லாமியர்கள் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, தொப்பி போட்டுக் கொள்கிறார்கள்.

பெண்கள் பர்தா அணிகிறார்கள். அதேபோல ஓர் அடையாளம் ஹிந்துக்களுக்கு இல்லாதது ஒரு குறையாகத் தோன்றுகிறது...நமக்கு என்ன அடையாளம் என்று மஹராஜ் சொன்னால் தேவலை.."

பெரியவா சற்றே சிரிப்புத் தோன்ற,தன் செவிகளைத் தொட்டுக் காட்டினார்கள்.பின் அதன் கீழ்ப் பகுதியில் துளை போடுவது போல் ஒரு விரலை வைத்துக் காட்டினார்கள்.

"ஆஸேது ஹிமாசலம், காது குத்திக் கொள்வது ஹிந்துக்கள் சம்பிரதாயமாயிற்றே"என்றார்கள். நீதிபதிக்கு ரொம்ப ஆனந்தம்.

"பெரியவாளைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு நுட்பமான பதிலைக் கூறமுடியாது. His Holiness is really great!" என்று முகம் மலரக் கூறி பிரசாதம் பெற்றுச் சென்றார்.

Jaya Jaya shankara hare hare shankara

No comments:

Post a Comment