நல்லமலா காட்டின் நடுவில் ஒரு சிங்கம் அகோபிலம் பயணம் பகுதி 6
.மாலோல நரசிம்மன் (எண்: 4). வேதங்களைத் தொலைத்து விட்டு, பிரமன் திகைத்து நின்றானாம். பகவானைப் போய்ப் பார்க்க, பயம். குழந்தைகளுக்கு உடனே தோன்றுவது அம்மா ஞாபகம் தானே. அதைத்தான் பிரமனும் செய்தான். தாயார்தான், நமக்கு முதல், ஆச்சாரியார் வேறு. கனிவைத் தவிர, அவளுக்கு என்ன தெரியும். உடனே ரெகமண்ட் செய்து விட்டாள். பகவான் மறுப்பானா? வேதங்களை மீட்டு விட்டு, பிரமனிடம் கேட்டான்: “ஏண்டா, குழந்தை, நீ நேராக, என்னிடமே வந்திருக்கலாமே! அம்மாவை எதுக்கு தொந்தரவு பண்ணணும்?” அப்போது தான் பிரமன் பகவானை, ‘மா லோலன்’ என்றானாம். அதாவது, அம்மாவை மிகவும் விரும்புபவனாம்.
்அதனால் தான், எத்ற்கும் இருக்கட்டும் என்று, அம்மா மூலம் போனானாம்! நமக்கும் தெரிந்த, ரகசியம் தானே இது. அதனால் தானே, கோவிலுக்குப் போனால் கூட, முதலில் தாயாரைப் பார்த்து விடுகிறோம்.மா’ என்றால் லட்சுமி. “லோலன்’ என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்தபடியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார். .வராஹ நரசிம்மரின்அருளைப் பெற்றுக்கொண்டு வராஹ நரசிம்மர் ஆலயத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில், மலைப்பாதையில் அமைந்திருக்கிறது மாலோல நரசிம்மர் கோயில். செல்லும்வழி சற்றுக் கடுமையானதுதான். சில இடங்களில் மலைப் பாதையில் செல்லவேண்டியிருக்கிறது.திடீரென எதிர்ப்படும் படிகளையும் ஏறிக் கடக்க வேண்டியிருக்கிறது! அகலம் குறைவான பாதை. 4 பேர் பக்கத்துப் பக்கமாக சேர்ந்து போக முடியாது.
மாலோல நரசிம்மரை தரிசிக்க அவரது சந்நதிக்குப்போகும் வழியில் சிறு வடிவினனாக கபாலிகனைக் காணலாம். பக்கத்திலேயே துர்க்காதேவி சிலையும்,இரு பாத சிற்பத்தையும் காண முடிகிறது.
இந்த கபாலிகனுக்கு ஒரு பின்னணிக் கதை உண்டு.ஆதிசங்கரரைத் தாக்கி அவர் உயிரைப்பறிக்க முயன்றான் கபாலிகன்.
அப்போதுசங்கரரின் பிரதான சீடரான பத்மபாதர் அவனைத் தடுக்க முயன்றார். குருவைக் காப்பாற்றமுனைந்த இவருடைய முயற்சியைப் பாராட்டும் வகையில் நரசிம்மர் இவரது உடலுக்குள் புகுந்துகொள்ள,பத்மபாதரால் கபாலிகனை எளிதாக வதைக்க முடிந்தது. தன் பொருட்டு நரசிம்மர்மேற்கொண்ட இந்த கருணைச் செயலை வியந்து போற்றிய ஆதிசங்கரர், ‘நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்’ இயற்றி அவரைத் துதித்தார். குருநாதரைக் காத்த பத்மபாதனைச் சித்தரிக்கும் விதமாகத்தான்இரு பாதச் சுவடுகள் இங்கே காணப்படுகின்றன.
கபாலிகன் வணங்கிய துர்க்கைதான் அடுத்து இருப்பது. ஆனால்,இந்தப் பாதங்கள் மஹாலக்ஷ்மியுடையவை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. சிவபெருமான்தான்கபாலிகன் என்றும் அவர் துர்க்கையுடன் சேர்ந்து ‘மந்த்ர ராஜபத ஸ்தோத்திர’த்தை உச்சரித்து நரசிம்மரை வழிபட்டதாகவும், அப்போது நரசிம்மருடன் இணைந்திருந்த மஹாலக்ஷ்மியின் பாதங்கள்தான்அவை என்றும் சொல்கிறார்கள். சந்நதியில் மூலவராகத் திகழ்கிறார் மாலோல நரசிம்மர்.
இடது மடியில் மஹாலக்ஷ்மியை அமர்த்தியதால் லக்ஷ்மி நரசிம்மராகவும் வழிபடப்படுகிறார். மேற்கரங்களில் சங்கு, சக்கரம், கீழ் வலது கரம் அபய ஹஸ்தம், கீழ்இடது கரம் தாயாரை அரவனைக்க, சதுர்புஜ நாயகனாக எழிலுடன் சேவை சாதிக்கிறார். இவர் மாலோலலக்ஷ்மிப்ரியர் என்றும் மாலோல லக்ஷ்மி நரசிம்மர்என்றும் பக்தர்கள் போற்றித் துதிக்கிறார்கள்.
பகவான் மடியில் அமர்ந்திருக்கும் தாயாரின்பாதங்களை தாமரை மலர் ஒன்று தாங்கியிருக்கிறது. மூலவரின் சிரசுக்கு நிழல் கொடுத்தவாறுசேவை புரிகிறது ஆதிசேஷன். ஆதிசேஷனுக்கும் மேலாக சிம்ம விதானம் அமைந்திருக்கிறது. திருமங்கையாழ்வாரைதனிச் சந்நதியில் உள்ளம்குளிரக் காணலாம். பத்துப் பாசுரங்களால் அஹோபில நரசிம்மரைப் பாடிப் பணிந்த அந்தப் பெருந்தகைஎளிமை தோற்றம் காட்டுகிறார். கோயில்மேற்புற முகப்பில் லக்ஷ்மி நரசிம் மரும், ஆதிவண் சடகோப ஜீயரும் இடம் பெற்றிருக் கிறார்கள்.மாலோல நரசிம்மரின் உற்சவ மூர்த்தியே அஹோபில மடம் ஜீயரோடு எழுந்தருளியிருக்கிறார். ( தொடரும்)
No comments:
Post a Comment