#ரகோபதேஸம்
எழுதியது பாஸ்கர் சத்யா
#ரகோபதேஸம்_14
'வாடா பாஸு. இன்னிக்கு உன்ன பார்க்க ரொம்ப ஆவலோட காத்துண்டிருக்கேன்.'
'ஏன் மாமா?'
'அது ஒண்ணும் இல்லடா. நோக்கு ஸ்பேஷலா என்ன சொல்லிக் கொடுக்கலாம் இன்னிக்கி அப்படின்னு யோசிச்சுண்டு இருந்தேன். நல்ல டாபிக் மனசுல பட்டது.'
'அது என்ன மாமா?'
'அவசரப்படாதே. சொல்லிக் கொடுக்கத்தானே போறேன்.'
'ஸஸ்பென்ஸ கூட்டறேளே மாமா? என்ன டாப்பிக்குன்னாவது சொல்லக்கூடாதா?'
'அதுவேற ஒண்ணுமில்லடா. அன்னைக்கு மந்திர புஷ்ப மந்திரங்களப் பத்தி சொல்லிக் கொடுத்தேனேன்னோ? அதோட தொடர்ச்சியா நோக்கு ஸாந்தி மந்திரங்களை பத்தியும் சொல்லிக் கொடுத்தா தேவலை அப்படின்னு தோணித்து.'
'சாந்தி மந்திரங்களா?'
'ஆமாம் பாஸு. ஸாந்தி அப்படின்னா அமைதின்னு பொருள். பக்தியோட துவக்கம் நம்பிக்கைகளாகவும் பிரார்த்தனைகளாகவும் இருந்தாலும் வாழ்க்கைல நிறைவா நாம தேட போறது அமைதி மாத்திரம்தான். இத நாம சரியா புரிஞ்சுண்டோம்னா பக்தியோட அமைதி தேடறதையும் அதற்கான பிரார்த்தனைகளையும் ஆரம்பக்கட்டத்திலேயே சேர்த்துண்டா நல்லது தானே?'
'நம்மளோட அமைதியை தடுக்கிறது எது அப்படிங்கிறத புரிஞ்சிண்டோம்னா அமைதியை நோக்கி நம்மளோட பயணம் சுலபமா போயிடும். பெரும்பாலும் நம்ம அமைதியை குலைக்கறது நம்மளோட சிந்தனைகள்தான். சிந்தனைகள் இல்லாமல் மனுஷாளால இருக்கவே முடியாது என்பதுல உண்மை இருந்தாலும் சிந்தனைகளிலேயே உழண்டுண்டு இருக்கப்படாது. தேவையற்ற எண்ணங்களை தவிர்க்கணும். அப்போதுதான் அமைதி என்கிற தத்துவம் உன்னோட ஹ்ருதயத்துக்குள்ள நுழையறதுக்கான சாத்தியம் கிடைக்கும்.'
'நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைத்திருப்பதன் காரணம் இது தான். ஒவ்வொரு பிராகாரத்தில் சுற்றி வரும்போது மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால முழுமனசோட தெய்வ சிந்தனையில் ஈடுபட முடியறது.'
'எந்த ஒண்ணையும் செய்யறதுக்கு முன்னாடியோ அல்லது செய்யறச்சேயோ அதற்கு ஏற்ப மனநிலைய கொண்டுவருவது ரொம்ப ரொம்ப முக்கியம்.'
கேன உபநிஷத்துல ரெண்டு சாந்தி மந்திரங்கள் இருக்கு.
ஒண்ணு ....
இப்ப இந்த மந்திரத்த பதம் பிருச்சி பார்க்கலாம்:
ஸஹ நௌ- நம் இருவரையும்;
அவது- காப்பாராக;
ஸஹ நௌ- நம் இருவரையும்; புனக்து- அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக;
ஸஹ- சேர்ந்து;
வீர்யம்- ஈடுபாடுமிக்க ஆற்றலுடன்;
கரவாவஹை- உழைப்போமாக; அதீதம்- கற்றது;
நௌ- நமக்கு;
தேஜஸ்வி- பயனுள்ளதாக; அஸ்து- விளங்கட்டும்;
மா வித்விஷாவஹை- வெறுக்காமல் இருப்போமாக!
ஆச்சாரியர் சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!
குறைகளும் தடைகளும் இல்லாமல் உபநிஷதக் கல்வி நிறைவேற இந்த மந்திரம் பிரார்த்திக்கிறது.
அடுத்து ரெண்டாவது ஸ்லோகம்.
