Saturday, July 10, 2021

பஞ்ச் த்வாரகா பயணம் பகுதி 4

கண்ணன் காலடி பட்ட பஞ்ச் த்வாரகா பயணம் பகுதி 4

மறுநாள் முதன்மை த்வாரகா செல்ல ஆமதாபாத்திலிருந்து ஓகாதுறைமுகம் (okha) வரை டிரெய்ன் டிக்கட் ரிசர்வ் செய்து இருந்தோம். 

ஆமதாபாத் மிகப்பெரிய நகரம். அங்கு தங்குவதற்கு இடம் காஸ்ட்லி என்பதாலும் ஐந்து த்வாரகாவை பார்ப்பதற்கு இன்னும் இரு முறை ஆமதாபாத் ஐ க்ராஸ் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் பின்னர் தங்கிக்கொள்ளலாம் என முடிவு செய்தோம். டாகோர்நாத் அருகிலுள்ள ஆனந்த் நகரில் தங்கி அமுல் நிறுவனத்தை பார்வையிட முடிவு செய்து  பெரும் முயற்சிக்குப்பின் ஒரு விடுதியில் இடம் கிடைத்து சிரம பரிகாரம் செய்து கொண்டோம். பின் வழி விஜாரித்து அமுல் தொழிற்சாலை சென்றோம். நம் ஆவின் நிறுவனத்திற்கு முன்னோடி இந்த நிறுவனம். 

விசிட்டர்களை வரவேற்று இலவசமாய் van மூலம் அழைத்துச்சென்று பார்வையிடவும் அமுல் தயாரிப்புகளை குறைந்த விலையில் சுவைக்கவும் வாய்ப்பளிக்கிறார்கள்

அமுல் (Anand Milk Producers Union)AMUL. 

இந்த நிறுவனம் 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது சுமார் 2.8 மில்லியன் பால் உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய ஜி.சி.எம்.எம்.எப். எனப்படும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் இயங்கி வருகிறது. அமுல் என்பதற்கு சமஸ்கிருத மொழியில் "விலை மதிப்பற்றது" என்பது பொருளாகும்

வணிக நடவடிக்கைகளாகிய பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்கிறது.

அமுலின் வெற்றியைத் தொடர்ந்து இதே மாதிரியைக் கொண்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஆவின் எனப்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அமுலை முன்மாதிரியாகக் கொண்டது ஆகும்.

நம்மை ஒவ்வொரு பகுதியாக அழைத்துச்சென்று சுகாதாரமான முறையில் பாலிலிருந்து தயாரிக்கப்படும் 50 வகை பொருள்கள் தயாரிப்பை காட்டுகிறார்கள். 

உள்ளேயே மிகக்குறைந்த விலையில் ஐஸ்க்ரீம் போன்றவற்றை வாங்கி சாப்பிட கான்டீன் வசதி உண்டு. 

இரவு கூகுளில் தேடி அருகிலுள்ள Lamphavel என்னுமிடத்தில் உள்ள சுயம்பு அனுமனை தரிசித்தோம். 

மறுநாள் காலையில் ஆகமதாபாத் புறப்பட்டு அங்கிருந்து பாசஞ்சர் ரயிலில் குஜராத்தின் பருத்தி கோதுமை வயல்களினூடே சனிக்கிழமை முழுவதும் பயணித்து விடிகாலை த்வாரகா அடைந்தோம். 

ஆனந்த் நகரில் கிடைத்தது போல இடம் கிடைக்கும் என நம்பினோம். 

ஆனால் தீபாவளி முடிந்த ஞாயிறு என்பதால் அனைத்து விடுதிகளும் நிரம்பி கூட்டத்தைப்பார்த்து மற்ற நாட்களில் 1000/- ரூ உள்ள  ஒரு ரூம் 3000/ என கூறியதால் விடிகாலை இருளில் மனைவி,அக்கா அத்திம்பேரை ஒரு இடத்தில் அமரவைத்து அங்குமிங்கும் அலைந்து கோமதி நதி ஓரமாக சுற்றி வந்து எங்கும் இடம் கிடைக்காமல் வேறுவழியின்றி 2500/ க்கு சிறிய அறை பிடித்தோம்.  ( புதிய ஊரில் இடம் பிடிக்க ஞாயிற்றுக்கிழமைகளை மற்றும் விடியற்காலை பின்னிரவுகளை தவிர்க்க வேண்டும் என பாடம் கற்றுக்கொண்டேன்)

கோயிலுக்கு அருகிலுள்ள இடம் என்பதால் கடைத்தெரு ஜேஜே என மக்கள் கூட்டம். சிறிது சிரம பரிகாரத்திற்குப்பின் கோமதியில் நீராட செல்கிறோம். 

