Friday, July 30, 2021

சுகப்பிரவசம் நடைபெற

 சுகப்பிரவசம் நடைபெற ஸ்ரீ கர்ப்ப ரக்ஷõம்பிகை ஸ்தோத்திரம் 


அம்பாள் சன்னதியில் பிரம்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷ?தர் அவர்களால் மெய்மறந்து இயற்றப்பட்ட ஸ்தோத்திரம். தினசரி பாராயணம் செய்ய உகந்தது.

ஸ்ரீ மாதவீ கானனஸ்தே - கர்ப்ப
ரக்ஷõம்பிகே பாஹி பக்தம் ஸ்துவந்தம்  (ஸ்ரீ)


வாதபீதடே வாமபாகே - வாம
தேவஸ்ய தேவஸ்ய தேவீஸ்துதித்வம்
மாந்யா வரேண்யாவதான்யா - பாஹி
கர்ப்பஸ்த ஜந்தூனதா பக்த லோகான்  (ஸ்ரீ)


ஸ்ரீ கர்ப்ப ரக்ஷõ புரேயா - திவ்ய
ஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீ
தாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம்  (ஸ்ரீ)


ஆஷாடே மாஸே ஸுபுண்யே - சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம் பராகல்ப தேஷா - வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸுத்ருஷ்டா  (ஸ்ரீ)


கல்யாண தாத்ரீம் நமஸ்யே -வேதி
காக்ய ஸ்த்ரியா கர்ப்ப ரக்ஷõ கரீம் த்வாம்
பாலைஸ் ஸதாஸே விதாங்க்ரிம் - கர்ப்ப
ரக்ஷõர்த்த மாராது உபேதைரு பேதாம்  (ஸ்ரீ)


ப்ரம் மோத்ஸவே விப்ரவீத்யாம் - வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
ப்ருந்தை ரபிட்யாம் ஜகன் மாதரம் த்வாம்  (ஸ்ரீ)

ஏதத் க்ருதம் ஸ்தோத்ர ரத்னம் - தீக்ஷ?
தானந் தராமேண தேவ்யாஸ் ஸுது

வர லஷ்மி விரதம்

 ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய 🙏🏻🙏🏻

|| வர லஷ்மி விரதம் ||

காக்கும் கடவுள் ஸ்ரீமஹா விஷ்ணுவின் துணைவியும், செல்வங்களை அள்ளி தரக்கூடிய மஹாலஷ்மி தேவியை வணங்கி அவரின் அருளாசி பெறுவதே இந்த வர லஷ்மி விரதம் விரதத்திற்கான நோக்கம்.

இந்தாண்டு வர லஷ்மி விரதம் ஆங்கில தேதி 20ம் தேதி (ஆவணி 4) வெள்ளிக்கிழமை கடை பிடிக்கப்படுகிறது.

|| வர லஷ்மி விரத முறை ||

வீட்டில் பூஜை எப்படி செய்வது, அதன் பலன்கள் என்ன என்று பார்ப்போமா !!

முதலில் வர லஷ்மி விரத பூஜைக்கான உகந்த நேரம் பார்க்கலாம் !!

வர லஷ்மி விரதத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் முதல் நாளே வீட்டையும், பூஜை அறையையும் அழகாக சுத்தம் செய்து வைத்துக் கொள்வது அவசியம்.

வெள்ளிக்கிழமை தினத்தில் காலையில் குளித்து முடித்து விட்டு நெற்றியில் குங்குமம் இட்டு முதலில் விநாயகரை வணங்கி பின்னர் குல தெய்வத்தையும் வணங்கி பின் இவ் விரதத்தை தொடங்க வேண்டும்.

வர லஷ்மி விரதம் சிறப்பு பூஜை செய்ய

குரு ஹோரை சுக்ர ஹோரையில் பூஜை செய்யலாம்.

வர லஷ்மி விரதத் திற்கான அலங்காரம் எப்படி செய்வது !!

எதை எல்லாம் பயன்படுத்தலாம் !!

வர லஷ்மி விரதத்தின் முக்கியத்துவம்:

இந்த விரதத்தின் முக்கியத்துவமே சுமங்கலி பெண்கள் தங்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் எந்த குறையும் இல்லாமல் சகல செளபாக்யமும் பெற்று வாழ வேண்டும் என்பதே.

தொழில் சிறக்க வேண்டும். 

அதனால் கிடைக்கும் தனம், பொருள் வரவு மூலம் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்பத்தை அனுபவிக்க வேண்டும் என எல்லா வரத்தையும் தரக்கூடிய லஷ்மி தேவியை நினைத்து கடைபிடிக்கக்கூடிய விரதமாகும்.

கன்னி பெண்கள்

சுமங்கலி பெண்கள் மட்டுமல்லாமல் கன்னி பெண்களும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். 

ஒரு பெண்ணுக்கு முழுமையான அந்தஸ்தை பெறுவது அவள் திருமண உறவில் ஈடுபடும் போது தான்.

அவளுக்கு எல்லாமுமாக இருக்கக்கூடியவன் கணவன். 

அதனால் நல்ல கணவன் அமைய வேண்டும் என லஷ்மியை வணங்கி விரதம் இருக்கின்றனர்.

விரதத்தால் கிடைக்கும் அஷ்ட லட்சுமிகளின் அருள்

வரலஷ்மியை வணங்குவதன் மூலம் ஒருவர் அஷ்ட லஷ்மியின் ஆசீர்வாதத்தை பெறலாம்.

ஆடி அல்லது மஹாலஷ்மி (ஆன்மீகக் கற்றளைத் தூண்டுபவர் அல்லது பாதுகாப்பவர்)

தன லஷ்மி (செல்வத்தின் தெய்வம்)

தைர்ய லஷ்மி (தைரியத்தின் தெய்வம்)

செள பாக்ய லஷ்மி (நல்ல அதிர்ஷ்டத்தின் தெய்வம்)

விஜய லஷ்மி (வெற்றியின் தெய்வம்)

தான்ய லஷ்மி (தானியங்களை அருள்பவர்)

சந்தனா லஷ்மி (குழந்தைப் பேறு அருள்பவர்)

வித்யா லஷ்மி (ஞானத்தின் தெய்வம்)

இவ்வாறு, இந்த நாளில் ஒரு வரலஷ்மி விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், பெண்கள் அஷ்ட லஷ்மியின் ஆசீர்வாதங்களை பெற்றிட முடியும்.

சரி வர லஷ்மி பூஜைக்கு தேவையான பொருட்கள் என்னென்ன !!

மண்டபத்திற்கு அலங்காரபொருட்கள்.

1- சின்ன வாழைக்கன்று இரண்டு

2- தோரணம் (கிடைத்தால்)

3- மாவிலை தோரணத்திற்கு.

4- முகம் பார்க்கும் கண்ணாடி (அம்மனின்    பின் அலங்காரத்தை ரசிக்க) 

5- சீரியல் மின் விளக்கு. அதை இணைக்க தேவையான extension cord.

6- பூச்சரம் அம்மன் அலங்காரத்திற்கு.

1- அம்மனை வைக்க சொம்பு.

2- காதோலை இரண்டு பக்கமும் வைக்க

3- கருக வளையல் இரண்டு பக்கமும் வைக்க

4- மாவிலைக்கொத்து, தேங்காய் மற்றும் அம்மன் வைக்க

5-தாழம்பூ ( கிடைத்தால் அதை கருக வளையலில் சேர்த்து இரு பக்கமும் வைக்கலாம்)

6- ஜடை அலங்காரம் இப்போது பூக்கடைகளில் கிடைக்கிறது.

7- சொம்பிற்கேற்ப சிறிய தேங்காய்.

8- சிறிய வாழை இலை. அதில் அரிசியை பரப்பி, அம்மனை வைக்க

9- புதிய ரவிக்கை துண்டு (அம்மனுக்கு சாத்த)


பூஜைக்கு தேவையான

பொருட்கள்.


1- காமாட்சி விளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி.

2- பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு)

3- பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள்

4- மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள்

5- ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி

6- மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு.

