Friday, July 30, 2021

அகோபிலம் பயணக்குறிப்பு - பகுதி 2

நல்லமலா காட்டின் நடுவில் ஒரு சிங்கம் 🙏🏻அகோபிலம் 🙏🏻பயணம் பகுதி

நரசிம்ம அவதாரம்..😡

அக்கிரமம் செய்பவன் எத்தனை சலுகைகளைவரங்களாகப் பெற்றிருந்தாலும் அவனால் தப்பிக்கவே முடியாது என்பதை உணர்த்தவே நிகழ்ந்திருக்கிறதுஎன்றே தோன்றுகிறது.இந்த நிகழ்ச்சியைக் கதையாகக் கேட்டு, மனம் விம்மினாலும், அந்த வதை சம்பவம் நிகழ்ந்த இடத்தை,பகவான் நரசிம்மமாக வெளிப்பட்ட இடத்தை, தரிசிக்கவும் முடியும் என்ற உண்மை நம்மை சிலிர்க்கவைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆமாம், அஹோபிலம் என்ற திவ்ய தேசம், நரசிம்மம் பிளந்துகொண்டு வந்த  தூண், ஹிரண்யனின் அரண்மனைமண்டபம் எல்லாம் இன்றளவும் நாம் கண்டு இன்புற காட்சிப் பொருட்களாகத் திகழ்கின்றன. 

இரண்டாகப் பிளந்து நிற்கும் மலைதான் அந்தத் தூண், ஆங்காங்கேசிதறிக் கிடக்கும்மலைப் பிஞ்சுகள், நரசிம்மம் வெளிப்பட்டபோதுஉண்டான பூகம்ப அதிர்ச்சியின் அடையாளங்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. கருடன் வேண்டிக்கொண்டபடி மஹாவிஷ்ணு நரசிம்மஅவதாரத்தை 

அவருக்காக மறுபடியும் நிகழ்த்திக் காட்டினார் என்கிறது அஹோபில தலபுராணம். கருடனுக்கு அந்த அவதாரத்தைக் காண்பித்த பரந்தாமன், கலியுகத்தில் நாமெல்லாம் வணங்கி,போற்றிக் கொண்டாடும் வகையில் நரசிம்மத்தின் ஒன்பது தத்துவங்களையும் விளக்கும் வகையில்

ஒன்பது அர்ச்சாவதார மூர்த்திகளாகக் காட்சியளிக்கிறார். திருமங்கையாழ்வார் பத்துப் பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்து மகிழ்ந்திருக்கிறார். 

மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்  கோளறியாய் அவுணன் பொன்ற ஆகம் வள்ளுகிரால்  போழ்ந்த புனிதனிடம்நின்றபசுந்தீ மொன்டு சூறை  நீள் விசும்பூடிரியசென்றுகாண்டற் கரிய கோயில்  சிங்கவேள் குன்றமே

‘‘சிம்மஉருவினனாக, வாள் போன்ற கூரிய பற்களைக் கொண்டவனாக, தன் கூரிய நகங்களால் ஹிரண்யன் உடலைக்கிழித்து, பிளந்து தன் கோபத்தை வெளிப்படுத்திய தலம் இந்த சிங்கவேள் குன்றம்.

 இங்கு மூட்டப் படும் தீயானது வானையே தொடும் அளவுக்கு நீண்டு செல்லும். மிக உயரமான மலைகளைக் கொண்ட, அவ்வளவு எளிதாகச் சென்றடைந்துவிட முடியாத இந்த சிங்க வேள் குன்றத்தில் எம்பெருமான்திவ்ய தரிசனம் நல்குகிறார்,’’ என்கிறார் ஆழ்வார்.இந்ததிவ்ய தேசம் இரண்டு பகுதிகளாகப் போற்றி வணங்கப்படுகிறது. கீழ் அஹோபிலம், மேல் அஹோபிலம் என்று மலைக்குக் கீழே உள்ள கோயில்களையும், மேலே உள்ள கோயில்களையும் சேர்த்து ஒரே திவ்யதேசமாக வழிபடுகிறோம். 

தன் விருப்பத்தைநிறைவேற்ற எம்பெருமான் தனக்கு நரசிம்மராகக் காட்சி அளித்ததோடு, தன் லீலைகளையும் காட்சிகளாக்கிக்கொடுத்துத் தன்னை உய்வித்தப் பேரருளை எண்ணி வியந்த கருடன், ‘அஹோபிலம், மஹாபலம்’ என்றுபோற்றிப் பணிந்தார். உயர்ந்த மலையில் ஒரு குகையில் இவ்வாறு காட்சி தந்ததாலேயே (பிலம்என்றால் குகை) பெருமைமிக்க, பலம் வாய்ந்த அஹோபிலம் என்ற கருடனின் கூற்றாலேயே இத்தலம் இப்பெயர் பெற்றது. 