ஓம் ஆப்யாயந்து மமாங்கானி வாக்ப்ராணச் சக்ஷú: ச்ரோத்ரம் அதோ பலமிந்த்ரியாணி ச ஸர்வாணி ஸர்வம் ப்ரஹ்மௌப- நிஷதம் மாஹம் ப்ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்ரஹ்ம நிராகரோத் அனிராகரணமஸ்து அனிராகரணம் மேஸஸ்து ததாத்மனி நிரதே ய உபநிஷத்ஸு தர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
மம- எனது;
அங்கானி- அவயவங்களான; வாக்- வாக்கு;
ப்ராண:- பிராணன்;
சக்ஷú: - கண்கள்;
ச்ரோத்ரம்- காதுகள்;
அதஉ- மற்றும்;
ஸர்வாணி- எல்லா; இந்த்ரியாணி ச- புலன்களும்;
பலம் ஆப்யாயந்து- மிகுந்த ஆற்றலுடன் விளங்கட்டும்;
ஒளபநிஷதம்- உபநிஷதங்கள் கூறுகின்ற;
ப்ரஹ்ம- இறைவனே;
ஸர்வம்- எல்லாம்;
ப்ரஹ்ம- இறைவனை;
அஹம்- நான்;
மா- நிராகுர்யாம்- மறுக்கா திருப்பேனாக;
ப்ரஹ்ம- இறைவன்;
மா- என்னை;
மா நிராகரோத்- மறுக்காதிருப்பாராக; அனிராகரணம் அஸ்து- மறுப்பு இல்லாதிருக்கட்டும்;
மே- என்னிடமிருந்து; அனிராகரணம் அஸ்து- மறுப்பு இல்லாதிருக்கட்டும்;
தத் ஆத்மனி- அந்த ஆன்மாவ
நிரதே- நாடுகின்ற;
மயி- எனக்கு;
யே தர்மா; - எந்த தர்மங்கள்; உபநிஷத்ஸு- உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ளனவோ;
தே-அவை;
மயி- என்னில்; ஸந்து- குடிகொள்ளட்டும்.
எனது அவயவங்களான வாக்கு, பிராணன், கண்கள், காதுகள், மற்றும் எல்லா புலன்களும் மிகுந்த ஆற்றலுடன் விளங்கட்டும். உபநிஷதங்கள் கூறுகின்ற இறைவனே எல்லாம். அந்த இறைவனை நான் மறுக்காதிருப்பேனாக. இறைவன் என்னை மறுக்காதிருப்பாராக. இறைவனிடமிருந்தும் மறுப்பு இல்லாதிருக்கட்டும். என்னிடமிருந்தும் மறுப்பு இல்லாதிருக்கட்டும், உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ள தர்மங்கள், ஆன்மாவை நாடுகின்ற என்னில் குடிகொள்ளட்டும்!
எதையும் சாதிப்பதற்கு உறுதியான உடலும் திடமான மனமும் வேண்டும். இரண்டையும் பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.
மூன்று விதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக ஓம் சாந்தி: சாந்தி என்று மூன்று முறை சொல்லப்படுகிறது. மூன்று தடைகள் என்னென்ன அப்படிங்கிறத சொல்றேன். கேட்டுக்கோ. '
ஒண்ணு.
ஆத்யாத்மிகம்: அதாவது நம்மாலேயே நமக்கு வரும் தடை. உதாரணமா உடல் நோய், மனப் பிரச்சினைகள்.
ரெண்டு.
ஆதி பௌதிகம்: இது பிற உயிர்களால் வரும் தடை. அடுத்தவா நமக்கு சிரமங்கள் கொடுப்பதால, மிருகங்கள் நமக்கு கொடுக்கற சிரமங்கள். சில சமயங்கள் அடுத்தவாளோட பிரச்சினைகள கேள்விப்படும்போது கூட நமக்கு சிரமங்கள் வரலாம்.
கடைசியா மூணாவது.
ஆதி தைவிகம்: இயற்கை சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை. பொதுவா இவைகளை பேரிடர்கள் அப்படி என்ன சொல்லுவா.
'நம்ம அமைதிக்கு தடையாய் இருக்கிற விஷயங்கள தெரிஞ்சிண்டா புரிஞ்சிண்டா அந்த தடைகள சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அவாய்ட் பண்ணிக்கலாமோன்னா. எல்லா சமயங்களிலும் முடியாதுங்கறது வாஸ்தவம்தான். இல்லேங்கல. ஆனா கூட ஓரளவு நம்ம அமைதிக்கு குந்தகம் வராம பாத்துக்கலாமோன்னோ?'
'பிரமாதம் மாமா. ரொம்ப யூஸ்ஃபுலா இருக்கும் போல தெரியறதே? நீங்க சொன்னளே அந்த உபநிஷத்து ... அதுல இதெல்லாத்தையும் சொல்லி இருக்காளா?'
