நல்லமலா காட்டின் நடுவில் ஒரு சிங்கம் அகோபிலம் பயணம் பகுதி 3
கிருதயுகத்தில்சிவபெருமானும் இந்த நரசிம்மரை ‘மந்திரராஜபத’ ஸ்தோத்திரம் சொல்லி வழிபட்டிருக்கிறார்;அதேபோல திரேதாயுகத்தில் ராமபிரான், லக்ஷ்மணனுடன் இத்தலம் வந்து நரசிம்மரைத் தொழுதுராவணன் மீதான தம் வெற்றிக்கு உறுதுணையாக உதவுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறதுபுராணம். பிராகாரத்தைமேலும் வலம் வரும்போது ராமானுஜரை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம்.
அவருடன் வேதாந்ததேசிகரும், அஹோபில மடத்தை உருவாக்கிய ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகரும் எழுந்தருளியுள்ளார்கள்.உலக பக்தர்களுக்கெல்லாம் நரசிம்ம தரிசனத்துக்கு வழிகாட்டிய, இவருக்கு ‘வண் சடகோப ஜீயர்’ என்ற தாஸ்ய நாமத்தையும்,காஷாயத்தையும் பெருமாளே வழங்கினார் என்ற செய்தி மேனியை சிலிர்க்க வைக்கிறது.
பரந்தாமனைத்தொடர்ந்து ஸ்ரீராமானுஜரும் தம்மிடமிருந்த த்ரிதண்டத்தைஅளித்திருக்கிறார். பிரதாப ருத்திரன் என்ற காகதீய வம்சத்து அரசன், தங்கத்தாலான மாலோல நரசிம்மரை அளித்தான். (இந்த மாலோலர் இப்போதும் மடத்து ஜீயருடன் புறப்பாடு கண்டருள்கிறார்.) கி.பி.1300ம் ஆண்டுவாக்கில் நடைபெற்ற இச்சம்பவங்கள்மடத்திலுள்ளசாசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. சடகோப ஜீயரை மீண்டும் ஒருமுறை தரிசித்துநம் சந்தோஷத்தையும், நன்றியையும், தெரிவித்துக்கொள்வோம்.பட்டாபிராமன்தனிச் சந்நதியில் அழகுக் கோலம் காட்டுகிறார்.
இவருக்கு இடப்புறம் சீதை. வலப்புறத்தில்உள்ள லக்ஷ்மணன், வித்தியாசமாக இரு வில்களைத் தாங்கி நிற்கிறார். அண்ணன் பட்டாபிஷேகம்காணும்போது, அதுவரை அவருக்கு உறுதுணையாக இருந்த வில், இப்போது பட்டாபிஷேக சம்பிரதாயங்களுக்குக் கொஞ்சம் இடைஞ்சலாக இருக்குமென்றுதம்பி கருதினாற் போலிருக்கிறது; அண்ணனுடைய வில்லையும் தானே ஏந்தி நிற்கிறார்! இவர்களை மண்டியிட்டுத் தொழுதபடி ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கிறார்.பக்கத்தில்கண்ணாடி மண்டபம். அடுத்து தாயார், ஆண்டாள் சந்நதிகள். சற்று தள்ளி ரங்க மண்டபம். அதற்கடுத்தகல்யாண மண்டபம் தனிச் சிறப்பு கொண்டது.
மிக நுண்ணிய சிற்ப வேலைப்பாடமைந்த 64 தூண்கள்இந்த மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. இது வேமாரெட்டி என்ற மன்னரால் 14ம் நூற்றாண்டில்நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். நவநரசிம்மர்களை தரிசிப்பதற்கான முன்னோடியாகஇந்த இரு மண்டபத் தூண்களிலும், வராஹ நரசிம்மர், வில் ஏந்திய காராஞ்ச நரசிம்மர்,
தூணைப்பிளந்துகொண்டு வெளிப்பட்ட கம்ப நரசிம்மர், ஹிரண்யனைப் பற்றும் நரசிம்மர், அவனை வதம்செய்து அவன் குடலை மாலையாகப் போட்டுக்கொள்ளும் ஜ்வாலா நரசிம்மர், பிரஹலாதன்மற்றும் கருடாழ்வாருடன் காட்சியளிக்கும் சதுர்புஜ நரசிம்மர், அபய பிரதான நரசிம்மர்,ராம-லக்ஷ்மணருக்குக் காட்சி தந்த பிரத்யக்ஷ நரசிம்மர், வேறு எங்குமே காணவியலாத லக்ஷ்மியைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கும் யோக நரசிம்மர், செஞ்சுலக்ஷ்மித் தாயாருடன் நரசிம்மர், காளிங்க நர்த்தன கிருஷ்ணன்,வெண்ணெய்த் தாழியுடன் கண்ணன், வேணுகோபாலர், சஞ்சீவி மலையைத் தாங்கிய ஆஞ்சநேயர், வராஹப்பெருமாள், யோகானந்த நரசிம்மர், மேற்கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ்க் கரங்களில் மலர்களையும்ஏந்திய மஹாவிஷ்ணு, மன்னன் பிரதாப ருத்ரன், ஆதிவண் சடகோபஜீயருக்கு மாலோலனை வழங்கும்காட்சி என்று பல வடிவங்களைக் கண்டு மகிழலாம்; பிரமிக்கலாம்.
