Friday, July 30, 2021

அகோபிலம் பயணக்குறிப்பு - பகுதி 4

 நல்லமலா காட்டின் நடுவில் ஒரு சிங்கம் அகோபிலம் பயணம் பகுதி 4

மேல் அகோபிலம் (8 km)செல்ல பேருந்து  அல்லது ஷேர் ஆட்டோக்கள் உண்டு.மலை மேல் உள்ள 5 நரசிம்மரை தரிசிக்க வழிகாட்ட என்று கைடுகள் 500/ கேட்கிறார்கள்..ஆனால் நிறைய பக்தர்கள் போய் வந்த வண்ணம் இருப்பதால் அவர்களை பின்பற்றினாலே போதும்..எங்களுடன் வந்த கைடு பட்டர்களுக்கு தட்டில் போட்ட சிறுதொகையில் கூட அவர்களிடம்  பங்கு கேட்டு கைநீட்டியது அக்கிரமம்..😲மேலும் அவர்கள் வேகத்திற்கு நாம் நடக்க வேண்டுமென்பதால் இயற்கையை ரசிக்க இயலவில்லை..

🙏🏼பெத்த அஹோபிலக்ஷேத்ரம்’ என்றழைக்கப்படும் இந்தத் தலத்திலிருந்து 76 படிகள் நம்மை உக்ர நரசிம்மர் கோயிலுக்கு உயர்த்தி அழைத்துச் செல்கின்றன. ‘ரொம்பவும் களைத்துவிட்டாயே, அப்பா,’ என்று வாஞ்சையுடன் அழைத்து ஆறுதல் அளிக்கிறது மூன்று நிலை ராஜகோபுரம்.🙏🏼 அந்த அன்புக்குத் தலை வணங்கி குனிந்து உள்ளே செல்கிறோம். இதனை குடைவரைக்கோயில் என்கிறார்கள். 

அதிசயமாகத்தான் இருக்கிறது. உயர்ந்த மதில்கள், மகாமண்டபம், முகமண்டபம்என்று பெரியதாகவே விளங்குகிறது கோயில். உக்ர நரசிம்மர் சுயம்பு மூர்த்தி. இவர் அஹோபிலநரசிம்மர் என்றும் அஹோபிலேசன் என்றும் அழைக்கப்படுகிறார்.சக்ராசனத்தில் வீற்றிருக்கும் உக்ர நரசிம்மர் இரு கரங்களுடன் திகழ்கிறார். கிழக்குநோக்கிய தரிசனம். 

சிறிய மூர்த்திதான்; ஆனால், கீர்த்தி மிக்கது, பேரெழிலும் வாய்ந்தது.ஒரு கரத்தால் ஹிரண்யனின் தலையையும் இன்னொருகரத்தால் அவனுடைய உடலையும்பிடித்துக் கொண்டிருக்கிறார் இவர். ஆனால், ஒரு மகா அசுரனை ஆக்ரோஷம்கொண்டு வதைக்கும்போது அவர் முகத்தில் கோபம் எப்படிக் கொப்புளிக்க வேண்டும்,எத்தனை கடுமை தெரிய வேண்டும்? 😡ஆனால், தன் பெயருக்கேற்றாற் போலவோ, செயலுக்கேற்றாற் போலவோஅவர் கோபாவேசம் கொள்ளாதிருப்பதற்குக் காரணம், பக்கத்திலேயே புன்முறுவலுடன்😊 பிரஹலாதன்நின்றிருப்பதால்தானோ என்றும் எண்ண வைக்கிறது. குகைக்குள்ளேயே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த சந்நதியில்கருடாழ்வாரும்எழுந்தருளியுள்ளார்.

 லிங்க ரூபமாக சிவபெருமானும், ராம-லட்சுமணரும்தரிசனம் தருகிறார்கள். தூண்களில் கிருஷ்ணர், தாச அனுமனோடு கருடனையும் தரிசிக்கலாம். (உக்ர நரசிம்மரின்உற்சவ மூர்த்தியை நாம் ஏற்கெனவேகீழ் அஹோபிலத்தில் தரிசித்துவிட்டோம்). சிறியவடிவில் லக்ஷ்மி நரசிம்மர், ஆதிவண் சடகோப ஜீயர், நித்யோத்சவர் ஆகியோரும் நம் மீது கருணைபொழிகிறார்கள். பக்கத்தில் கருடாழ்வாரையும், ஒருசேர தரிசிக்கலாம். உக்ரநரசிம்மர் கருவறைக்கு எதிரே சேஷ வாகனம் இருக்கிறது. 

