நல்ல மலா காட்டின் நடுவில் ஒரு சிங்கம் (அகோபிலம் பயணம்..
.(எனது பத்ரி கேதார் பயண அனுபவங்களை பகிர்ந்தது போல் அவ்வளவு கடினம் இல்லையெனினும் இரண்டே நாட்களில் செல்லும் வண்ணம் ஆந்திராவில் அமைந்த எனது அகோபிலம் பயணக்குறிப்பு...V.V)🙏பகுதி...1
சாதாரணமாக நம் வாழ்க்கையில் ஒருநாளில் மனதில் நிற்கும் ஓர் அனுபவம் இருந்தால் அதிகம். பயணத்தில் அனுபவங்களால் நினைவுப்பெட்டகம் நிறைந்து வழிகிறது. காட்சிகள் மனதில் நிறைந்து கண்மூடும்போதெல்லாம் இமைகளுக்குள் விரிகின்றன. பயணங்களில் நாம் பலமடங்கு வாழ்கிறோம். அனுபவங்களை வைத்துத்தான் நம் அகம் காலத்தை எடைபோடுகிறதென்பதனால் பயணங்களில் நம் காலம் மிகப்பெரிது. ஆகவே அது அதிவேகமாக ஓடிச்செல்கிறது.
எனவே108 வைணவக்கோயில்களில் ஆந்திராவில்திருப்பதியை அனைவரும் அறிந்தாலும் நரசிம்மர் கோயில் கொண்ட சிங்கவேள் குன்றம் என ஆழ்வார்களால் பாடல் பெற்ற அகோபிலம் செல்ல தீர்மானித்தோம். அகோபிலம்தான் தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடம். தமிழ்நாட்டிலிருந்து வைணவர்கள் இங்கே வந்துகொண்டே இருக்கிறார்கள். கல்யாணம்,சிரார்த்தம் என்று. இதனால் இநத ஊரில் நல்ல தமிழ் எங்கும் ஒலிக்கிறது. சென்னையில் இருந்து நேரடியாக வந்துசேர நாநூறு கிலோமீட்டர் ஆகும். இங்குள்ள காட்டுக்குள் கிட்டத்தட்ட ஏழு கிலோமீட்டர் தூரத்துக்குக்குள் நரசிம்ம மூர்த்திக்கு கட்டப்பட்டுள்ள ஒன்பது ஆலயங்கள்தான் இதன் சிறப்பாகும்.அகோபிலம் என்றால் ‘மாபெரும் குகைக்கோயில்’ என்று பெயர். குன்றின் அடிவாரத்தில் பிரகலாதவத வரதரின் கோயில் உள்ளது.
தலவரலாற்றின்படி இந்த இடம் கருடகிரி [ கருடாச்சலம், கருடசைலம்] என்று அழைக்கப்படுகிறது. கருடருக்கு காட்சி கொடுக்கவே ஒன்பது இடங்களில் பெருமாள் நரசிம்மராக தோற்றம் அளித்தாராம். இங்கே ஹிரணியனைக் கொன்றபின் பிரகலாதனுக்கு வரம்கொடுக்கும் தோற்றத்தில் பெருமாள் கோயில்கொண்டிருக்கிறார்.
இன்னொரு கதையின்படி இப்பகுதியில் வாழ்ந்தபழங்குடியினர் செஞ்சுக்கள். அவர்களின் குலத்தில் மகாலட்சுமி செஞ்சுலட்சுமியாக வந்து பிறந்தார். அவரை பெருமாள் அவரே வந்து கைப்பிடித்தார். செஞ்சுபழங்குடியினர் வழிபட்ட நரசிம்மர்கோயில்கள் இவை.
அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. தமிழ்ப் பண்பாட்டின் முக்கியமான ஆளுமையான இவரைப்பற்றி இங்கே அதிகம்பேசப்படுவதில்லை. அவர் கன்னடர். இயற்பெயர் கிடாம்பி ஸ்ரீனிவாசாச்சார். கர்நாடக மாநிலத்தில் மேல்கோட்டே என்று அழைக்கப்படும்திருநாராயணபுரத்தில் 1398 ல் பிறந்தவர். அவரை அவரது தந்தை கிடாம்பி கேசவாச்சார் கல்விக்காக காஞ்சீபுரம் கடிகைக்கு அனுப்பினார்.
அவரது 20 வயதில் கனவில் ஒரு காவியணிந்த துறவி வந்து அகோபிலத்துக்குச் செல்லும்படி ஆணையிட்டிருக்கிறார். அகோபிலம் அப்போது யாருமே அறிந்திராத ஊர். அடர்ந்தகாடுகளுக்குள் பழங்குடிகள் வாழ்ந்துவந்த இடம். இப்போதுகூட அது காடுதான். ஸ்ரீனிவாசாச்சார் தன் குருவான கடிகாசதம் அம்மாள் என்று அழைக்கப்பட்ட வரதவிஷ்ணுவாச்சாரிடம் ஆலோசனைகேட்க அவர் அந்த கனவை பின்பற்றும்படி ஆலோசனை சொன்னார். ஸ்ரீனிவாசாச்சார் கால்நடையாகவே பலகாலம் பயணம்செய்து பலரிடம் தொடர்ந்து விசாரித்து அகோபிலக் காட்டுக்குவந்துசேர்ந்தார்.