7- பஞ்ச பாத்திரம், உத்தரினி.

8- இழை(மா)க்கோலம் போட தேவையான பொருட்கள் 

9- மஞ்சள் சரடு அதற்கு கட்ட பூ.

10- அர்க்கியம் விட கொஞ்சம் பால்

நைவேத்தியங்கள்.

அப்பம்

வடை (உளுந்து வடை)

கொழுக்கட்டை 

வெல்ல பாயசம்

சர்க்கரை பொங்கல்

கொத்துக்கடலை சுண்டல் (சாயந்திரம் நைவேத்தியத்திற்கு) 

இதற்கு தேவையான தேங்காய், 

வெல்லம் மற்றும் தேவையான மளிகை சாமான்கள்

பழ வகைகள் 

1- வாழைப்பழம் மற்றும் கிடைக்கும் எல்லா வகையான பழங்களும்.

பூஜை முடிந்த பின், அர்க்யம் விட்ட பிறகு, மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ளவும். 

மாலையில் மஹா லஷ்மிக்கு சுண்டல் நைவேத்தியம் செய்து, கற்பூரம் ஆரத்தி எடுக்கவும்.

பூஜை முடிந்த பிறகு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் தஷிணை கொடுக்கவும். 

மறு நாள் காலை புனர்பூஜை செய்து, மஹா லஷ்மியை எடுத்து அரிசி பானையில் வைக்கவும். 

மஹா லஷ்மிக்கு வைத்த அரிசியை, வரும் கிருஷ்ண ஜயந்தி பட்சணம் செய்ய உபயோகித்துக் கொள்ளலாம்.

முதலில் விக்னேஸ்வர பூஜை 

உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, 

ஓம் கேசவாய ஸ்வாஹா 
ஓம் நாராயணாய ‌ ஸ்வாஹா
ஓம் மாதவாய ஸ்வாஹா  

என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். 

மீதியை புஸ்தகம் பார்த்து ஆசமனம் செய்ய வேண்டும். 

கையில் மஞ்சள் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும். 

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்| 
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே|| 

மமோ பாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ லஷ்மி நாராயணப் ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே|| 

- என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். 

விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசமனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். 

கண்டம் மணி அடிக்கவும். 

ஆகமார்த்தம் து.....

பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும். 

அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ 


விக்னேஸ்வரம் த்யாயாமி  

ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி

என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும். 

இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும். 

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி| 

” பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) 

” அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) 

” ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) 

” ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்) 

” ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) 

” வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) 

” உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) 

” திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்) 

” அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்) 

” புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்) 

புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும். 

ஓம் சுமுகாய நம: | 
ஓம் ஏகதந்தாய நம: | 
ஓம் கபிலாய நம: | 
ஓம் கஜகர்ணாய நம: | 
ஓம் லம்போதராய நம: | 
ஓம் விகடாய நம: | 
ஓம் விக்னராஜாய நம: | 
ஓம் விநாயகாய நம: | 
ஓம் தூமகேதவே நம: | 
ஓம் கணாத்யக்ஷாய நம: | 
ஓம் பாலசந்த்ராய நம: | 
ஓம் கஜானனாய நம: | 
ஓம் வக்ரதுண்டாய நம: | 
ஓம் சூர்ப்பகர்ணாய நம: | 
ஓம் ஹேரம்பாய நம: | 
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: | 
ஓம் ஸித்திவிநாயகாய நம: | 
ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம: 

அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும். 


தெரிந்தவர்கள்


அம்ருதோபஸ்தரணமஸி | 
ஓம் ப்ராணாய ஸ்வாஹா | 
ஓம் அபாநாய ஸ்வாஹா | 
ஓம் வ்யாநாய ஸ்வாஹா | 
ஓம் உதாநாய ஸ்வாஹா | 
ஓம் ஸமாநாய ஸ்வாஹா | 
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா | 
மஹாகணபதயே நம: 
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி | 

அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்.

 பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும். 

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரபா| 

நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷூஸர்வதா|| 

- என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும். 

அடைப்புக் குறிக்குள்() இருப்பவை இந்த வருடத்துக்கான ( ) நாள் நட்சத்திரங்கள் திதி என‌ நீங்களே சேர்த்துக் கொள்ளலாம். 

சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்ரூ தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதிரூ ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, ப்லவநாம ஸம்வத்ஸரே, தெக்ஷிணாயனே கீர்ஷ்மருதௌ, கடகமாஸே, சுக்லபக்ஷே, துவாதஸ்யாம் சுபதிதௌ,ப்ருகு வாஸரயுக்தாயாம், மூலாநக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் துவாதஸ்யாம் சுப திதௌ, 

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ லஷ்மி நாராயணப் ப்ரீத்யர்த்தம் அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுளாரோக்ய ஐஸ்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸெளமாங்கல்ய அவாப்த்யர்த்தம், ஸகல சத்ரு உபாத நிவர்த்யர்த்தம்‌ இஷ்ட தேவதா அனுக்ரஹ சித்யர்த்தம் குல தேவதா அனுக்ரஹ சித்யர்த்தம் அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யானரூஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே|  

என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும். 

உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, 

ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி | 
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச || 

என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும். 


பின் கலச பூஜை செய்யவும்.


பஞ்ச‌ பாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு, 

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி 
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ 
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு|| 

என்று, புஷ்பார்ச்சனை செய்யவும். 

கங்காயை நம:| 

யமுனாயை நம:| 

கோதாவர்யை நம:| 

ஸரஸ்வத்யை நம:| 

நர்மதாயை நம:| 

ஸிந்தவே நம:| 

காவேர்யை நம:| 

தாம்ரவர்ண்யை நம: 

என்று பூஜித்து, 

பவமான சூக்தம் மற்றும் வருண பகவான் ஆவாஹனம் மற்றும் வருண சூக்தம்

சொல்லி தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும். 

பின்னர் நவக்கிரஹ பூஜை புஸ்தகம் பார்த்து கொள்ளவும்.

அடுத்து அஷ்ட திக் பாலக பூஜை புஸ்தகம் பார்த்து கொள்ளவும்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:| 

குருஸ் ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:|| 

என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப் ரதிஷ்டை செய்யவும். 

அதாவது உயிர் கொடுக்க வேண்டும்.

அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய, 

ப்ரம்ம விஷ்ணு மஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்) 

ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்) 

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்) 

ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம்|| 

பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும். 

ஆவாஹிதோ பவ| 

ஸ்தாபிதோ பவ| 

ஸந்நிஹிதோ பவ| 

ஸந்நிருத்தோ பவ| 

அவகுண்டிதோ பவ| 

ஸுப்ரீதோ பவ| 

ஸுப்ரஸன்னோ பவ| 

ஸுமுகோ பவ| 

வரதோ பவ| 

ப்ரஸீத ப்ரஸீத| 

தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்| 

தாவத் த்வம் ப்ரீதிரூபாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு|| 

- இப்படி ப்ராண ப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும். 

கும்பத்தில் ஸ்ரீமந் நாராயணனையும்  வரலக்ஷ்மியை தியானிக்கவும். 

பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்| 

க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்| 

க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்| 

பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே| 

வரலக்ஷ்ம்யை நம:| 

என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும். 

பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸ_த்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹூலான் வரான்|| 

என்று, 9 முடிகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும். 

ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே| 

ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ|| 

வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி| 

 என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும். 


ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்) 


ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்) 


ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்) 


ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்) 

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்) 

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்) 

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை) 

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸ_த்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணிஃபனைஓலை அணிவிக்க)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்) 

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்) 

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்) 

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்) 

மஹா லஷ்மி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும். 

பின், நூற்றியெட்டு அஷ்டோத்ர சத நாமம் சொல்லி, அஷதை புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

பணம் வேண்டுபவர்களுக்காக

தாமரை இலை அர்ச்சனை துளசி இலை அர்ச்சனை மற்றும் வில்வ இலை அர்ச்சனை செய்து வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும்.

