Saturday, July 10, 2021

உண்ணி அப்பம் / நெய் அப்பம்

 இத அடிச்சுக்க ஆளில்லா (3)

உண்ணி அப்பம்  / நெய் அப்பம்

கேரளாவில்  மிகவும் பிரசித்தி பெற்றது

க்ருஷ்ணன் கோவில் உண்ணியப்பம்.

சில கணபதி"கோவில்களிலும் உண்ணியப்பம்

மாலையாகச்"சார்த்தி எல்லோருக்கும்"பிரசாதமாகக்

கொடுப்பார்கள்...

அந்த ருசியே தனிதான்....

எத்தனை முறை"செய்தாலும் அந்த ருசி வராது.....

பச்சரிசியை நன்றாக ஊறவைக்கணும்

பிறகு மையாக அரைக்கணும்

அதிலெ வெல்லம், ஏலக்காய் நன்றாக,பழுத்த 

 வாழைப்பழம் எல்லாம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளணும்

ஒன்றிரண்டு மணி நேரம் ஊறினால் நன்றாக வரும்.

அப்பக்குழியில் நெய் ஒவ்வொரு ஸ்பூண் விட்டு சூடானதும்

ஒவ்வொரு கரண்டி மாவாக குழிக்குள்  விடும் போது"சொய்"

என்ற சத்தமே சப்தஸ்வரங்களாக ஒலிக்கும்.

.ஒருநிமிடம் கழித்து அப்பங்களை திருப்பி விட்டு ஒரு ஸ்பூண் நெய்யை,அதன்"மேல்விடவும்..;.

விட்டவுடனே சந்தோஷத்தில் எல்லாம்,சேர்ந்து ஒரு,குத்தாட்டமே போடும் பாருங்கோ.....,காணக்கிடைக்கணுமே.... 

ஒருநிமிடம் கழித்து ஒவ்வொன்றாக எடுத்து பாத்திரத்தில் அடுக்க வேண்டியது தான்....

சிலர்,சூடாகஇருக்கும் போது அப்பத்தின் மேலே ஜீனி தூவி குலுக்கி வைப்பார்கள். அதுவும் ஜோராக ஒட்டிக் கொள்ளும்..

பிறகென்ன, கண்ணனுக்கு கொடுத்து விட்டு

ருசித்து,புசிக்க வேண்டியது  தான்.....

அப்பம் பிடிக்காதவருண்டோ????

No comments:

Post a Comment