கலாட்டா கல்யாணம்
அந்த காலத்தில் கல்யாணம் என்றாலே கலாட்டா தானா அது ஒரு வார திருவிழா
உறவுகள் கொடிகட்டி பறக்கும். திருமணங்களில் முக்கிய அடையாளங்களாக வலம் வருபவர்கள் முக்கிய உறவினர்கள். திருமணத்தில் இரு கோஷ்டிகள்
ஒன்று மாப்பிள்ளை ஆத்துப்பேர்
மற்றொன்று பெண் ஆத்தப்பேர். பிள்ளையாத்துப்பேர என்ற தரப்பில் மூன்று முக்கிய CEO க்கள்
1.பிள்ளையின் தாய் மாமா
2 பிள்ளையின் தமக்கை
3.தமக்கையின் ஆத்துக்காரர்
இவர்கள் சகல அதிகாரம் படைத்தவர்கள்
இந்த ஆத்துப்பேர் தரப்பில் நாம் இருந்தால் ராஜ நடைபோடலாம் ராஜ உபசாரம் நடக்கும் இவர்கள் யாரைவேண்டுமானாலும் அதிகாரம் செய்யலாம்
அடுத்து பெண் ஆத்துப்பேர்இந்த பரிதாப கோஷ்டியின்தலைவர்பெண்ணின் தோப்பனார்இந்தகோஷ்டிக்கு உதவியாக பெண்ணின் சித்திகள்
பெண்ணிற்கு அண்ணி இருந்தால் அது எதிர்கோஷ்டிக்கு ஆதரவாகவே பேசும்
முதலில் சகல வசதியுடன் கூடிய ஜாகை ஏற்பாடு செய்ய வேண்டியது பரிதாப கோஸ்டியின் முக்கிய கடமை
புரோக்கிராம் 1
மாப்பிள்ளை வீட்டார் ஜாகைக்கு வந்தவுடன் அவர்களை பூர்ண கும்ப மரியாயதையுடன் வரவேற்கவேண்டும் மூன்று வயது வாண்டுவை கூட வாடாதம்பி என அன்போடு அழைக்கவேண்டும்
ஏனெனில் அவன் நாத்தனாரின் பையனாய் இருப்பான் அடுத்த protocol மாப்பிள்ளை வீட்டார் அறிமுக நிகழ்ச்சி சம்பந்தி நம்பர்1
ஒன்று விட்ட ரெண்டுவிட்ட மூன்று விட்ட என அத்தனை பேரையும் சொல்லுவார் பெண்ணின் தாயார் இந்த விட்ட அனைத்தையும் விடாமல் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்மூன்று நாட்களுக்கு
உங்கள் ஆத்தில் வந்துதான் விரதம் செய்ய வேண்டும்எனமாப்பிள்ளையின் தாத்தா ஏற்கனவே சொல்லியிருப்பார தாத்தாவுக்கு மூன்று நாட்களுக்கு வேளாவேளைக்கு காப்பி பலகாரம் வெற்றிலை பாக்கு சீவல் அத்தனையும் அவர் இருப்பிடம் தேடிவரும் வாத்தியார் இதற்கு ரெடிபண்ண ஸநான பான ஆகார வேலைகளை முடித்துகொள்வார்கள் இதற்கிடையில் ஒரு குட்டி தூக்கம் போட்டுக்கொள்வார் மதியம் சாப்பாடு முடிந்தவுடன் .பெ. தோ.