மஹா லக்ஷ்மியின் அஷ்டோத்ர  சத நாமாவளி.

ஓம் ப்ரக்ருத்யை நம: 

ஓம் விக்ருத்யை நம: 

ஓம் வித்யாயை நம: 

ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம: 

ஓம் ச்ரத்தாயை நம: 

ஓம் விபூத்யை நம: 

ஓம் ஸுரப்யை நம: 

ஓம் பரமாத்மிகாயை நம: 

ஓம் வாசே நம: 

ஓம் பத்மாலயாயை நம: 

ஓம் பத்மாயை நம: 

ஓம் சுசயே நம: 

ஓம் ஸ்வாஹாயை நம: 

ஓம் ஸ்வதாயை நம: 

ஓம் ஸுதாயை நம: 

ஓம் தன்யாயை நம: 

ஓம் ஹிரண்மய்யை நம: 

ஓம் லக்ஷ்ம்யை நம: 

ஓம் நித்யபுஷ்டாயை நம: 

ஓம் விபாவர்யை நம: 

ஓம் அதித்யை நம: 

ஓம் தித்யை நம: 

ஓம் தீப்தாயை நம: 

ஓம் வஸுதாயை நம: 

ஓம் வஸுதாரிண்யை நம: 

ஓம் பத்மின்யை நம: 

ஓம் பத்ம கந்தின்யை நம: 

ஓம் புண்ய கந்தாயை நம: 

ஓம் ஸுப்ரஸன்னாயை நம: 

ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம: 

ஓம் கமலாயை நம: 

ஓம் காந்தாயை நம: 

ஓம் காமாக்ஷ்யை நம: 

ஓம் சிரோதஸம்பவாயை நம: 

ஓம் அனுக்ரஹப்ரதாயை நம: 

ஓம் பூத்யை நம: 

ஓம் அநகாயை நம: 

ஓம் ஹரிவல்லபாயை நம: 

ஓம் அசோகாயை நம: 

ஓம் அம்ருதாயை நம: 

ஓம் தீப்தாயை நம: 

ஓம் லோகசோக விநாசின்யை நம: 

ஓம் தர்மநிலயாயை நம: 

ஓம் கருணாயை நம: 

ஓம் லோகமாத்ரே நம: 

ஓம் பத்மப்ரியாயை நம: 

ஓம் பத்மஹஸ்தாயை நம: 

ஓம் பத்மாக்ஷ்யை நம: 

ஓம் பத்மஸுந்தர்யை நம: 

ஓம் பத்மோத்பவாயை நம: 

ஓம் பத்மமுக்யை நம: 

ஓம் பத்மநாபப்ரியாயை நம: 

ஓம் ரமாயை நம: 

ஓம் பத்ம மாலாதராயை நம: 

ஓம் தேவ்யை நம: 

ஓம் வஸுந்தராயை நம: 

ஓம் உதாராங்காயை நம: 

ஓம் ஹரிண்யை நம: 

ஓம் ஹேம மாலின்யை நம: 

ஓம் தனதான்யகர்யை நம: 

ஓம் ப்ரபாயை நம: 

ஓம் சந்த் வதனாயை நம: 

ஓம் சந்த்ராயை நம: 

ஓம் சதுர்ப்புஜாயை நம: 

ஓம் சந்த்ரரூபாயை நம: 

ஓம் இந்திராயை நம: 

ஓம் இந்துசீதலாயை நம: 

ஓம் ஆஹ்லாத ஜனன்யை நம: 

ஓம் புஷ்ட்யை நம: 

ஓம் சிவாயை நம: 

ஓம் சிவகர்யை நம: 

ஓம் ஸத்யை நம: 

ஓம் விமலாயை நம: 

ஓம் விஸ்வ ஜனன்யை நம: 

ஓம் துஷ்ட்யை நம: 

ஓம் தாரித்ர்ய நாசின்யை நம: 

ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம: 

ஓம் சாந்தாயை நம: 

ஓம் சுக்லமால்யாம்பர தராயை நம: 

ஓம் ச்ரியை நம: 

ஓம் பாஸ்கர்யை நம: 

ஓம் பில்வ நிலயாயை நம: 

ஓம் வராஹ ரோஹாயை நம: 

ஓம் யசஸ்வின்யை நம: 

ஓம் ஸித்தயே நம: 

ஓம் ஸ்த்ரைண ஸெளம்யாயை நம: 

ஓம் சுபப்ரதாயை நம: 

ஓம் வரலக்ஷ்ம்யை நம: 

ஓம் வஸுப்ரதாயை நம: 

ஓம் சுபாயை நம: 

ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம: 

ஓம் ஸமுத்ர தனயாயை நம: 

ஓம் ஜயாயை நம: 

ஓம் மங்கள தேவதாயை நம: 

ஓம் விஷ்ணு வக்ஷஸ் தலஸ்தி தாயை நம: 

ஓம் விஷ்ணு பத்ன்யை நம: 

ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம: 

ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம: 

ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம: 

ஓம் தேவ்யை நம: 

ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம: 

ஓம் நவ துர்காயை நம: 

ஓம் மஹா காள்யை நம: 

ஓம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மி காயை நம: 

ஓம் த்ரி கால ஜ்நாஸம்காயை நம: 

ஓம் புவனேஸ்வர்யை நம: 


அஷ்டோத்திரம் முடிந்து ஸ்ரீசூக்த பாராயணம் 9 முறை லஷ்மியின் சஹஸ்ரநாமமும் கனகதாரா ஸ்தோத்ரம் அஷ்ட லஷ்மியின் ஸ்தோத்ரம் நாராயண சூக்தம் விஷ்ணு சூக்தம் பூ சூக்தம் பாக்யா சூக்தம் ருத்ரம் சமகம் நாராயணாய உபநிஷத் பாராயணம் செய்வது அளவுக்கு அதிகமான பலன்களை தரும்.


கடைசியாக நைவேத்தியம் செய்து தூபம் தீபம் காட்டி ஒரு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்து வீட்டில் உள்ள அனைவருக்கும் பிரசாதம் கொடுக்க வேண்டும்.


முக்கியமான விஷயம்

அன்று உங்கள் வீட்டிற்கு வரும் அனைவரும் மஹா லஷ்மியின் அம்சமாவே பாவிக்க வேண்டும்.

யாராக இருந்தாலும் சரி  !!

வீட்டிற்கு வந்தவர்களுக்கு முதலில் நீங்கள் நெற்றியில் குங்குமம் இட்டு பின்‌ அவர்களுக்கு குங்குமம் கொடுக்க வேண்டும்.

பின் அவர்களுக்கு ரவிக்கை துணி தாம்பூல தஷிணை கொடுக்க வேண்டும்.

பூஜை இவ்வளவு பிரம்மாண்டமாக செய்ய வேண்டுமா என்று கேட்டால் சாதாரணமாக எளிய முறையிலும் செய்யலாம்.

ஆனால் ஆத்மார்த்தமான பக்தியை மட்டுமே மஹாலக்ஷ்மி விரும்புவாள்.

 சுபம்



அனந்த பத்மநாப ஸ்வாமி கோவில்

ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய 🙏🏻🙏🏻

|| அருள்மிகு அனந்த பத்மநாப ஸ்வாமி கோவில், காசர்கோடு மாவட்டம், 

கேரளா ||

தொலைந்த பொருட்கள், இழந்த பதவிகள் போன்றவைத் திரும்பக் கிடைக்கவும், அனைத்துக் குறைகளும் நீங்கிச் செல்வச் செழிப்பைப் பெறவும் உதவும் ஸ்தலமாக, கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் இருக்கும் அனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவில் அமைந்திருக்கிறது.

வில்வமங்களம் ஸ்வாமிகள் எனும் முனிவர், காட்டுக்குள்ளிருந்த தனது ஆசிரமத்தில் ஸ்ரீமஹா விஷ்ணு சிலையை நிறுவி, அதனைத் தினமும் மலர்களால் அலங்கரித்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

ஒரு நாள், அவர் வழிபாடு செய்து கொண்டிருந்த போது, அவருடைய ஆசிரமத்தின் முன்பாக இருந்த நந்தவனத்தில், ஒரு அழகிய சிறுவன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

ஆசிரமத்திலிருந்து வெளியில் வந்த அவர், அந்தச் சிறுவனிடம், ‘தம்பி நீ யார்? இந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாய்? வழி தவறி வந்து விட்டாயா?’ என்று அவனைப் பற்றி விசாரித்தார்.

