Gadag
பயண வழிகாட்டி
கர்நாடக மாநிலத்தின் மேற்கு மூலையில் பொதிக்கப்பட்டுள்ள ஒரு மஹோன்னத வரலாற்றுக்காலத்தின் பதிவுதான் இந்த கடக் நகரம். 4656 சதுர மீட்டரில் பரந்துள்ள இந்த சிறு நகரம் அதிக எண்ணிக்கையில் பயணிகளின் வருகையை கொண்டிராமல் இருக்கலாம். ஆனால் இந்தியச் சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலை ரசிகர்களை இங்குள்ள பலவகை கோயில் வளாகங்களும் கோபுரங்களும் வசீகரித்து ஈர்க்கும் இயல்பு கொண்டவை.
கடக்’கில் பார்க்க வேண்டியவை
சாளுக்கியர் கால கலை அம்சங்களின் பல உன்னதமான படைப்புகளை கடக் ஸ்தலம் கொண்டுள்ளது. வெகு வித்தியாசமான தனித்தன்மையான சிற்பச்செதுக்கு பாணியையும் அலங்கார கலையம்சங்களையும் கொண்டுள்ள இந்த கோயில்கள் அக்காலத்தின் மேன்மையை நமக்கு எடுத்துச்சொல்கின்றன.
கடக்’கில் காணப்படும் ஒரு அற்புதமான காட்சிகளின் ஒன்று திரிகூடேஷ்வர கோயிலாகும். கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை மட்டுமல்லாமல், ஆன்மீக அம்சங்களும் யாத்ரீகர்களுக்காக இங்கு நிறைந்துள்ளன.
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய கடவுள்களுக்கான கோயில்கள் இங்கு உள்ளன. இவை தவிர கடக்’கில் வீராநாராயணர் கோயில், தம்பலா மற்றும் காஷிவிஷ்வேஷ்வரா கோயில் போன்றவையும் முக்கியமான இடங்களாக காணப்படுகின்றன.
கட்டிடக்கலையும் ஆன்மிகமும் மட்டுமல்ல இங்கு இயற்கை ரசிகர்களுக்கான சிறப்பம்சமாக மகதி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இது கடக்’கிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கடக் நகரம் ரயில் பாதையின் மூலம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இது பல முக்கிய நகரங்களிலிருந்து கடக் நகரத்துக்கு ரயில் சேவகைளை தருகிறது
No comments:
Post a Comment