Saturday, July 10, 2021

பூங்கோவல் நாச்சியார் உடனுறை திருவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்) திருக்கோவில்

 அருள்மிகு பூங்கோவல் நாச்சியார் உடனுறை திருவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்) திருக்கோவில்


திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம்.


பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 43வது திவ்ய தேசமாகும்.


மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்ராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆனவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணுபகவான் வாமன (குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்று அடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து, சுக்ராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார். ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக் கொள்கிறான். அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுனர்ந்த மகாபலி தன் தலையை தாழ்த்தி, தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். மகாவிஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்ராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க மகாவிஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனா‌ல் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார். மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆனவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை மகாவிஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார். என்று தலவரலாறு கூறுகிறது.

No comments:

Post a Comment