அவன், ‘ஸ்வாமி! நான் ஒரு அனாதை. எனக்கென்று யாருமில்லை. எனவே ஒவ்வொரு இடமாகப் போய்க் கொண்டிருக்கிறேன்’ என்றான்.

இரக்கம் கொண்ட முனிவர் அவனிடம், ‘தம்பி, என்னுடன் இந்த ஆசிரமத்தில் தங்கிக் கொள்கிறாயா?’ என்று கேட்டார்.

சிறிது நேரம் யோசித்த சிறுவன், ‘ஸ்வாமி! நான் உங்கள் விருப்பப்படி இங்கேயேத் தங்கிக் கொள்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நீங்கள் என்னைச் சிறிது கூடக் கடிந்து பேசக்கூடாது. அப்படிப் பேசினால், நான் இங்கிருந்து வெளியேறி விடுவேன்’ என்றான்.

முனிவரும் அவனுடைய நிபந்தனைக்குச் சம்மதித்தார். அதன் பிறகு, அந்தச் சிறுவன் முனிவருடன் ஆசிரமத்தில் தங்கிக் கொண்டான்.

அந்தச் சிறுவன், ஆசிரமத்தில் சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தான். முனிவரது ஸ்ரீமஹா விஷ்ணு வழிபாட்டுக்குத் தேவையான மலர்கள் மற்றும் இதரப் பொருட்களையும் கொண்டு வந்து கொடுப்பான். அவனுடைய சிறு சிறு வேலைகள் முனிவருக்குப் பிடித்துப் போனது. ஆனால், அவன் அவ்வப்போது விளையாட்டாகச் செய்யும் சிறிய தவறுகள், அவரை எரிச்சலடையச் செய்யும். இருப்பினும், அவனைக் கண்டித்தால், அவன் தன்னை விட்டுப் பிரிந்து போய் விடுவானே என்கிற அச்சத்தில் பேசாமலிருந்து விடுவார்.

ஒரு நாள், அந்தச் சிறுவன் ஸ்ரீமஹா விஷ்ணு வழிபாட்டுக்கு வைத்திருந்த பால் முழுவதையும் குடித்து விட்டான். அதனால் கோபமடைந்த முனிவர், அவனைச் சத்தம் போட்டார். உடனே அந்தச் சிறுவன், ‘ஸ்வாமி! நான் உங்களுடன் இருப்பதற்காகச் சொன்ன நிபந்தனையை மீறி விட்டீர்கள். இனி, நான் இங்கிருக்க மாட்டேன். இனிமேல் நீங்கள்தான் என்னைத் தேடி வர வேண்டும்’ என்று சொல்லியபடி அங்கிருந்து சென்று விட்டான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தச் சிறுவனைத் திட்டியதற்காக வருத்தப்பட்ட முனிவர், அந்தச் சிறுவனிடம் பேசி, அவனை மீண்டும் தன்னுடன் அழைத்து வந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவனைத் தேடிச் சென்றார்.

அந்தச் சிறுவனைக் கண்டு பிடிக்க ஒவ்வொரு இடமாகத் தேடி அலைந்த அவர், அனந்தக் காடுகள் பகுதிக்கு வந்து சேர்ந்தார். அப்போது, அங்கிருந்த இலுப்பை மரம் ஒன்றில் அந்தச் சிறுவன் அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்தச் சிறுவனை நோக்கிச் சென்றார்.

அங்கு அந்தச் சிறுவன் இல்லை. அந்த இடத்தில், விஷ்ணு படுக்கை நிலையில் (அனந்த சயனம்) இருப்பது அவருக்குத் தெரிந்தது. அதன் பிறகுதான், அவருக்குத் தன்னுடன் இருந்த சிறுவன் சாக்ஷாத் ஸ்ரீ மஹா விஷ்ணுவே என்பது புரிந்தது. 

ஸ்ரீமஹா விஷ்ணுவை வணங்கிய முனிவர், தனக்குக் காட்சியளித்த அதே இடத்தில் கோவிலாக எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார். இறைவனும், அவருடைய வேண்டுதலுக்காக அங்கேயே கோவில் கொண்டார் என்கிறது ஸ்தல வரலாறு.

கோவில் அமைப்பு :

இந்தக் கோவில் அகலமான புல்வெளிகளுக்கு இடையில் அமைந்திருக்கும், செவ்வக வடிவிலான ஏரி ஒன்றின் நடுவில் அமைந்திருக் கிறது. கேரளாவில் ஏரிக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரே கோவில் இதுதான் என்கின்றனர். இக்கோவிலுக்குச் செல்ல ஏரியின் கரையிலிருந்து சிறிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.

கோவிலின் கருவறையில் அனந்தன் எனும் பாம்பின் மேல் ஸ்ரீமஹா விஷ்ணு அமர்ந்த நிலையில் இருக்கிறார். அவரை அனந்த பத்மநாபன் என்று அழைக்கின்றனர். அவரின் இருபுறமும் பூதேவி, ஸ்ரீதேவி ஆகிய இருவரும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு முன்பாக, ஹனுமன் மற்றும் கருடன் ஆகியோர் வணங்கிய நிலையில் இருக்கின்றனர். இக்கோவிலைத் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோவிலுக்கு மூல காரணமான, முதன்மைக் கோவில் என்றும் சொல்கின்றனர்.

இக்கோவில் வளாகத்தில் மஹா கணபதி, மகிஷாசுரமர்த்தினி, கோசலகிருஷ்ணர் சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆலய வெளிப்புறச் சுவர்களில் புராணங்களை மையப்படுத்திய அழகிய ஓவியங்கள் கண்களைக் கவர்கின்றன.

சிறப்பு விழாக்கள் :

இக்கோவிலில் கேரள நாட்காட்டியின் துலாம் (ஐப்பசி) மாதத்தில் முதல் நாள், ‘நாவண்ணா’ எனும் விழாவும், கும்பம் (மாசி) மாதத்தில் 14-ம் நாள் ‘தபோத்ஸவம்’ எனும் விழாவும் சிறப்பு விழாக்களாக நடத்தப்படுகின்றன. பவுர்ணமி நாட்களிலும், கிருஷ்ண அஷ்டமி நாளிலும் சிறப்புப் பஜனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதுபோல், கேரளாவில் ராமாயண மாதமாகக் கருதப்படும் ஆடி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்து வேண்டுபவர்களுக்குத் தொலைந்த பொருட்கள், இழந்த பதவிகள் போன்றவைத் திரும்பக் கிடைக்கும் என்கின்றனர். இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு, அவர்களது அனைத்துக் குறைகளும் நீங்கிச் செல்வச்செழிப்பு ஏற்படும் என்பதும் பொதுவான நம்பிக்கையாகும்.

திருவனந்தபுரம் அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு மூல காரணமான, முதன்மைக் கோவிலாக இக்கோவில் இருப்பதால், அக்கோவிலுக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் அனைத்துப் பலன்களையும் இக்கோவிலில் வழிபட்டுப் பெற முடியும் என்றும் சொல்கின்றனர்.

சிலைக்கு அபிஷேகம் இல்லை :

இந்தியாவில் உள்ள கோவில்களில் இருக்கும் பெரும்பாலான சிலைகள் கற்களாலோ, உலோகத்தாலோ செய்து நிறுவப்பட்டிருக்கிறது. கேரளக் கோவில்களில் மரங்களினால் கூட சிலைகள் செய்யப்பட்டிருக்கும். ஒரு சில கோவில்களில் மட்டுமே சிலைகள், மூலிகைகளைக் கொண்டு செய்யப்பட்டதாகச் சொல்வார்கள். அனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவிலின் மூலவர் சிலை, ‘கடுசர்க்கரா’ எனும் எட்டு விதமான (அஷ்டபந்தன) மூலிகைகள் கொண்டு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால்தான் இங்குள்ள மூலவர் சிலைக்கு அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை.

