Thursday, July 22, 2021

பஞ்ச துவாரகா பயணம் பகுதி 23

 பஞ்ச துவாரகா பயணம் பகுதி 23

வெங்கடேசன்…

ஶ்ரீநாத்ஜி கலை, நுண்பொருட்கள் முதலியன: “பிச்வாய்ஸ்” (துணியின் மீது பெரிய ஓவியம் வரைதல் என்று பொருள்) எனப்படுகின்ற கலை, ஶ்ரீநாத் வழிபாட்டில் உருவாகி வளர்ந்ததாகும். ஶ்ரீநாத்ஜியின் உருவத்தை துணி, காகிதம், சுவர், பெரிய தொங்கும் துப்பட்டாக்கள் என்று எல்லாவற்றிலும், பலவித வண்ணங்களுடன் வரையப்படுகிறது. இவை நாத்துவாரா சித்திரங்கள், ஶ்ரீநாத்ஜி ஓவியங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இத்தகைய கலைப்பொருட்கள், துணிமணிகள், மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றன. “ஹவேலி” என்ற இசைக்கும் பெயர் பெற்றது. இக்கோவில், ஒரு கோசாலையை நிர்வகித்து வருகிறது. அதில் 500க்கும் மேலாக பசுக்கள் உள்ளன.

ஶ்ரீநாத்ஜிக்கு முன்னர் இருந்த கேரா தேவி. ஶ்ரீநாத் கோவில் உருவானதற்கு முன்னர், கேரா தேவி என்ற அம்மன் வழிபாடு, இங்கு பிரசித்தியாக இருந்தது. கேரா தேவியின், ஒரு சிறிய கோவில் இன்றும் உள்ளது. அங்குள்ள நம்பிக்கையின் படி, அந்த அம்மன், அவ்வழியாக யாரும் குதிரையின் மீது செல்ல முடியாது. இது முகமதியர்களின் தொந்தரவைக் குறிப்பதாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற முறையில் உருவாக்கப் பட்டிருக்கக் கூடும். 

ஹல்திகாட் அருகில் இருப்பதினால், முகமதியர்களின் தொல்லை இப்பகுதிகளில் அதிகமாகவே இருப்பதை அறிந்து கொள்ளலாம். ஶ்ரீநாத்ஜி வந்த பிறகு, அம்மனின் கோபம் அடங்கியது. அதிலிருந்து, அம்மனுக்கு, நிரந்தரமாக, ஒரு விளக்கு எரியுமாறு வைக்கப்பட்டுள்ளது. தவிர ஶ்ரீநாத்ஜி கோவிலிருந்து, பிரசாதமும் இக்கோவிலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிருஷ்ண வழிபாடு, சக்தி வழிபாடுடன் இருந்தது அல்லது பின்னதை குறைத்தது என்று தெரிகிறது. அல்லது விஷ்ணு வழிபாடு, கிருஷ்ண வழிபாடு இரண்டும் சேர்ந்தே வழங்கி வருகின்றன.

இடைக்காலம் வரை ஶ்ரீகிருஷ்ண வழிபாடு, மத்தியத் தரைக் கடல் நாடுகளில் பரவியிருந்தது: ஶ்ரீநாத்ஜி இடைக்காலத்தில் மத்தியத்தரைக்கடல் நாடுகள் மற்றும் ரஷ்யா வரை அறியப்பட்டிருந்தார். பாகிஸ்தானில் (Dera Ghazi Khan) ஶ்ரீநாத்ஜியின் பகதர்கள் பல கோவில்களைக் கட்டினர்.  ஶ்ரீலால்ஜி மஹராஜ் தனது கோவிலில் அங்கு கோபிநாத்ஜி மற்றும் ஶ்ரீதௌஜி விக்கிரகங்களை வைத்து வழிபட்டிருந்தார். ரஷ்யாவில் வோல்கா பகுதி வரை ஶ்ரீநாத்ஜி அறியப்பட்டிருந்தார். அங்கும் கோவில் இருந்தது. சமீபத்தில் இப்பகுதியில் விஷ்ணு சிலைகள் கிடைத்ததாக செய்திகள் வந்தன. பொதுவாக குஜராத்தை சேர்ந்த வியாபாரிகள், மத்தியத்தரைக்கடல் நாடுகள், அப்பிரிக்கா முதலிய நாடுகளுடன் வணிகதொடர்புகள் கொண்டிருந்தததால், அவர்களுடன் இணைந்த  கிருஷ்ண வழிபாடு அங்கிருந்தத்தில் வியப்பில்லை.

கிருஷ்ண வழிபாடு, நகர்ந்தது, இடம் பெயர்ந்தது: அரேபியர்களின் படையெடுப்பின் போது, கிருஷ்ணர் விக்கிரகங்கள், வடமேற்கு திசையிலிருந்து, கங்கைநதிகரைக்கு வருவதைப் பார்த்தோம். ஆனால், முகாலயர்களின் அதிகாரம் குறைந்த பிறகு, மறுபடியும் அவை குஜராத் நோக்கிச் செல்வது விசித்திரமாக உள்ளது. 17ம் நூற்றாண்டில் ஶ்ரீநாத்ஜி விக்கிரகம் கோவர்த்தன மலையிலிருந்து, ராஜஸ்தானுக்கு சென்று, அந்த கிருஷ்ணபக்தி இயக்கம், பிரஜ்-கிருஷ்ண இயக்கத்திற்கு போட்டியாக வந்து விட்டது போலிருக்கிறது என்று சிலர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. 3100 BCE காலம் வரை கிருஷ்ணர் துராகையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். மஹாபாரத யுத்தத்திற்குப் பிறகு, 3102 BCEல் கிருஷ்ணர் காலமாகி விட்டார். இருப்பினும் அப்பகுதியில் கிருஷ்ணரின் புகழ் வெகுவாகப் பரவியிருந்தது. இதனால் தான், “கிருஷ்ண” என்ற பெயர், மற்ற மதங்களிலும் நுழைந்திருக்கிறது. 4,000 ஆண்டுகளுக்குப் பிறகு உண்டாகும் கிருத்துவின் கதைகளுக்கு ஆதாரமாகிறது.

ஸ்ரீநாத்ஜீ ஆலயம் மட்டுமல்ல இன்னும் கணேசர் ஆலயம், லால் பாக் எனப்படும் பூங்கா, விருந்தாவன் பாக் எனப்படும் பூங்கா ஸ்ரீநாத்ஜீயின் கோசாலை என்று பார்ப்பதற்குரிய அம்சங்கள் இவ்வூரில் உள. 

இந்திரனுக்கென்று ஆயர்கள்எடுத்த எழில்விழவில்பழநடைசெய்
மந்திரவிதியில்பூசனைபெறாது மழைபொழிந்திடத்தளர்ந்து  ஆயர்
எந்தம்மோடு இனவாநிரைதளராமல் எம்பெருமான்! அருளென்ன
அந்தமில்வரையால்மழைதடுத்தானைத் நாத்துவாரா (திருவல்லிக்கேணி) கண்டேனே. (பெ.தி 2-3-4)  
என்றபடி கோவர்த்தனகிரிதாரியின் மங்களா தரிசனத்தை  மறு நாள் காலை பின் ஒரு முறை சேவித்த  பிறகு இத்தலத்திற்கு அருகில் உள்ள கங்ரோலி என்ற தலத்திற்கு சென்றோம். அத்தலத்தின் சிறப்புகள் என்ன என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.

No comments:

Post a Comment