சாயந்தரம் ஆறுமணிக்கு பிள்ளை
யார் கோவிலில் இருந்து ஜானவாசம் அதற்கு தயாரா எல்லோரும் கோயிலுக்கு வந்துடுங்கோ
சாயந்தரம் பஜ்ஜி சொஜ்ஜி கேசரி டிபன் மமுடித்து ஜானவாசத்துக்கு அலங்காரம் பண்ண ஆரம்பிச்சுடுவா
தன்னிடம் இருக்கும் உயர்ந்த ரகப்பட்டுபுடவையினை பயன்படுத்தும் ஒரு நிகழ்ச்சியே கல்யாணம். நகைநட்டு தோடுமூக்குத்தி ஜிமிக்கி சகிதமாய் அத்தனை பெண்களும் ரெடியாகி நாட்டியம் ஆடாத குறையா அங்கும் இங்கும் அலைவார்கள் எதுக்கு போறாங்களோ எங்கே போறாங்களோ தெரியாது ஜானவாசத்திற்கு கண்டிப்பாக அம்பாசிடர் கார் வேண்டும் அதில் பத்து வாண்டுகள் முன்னதாகவேஇடம் பிடித்துக்கொள்ளும மாப்பிள்ளை யாரையும் எதுவும் சொல்லமுடியாமல் இடம்பிடிப்பார்
ஜானவாசத்தில் மாப்பிள்ளைக்கு மயில் கண் பட்டு அங்க வஸ்திரம் செயின் மோதிரமா கைகெடிகாரம் அனைத்தும் இருக்கும் எது குறைந்தாலும் போர் பரணி ஒலிக்கும் ஒருவழியா நிச்சயதார்த்தம் முடிந்து எல்லோரும் சாப்பிட்டு ஜாகைக்குசென்றபின்பு பெண்ணின் தோப்பனார்க்கு கொஞ்சம் நிம்மதி
முகூர்த்ததன்று காலை நான்குமணிக்கு அவா ஜாகைக்கு காப்பி அனுப்ப வேண்டும் பல் துலக்காமலே காப்பி குடிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு
அன்றைய முதல் நிகழ்ச்சியான்
பெண்ஆத்துபெண்கள் பெண்ணின் மாமி தலைமையில் மாப்பிள்ளை ஆத்துபேரிடம் சென்று மங்கள ஸ்நானம் செய்ய வேண்டும் எல்லோரும் வாருங்கள் என அழைக்கவேண்டும் அதற்குள் மணையில் பல் தேய்கிற பட்சணம் வைக்கவேண்டும பிறகு காசியாத்திரை ஊஞ்சல் பச்சைபொடி தூவுதல் என அனைத்துமே மகளிர் சிறப்பு நிகழ்ச்சிகள்
இதன் சிறப்பு நிகழ்ச்சி பெண்ணின் மாமன் பையனின் மாமன் இருவரும் தோளில் சுமந்து மாலை மாற்றுவது நம் கலாச்சாரத்தின் பெருமை மிகு நிகழ்ச்சி அங்கு தான் கலகலப்பு
பின்னர் பிரவரம் சொல்லுதல்
பின்னர் கன்னிகா தானம் பின்னர் மாங்கல்ய காரணம்
மாப்பிள்ளை வந்தாரா
மாட்டுபொண்ணு வந்தாளா விசாரணை திருமண நிகழ்வுகளில் பாசத்தோடு பங்கேற்பது அக்காக்கள் அண்ணிகள் .மாமிகள் அத்தைகள் இருதரப்பு கோஷ்டியு ம் திருமணம் முடிந்த மகிழ்வுடன் விடை பெற்றுக்கொள்வது நம் து பண்பாடு
அன்றைய இரவு நலுங்குகேலியும்கிண்டலும்பெண்ணின் அபஸ்வரஸகுரலில் ஒரு பாட்டு பின்னர் பாலிகை கரைத்த்தல் பாட்டிகளன் கும்மி சாந்தி முகூர்த்தம்
மறுநாள் கட்டுசாத கூடையுடன்மணமகளை புக்ககம் ஆனந்த கண்ணீருடன் பெற்றோர் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி க்கெல்லாம் பெருந்தவம் செய்திட வேண்டும ஆயிரம் கலாட்டா இருந்தாலும் அவை அனைத்தும் நொடியில் மாறிடுமே பெரிசுகள் உட்கார்ந்த இடத்திலையயேஸகாப்பி டிபனைகொண்டுவரசொல்லி24 x7 சீட்டுகச்சேரி இதெல்லாம் extra curricular activity
No comments:
Post a Comment