அமைவிடம் :

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் கும்பாலா எனும் ஊரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனந்தபுரம். காசர்கோடுவிலிருந்து, மங்களூர் செல்லும் வழியில் கும்பாலா இருக் கிறது. இந்த நகரங்களிலிருந்து கும்பாலாவிற்குப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. கும்பாலா சென்று, பின்னர் அங்கிருந்து வாடகைக் கார் அல்லது ஆட்டோ மூலம் இத்தலத்திற்குச் செல்லலாம்.

கோவில் நடை திறக்கும் நேரம்

ஆலயம் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் வழிபாட்டுக்காகத் திறந்திருக்கும். தினமும் காலை 7.30 மணி, மதியம் 12.30 மணி மற்றும் இரவு 7.30 மணி என்று மூன்று வேளைகளில் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. 

இங்குள்ள சிலைகளுக்கு அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



அகோபிலம் பயணக்குறிப்பு - பகுதி 7

நல்லமலா காட்டின் நடுவில் ஒரு சிங்கம் அகோபிலம் பயணம் (V.V) பகுதி 7

இது வரை பார்த்த நரசிம்மர்கள் வயதானவர்கள் கூட சிரமப்பட்டு தரிசிக்கும்படி காட்சி தருகிறார்கள்.ஆனால் ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்கும்  நம் பக்தியைப் பார்த்து எதிர்ப்படும் செடி, கொடிகள்நம்மை வாழ்த்தி வழியனுப்பி வைத்தன. பாறைகள் நம் பாதங்களைத் தாங்கத் தயாராக இருக்கின்றன.நீர் இருக்கக்கூடிய சுனைகள் நம் தாகத்தைத் தீர்க்கக் காத்திருக்கின்றன. சற்றே நின்றுநம்மைச் சுற்றிலும் பார்த்தால் அந்த மலையே ஹிரண்யனின் கோட்டையோ (அரண்மனையோ)என்று நம்மைத் திகைக்க வைக்கும்!

மேல்அஹோபிலத்திலிருந்து 3½ கி.மீ. தொலைவு. கருடாசலம், வேதாசலம் எனும் இரு மலைச் சிகரங்களுக்குஇடையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அண்ணாந்துபார்த்தால் வெகு தொலைவில், மலை உச்சியில் ‘உக்ர ஸ்தம்பம்’ தெரிகிறது. அந்த ஸ்தம்பத்தி(தூணி)லிருந்துதான்நரசிம்மர் வெளிப்பட்டு ஹிரண்யனை வதைத்ததாகச் சொல்லப்படுகிறது. 

இந்த ஸ்தம்பத்தை அடையஜ்வாலா நரசிம்மர் கோயிலிலிருந்து மேலும் 4 கி.மீ. உயரே செல்ல வேண்டும். ‘அதற்கானதெம்பைக் கொடு நரசிம்மா’ என்று இந்த ஜ்வாலா நரசிம்மரை நாம் வேண்டிக்கொள்ளலாம்!ஜ்வாலாநரசிம்மர் அக்னிபோல் சுட்டெரிக்கும் ஆக்ரோஷத்துடன் அவதரித்த உக்ரம் நிறைந்த நரசிம்மர்.ஹிரண்யன் மீது கோபம் கொண்டிருந்தபோதும், மக்கள் மீது இரக்கம் கொண்டவர். 

இவர் தரிசனம்தருவது ‘அசலாசல மேரு’ என்னும் மலைப் பகுதியில்.  ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்கச் செல்லும் வழி மிகவும்சிரமமானது. வயதானவர்கள் மற்றும் நடக்க இயலாதவர்கள் டோலியில் செல்லலாம். வழியில் பவநாசினிஓடை தண்ணீர் சில இடங்களில் முழங்கால் அளவில் ஓடிக்கொண்டிருக்கும். பெரும் பாறைகளுக்கு இடையில் சரியான பாதை ஏதும் இல்லை.

மலையேறி செல்லும்போது, நம்மைப்போலபயணிப்பவர்கள் ‘ஸ்ரீநாராயணா’, ‘ஸ்ரீநரசிம்மா’ என்று ஊக்கக் குரல் கொடுத்துக் கொண்டே செல்கிறார்கள். உடனேயே அந்த மலைப் பிராந்தியமும் ‘ நாராயணா,’ ‘நரசிம்மா’ என்றுஎதிரொலிக்கிறது. அதாவது பகவான், ‘நான் உங்களுடன்தான் இருக்கிறேன். பயப்படாமல், கவலைப்படாமல் வாருங்கள். நான் உங்கள் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன், பாதுகாப்பளிக்கிறேன்’என்று சொல்வது போல இருக்கிறது.ஒவ்வொருவர்கையிலும் ஊன்றுகோல். அதனை பூமியில் பதித்துப் பதித்து, சற்றேமுன் வளைந்து அந்தக் கோல்பலத்தால் அடுத்த அடி எடுத்து வைத்து மீண்டும் கோலைச் சற்று முன்னால்வைத்து... 


இப்படியாகப் பயணம் தொடர்கிறது. அருகிலேயே 20 மீட்டர் உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சிகொட்டுகிறது. இங்கு 65 மீட்டர் நீளத்துக்கு மலைச்சாரலில் பாதை அமைத்திருக்கிறார்கள்.இதற்குத் தடுப்புக் கம்பிகள் போட்டிருக்கிறார்கள். நீர்வீழ்ச்சி நீரைத் தெளித்து பக்தர்களைவரவேற்பதால் பாதை நெடுக நீர் படர்ந்து வழுக்குகிறது.ஒருவர் பின் ஒருவராக, தடுப்புக் கம்பியைப் பிடித்துக்கொண்டு, மெல்ல, ஜ்வாலாநரசிம்மன் இருக்கும் இடத்தை அடையலாம். ஆனால், அடைமழை காலங்களில் ஜ்வாலா நரசிம்மனைசேவிப்பது என்பது பிரம்ம பிரயத்தனம்தான்.  இங்குஜ்வாலா நரசிம்மர் ஒரு சிறிய, திறந்த, இயற்கையாக அமைந்துள்ள குகையின் கீழ் காட்சி யளிக்கிறார். 

இந்தக் குகைக்குள் மூன்று சிலைகள் உள்ளன. மத்தியில் உக்கிர ரூபமாய் நரசிம்மர் எட்டுத்திருக்கரங்களுடன் இடது காலை மடக்கி வலது காலைத் தொங்கவிட்டு வீற்றிருக்கும் திருக்கோலம்.மடியில் ஹிரண்யனை வைத்துக்கொண்டு இடது கரத்தால் அவன் தலையை அசையவிடாமல் பிடித்துக்கொண்டுவலது கரத்தால் அவன் கால்களையும் அசையாமல் பற்றிக்கொண்டு, இரண்டு கரங்களின் நகங்களால்அவன் வயிற்றைக் கிழித்து குடலை வெளியே எடுப்பதுபோலக் காட்சி. 

மற்ற கரங்களில் சங்கு,சக்கரம் உள்ளன. மீதி இரண்டு கரங்கள் குடலை மாலையாக அணிந்துகொள்கின்றன.மேலும் வலது பக்கம் அவதார சமயத்தில் நரசிம்மர் தோற்றம் காட்டும் சிலை. இடது பக்கம்ஹிரண்யனுடன் போர் புரிவது போல சிலை. இதற்கு அருகில் ஒரு சிறிய நீர்த் தேக்கம்(குண்டம்)இருக்கிறது. ஹிரண்ய வதம் முடிந்ததும் நரசிம்ம பகவான் இதில் கையைக் கழுவியதாகச் சொல்கிறார்கள்.இதிலுள்ள நீர் சிறிது சிவப்பு நிறமாக உள்ளது. இதனை ரத்த குண்டம் என்கிறார்கள். இந்த சந்நதிக்குக் கீழே பள்ளத்தாக்கில் காணப்படும் பசுமை மிகுந்த வாழைத் தோப்பு கண்களுக்கும்,மனதுக்கும் தெம்பைத் தருகிறது. 

