ஆலயதரிசனம்...
இரவு நேரத்தில் காட்சி தரும் காலதேவி
புராணங்களில் சொல்லப்படும் ‘காலராத்திரி’ என்பதைத்தான் இங்கே காலதேவியாக, பெண் வடிவில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் எம்.சுப்புலாபுரம் என்ற ஊருக்கு அருகில் இருக்கிறது, சிலார்பட்டி. இங்கு காலத்தின் அதிபதியாக, நேரத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அம்மனுக்கு தனிக் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் மூலவராக ‘காலதேவி அம்மன்’ வீற்றிருக்கிறார். இந்த ஆலயத்தின் கோபுரத்தில், ‘நேரமே உலகம்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.
புராணங்களில் சொல்லப்படும் ‘காலராத்திரி’ என்பதைத்தான் இங்கே காலதேவியாக, பெண் வடிவில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இந்த காலதேவியின் இயக்கத்தில்தான் பிரபஞ்சம் முழுவதும் இயங்குவதாகவும், படைத்தல், காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி இந்த காலதேவிக்கு உண்டு.
No comments:
Post a Comment