மகா பெரியஅசுரன் ஒருவனை எந்த ஆயுதமும் கைக்கொள்ளாமல், விரல் நகங்களாலேயே வதம் செய்த பராக்கிரமத்தைக் கண்ட தேவர்கள், ‘ஆஹா,பரந்தாமனுக்குதான் என்ன பலம்!’ என்று வியக்க, அந்த ஆச்சரியமே ‘அஹோப(பி)லம்’ என்ற பெயரை இத்தலத்திற்கு அளித்ததாகவும் சொல்வார்கள்.

முதலில்கீழ் அஹோபிலத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தை தரிசிப்போம். இவர் நவநரசிம்மர்களில்ஒருவர் அல்ல என்றாலும், மிகவும் பிரபலமானவர். நவநரசிம்மர் தரிசனம் காண இவரத அருளையும்,ஆசியையும் முதலில் பெறுவது பொதுவான சம்பிரதாயம். இந்தக்கோயில் அமைந்திருக்கும் சந்நதித் தெருவின் முனையில் ஆஞ்சநேயருக்கான ஒரு சந்நதி அமைந்திருக்கிறது.இவர் பீகாள ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். இவர் ஊருக்கு மட்டுமல்லாமல், அஹோபிலம்கோயிலுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்ந்திருக்கிறார். 

ஆமாம், அஹோபில மடத்தின் ஆதரவில்கோயில் நிர்வாகம் மேற்கொள்ளப்படுமுன் கோயில் சாவிகளை இந்த ஆஞ்சநேயரிடம் சமர்ப்பித்து,பிறகு அவரது ஆசியுடன் எடுத்துச் சென்று கோயிலைத் திறப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.இந்த சந்நதிக்கு அருகில் தேரடி அமைந்திருக்கிறது. தொடர்ந்து போகும்போது இவ்வழியாகவீதிவுலா வரும் பெருமாள் எழுந்தருளும் திருவேந்திக்காப்பு மண்டபத்தைக் காணலாம். 

அதையும் கடந்து சென்றால் நரசிம்ம தீர்த்தம் என்னும்புஷ்கரிணி எதிர்ப்படுகிறது. சற்றே தலை நிமிர்ந்தால் ஐந்து நிலை ராஜகோபுரம் நம்மை ஆசீர்வதிக்கிறது. லக்ஷ்மி நரசிம்மர்,சேஷசயனர் முதலானோரின் சிற்பங்களுடன் கோபுரம் அழகுற மிளிர்கிறது. நம்மை இன்னும் அண்ணாந்து பார்க்க வைக்கிறது, கோபுர வாசலருகே நிலை கொண்டிருக்கும் ஒரு ஸ்தம்பம். வெற்றித்தூண்அதாவது, விஜயஸ்தம்பம் என்ற பெயர் கொண்டிருக்கும் இத்தூண், 80 அடி உயரத்திற்குஒரே கல்லால் உருவாகி, நெடிதுயர்ந்து நிற்கிறது. பூமிக்குக் கீழே முப்பது அடி ஆழத்திற்குஇத்தூண் வேரூன்றியிருக்கிறது என்று கேள்விப்படும்போது வியப்பாக இருக்கிறது. 

மாமன்னர்கிருஷ்ண தேவராயர் தாம் அடைந்த வெற்றியைக் குறிக்கும் சின்னமாக இதனை நிறுத்தியிருக்கிறார்.இதனருகே நின்று நம் பிரார்த்தனைகளை சமர்ப்பித்தோமானால் அவை எல்லாமேநிறைவேறுகின்றன என்பது காலங்காலமாக இங்கே நிலவி வரும் நம்பிக்கை. இந்தத்தூணுக்குக் கீழே 

ஆஞ்சநேயர் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். இவருக்கு மலர் சமர்ப்பித்துஅனைவருமே வழிபடலாம். சந்நதி மண்டப முகப்பில் லக்ஷ்மி நரசிம்மரை சிற்ப ரூபமாகதரிசிக்கலாம். சற்றருகே கருடாழ்வார் சந்நதி. 

இவருக்குப் பக்கத்தில் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த வசந்த மண்டபம். இதனைக் கடந்தால் ஊஞ்சல் மண்டபம். பிராகாரச்சுற்றில், முதலில் ஶ்ரீநிவாசர் சேவை சாதிக்கிறார். இவருடன் அலர்மேல் மங்கைத் தாயார்,விஷ்வக்சேனர் மற்றும் கிருஷ்ணரும் மூலவர்களாகவே திவ்ய தரிசனம் தருகிறார்கள். தமது திருமணத்திற்குப்பிறகு நிவாசனும், பத்மாவதிதாயாரும் இத்தலம் வந்து இந்த லக்ஷ்மி நரசிம்மரை வணங்கியதாகவும் அந்த சம்பவத்தின் ஆதாரசாட்சியாகத்தான் இவ்விருவரும் கருவறையில்இடம் பெற்றிருக்கிறார்கள் என்றும்  தெரிய வருகிறது.

படங்கள் 1)கோபுரம்2)மண்டபம் 3)கொடி மரம்





No comments:

Post a Comment