Sunday, May 15, 2022

நரசிம்ஹர் கோவில் பொடி சாதம்

 நரசிம்ஹர் கோவில் பொடி சாதம்..

 நங்கநல்லூரில் உள்ள நரசிம்மர் கோயிலில் கொடுக்கப்படும் பொடி சாதம் பிரசாதம் எப்படி செய்வது? 

🍱 தேவையானவை: 

உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
மிளகு - ¼ ஸ்பூன்
வெந்தயம் - ¼ ஸ்பூன்
கறிவேப்பிலை - 4 ஆர்க்குகள்

🍴 செய்முறை: 

வெறும் கடாயில் வெந்தயத்தை கருகாமல் வறுத்து எடுக்க வேண்டும். உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும். இதில் உப்பு சேர்த்து பொடிக்க வேண்டும். சாதத்துடன் பொடி, நல்லெண்ணெய் சேர்த்து கலந்து மூடி வைக்க வேண்டும்.

இறுதியாக தேவையான பொடி சாதம் ரெடி..



No comments:

Post a Comment