Friday, November 26, 2021

அச்சுப்பலகாரம்

 அச்சுப்பலகாரம் - உறைப்பு, உப்பு சேர்த்தது.....

தேவையானபொருட்கள்....

1 கப் கோதுமை மா/
அல்லது
All purpose flour - 1கப்
1 தேக எள்ளு
3/4 தேக ஓமம்
3/4 தேக காய்ந்த  மிளகாய் தூள்
3/4 தேக உப்பு தூள்
11/2 மேக நெய்
1/4 கப் தண்ணீர்
எண்ணை பொரிப்பதற்கு

செய்முறை.... 

ஒரு பாத்திரத்தில் மா, உப்பு, காய்ந்த மிளகாய் தூள், ஓமம், எள்ளு  இட்டுக் கலக்கவும். பின்பு அதனுள் உருக்கிய நெய்யை விட்டு கைகளால் கலந்து பிசையவும். நெய் எல்லா மாவிலும் பிரளக்கூடியதாக பிசையவும். பின்பு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்து இறுக்கமான கலவையாக உருட்டி எடுக்கவும். 

இந்த மா கலவையை 1/2 மணி நேரம் மூடி வைத்துவிடவும். பின்பு அந்த மாவை மீண்டும் பலதடவைகள் பிசைந்து பின்பு எண்ணை தடவிய பலகையில் வைத்து மெல்லியதாக உருட்டி விரும்பிய வடிவங்களில் வெட்டி சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும். எண்ணை சூடாக்கும் பொழுது அடுப்பை மிதமான சூட்டில் எரியவிடவும்.

மாவின் தன்மைக்கேற்ப தண்ணீர் 1/4 கப்பைவிட சிறிது மேலதிகமாக (1-2 மேசைக் கரண்டி) அல்லது குறைவாக தேவைப்படும்.

எண்ணை அல்லது நெய் பூசிய தட்டில் மட்டுமே வைத்து மாவை மெல்லியதாக உருட்டவும். மா தூவி உருட்டக்கூடாது. 

மா தூவி உருட்டினால் பலகாரத்தின் வெளியே ஒட்டியுள்ள மா பொரிக்கும் பொழுது எண்ணையில் உதிர்ந்து கருகி பலகாலரங்களில் ஒட்டி பலகாரம் நிறம்மாறி அழகில்லாமல்வரும்.

இங்கு 3/4 தேக எனக்குறிப்பிட்ட பொருட்கள் எல்லாம் மட்டம் தட்டிய 1 தேக்கரண்டி அளவில் போடவேண்டியவை. 

1 தேகரண்டி எனக்குறிப்பிட்டால் ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாக எடுக்கக்கூடும். 

1 தேக்கரண்டி உப்பை கரண்டியில் குவியலாக எடுத்தால் அது மிக அதிகமாகிவிடும். அதனால் 3/4 தேக எனக்குறிப்பிட்டுள்ளேன்.



No comments:

Post a Comment