கொடூரன் ஹிரண்யனை பெருமாள் வதம் செய்யும் கோலத்தையும், வதைத்தபின்தன் ரத்தக் கரங்களைக் கழுவிக்கொண்ட ரத்த குண்டத்தை யும் அந்த சம்பவத்தின் சாட்சியங்களாகக்கண்டோம்...(தொடரும்)







அகோபிலம் பயணக்குறிப்பு - பகுதி 6

 நல்லமலா காட்டின் நடுவில் ஒரு சிங்கம்  அகோபிலம்  பயணம் பகுதி 6

.மாலோல நரசிம்மன் (எண்: 4). வேதங்களைத் தொலைத்து விட்டு, பிரமன் திகைத்து நின்றானாம். பகவானைப் போய்ப் பார்க்க, பயம். குழந்தைகளுக்கு உடனே தோன்றுவது அம்மா ஞாபகம் தானே. அதைத்தான் பிரமனும் செய்தான். தாயார்தான், நமக்கு முதல், ஆச்சாரியார் வேறு. கனிவைத் தவிர, அவளுக்கு என்ன தெரியும். உடனே ரெகமண்ட் செய்து விட்டாள். பகவான் மறுப்பானா? வேதங்களை மீட்டு விட்டு, பிரமனிடம் கேட்டான்: “ஏண்டா, குழந்தை, நீ நேராக, என்னிடமே வந்திருக்கலாமே! அம்மாவை எதுக்கு தொந்தரவு பண்ணணும்?” அப்போது தான் பிரமன் பகவானை, ‘மா லோலன்’ என்றானாம். அதாவது, அம்மாவை மிகவும் விரும்புபவனாம். 

அதனால் தான், எத்ற்கும் இருக்கட்டும் என்று, அம்மா மூலம் போனானாம்! நமக்கும் தெரிந்த, ரகசியம் தானே இது. அதனால் தானே, கோவிலுக்குப் போனால் கூட, முதலில் தாயாரைப் பார்த்து விடுகிறோம்.மா’ என்றால் லட்சுமி. “லோலன்’ என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்தபடியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார். .வராஹ நரசிம்மரின்அருளைப் பெற்றுக்கொண்டு வராஹ நரசிம்மர் ஆலயத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில், மலைப்பாதையில் அமைந்திருக்கிறது மாலோல நரசிம்மர் கோயில். செல்லும்வழி சற்றுக் கடுமையானதுதான். சில இடங்களில் மலைப் பாதையில் செல்லவேண்டியிருக்கிறது.திடீரென எதிர்ப்படும் படிகளையும் ஏறிக் கடக்க வேண்டியிருக்கிறது! அகலம் குறைவான பாதை. 4 பேர் பக்கத்துப் பக்கமாக சேர்ந்து போக முடியாது. 

மாலோல  நரசிம்மரை தரிசிக்க அவரது சந்நதிக்குப்போகும் வழியில் சிறு வடிவினனாக கபாலிகனைக் காணலாம். பக்கத்திலேயே துர்க்காதேவி சிலையும்,இரு பாத சிற்பத்தையும் காண முடிகிறது. 

இந்த கபாலிகனுக்கு ஒரு பின்னணிக் கதை உண்டு.ஆதிசங்கரரைத் தாக்கி அவர் உயிரைப்பறிக்க முயன்றான் கபாலிகன். 

அப்போதுசங்கரரின் பிரதான சீடரான பத்மபாதர் அவனைத் தடுக்க முயன்றார். குருவைக் காப்பாற்றமுனைந்த இவருடைய முயற்சியைப் பாராட்டும் வகையில் நரசிம்மர் இவரது உடலுக்குள் புகுந்துகொள்ள,பத்மபாதரால் கபாலிகனை எளிதாக வதைக்க முடிந்தது. தன் பொருட்டு நரசிம்மர்மேற்கொண்ட இந்த கருணைச் செயலை வியந்து போற்றிய ஆதிசங்கரர், ‘நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்’ இயற்றி அவரைத் துதித்தார். குருநாதரைக் காத்த பத்மபாதனைச் சித்தரிக்கும் விதமாகத்தான்இரு பாதச் சுவடுகள் இங்கே காணப்படுகின்றன.  

கபாலிகன் வணங்கிய துர்க்கைதான் அடுத்து இருப்பது. ஆனால்,இந்தப் பாதங்கள் மஹாலக்ஷ்மியுடையவை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. சிவபெருமான்தான்கபாலிகன் என்றும் அவர் துர்க்கையுடன் சேர்ந்து ‘மந்த்ர ராஜபத ஸ்தோத்திர’த்தை உச்சரித்து நரசிம்மரை வழிபட்டதாகவும், அப்போது நரசிம்மருடன் இணைந்திருந்த மஹாலக்ஷ்மியின் பாதங்கள்தான்அவை என்றும் சொல்கிறார்கள். சந்நதியில் மூலவராகத் திகழ்கிறார் மாலோல நரசிம்மர். 

இடது மடியில் மஹாலக்ஷ்மியை அமர்த்தியதால் லக்ஷ்மி நரசிம்மராகவும் வழிபடப்படுகிறார். மேற்கரங்களில் சங்கு, சக்கரம், கீழ் வலது கரம் அபய ஹஸ்தம், கீழ்இடது கரம் தாயாரை அரவனைக்க, சதுர்புஜ நாயகனாக எழிலுடன் சேவை சாதிக்கிறார். இவர் மாலோலலக்ஷ்மிப்ரியர் என்றும் மாலோல லக்ஷ்மி நரசிம்மர்என்றும் பக்தர்கள் போற்றித் துதிக்கிறார்கள். 

பகவான் மடியில் அமர்ந்திருக்கும் தாயாரின்பாதங்களை தாமரை மலர் ஒன்று தாங்கியிருக்கிறது. மூலவரின் சிரசுக்கு நிழல் கொடுத்தவாறுசேவை புரிகிறது ஆதிசேஷன். ஆதிசேஷனுக்கும் மேலாக சிம்ம விதானம் அமைந்திருக்கிறது. திருமங்கையாழ்வாரைதனிச் சந்நதியில் உள்ளம்குளிரக் காணலாம். பத்துப் பாசுரங்களால் அஹோபில நரசிம்மரைப் பாடிப் பணிந்த அந்தப் பெருந்தகைஎளிமை தோற்றம் காட்டுகிறார். கோயில்மேற்புற முகப்பில் லக்ஷ்மி நரசிம் மரும், ஆதிவண் சடகோப ஜீயரும் இடம் பெற்றிருக் கிறார்கள்.மாலோல நரசிம்மரின் உற்சவ மூர்த்தியே அஹோபில மடம் ஜீயரோடு எழுந்தருளியிருக்கிறார். ( தொடரும்)




அகோபிலம் பயணக்குறிப்பு - பகுதி 5

 நல்லமலா காட்டின் நடுவில் ஒரு சிங்கம் அகோபிலம் பயணம் பகுதி 5

நல்லமலா காட்டின் நடுவில் 😲அகோபிலம் பயணம்..பகுதி 4...( அகோபிலம் தனியாக செல்ல.. கடப்பா ரயில் நிலையம் வரை ரயில்.. பின்னர் 100 கிமீ அல்ல கட்டா வரை பேருந்து நிறைய உண்டு.)

இந்த இடத்தின் 🙏🏼🙏🏼தனிமையும் இதைச்சூழந்துள்ள அடர்ந்த காடும் குகைக்கோயில் அமைப்பும் விசித்திரமான பிரமிப்புநிலை ஓன்றை உருவாக்குகின்றன. தன்னந்தனியாக அங்கே வந்து ஒரு இயக்கத்தை உருவாக்கிய ஆதிவண் சடகோப மகாதேசிகரின் நினைவு மனஎழுச்சி ஊட்டுகிறது. தமிழின் தெய்வீக ஆற்றலுக்கான ஆதாரமாகவே அவரது வாழ்வை எண்ணிக்கொண்டேன்.  