😮இதனடியில் குகை வழி ஒன்று இருந்ததாகவும்,அஹோபில மடத்து 6ம் பட்டத்து ஜீயரான ஷஷ்ட பராங்குச யதீந்திர மஹாதேசிகன், தான் இந்தக்குகைக்குள் புகுந்துகொள்வதாகவும், அதற்குப் பிறகு குகை வாசலை மூடிவிடுமாறு தன் சீடர்களுக்குஉத்தரவிட்டதாகவும் சொல்லப்

படுகிறது. அதன்படி, மூடப்பட்ட இந்தக் குகைக்குள் அவர் இன்றளவும் நரசிம்மரை ஆராதித்துக் கொண்டிருப்பதாகவும் 

சொல்கிறார்கள். (இச்சமயத்தில் ஷஷ்ட பராங்குச மகாதேசிகனாரைப் பற்றிச் சற்றுத் தெரிந்துகொள்வோம்.) கரலப்பாக்கம் வங்கீபுரம் வெங்கடாச்சார்யார் என்பது இவருடைய இயற்பெயர். 

இவர் தன் பக்தியால்,நரசிம்மப் பெருமாளின் அருளால் நீர்வற்றியிருந்த நீர்வளூரை வளம் செழிக்கும் தலமாகமாற்றிய பெருமை கொண்டவர். அரசரவையில் பிரதான அங்கம் வகித்து ராஜரிஷியாக திகழ்ந்தவர். விஜயநகர மன்னரின் மகளுடைய நாள்பட்ட நோயைத்  தீர்த்து வைத்து அதற்குச் சன்மானமாகப் பல மானியங்களைப் பெற்றவர். அந்தமானியங்களை வைணவம் தழைக்கவும், வைணவத் தலங்களைப் பராமரிக்கவும் செலவிட்டவர். விஜயநகரமன்னரை அஹோபிலத் திருத்தலத்துக்கு வருகைதரச் செய்தவர்.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இவர், ‘நரசிம்மஸ்தாம்‘,‘ப்ரபத்தி ப்ரயோகம்’ ஆகிய நூல்களை இயற்றியவர். கோயில்சந்நதி மண்டபத்தில் ஆதிசங்கரர் ஸ்தாபித்த சுதர்சன யந்திரம் உள்ளது. இங்கே ஆழ்வார்களும், ராமானுஜரும் சந்நதிகள் கொண்டுள்ளனர். தூணில் செஞ்சுலட்சுமி தாயாரை வித்தியாசகோலத்தில் காணலாம். வேடுவ குலத்தில் அவதரித்த இவர் அம்புவிடும் தோரணையில் காட்சியளிக்கிறார்.

இவரையே மூலவராக தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். சதுர்புஜங்களுடன் அமர்ந்த திருக்கோலம். இவரது உற்சவ மூர்த்தியைத்தான் கீழ் அஹோபிலத்தில் அம்ருதவல்லித் தாயார் சந்நதியில் தரிசித்தோம். ‘வாஸந்திகா பரிணயம்’ என்ற க்ரந்தம், செஞ்சுலக்ஷ்மி தாயாரை, நரசிம்மர் மணந்த வரலாற்றை விவரிக்கிறது. ஹிரண்யனை வதைத்தும், அவனை நார், நாராகக் கிழித்தெறிந்தும் கோபம் தணியாதநரசிம்மரை சாந்தப்படுத்தியவர் செஞ்சுலக்ஷ்மி தாயார்தான். இவரை மணந்த பிறகுதான் தன்கோபம் முற்றிலும் நீங்கப் பெற்றார்நரசிம்ம மூர்த்தி. 

தன் பிறப்பாலேயே வேடுவ குலத்துக்குப்பெருமை தேடித் தந்த செஞ்சுலக்ஷ்மி தாயார், பகவானின் கோபத்தை அறவே நீக்கி, பக்தர்களுக்குகருணை பூர்வமாக, நரசிம்மப் பெருமாள் அருள் வழங்கக் காரணமாக இருந்திருக்கிறார். இந்தக்கோயிலுக்கு அருகிலேயே பாவன நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் படிகள் அமைந்துள்ளன. சற்றுத் தொலைவில் ஓடும் பவநாசினி ஓடைக்குஅருகில், நூறு தூண்களைக் கொண்ட  காலக்ஷேப மண்டபத்தைக் காணலாம்.

படங்கள் 

1)உக்ர  நரசிம்மர் கோபுரம்

2)நவ நரசிம்மர்களையும் தரிசிக்கும் வழிகாட்டி மேப்




No comments:

Post a Comment