ஸ்ரீனிவாசாச்சாரியார் அக்காட்டுக்குள் இருந்த குகைகளிலேயே தங்கி அங்குள்ள பழங்குடியினரை வைணவர்களாக்கி நரசிம்மருக்கான குகைக்கோயில்களை நிறுவினார்.அப்பகுதியின் அதிபனாக இருந்த முகுந்தராயன் என்பவனுக்கும் கனவில் பெருமாளின் ஆணைவந்ததாம். அவன் வந்து ஸ்ரீனிவாசாச்சாரியாரை பணிந்தான்.ஸ்ரீனிவாசாச்சாருக்கும் பெருமாளே கனவில்வந்து துறவு அளித்ததாக ஐதீகம். அகோபிலமடம் அவ்வாறாக உருவானது.
ஆதிவண் சடகோப மகாதேசிகரே அதன் முதல் ஜீயர். இந்த சம்பவம் கீழே உள்ள நரசிம்மர் ஆலயத்தின் தூண்களில் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது. அகோபிலமடத்தின் கடவுள் நரசிம்மமூர்த்தியே.ஜீயருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு. இங்குள்ள மூலவர் ‘மாலோலன்’ [தீராத விளையாட்டுப்பிள்ளை] என்று அழைக்கப்படுகிறார். முதல் ஜீயரின் கனவில்வந்த பெருமாள் மாலோல நரசிம்மரின் உத்சவ மூர்த்தியுடன் சென்று வீடுதோறும் சென்று அங்குள்ள மக்களுக்கு ஞான உபதேசமளிக்கும்படி ஆணையிட்டதாக ஐதீகம் சொல்கிறது. ஆகவே மாலோலரின் உற்சவமூர்த்தி அழகிய சிங்கரால் பயணங்களில் கொண்டுசெல்லப்படுகிறது.
மாலோல மூர்த்தியுடன் முதல் ஜீயரான சடகோபர் ஆழ்வார்திருநகரிக்கு வந்ததாகவும் பாண்டியர் ஆட்சியில் சைவத்தால் கிட்டத்தட்ட ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த வைணவத்தை தென் தமிழ்நாட்டில் புத்துயிர் பெறச்செய்ததாகவும் வரலாறு. இன்று தமிழ்நாட்டின் வைணவர்கள் நடுவே அதிக செல்வாக்குள்ள மடம் அகோபிலம்தான். குறிப்பாக வடகலை சம்பிரதாயத்தின் ஒரு பிரிவிற்கு அகோபிலமே தலைமை மடம் என்று சொல்றார்கள். தமிழ்நாட்டு வைணவ ஆலயங்களில் பெரும்பாலானவற்றில் அகோபில மடத்துக்கு நிர்வாகப்பங்கு ஐதீகப்படி அளிக்கப்பட்டுள்ளது. இப்போதைய ஜீயர் குருபரம்பரையில் நாற்பத்து ஆறாவதாக வருபவர். திருமங்கையாழ்வார் அகோபில நரசிம்மரைப்பற்றி ஒரு பதிகம் இயற்றியிருக்கிறார்.
அகோபிலமடத்தின் கோட்பாட்டின்படி பிரஸ்தான திரயம் எனப்படும் [உபநிடதங்கள், பிரம்மசூத்ரம், கீதை] மூலநூல்களுக்கு நிகராகவே நாலாயிர திவ்விய பிரபந்தமும் மூலநூல் ஆகும். அதற்கு சதுர்வேதங்களுக்கு நிகரான இடம் அளிக்கப்பட்டுள்ளது. நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் கல்வியுடைய வைணவர்கள் இதனாலேயே ‘உபய வேதாந்த’ [நிகரான வேதமுள்ள] என்ற பட்டம் அளித்து குறிப்பிடப்படுகிறார்கள். அகோபிலமடம் ஆந்திராவிலிருந்தாலும் முழுக்கமுழுக்க தூயதமிழ் மடம். தமிழுக்கும் வைணவ இலக்கியத்துக்கும் அதன் பங்களிப்பும் மிக அதிகம்.
அகோபிலத்தை ஒருநாளில் பார்த்து முடிப்பது கஷ்டம். குறைந்தது நான்குநாள் அங்கேயே தங்கி ஆட்டோ அல்லது ஜீப் வைத்துக்கொண்டு குறுகிய மலைப்பாதைகளில் பயணம்செய்துதான் அங்குள்ள எல்லா நரசிம்மர் ஆலயங்களையும் பார்க்க முடியும். நல்லமலா காட்டுக்குள் அக்கோயில்கள் சிதறிக்கிடக்கின்றன.
சிலகோயில்கள் புராதனமான குகை ஆலயங்கள். அடர்ந்த காட்டுக்குள் ஒற்றையடிப்பாதைவழியாக நடந்துசென்று தரிசிக்கவேண்டிய கோயில்களும் சில உண்டு. ...
