Thursday, July 22, 2021

பச்சை சுண்டைக்காய் காரகுழம்பு

 பச்சை சுண்டைக்காய் காரகுழம்பு ரெசிப்பி.

சின்ன வெங்காயம் 15, பூண்டு பல் 10(நசுக்கிங்கோங்க), தக்காளி 2 பொடியா நறுக்கணும். இரண்டு பச்சைமிளகாய் நெடுக்க கீறிக்கணும். (குழம்பு மிளகாய் தூள்) 4 டீஸ்பூன். மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன். புளிக்கரைசல் ஒரு நூறு மில்லி. (எலுமிச்சை அளவு புளி). பச்சை சுண்டைக்காய் ஒரு கப் 50 கிராம்.நல்லெண்ணெய் 20 மில்லி. கடுகு, வெந்தயம், சீரகம் தலா அரை ஸ்பூன். கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு. 

செய்முறை

வாணலியை அடுப்பில் ஏற்றி நல்லெண்ணெய் ஊற்றி மிதமான தீயில் முதலில் கடுகு வெடிக்க விடுங்க, சீரகம் வெந்தயம் சேருங்க, கருகிட கூடாது. சின்ன வெங்காயம், பூண்டு பல் கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்க, நறுக்கின தக்காளி கல் உப்பு சேருங்க.. தக்காளி குழையணும் அப்பறம் பச்சை சுண்டைக்காய நசுக்கி சேருங்க (இடுக்கியால நசுக்கலாம்) உடனே வாணலில சேர்த்துடணும் இல்லைனா கருப்புந நிறமாய்டும். 

நல்லா வதக்கணும். சுண்டைக்காய் நல்லா வதங்கணும். புளிக்கரைசல சேர்த்து கொதிக்க விடுங்க... ஒரு மூன்று நிமிடம்.. மச்சள் தூள்,  குழம்பு மிளகாய்தூள் சேர்த்து கலக்கி ஒரு 5 நிமிடம் கொதிக்க விடுங்க. 

நல்லா வத்தட்டும். ஒரு துண்டு வெல்லம் சேர்த்து இறக்குங்க.

சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட சொர்க்கம்தான். (குழம்பு மிளகாய்த்தூள் முக்கியமான காம்பினேஷன்).

No comments:

Post a Comment