Friday, July 30, 2021

அகோபிலம் பயணக்குறிப்பு - பகுதி 5

 நல்லமலா காட்டின் நடுவில் ஒரு சிங்கம் அகோபிலம் பயணம் பகுதி 5

நல்லமலா காட்டின் நடுவில் 😲அகோபிலம் பயணம்..பகுதி 4...( அகோபிலம் தனியாக செல்ல.. கடப்பா ரயில் நிலையம் வரை ரயில்.. பின்னர் 100 கிமீ அல்ல கட்டா வரை பேருந்து நிறைய உண்டு.)

இந்த இடத்தின் 🙏🏼🙏🏼தனிமையும் இதைச்சூழந்துள்ள அடர்ந்த காடும் குகைக்கோயில் அமைப்பும் விசித்திரமான பிரமிப்புநிலை ஓன்றை உருவாக்குகின்றன. தன்னந்தனியாக அங்கே வந்து ஒரு இயக்கத்தை உருவாக்கிய ஆதிவண் சடகோப மகாதேசிகரின் நினைவு மனஎழுச்சி ஊட்டுகிறது. தமிழின் தெய்வீக ஆற்றலுக்கான ஆதாரமாகவே அவரது வாழ்வை எண்ணிக்கொண்டேன்.  

 அடுத்து வராஹ நரசிம்மரை தரிசிக்கு முன் மதிய உணவு அருந்த இரண்டு அன்னதான சத்திரங்கள் உண்டு.அருமையான  உணவு.விரும்புபவர்கள் இயன்ற தொகையை நன்கொடை எழுதலாம். உக்ர நரசிம்மர் கோயிலுக்கு அருகிலேயே வராஹ நரசிம்மர் கோயிலைக் ககாணலாம். வராஹ குண்டம் என்ற தீர்த்தமும்,வராஹ மண்டபமும் விளங்கும் இந்தத் தலத்தில்  வராஹ நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். 

இதுவும் குடவரை குகைக்கோயில்தான். இந்தக் குகையை வராஹ க்ஷேத்ரம் என்று அழைக்கிறார்கள். பொதுவாக வேறெந்த கருவறையிலும் காணவியலாத வராஹரை இங்கே தரிசிக்கலாம். ஆமாம், வராஹ அவதாரம் கொண்ட எம்பெருமான் தன்மூக்கின்மீது பூமிதேவியாரைத் தாங்கியபடி காட்சியளிக்கிறார்.

அவரது நாசி மீது பூமிபிராட்டியார்அமர்ந்திருக்கும் நளினம்பார்த்துப் பார்த்து இன்புறத்தக்கது. இந்த வராஹ நரசிம்மர் இரண்டு கரங்களால் அருள்

பாலிக்கிறார்.இந்தக் கருவறையிலேயே மகாலக்ஷ்மி நரசிம்மரையும் சேவிக்க முடிகிறது. ஒரே கருவறையில் இரு மூலவர்கள்! இதிலும்ஒரு நயம் இருக்கிறது. 

திருமாலின் வராஹ அவதாரத்துக்கு அடுத்தது, நரசிம்ம அவதாரம். இந்த இரு அவதாரங்களையும் இந்தக் கோயிலில் ஒரே கருவறையில் தரிசனம் காண்பது பெரும் பேறுதானே!செல்லும் வழியில் பிரகலாதன் படித்த எழுதிப்பார்த்த பிரகலாத மெட்டு உள்ளது..காகதீய அரசர்கள் ( ருத்ரமாதேவி,பாகு பலி நினைவு வருகிறது)

கட்டிய மண்டபமும் உண்டு..வழியெங்கும் குரங்குகள் மட்டும் இருந்தாலும் மாலை 3 மணிக்கு மேல் சிறுத்தை போன்ற கொடிய 😡விலங்குகள் வருமென்பதால் வழியை அடைத்து விடுகிறார்கள்.சிங்கங்கள் தற்போது காட்சிப்பொருளானாலும் நரசிம்ம அவதார காலத்தில் மட்டுமின்றி நூறாண்டுகள் முன்பு கூட இங்கு அவை நடமாடியிருக்குமோ என்ற உணர்வு உறைய வைக்கிறது.😲..பாவநாசினி ஆறு சிற்றோடையாக வழியெங்கும் ஓடி வருகிறாள்...🙏🏼🙏🏼.தொடரும்




No comments:

Post a Comment