 அடுத்து வராஹ நரசிம்மரை தரிசிக்கு முன் மதிய உணவு அருந்த இரண்டு அன்னதான சத்திரங்கள் உண்டு.அருமையான  உணவு.விரும்புபவர்கள் இயன்ற தொகையை நன்கொடை எழுதலாம். உக்ர நரசிம்மர் கோயிலுக்கு அருகிலேயே வராஹ நரசிம்மர் கோயிலைக் ககாணலாம். வராஹ குண்டம் என்ற தீர்த்தமும்,வராஹ மண்டபமும் விளங்கும் இந்தத் தலத்தில்  வராஹ நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். 

இதுவும் குடவரை குகைக்கோயில்தான். இந்தக் குகையை வராஹ க்ஷேத்ரம் என்று அழைக்கிறார்கள். பொதுவாக வேறெந்த கருவறையிலும் காணவியலாத வராஹரை இங்கே தரிசிக்கலாம். ஆமாம், வராஹ அவதாரம் கொண்ட எம்பெருமான் தன்மூக்கின்மீது பூமிதேவியாரைத் தாங்கியபடி காட்சியளிக்கிறார்.

அவரது நாசி மீது பூமிபிராட்டியார்அமர்ந்திருக்கும் நளினம்பார்த்துப் பார்த்து இன்புறத்தக்கது. இந்த வராஹ நரசிம்மர் இரண்டு கரங்களால் அருள்

பாலிக்கிறார்.இந்தக் கருவறையிலேயே மகாலக்ஷ்மி நரசிம்மரையும் சேவிக்க முடிகிறது. ஒரே கருவறையில் இரு மூலவர்கள்! இதிலும்ஒரு நயம் இருக்கிறது. 

திருமாலின் வராஹ அவதாரத்துக்கு அடுத்தது, நரசிம்ம அவதாரம். இந்த இரு அவதாரங்களையும் இந்தக் கோயிலில் ஒரே கருவறையில் தரிசனம் காண்பது பெரும் பேறுதானே!செல்லும் வழியில் பிரகலாதன் படித்த எழுதிப்பார்த்த பிரகலாத மெட்டு உள்ளது..காகதீய அரசர்கள் ( ருத்ரமாதேவி,பாகு பலி நினைவு வருகிறது)

கட்டிய மண்டபமும் உண்டு..வழியெங்கும் குரங்குகள் மட்டும் இருந்தாலும் மாலை 3 மணிக்கு மேல் சிறுத்தை போன்ற கொடிய 😡விலங்குகள் வருமென்பதால் வழியை அடைத்து விடுகிறார்கள்.சிங்கங்கள் தற்போது காட்சிப்பொருளானாலும் நரசிம்ம அவதார காலத்தில் மட்டுமின்றி நூறாண்டுகள் முன்பு கூட இங்கு அவை நடமாடியிருக்குமோ என்ற உணர்வு உறைய வைக்கிறது.😲..பாவநாசினி ஆறு சிற்றோடையாக வழியெங்கும் ஓடி வருகிறாள்...🙏🏼🙏🏼.தொடரும்




குடவரைக் கோவில்

 சுமார் 900 வருடங்களுக்கு முன்பு திருமங்கலத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவில் "மோதகம் " என்ற இடத்தில் இருக்கும் ஒரு குன்றின் மேல் கட்டப்பட்ட குடவரைக் கோவில்.

முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆன மண்டபங்கள், அவற்றைத் தாங்கும் பிரமாண்ட தூண்கள், அதில் திருமாலின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் சிற்பங்கள் என அனைத்தையும் ஒரே ஒரு செங்குத்துப் பாறை போன்ற ஒரு குன்றில்,  குன்றைக் குடைந்து அடிவாரத்தில் அரங்கநாதருக்கு ஒரு குடவரைக் கோயிலும், குன்றின் மேல் கோபால் சாமிக்கு ஒரு கோவில் என இரு வகையானக் கோயில்களைக் அக்காலத்தில் கட்டியிருக்கிறார்கள்.

வழக்கம்போல பாறைகளை எப்படி எதை வைத்துப் பிளந்தார்கள்? எப்படி சிற்பங்களை செதுக்கினார்கள்? எப்படி கீழிருந்து மேலே கொண்டு சென்றார்கள் போன்ற. வியப்புகளையெல்லாம் தாண்டி, அதிசயிக்க வைக்கும் ஒரு விசயம் Nature ventilation by air circulation - அதாவது இயற்கையின் துணை கொண்டு அமைக்கப்பட்ட காற்றோட்டம்.

குன்றின் மேல் கோபால் சாமி சந்நிதி மிகக்குறுகியது. மிக அதிகம் புளுக்கம் கொண்ட இடம்.

அந்த இடத்தில் குளுகுளு காற்றோட்டத்தை அதுவும் 900 வருடங்களுக்கு முன்னர் இயற்கையான முறையில் உருவாக்கியிருப்பது "காற்றோட்ட அறிவியலின் உச்சம் "

நம் வியப்பிற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் இருப்பது அறிவியலால்கூட. விளக்க முடியாமல் இருப்பது. அந்த செங்குத்துக் குன்று இரண்டாகப் பிரிந்து, அதில் கருடன் கை கூப்பி வணங்கியது போன்ற ஒரு சிலை மாதிரியான அமைப்புத் தெரியும்.

உண்மையில் இது சிலையுமல்ல! யாரும் செதுக்கியதும் அல்ல!

கருடன் தன் முதுகில் கோபால் சாமியை வைத்துக் கொண்டு வணங்கியது போல, தானாகவே காற்றின் போக்கால் இயற்கையாக அமைந்தப் பாறை.

இதை இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட இந்தக் கோணத்தில் பார்த்தால் மட்டுமே தெரியும்...



அகோபிலம் பயணக்குறிப்பு - பகுதி 4

 நல்லமலா காட்டின் நடுவில் ஒரு சிங்கம் அகோபிலம் பயணம் பகுதி 4

மேல் அகோபிலம் (8 km)செல்ல பேருந்து  அல்லது ஷேர் ஆட்டோக்கள் உண்டு.மலை மேல் உள்ள 5 நரசிம்மரை தரிசிக்க வழிகாட்ட என்று கைடுகள் 500/ கேட்கிறார்கள்..ஆனால் நிறைய பக்தர்கள் போய் வந்த வண்ணம் இருப்பதால் அவர்களை பின்பற்றினாலே போதும்..எங்களுடன் வந்த கைடு பட்டர்களுக்கு தட்டில் போட்ட சிறுதொகையில் கூட அவர்களிடம்  பங்கு கேட்டு கைநீட்டியது அக்கிரமம்..😲மேலும் அவர்கள் வேகத்திற்கு நாம் நடக்க வேண்டுமென்பதால் இயற்கையை ரசிக்க இயலவில்லை..

🙏🏼பெத்த அஹோபிலக்ஷேத்ரம்’ என்றழைக்கப்படும் இந்தத் தலத்திலிருந்து 76 படிகள் நம்மை உக்ர நரசிம்மர் கோயிலுக்கு உயர்த்தி அழைத்துச் செல்கின்றன. ‘ரொம்பவும் களைத்துவிட்டாயே, அப்பா,’ என்று வாஞ்சையுடன் அழைத்து ஆறுதல் அளிக்கிறது மூன்று நிலை ராஜகோபுரம்.🙏🏼 அந்த அன்புக்குத் தலை வணங்கி குனிந்து உள்ளே செல்கிறோம். இதனை குடைவரைக்கோயில் என்கிறார்கள். 

அதிசயமாகத்தான் இருக்கிறது. உயர்ந்த மதில்கள், மகாமண்டபம், முகமண்டபம்என்று பெரியதாகவே விளங்குகிறது கோயில். உக்ர நரசிம்மர் சுயம்பு மூர்த்தி. இவர் அஹோபிலநரசிம்மர் என்றும் அஹோபிலேசன் என்றும் அழைக்கப்படுகிறார்.சக்ராசனத்தில் வீற்றிருக்கும் உக்ர நரசிம்மர் இரு கரங்களுடன் திகழ்கிறார். கிழக்குநோக்கிய தரிசனம். 

