Saturday, July 10, 2021

அஜ்மாவலி பாக்ரி (Ajmavali Bhakri)

 அஜ்மாவலி பாக்ரி (Ajmavali Bhakri)

தேவை (10 பாக்ரி செய்ய): கோதுமை மாவு - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் + சுட்டெடுக்க தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

குஜராத்தி உணவுகள்!

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், ஓமம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர்விட்டு கெட்டியான மாவாகப் பிசைந்துகொள்ளவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மேலும் இரண்டு முறை பிசையவும்.

15 - 20 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். தோசைக்கல்லை நன்கு சூடாக்கவும். இதற்கிடையில் தயாரித்த மாவை 10 உருண்டைகளாக்கவும். ஓர் உருண்டையை எடுத்து சப்பாத்தியைவிட சற்று தடிமனாக சிறிய வட்டமாக இடவும். இதை தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டெடுத்து வைக்கவும். இதேபோல் மீதமுள்ள உருண்டை களையும் செய்து கொள்ளவும். இதை சூடாகவோ, வெதுவெதுப்பாகவோ, சூடு இல்லாமலோ எந்த உணவு வேளையிலும் ஊறுகாயுடன் பரிமாறலாம்

No comments:

Post a Comment