கருவறையில்பெருமாள் தரிசனம் அப்படியே உள்ளத்தைக் கரைக்கிறது. நரசிம்மம் இத்தனை சாந்தமாகக் காட்சியளிப்பதுகண்டு பயபக்திக்கு பதிலாக விநயபக்திதான் மேலோங்குகிறது. இடது மடியில் மஹாலக்ஷ்மியை இருத்திக்கொண்டுசுதர்சன பீடத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அந்த தோரணை, கருணை மிகுந்த மாமன்னன்தம் குடிகளைக் காக்கும் பாவனையிலேயே அமைந்திருக்கிறது. ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடித்திருக்கிறது.மேற்கரங்கள் சங்கும், சக்கரமும் ஏந்த, கீழ் இடது கரம் லக்ஷ்மியை அரவணைத்திருக்க, கீழ்வலது கரம் அபய ஹஸ்தமாக அருள் பொழிகிறது.
இவர் தரித்திருக்கும் சாளக்கிராம மாலை தனிப்பொலிவுடன் துலங்குகிறது. இவரது காலடியில் ஆஞ்சநேயர் விநயத்துடன் சிறு வடிவினராகக் காட்சிதருகிறார். உற்சவரான பிரஹலாத வரதனுக்கும் சதுர்புஜங்கள்தான். அவை, சங்கு, சக்கரம்,கதை தாங்கி அபய ஹஸ்தமாகவும் திகழ்கின்றன. இவருடன் தேவி-பூதேவியையும் காணலாம்.இதே சந்நதியில் பாவன நரசிம்மர், மேல் அஹோபிலம் உக்ர நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், ஆண்டாள்,சுதர்ஸனாழ்வார், கிருஷ்ணன், விஷ்வக்சேனர், ராமானுஜர், பலிபேரர், நித்யோத்சவர் ஆகியோரும் உற்சவ மூர்த்திகளாக வாசம் செய்து நமக்குப் பேரானந்த அருள்புரிகிறார்கள்.
கூடுதல்சந்தோஷமாக ஆழ்வார்கள் உற்சவ மூர்த்திகளையும் நாம் தரிசிக்கலாம். இவர்களோடு ஆதிவண் சடகோபஜீயர் தன் கரத்தில் மாலோல நரசிம்மருடன் எழுந்தருளியிருப்பது குறிப்பிடத்தக்கது,பார்த்து நெகிழத்தக்கது. முக்கியமாகஇந்த கீழ் அஹோபிலக்கோயிலிலேயே, மேல் அஹோபிலத்து உற்சவ மூர்த்திகள் எல்லாம் கோயில்கொண்டிருப்பது, மேல் அஹோபிலப் பயணத்தில் கூடுதல் நேரம் செலவிட வேண்டியிருக்காத வசதியை பகவானே ஏற்படுத்தித் தந்திருக்கிறாரோ என்று எண்ண வைக்கிறது.
வனப் பிரதேசமான மேல் அஹோபிலத்தில்குறைந்த நேரத்தை செலவிடுவதே நமக்குப் பாதுகாப்பு என்று பெருமாளும், அஹோபில நிர்வாகிகளும்நினைத்தார்கள் போலும்! விவரம் தெரிந்தவர்கள் அல்லது ஏற்கெனவே பலமுறை அஹோபிலம் வந்துபெருமாளை வழிபட்டவர்கள் பார்கவ நரசிம்மரின் உற்சவ மூர்த்தியை மேல், கீழ் இரு அஹோபிலக்கோயில்களிலும் காணோமே என்று யோசிக்கலாம். அந்த உற்சவர், வட
இந்தியாவில்ஆஜ்மீரை அடுத்த புஷ்கரத்தில் கோயில் கொண்டுள்ளார் என்ற தகவல் அந்த சந்தேகத்துக்குத்தீர்வாக அமைகிறது. அடுத்துதனிச் சந்நதியில் மூலவராக அமிருதவல்லித் தாயாரை சேவிக்கலாம். இதே கருவறையில் தாயார் உற்சவராகவும் தரிசனம் நல்குகிறார்.
தாயார் சந்நதி நுழைவாயிலில் இரு துவாரபாலகிகள்-குமுதினி, குமுதாக்ஷிணி. மேல் அஹோபில உக்ர நரசிம்மர் சந்நதியின் உற்சவ தாயாரானசெஞ்சு லக்ஷ்மியும் இதே அறையில் கொலுவிருக்கிறார். இந்தத் தாயார் சந்நதியை ‘அம்மவாருசந்நதி’ என்றழைக்கிறார்கள். தாயாருக்கு அடுத்ததாகதனியே ஆண்டாள் மூலவராக எழுந்தருளியிருக்கிறாள். இந்தக் கோயிலில் புரட்டாசி-ஐப்பசி மாதங்களில் பவித்ரோற்சவமும், மாசி-பங்குனி மாதங்களில்பிரம்மோற்சவமும் அஹோபில மடத்தினரால்அமோகமாக நடத்தப்படுகின்றன. லக்ஷ்மிநரசிம்மப் பெருமாளின் பாதாரவிந்தங்களில் நம் நமஸ்காரங்களை சமர்ப்பித்துவிட்டு மேல்அஹோபிலம் நோக்கிப் பயணத்தைத் தொடருவோம்.மேல் அஹோபிலத்தைஅடைய கீழிருந்து 8 கி.மீ. செல்ல வேண்டும்
No comments:
Post a Comment