எல்லா ஷேத்திரங்களைப்போலவும் நதிக்கரைகளில் பழந்துணிகளை களைந்த குவியல்களும்,சாமியார்களும்,பிச்சைக்காரர்களும் ,பிராயச்சித்தம் செய்து வைக்க புரோகிதர்களும் போட்டோ கிராபர்களும் என கூட்டம். தம்பதிகளாய் கோமதித்தாயை வணங்கி மூன்று முழுக்கு போடுகிறோம். 

வழியோர சிற்றுண்டி கடையில் தால் நா சமோசா (Dal Na Samosa) இன்னும் வாயில் நுழையாத ஐட்டங்கள் இருக்கிறது. 

குஜராத் அதன் தனித்துவமான உணவு வகைகளைக் கொண்டுள்ளது. இது சற்று இனிப்பு அதிகமாக அறியப்படுகிறது (சர்க்கரை குறைந்தது ஒரு சிட்டிகை பெரும்பாலான உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளது) மற்றும் பாரம்பரியமாக முற்றிலும் சைவ உணவாகவே உள்ளது. 

தாலி (ஒரு பெரிய தட்டுக்கான இந்தி) என்பது குஜராத்தி பாணி சாப்பிடுவதாகும், இதில் பல சிறிய கிண்ணங்கள் கொண்ட ஒரு பெரிய தட்டு உள்ளது, ஒவ்வொன்றும் ஒரு வித்தியாசமான டிஷ் கொண்டவை! இரண்டு மூன்று வெவ்வேறு காய்கறி உணவுகள், ஒரு தயிர் ரெய்தா, அரிசி அல்லது பிலுவா, பராதா அல்லது சாப்பட்டி அல்லது பூரி, ஊறுகாய், சாலட் போன்ற தட்டையான சுவைகள் உள்ளன .... ஒரு உணவில் 10 வெவ்வேறு காய்கறி உணவுகள், அரிசி, சப்பாத்தி ரொட்டி) மற்றும் இனிப்புகள்! குஜராத்திகள் சிற்றுண்டியை நேசிக்கிறார்கள்,

நாங்கள் பக்கத்து மேஜைகளை பார்த்து எதையோ ஆர்டர் செய்து காலை உணவை முடித்துக்கொண்டு க்ருஷ்ண தரிசனத்திற்கு தயாராகிறோம். 

பகவான் கண்ணன், ஆட்சி செய்த தலம். 'அடியேனின் அடியவர்களைக் காக்கிற ஊர் இது’ என கண்ணனாலேயே கொண்டாடப்பட்ட க்ஷேத்திரம்! துவாரகையின் பிரபாவத்தால் புழு, பட்சி, மிருகங்கள், பாம்புகள் போன்ற ஜந்துக்கள்கூட, ஆசையிருப்பின் ஒரு நாள் முக்தி அடையுமாம். எனில், அங்கு வசிக்கும் மனிதர்களுக்கு முக்தி உண்டு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அதுமட்டுமா? துவாரகையில் வசிப்பவரைப் பார்ப்பதாலும் தொடுவதாலும்கூட மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் அனைத்தும் பாவங்களிலிருந்து விடுபட்டு, சொர்க்கத்தை அடையும். இந்த ஊரின் மண் துகள்கள் காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டு, பாவி களுக்குக்கூட முக்தியைத் தரவல்லது என்கிறது ஸ்கந்தபுராணம்.

------------------------------------------------------------------------------------------------------------------அடியோங்களின் பயணக்குறிப்புகளை படித்த முகநூல் நண்பர்கள் சிலர் தங்களையும் அழைத்துச்செல்ல இயலுமா என கேட்டிருந்தார்கள் 

அடியேன் பதில்

1)அடியேன் டூர் ஆப்பரேட்டர் அல்ல. டூர் ஆப்பரேட்டர்களின் கெடு பிடி இல்லாமல் மேப் மற்றும் கூகுள் உதவியுடன் புதுப்புது இடங்களை காணவும் அந்த அனுபவங்களை பிறருக்கு பகிர ஆர்வம் கொண்டவன். 

2)எனது அனுபவங்களையும் முடிவில் ரூட்,செலவு,தங்குமிடம் போன்ற குறிப்புகளை தெரிந்து கொண்டு சுமாராக இந்தி தெரிந்த (எனக்கும் சரளமாக பேச வராது...ஓரளவு படிக்க மட்டும் தெரியும்)ஒருவருடன் செல்ல இயலும். உங்கள் சந்தேகங்களை 6381369319 என்ற தொலைபேசி எண்ணில் கேட்கலாம்.


No comments:

Post a Comment