Friday, July 30, 2021

சென்னையிலிருந்து திருப்பதி - பகுதி −1

 திருமதி பத்மா கோபால் அம்மையாரின்....

(சென்னையிலிருந்து திருப்பதி மார்க்கம்..)

(பகுதி −1..)

சாதாரணமாக நம்மில் பெரும்பாலோரும் சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் பொழுது, அலமேலுமங்காபுரம் என்கிற திருச்சானூர், திருப்பதி இந்த இரண்டு ஸ்தல தரிசனங்களோடு திரும்பி விடுவது வழக்கம்..

இன்னும் சிலர் ஶ்ரீனிவாஸமங்காபுர தரிசனத்தை, இந்தப் பயணப் பட்டியலில் இணைப்போம்..

சற்று ஆறஅமர தரிசனம் செய்வதற்கு நமக்கு நேரம் இருக்குமானால், இந்தத் தடத்தில் இருக்கின்ற மிக அழகிய புராதனமான சில பெருமாள் கோயில்களையும் நம்மால் அனுபவிக்க முடியும்..

திருப்பதியைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஐந்து புராதனமான கோயில்களின் பராமரிப்பையும், நிர்வாகத்தையும் திருமலா திருப்பதி தேவஸ்தானமே (T.T.D.) முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளதால், இந்தக் கோவில்களில் உற்சவங்கள் அந்தந்தக் காலங்களில் சீரிய முறையில் நடைபெறுகின்றன.

கோயில்களும் பொலிவு குன்றாமல், நமது மனதிற்கும் கண்களுக்கும் பெருமகிழ்வைத் தருகின்றன...

முதலில் அந்த ஐந்து கோயில்களின் பெயர்களையும் பார்ப்போம்..

பிறகு, இந்த ஸ்தலங்களின் சிறப்புகளை ஒவ்வொன்றாகப் பதிவு செய்கிறேன்..

சென்னையிலிருந்து (சத்யவேடு மார்க்கம்) திருவள்ளூர் செல்லும் வழியில் முதலில் வருவது "சுருட்டப்பள்ளி"..

1. இதையடுத்த நாகலாபுரத்தில் வேதநாராயணஸ்வாமி கோயில்.

2. நாராயணவனம் − கல்யாண வெங்கடேஸ பெருமாள் கோயில்.

3. கார்வேட்டி நகரம்  − ஶ்ரீவேணுகோபால ஸ்வாமி கோயில்.

4. அப்பலயகுண்டா − ப்ரஸன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில்.

5. நகரி − கரியமாணிக்கப் பெருமாள் கோயில்.

இவை எல்லாமும் காரில் பயணம் செய்தால் எளிதில் தரிசிக்கும் விதத்தில் அமைந்துள்ளன..

நகரி பெருமாள் கோயில் ஒன்றைத் தவிர, மற்ற அனைத்துக் கோயில்களும் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கின்றன.

நகரி கோயில் மட்டும் மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது.

கொஞ்சம் சாகசத்தோடு கூடிய பயணத்தை அனுபவிக்கின்ற ஆசையுள்ளவர்களுக்காக, திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ்வராத, முற்றிலும் தனியார் ட்ரஸ்ட் மூலம் பரமாரிக்கப்படுகின்ற (நாகலாபுரம் −நாராயணவனம் வழித்தடம்) ஶ்ரீதேவிபூதேவியுடன் நின்ற கோலத்தில்  "சிங்கிரிகோனா" என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீந்ருஸிம்ஹரைப் பற்றியும் எழுத விழைகிறேன்..

(வளரும்..)

No comments:

Post a Comment