பஞ்ச துவாரகா பயணம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻பகுதி19
வெங்கடேசன்…
ஓகா ரயில் நிலையத்தில் இரவு புறப்பட்ட பாசஞ்சரில் பயணித்து மீண்டும் ஆமதாபாத் வந்து சேர்கிறோம்.ப்ரெட் பழங்கள்தான் உணவு. நேரம் பகல் 3மணி. எக்ஸ்ட்ரா லக்கேஜ்களை க்ளோக் ரூமில் வைக்கிறோம்( தனியாக பயணிப்போர்க்கு ரயில்வே க்ளோக் ரூம் ஒரு வரப்ரசாதம். பூட்டுடன் உள்ள பெட்டிகளுக்கு முதல்நாள் 15/-பின் ஒருநாளைக்கு 20/-தான் போகும்போதே பூட்டு உள்ள பெட்டி எடுத்து சென்று க்ளோக் ரூமில் வைத்து விட்டால் அதே ஊருக்கு திரும்பும் போது எடுத்துக்கொள்ளலாம்)
ஆகமதாபாத்திலும் பார்க்க இடங்கள் இருப்பினும்
ராஜஸ்தான் த்வாரகையை முதலில் சேவித்து முடித்தபின் மீண்டும் சென்னைக்கு ரயில் ஏற ஆமதாபாத் வரும் போது, முடிந்தால் பார்த்துக் கொள்ள முடிவெடுத்தோம்..
அடுத்த ஶ்ரீநாத் த்வாரகா இலக்கு என்றாலும் பேருந்தில் 250 கிமீ பயணித்து உதய்ப்பூர் சென்று அங்கிருந்து 50 கிமீ செல்ல இரவு 12 மணி ஆகலாம் என்பதால் கூகுளை நோண்டி வழி பார்த்து இடையில் 120 கிமீல் உள்ள அருமையான கண்ணனின் ஷாம்லாஜி என்ற கோயில் உள்ள ஊரில் தங்க முடிவெடுக்கிறோம். ( ஆமதாபாத் உதய்ப்பூர் இடையே ரயில் இல்லை. ஆனால் தேசிய நெடுஞ்சாலை இடையில் இந்த ஊர்)
ரயில்வே ஸ்டேஷனிலிருந்து எப்படியோ வழி விஜாரித்து உதய்பூர் செல்லும் பஸ் வரும் பஸ் ஸ்டாண்டை கண்டு பிடிக்கிறோம்..
வாசலில் நடைபாதை ஓட்டலில் அவசரமாக தாலி எனப்படும் உணவை விழுங்கி உதய்பூர் பஸ்ஸை தேடி ஏறி ஷாம்லாஜி நிற்குமா என அரைகுரை இந்தியில் கேட்டு ஏறுகிறோம்.
நான்குமணி நேரம் பயணித்து கண்டக்டர் சொன்ன இடத்தில் இறங்கிக்கொள்கிறோம்.
அமு கிராமமா நகரமா ?தங்க லான்ஜ் உண்டா என எதுவும் தெரியாது இருளில் பிரமை பிடித்து கண்ணா வழி காட்டு என வேண்டுகிறோம்.
இறங்கிய இடத்திலேயே லக்ஷ்மி நாராயண் ஜன்மஷேத்ர ட்ரஸ்ட் என்ற போர்டு தூரத்து மங்கலான வெளிச்சத்தில் கண்ணில்பட விசாரிக்கிறோம்...
சென்னை என்றதும் அன்புடன் விசாரித்து மிகப்பெரிய நான்கு கட்டில் உள்ள ஏசி அறையை 500/ மட்டும் பெற்றுக்கொண்டு அளித்து இரவு உணவாக ஸ்வீட்,கிச்சடி , காரசேவ் தந்து உபசரித்தனர் ...
(Phone no02771-240108) கண்ணனை நம்பி வந்தால் கட்டாயம் வழி காட்டுவான் என நான்கு நாட்கள் அலைச்சல் உடல் அசதி தீர இரவு ஓய்வெடுக்கிறோம்.
காலையில் கோயிலை அடைகிறோம்
ஷாம்லிஜி கோவில்: பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் மேஷ்வோ நதிக்கருகில் அமைந்துள்ள மிகவும் பழமையான கோவில். கோவிலின் அருகில் பல இடிபாடுகள், அங்கே பழங்காலத்தின் இன்னும் பல சுற்றுக் கோவில்களும் இருந்திருப்பதைக் காண்பிக்கிறது. சுற்றுக் கோவில்கள் பலவும் அழிந்து விட்டாலும், ஷாம்லிஜி கோவில் மட்டும் இன்னும் சிறப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது பராமரிப்பும் செய்து வருகிறார்கள் என்பதால் காப்பாற்றப்பட்டிருக்கிறது.
கோவிலின் வெளியே இருக்கும் அலங்கார நுழைவு வாயில், கோவில், என எல்லா இடங்களிலும் இருக்கும் சிற்பங்கள் மனதைக் கவர்கின்றன. கோவிலின் சுவர்களில் நிறைய இடங்களில் யானைகளின்சிற்பங்கள் உண்டு. அதைத் தவிர மற்ற சிற்பங்களும், கற்களில் செதுக்கப்பட்ட தோரணங்களும் பூக்களும் உண்டு. ஒவ்வொன்றையும் பொறுமையாக பார்த்து ரசிக்கலாம். கோவிலின் பின்னே ஷ்யாம் சரோவர் என்ற ஏரியும், மலைகளும் இருப்பதால் இயற்கை அழகையும் நீங்கள் ரசிக்க முடியும்.கோவிலில் குடி கொண்டிருப்பது விஷ்ணுவின் த்ரிவிக்ரம ரூபம். நாங்கள் கோவிலின் உள்ளே அதிகாலை நுழைந்தமையால் குளிருக்கு பெருமாள் கம்பளி சால்வையுடன்...
தரிசனம் முடிந்து மீண்டும் 150 கிமீ பயணித்து உதய்ப்பூர் வந்தோம்.
அடுத்து உதய்ப்பூர்
No comments:
Post a Comment