கடப்பா வரை ட்ரெயினில் சென்றோம்.பின்னர் அல்லகட்டா வரை 80km பஸ் நிறைய உண்டு.பின்னர் 23 கமீ உள்ள அகோபித்திற்கு டவுன் பஸ் ஷேர் ஆட்டோ,கார் என வசதிப்படி செல்லலாம்.அகோபில மடத்திலேயே யார் வேண்டுமானாலும் தங்கும்படி guest house,அடிவார அகோபிலத்திலேயே உண்டு(sri Malola guest house 08519_252045,09490515284).அவர்களே 7 கிமீ தூரத்தில் நிறைய guest house கட்டி போட்டிருப்பதால் காரில் வருபவர் பயன்படுத்தலாம்.மேலும் APgovt guest house தனியார் விடுதிகளும் உள்ளன....இனி நவ நரசிம்மர்களையும் தரிசிக்கும் வழி முறைகளை காணலாம்..( தொடரும்)
----------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய அஹோபிலம் பற்றிய கட்டுரைக்கு திரு சந்த்ர சேகர் அவர்களின் விளக்கம்
அஹோபிலம் மடம் பற்றிய பதிவில் ஸ்ரீநிவாஸாச்சார்ய ஸ்வாமி கனவில் பெருமாள் வந்து துறவு நீடியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதுவரை அடியேன் படித்ததில் நேரடியாகத் துறவி ரூபத்தில் வந்து அஹோபில க்ஷேத்திரத்தில் ஸந்யாஸ தீக்ஷை அளித்ததாகவே தகவல் கிடைத்துள்ளது. ஆதார பூர்வமான தகவல் எது எனப் பதிவிடவும். பெருமாள் இவ்வாறு துறவி வடிவில் தீக்ஷை அளித்து விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் ''ஸந்யாஸ க்ருத்'' என்ற திருநாமத்தைச் சரிதார்த்தம் செய்து (மெய்ப்பித்துக்) கொண்டார் என்பது சிறப்பு. அறிந்த வரை ஸ்ரீவைஷ்ணவத்தில் இவர் ஒருவருக்கே துறவறம் முறையாக ஒரு துறவி மூலம் அளிக்கப் பட்டிருக்கிறது. பிறர் அனைவரும் ஐதீகப்படி விருத்தாந்தங்களினால் துறவிகளாகக் கருதப் படுகின்றனர்.
Ahobila Matam is a Sri Vaishnava religious institution establsihed 600 years ago in a place called Ahobilam by Srimad Athivan Satakopan. He was originally known as Kidambi Srinivasachar. He was a student under Gadikasadam Ammal in Kanchipuram. One day, the Lord of Ahobilam, Sri Lakshminrisimha, appeared in Srinivasachar's dream and instructed him to come to the temple town of Ahobilam. After consulting with his Acharya, he proceeded to Ahobilam.
இந்தப் பகுதியை அஹோபில மடத்தின் தளத்திலிருந்து அனுப்புகிறேன். இதில் பெருமாள் கனவில் துறவறம் பூணுமாறு கூறியதாகத் தெரிவிக்கவில்லை. அவ்வாறு கனவில் கூறியிருந்தால் அது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அவரோ முகம் தெரியாத அஹோபிலத்திற்குச் சென்றிருந்தார். அவரது பூர்வோத்தரம் கல்வித் தரம், ஆச்சார அனுஷ்டானங்கள் பற்றி யாருக்குமே அங்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிறர் அவர் கூற்றை எங்ஙனம் நம்பினார்கள்? ஆதலால் யான் படித்த வண்ணம் ஒரு துறவி வடிவில் பெருமாள் வந்து துறவு அனுமதித்துப் பின்னர் அனைவரும் காணும் வண்ணம் உடனே 'அந்தர் தியானம்' ஆகியிருக்க வேண்டும்.
இதில் இன்னொரு தகவல் இடைவெளி உள்ளது. அவர் மேல்கோட்டையில் யாருடைய வம்சம்? ஒரு வேளை பிரம்மச்சாரியாக இருந்தால் தாயின் அனுமதி பெற்றாரா?அவருக்குத் திருமணம் ஆகியிருந்ததா? ஆயின் அவர் தம் மனைவியின் ஒப்புதல் பெற்றாரா என்பன. இம்மடத்தில் கிருஹஸ்தாசிரமத்தின் பின்னரே சன்யாசம் பெறுவது வழக்கமாகக் காண்கிறோம்.இது அவருக்குப் பின் பல காலம் கழிந்து ஏற்பட்ட வழக்கமா என்பதும் ஆய்வுக்குரியது.
Srimad Adivan Satakopan
At Ahobilam, the Lord himself initiated Srinivasachar into Sanyasam (monasticism) and gave him the title, "Satakopa Jeeyar". (Later, Lord Athippiran of Azhvar Thirunagari added the title Van and Nammazhvar added the title Athi. Thus the Jeeyar came be be known as "Athivan Satakopan".)
By Mr Chandrasekar
No comments:
Post a Comment