🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பஞ்ச துவாரகா பயணம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻பகுதி14
(நேற்றைய பகுதி 13 தவறுதலாக 12 என பதிவானது)
வெங்கடேசன்(6381369319)
🌺சோம நாதபுரம்
எத்தனை தடவை இடித்தாலும் மக்களும் விடவில்லை. மீண்டும் கோவிலை கட்ட 1701-ல் முகலாய மன்னன் அவுரங்கசீப் கோவிலை முற்றிலும் இடித்து தள்ளினான். இவ்வாறு 6 முறை கோவில் இடிக்கப்பட்டு இருந்தது.1782-ல் மராட்டிய மன்னர் லாகூருக்கு படையெடுத்து சென்று அந்த பகுதியை கைப்பற்றியதுடன் சோமநாத புரம் கோவிலில் இருந்து எடுத்து சென்று அங்கு வைத்திருந்த 3 வெள்ளி கதவுகளை மீட்டு வந்தார்.
இதன் பிறகு மீண்டும் கோவில் கட்டப்பட்டாலும் காலப் போக்கில் பாதிப்பு அடைந்து கோவில் மோசமான நிலையில் இருந்தது. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கோவில் அமைந்துள்ள பகுதி ஆங்கிலேயருக்கு கட்டுப்பட்ட ஜுனாகத் சமஸ்தானத்தில் இருந்தது. ஜுனாகத் மன்னர் இந்த பகுதியை பாகிஸ் தானோடு இணைக்க முயன் றார். ஆனால், வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் கடுமை யாக போராடி இந்த பகுதியை இந்தியாவோடு இணைத்தனர்.
சிதைந்து கிடந்த கோவிலை மீண்டும் கட்ட சர்தார் வல்ல பாய் பட்டேல் உத்தரவிட்டார். ஆனால், மகாத்மா காந்தி கோவிலை அரசு பணத்தில் கட்டக்கூடாது. வேண்டுமானால் பொது மக்களிடம் நிதி திரட்டி கட்டி கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். இதனால் அறக்கட்டளை அமைத்து நிதி திரட்டி மீண்டும் கோவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இதற்குள் மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல் இருவருமே இறந்து விட்டனர். மத்திய மந்திரி கே.எம்.முன்ஷி தலைமையிலான அறக்கட்டளை குழு 1951-ல் கட்டுமான பணியை தொடங்கியது. அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
படிப்படியாக கட்டுமான பணி தொடர்ந்து 44 ஆண்டுகள் நடந்து 1995-ம் ஆண்டுதான் பணி முற்றிலும் நிறைவு பெற்றது. அப்போதைய ஜனாதிபதி 1.1.1995-ம் ஆண்டு கோவிலை திறந்து வைத்தார். இந்த கோவில் சாளுக்கிய மரபுப்படி கட்டப்பட்டு கம்பீரமாக நிற்கிறது. கோவிலின் உயரம் 115 அடி. இதன் கோபுரத்தில் 10 டன் எடையுடைய கோபுர கலசம் வைக்கப்பட்டுள்ளது. அதில், 37 அடி உயரம் கொண்ட கொடிமரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
பழங்காலத்தில் மிக பிரமாண்டமாக கோவில் இருந்துள்ளது. இப்போது அந்த அளவுக்கு மிக பிரமாண்டமாக இல்லாவிட்டாலும் கலை நயத்தோடு சிறப்பாக கோவில் கட்டப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கோவில் என்பதால் குஜராத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியா மட்டும் அல்ல, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மகா சிவராத்திரி விழா இங்கு மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
முதலில் தங்கும் விடுதியை பதிவு செய்ய வேண்டும் என்பதால் இரண்டு பேர் மைய முன்பதிவு அலுவலகத்திற்கு சென்றனர்
தங்கும் விடுதிகள் ட்ரஸ்ட் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. ரூ50/- முதல் ரூ1000/- வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் அறைகள் உள்ளன. லீலாவதி பவன், மஹேஸ்வரி பவன், அதிதி க்ருஹ் என்று மூன்று தங்கும் விடுதிகள் உள்ளன.
மைய அலுவகத்தில் சென்று முன் பணம் கட்டி அறையை பெற்றுக் கொள்ளலாம். www.somnath.org என்ற இனைய தளத்தின் மூலம் முன் பதிவும் செய்து கொள்ளலாம். அறைகள் விலாசமாகவும், சுத்தமாகவும் உள்ளன. தொலைக் காட்சிப் பெட்டி, சுடு தண்ணீர், அலமாரி, கம்பளிப் போர்வைகள் என்று அனைத்து வசதிகளும் உள்ளன. அறைகள் மிகவும் சுத்தமாக இருந்தன. விடுதிகளை நன்றாக பராமரிக்கின்றனர். ஒவ்வொரு விடுதியிலும் பல ஆன்மீக நூல்களுடன் கூடிய நூலகம் உள்ளது. வெளியே உட்கார்ந்து ஓய்வு எடுக்கவும் வசதிகள் உள்ளன. உணவு விடுதியில் அடக்க விலையில், சுகாதாரமான உணவும் உண்ணலாம். யாத்திரிகளுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நிறைவாக அளிக்கின்றது கோயில் நிர்வாகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மற்றவர்கள் சோமநாதரை தரிசிக்க ஆலயம் சென்றோம். ஆலயத்தில் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆலயத்திற்கு சுமார் அரை கிலோமீட்டருக்கு முன்னரே வண்டிகள் நிறுத்தப்படுகின்றன. அதற்குப்பின் பக்தர்கள் நடந்து சென்றே ஆலயத்தை அடைய முடியும், செல்பேசி, புகைப்படக் கருவி மற்றும் எந்த மின்னணு கருவியும் கோவிலின் உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை. உலோக கண்டுபிடிப்பான் (Metal Detector) கொண்டு உடற்பரிசோதனை செய்த பிறகே வாயிலின் உள்ளே நுழைய முடியும்.
தோல் பொருட்கள், காலணிகள், பைகள் ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை அவற்றை பாதுகாப்பாக வைத்துச் செல்ல வசதி ஆலய வளாகத்தின் உள்ளே உள்ளது.
விஜய்துவாரத்தில் நுழைந்தவுடன் கோவிலின் முகப்பை அருமையாக தரிசிக்கலாம். முழுக்க முழுக்க காவி பூசப்பட்ட முன் வாசல் மண்டபம். அதன் இரு புறங்களிலும் துலங்கும் மாட உப்பரிகைகள். மண்டபத்தின் மையத்தில் இருக்கும் வாசல் வழியாக ஆலயத்தில் நுழைந்தால் பரந்த புல்வெளி. அதன் நடுவே ஒரு பாதை பிரதான ஆலயம் நோக்கி செல்கின்றது. புல்வெளிக்கப்பாலும், ஆலயத்திற்கு பின் புறத்திலும் அரபிக் கடல் ஆர்ப்பரிக்கின்றது.
வரிசையும் விரைவாக சென்று கொண்டிருந்தது எனவே சந்திரனுக்கு அருளிய சோமநாதரின் தரிசனம் இரவே அருமையாக கிட்டியது. இவ்வாலயத்திற்கு எத்தனையோ கதைகள் உள்ளன வாருங்கள் அவையனைத்தையும் தனியே காணலாம்.
No comments:
Post a Comment