Thursday, May 26, 2022

ஆடல்வல்லான் ஸ்ரீ நடராஜ சுவாமி

 தீராத நோய் தீர்க்கும் மஞ்சள் பிரசாதம் 

மிக பழமையான வாராஹி தலம்

திருஉத்திரகோசமங்கை என்னும் திருத்தலம் உலகின் முதல் சிவாலயம் என்று கருதப்படுகின்றது.....

மண் தோன்றியதோ மங்கை தோன்றியதோ என்னும் வாசகம் இதனை நமக்கு உணர்த்தும்...

அந்த சிவாலயம் மிகப்பழமையான சிவாலயமாக இன்றளவும் இரண்டு இராஜ கோபுரங்களைக் கொண்டு விளங்கி வருகின்றது...

அந்த ஆலயத்தின் மிகப் பிரதான தெய்வமாக விளங்குபவர் ஆடல்வல்லான் ஸ்ரீ நடராஜ சுவாமி அவர் அவரது திருமேனி மரகதத்தால் ஆனது...

வருடத்திற்கு ஒருமுறை திருவாதிரை அன்று மட்டும் அபிஷேகம் காணும் அவர் மற்ற நாட்களில் எல்லாம் சந்தனத்தால் அதாவது சந்தனகாப்பு செய்யப்பட்டு விளங்கி வருகின்றார்....

இத்தனை சிறப்புகளைக் கொண்ட அதே உத்திரகோசமங்கையில் தான் பஞ்சமி திதி தேவதையாக விளங்கும் ஸ்ரீ வாராகி அம்மன் சுயம்புவாக தோன்றி அருள் புரிந்து வருகின்றார்......

அந்த ஆலயத்தின் மற்றொரு தெய்வம் ஸ்ரீ மங்கை மாகாளியம்மன் ஆவார்...

சுற்றுப்புற கிராமங்கள் வரண்டு இருந்தாலும்கூட இந்த ஆலயத்தின் எதிர்ப்புறம் இருக்கக்கூடிய மிகப்பெரிய குளமானது ஒரு காலத்திலும் வறண்டு போனது கிடையாதாம்....

அந்த குளக்கரையின் மகுடமாக திகழ்கின்றது ஸ்ரீ சுயம்பு வாராகி அம்மன் திருத்தலம்.....

அன்னையின் வடிவம் சுயம்புவாக உள்ளதால் பெரும்பாலான நாட்கள் அன்னை வெள்ளி கவசம் சாத்தப்பட்டு விளங்குகிறாள் விசேஷ காலங்களில் மஞ்சள் சந்தனம் காப்பு ஏற்றுக் கொள்கிறாள் அன்னை வாராகி....

மிகப்பெரிய வடிவமாக அமர்ந்த நிலையில் ஒரு காலை மடித்து மற்றொரு காலை பூமியில் ஊன்றியவாறு சுயம்பு திருமேனியாக விளங்குகிறாள் வாராகி அம்மன்...

வாராஹி அம்மன் ஆலயங்களில் தமிழ்நாட்டில் மிகப் பழமையான ஆலயங்களாக கருதப்படும்

தஞ்சை வாராஹி

அறச்சாலை அம்மன் என்று கூறப்படும் பள்ளூர் வாராகி

அகிலாண்டேஸ்வரி என்னும் வாராகி சக்தி

பின்னர் இந்த உத்திரகோசமங்கை வராகி மிக பிரபலமான இடத்தைப் பெறுகின்றனர்.....

இந்த ஆலயத்திலும் மஞ்சள் வழிபாடுதான் மிகப் பிரபலமாக விளங்குகின்றது....

தீராத நோய் தீருவதற்கு இந்த ஆலயத்திற்கு வந்து மஞ்சள் கிழங்கை அம்மியில் அரைத்து அம்பாளுக்கு செலுத்துகின்றனர் பக்தர்கள்....

அதுவும் இந்த ஆலயத்தின் எதிரே இருக்கக்கூடிய வற்றாத குளத்தின் நீரைக் கொண்டு தான் மஞ்சளை அழைக்க வேண்டும் அந்த மஞ்சள் பிரசாதத்தை அம்பிகைக்கு சார்த்தி ஏற்கனவே அம்பிகைக்கு சார்த்தப்பட்ட மஞ்சள் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டு ஆலயத்தில் உட்கொள்ள வேண்டும் அவ்வாறு செய்ய தீராத நோய்கள் தீரும் நிச்சயம்.....

பஞ்சமி மற்றும் ஆஷாட நவராத்திரி நவராத்திரி காலம் மற்றும் ஒவ்வொரு வெள்ளி செவ்வாய் ஞாயிறு ராகு காலம் ஆகிய காலங்களில் கோவிலில் கூட்டம் அலை மோதுகின்றது....

அதுமட்டுமின்றி வாராகி தனி கருவறையில் தனிக்கோவில் கொண்டு விளங்குவது இங்கு சிறப்பம்சமாகும்.....

மேலும் ஆலய வளாகத்தில் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைக்க இட வசதி செய்யப்பட்டு உள்ளது.....

மஞ்சள் அழைப்பதற்கு வசதியாக தரை மற்றும் திண்டு அமைத்து அதன் மேல் நிறைய அம்மி கற்கள் பதிக்கப்பட்டுள்ளது....   

🚩

No comments:

Post a Comment