'ஆமாண்டா. இந்த கேன உபநிஷத்து ஒரு பொக்கிஷமே தான். பல ஸ்லோகங்கள் அமைதிக்கான ஒரு ரூட்ட படம் போட்டு காட்டிருக்கு.'
'உடல், மனம், பிராணன் போன்றவை செயல்படுவது யாரால் என்ற கேள்வியோடத்தான் இந்த உபநிஷதம் ஆரம்பிக்கறது. அமைதிக்கான சூட்சமங்கள இதிலேந்து கத்துக்கலாம். நிறைய விஷயங்கள் விலாவாரியா சொல்லப்பட்டிருக்கு. கூடுமானவரை நோக்கு சுருக்கமா சாராம்சத்தை சொல்றேன்.'
'அலைபாயற வஸ்து மனம். இல்லையா?
'ஏவப்பட்ட மனம் யாருடைய விருப்பத்தால செல்றது? முக்கியப் பிராணனைச் செலுத்துவது யார்? யாருடைய சங்கல்பத்தால் வாக்கு பேசப்படுகிறது? கண்களையும் காதுகளையும் எந்த தேவன் செயல்படுத்துகிறான்? நாம மனசுக்கு இந்த வேகத்தைக் கொடுத்தது யார்?
பிராணன். எங்கும் நிறைந்து உலகை இயக்குகின்ற ஆற்றலே பிராணன். அந்தப் பிராணனின் ஓர் அம்சம் நமக்குள்ளும் செயல்படறது. இந்தப் பிராணனை இயக்கறது யார்? வாக்கு எதனால் ஏவப்பட்டு இயங்கறது?'
'கண், காது என்ற இரண்டு பெயர்களின் மூலம் அனைத்து புலன்களும் சுட்டிக்காட்டப்படறதே. அப்படின்னா அந்த புலன்கள் யாரால் இயக்கப்படறது?
'உடம்பும் மனசும் புலன்களும் பிராணனும் எல்லாம் இயங்குவது யாரால் அப்படிங்கற கேள்விக்கான பதில்தான் அமைதியை தேடும் முயற்சிக்கு வித்தா இருக்கு. அதாவது விதையாய் இருக்கு.'
'ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு மாமா. இதற்கான பதில உடனே கொடுக்க மாட்டேளா அப்படின்னு ஆர்வம் வர்றது?'
'இவ்வளவு சொன்னவன் அதையும் சொல்லாம இருப்பேனா? ஒரு அருமையான ஸ்லோகத்தில பதில் அழகா சொல்லப்பட்டிருக்கு
'இதோட பொருள கவனமா கேளு.'
'காதின் காதாக, மனத்தின் மனமாக, வாக்கின் வாக்காக, பிராணனின் பிராணனாக, கண்ணின் கண்ணாக இருப்பது ஆன்மா. உணர்வு விழிக்கப் பெற்றவன் இந்த உண்மையை உணர்ந்து, புலன் உலகிலிருந்து விலகி மரணமற்ற நிலையை அடைகிறான்.'
'சுருக்கமா நீ உன்ன உனக்குள்ள தேட ஆரம்பிச்சா.. அதாவது சூக்ஷமமா உன்னோட உடம்புக்குள்ள புகுந்து இருக்கிற அல்லது சித்தியோட அடிப்படையில் புகுத்தப்பட்டிருக்கிற ஆன்மாவைப் பற்றி யோசிக்க ஆரம்பிச்சா அமைதிக்கான கதவு கொஞ்சம் கொஞ்சமா திறக்கப்படறது.'
'ஆரம்ப கட்டத்துல சஞ்சலங்களோட நீ அமைதியா மௌனமா உட்காந்து தியானம் செய்ய ஆரம்பிச்சாலும் மெல்ல மெல்ல எண்ணங்கள் குறிஞ்சிண்டே வந்து ஒரு கட்டத்துல ஆன்மா வெளிப்பட்டு மரணமே இல்லாத ஒரு நிலையை கொடுக்கறது.'
'இன்னும் விவரமா சொல்லிண்டே போகலாம். இன்னிக்கு இத்தோட நிறுத்திப்போம். நோக்கு சொல்லிக் கொடுக்கணுங்கற ஆர்வம் என்கிட்ட இருந்ததாலும் உன்னிப்பா கவனிச்சிண்டு வந்த உன்னோட ஆர்வத்தாலும் இன்னிக்கு நேரம் போனதே தெரியல.'
'ஆமாம் மாமா.'
நமஸ்காரங்களையும் அபிவந்தனத்தையும் சமர்ப்பித்து விட்டு விடை பெறுகிறேன்.
தொடரும்...
No comments:
Post a Comment