சிறிய மூர்த்திதான்; ஆனால், கீர்த்தி மிக்கது, பேரெழிலும் வாய்ந்தது.ஒரு கரத்தால் ஹிரண்யனின் தலையையும் இன்னொருகரத்தால் அவனுடைய உடலையும்பிடித்துக் கொண்டிருக்கிறார் இவர். ஆனால், ஒரு மகா அசுரனை ஆக்ரோஷம்கொண்டு வதைக்கும்போது அவர் முகத்தில் கோபம் எப்படிக் கொப்புளிக்க வேண்டும்,எத்தனை கடுமை தெரிய வேண்டும்? 😡ஆனால், தன் பெயருக்கேற்றாற் போலவோ, செயலுக்கேற்றாற் போலவோஅவர் கோபாவேசம் கொள்ளாதிருப்பதற்குக் காரணம், பக்கத்திலேயே புன்முறுவலுடன்😊 பிரஹலாதன்நின்றிருப்பதால்தானோ என்றும் எண்ண வைக்கிறது. குகைக்குள்ளேயே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த சந்நதியில்கருடாழ்வாரும்எழுந்தருளியுள்ளார்.

 லிங்க ரூபமாக சிவபெருமானும், ராம-லட்சுமணரும்தரிசனம் தருகிறார்கள். தூண்களில் கிருஷ்ணர், தாச அனுமனோடு கருடனையும் தரிசிக்கலாம். (உக்ர நரசிம்மரின்உற்சவ மூர்த்தியை நாம் ஏற்கெனவேகீழ் அஹோபிலத்தில் தரிசித்துவிட்டோம்). சிறியவடிவில் லக்ஷ்மி நரசிம்மர், ஆதிவண் சடகோப ஜீயர், நித்யோத்சவர் ஆகியோரும் நம் மீது கருணைபொழிகிறார்கள். பக்கத்தில் கருடாழ்வாரையும், ஒருசேர தரிசிக்கலாம். உக்ரநரசிம்மர் கருவறைக்கு எதிரே சேஷ வாகனம் இருக்கிறது. 

😮இதனடியில் குகை வழி ஒன்று இருந்ததாகவும்,அஹோபில மடத்து 6ம் பட்டத்து ஜீயரான ஷஷ்ட பராங்குச யதீந்திர மஹாதேசிகன், தான் இந்தக்குகைக்குள் புகுந்துகொள்வதாகவும், அதற்குப் பிறகு குகை வாசலை மூடிவிடுமாறு தன் சீடர்களுக்குஉத்தரவிட்டதாகவும் சொல்லப்

படுகிறது. அதன்படி, மூடப்பட்ட இந்தக் குகைக்குள் அவர் இன்றளவும் நரசிம்மரை ஆராதித்துக் கொண்டிருப்பதாகவும் 

சொல்கிறார்கள். (இச்சமயத்தில் ஷஷ்ட பராங்குச மகாதேசிகனாரைப் பற்றிச் சற்றுத் தெரிந்துகொள்வோம்.) கரலப்பாக்கம் வங்கீபுரம் வெங்கடாச்சார்யார் என்பது இவருடைய இயற்பெயர். 

இவர் தன் பக்தியால்,நரசிம்மப் பெருமாளின் அருளால் நீர்வற்றியிருந்த நீர்வளூரை வளம் செழிக்கும் தலமாகமாற்றிய பெருமை கொண்டவர். அரசரவையில் பிரதான அங்கம் வகித்து ராஜரிஷியாக திகழ்ந்தவர். விஜயநகர மன்னரின் மகளுடைய நாள்பட்ட நோயைத்  தீர்த்து வைத்து அதற்குச் சன்மானமாகப் பல மானியங்களைப் பெற்றவர். அந்தமானியங்களை வைணவம் தழைக்கவும், வைணவத் தலங்களைப் பராமரிக்கவும் செலவிட்டவர். விஜயநகரமன்னரை அஹோபிலத் திருத்தலத்துக்கு வருகைதரச் செய்தவர்.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இவர், ‘நரசிம்மஸ்தாம்‘,‘ப்ரபத்தி ப்ரயோகம்’ ஆகிய நூல்களை இயற்றியவர். கோயில்சந்நதி மண்டபத்தில் ஆதிசங்கரர் ஸ்தாபித்த சுதர்சன யந்திரம் உள்ளது. இங்கே ஆழ்வார்களும், ராமானுஜரும் சந்நதிகள் கொண்டுள்ளனர். தூணில் செஞ்சுலட்சுமி தாயாரை வித்தியாசகோலத்தில் காணலாம். வேடுவ குலத்தில் அவதரித்த இவர் அம்புவிடும் தோரணையில் காட்சியளிக்கிறார்.

இவரையே மூலவராக தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். சதுர்புஜங்களுடன் அமர்ந்த திருக்கோலம். இவரது உற்சவ மூர்த்தியைத்தான் கீழ் அஹோபிலத்தில் அம்ருதவல்லித் தாயார் சந்நதியில் தரிசித்தோம். ‘வாஸந்திகா பரிணயம்’ என்ற க்ரந்தம், செஞ்சுலக்ஷ்மி தாயாரை, நரசிம்மர் மணந்த வரலாற்றை விவரிக்கிறது. ஹிரண்யனை வதைத்தும், அவனை நார், நாராகக் கிழித்தெறிந்தும் கோபம் தணியாதநரசிம்மரை சாந்தப்படுத்தியவர் செஞ்சுலக்ஷ்மி தாயார்தான். இவரை மணந்த பிறகுதான் தன்கோபம் முற்றிலும் நீங்கப் பெற்றார்நரசிம்ம மூர்த்தி. 

தன் பிறப்பாலேயே வேடுவ குலத்துக்குப்பெருமை தேடித் தந்த செஞ்சுலக்ஷ்மி தாயார், பகவானின் கோபத்தை அறவே நீக்கி, பக்தர்களுக்குகருணை பூர்வமாக, நரசிம்மப் பெருமாள் அருள் வழங்கக் காரணமாக இருந்திருக்கிறார். இந்தக்கோயிலுக்கு அருகிலேயே பாவன நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் படிகள் அமைந்துள்ளன. சற்றுத் தொலைவில் ஓடும் பவநாசினி ஓடைக்குஅருகில், நூறு தூண்களைக் கொண்ட  காலக்ஷேப மண்டபத்தைக் காணலாம்.

படங்கள் 

1)உக்ர  நரசிம்மர் கோபுரம்

2)நவ நரசிம்மர்களையும் தரிசிக்கும் வழிகாட்டி மேப்




அகோபிலம் பயணக்குறிப்பு - பகுதி 3

 நல்லமலா காட்டின் நடுவில் ஒரு சிங்கம் அகோபிலம் பயணம் பகுதி 3

 கிருதயுகத்தில்சிவபெருமானும் இந்த நரசிம்மரை ‘மந்திரராஜபத’ ஸ்தோத்திரம் சொல்லி வழிபட்டிருக்கிறார்;அதேபோல திரேதாயுகத்தில் ராமபிரான், லக்ஷ்மணனுடன் இத்தலம் வந்து நரசிம்மரைத் தொழுதுராவணன் மீதான தம் வெற்றிக்கு உறுதுணையாக உதவுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறதுபுராணம். பிராகாரத்தைமேலும் வலம் வரும்போது ராமானுஜரை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். 

அவருடன் வேதாந்ததேசிகரும், அஹோபில மடத்தை உருவாக்கிய  ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகரும் எழுந்தருளியுள்ளார்கள்.உலக பக்தர்களுக்கெல்லாம் நரசிம்ம தரிசனத்துக்கு வழிகாட்டிய, இவருக்கு ‘வண் சடகோப ஜீயர்’ என்ற தாஸ்ய நாமத்தையும்,காஷாயத்தையும் பெருமாளே வழங்கினார் என்ற செய்தி மேனியை சிலிர்க்க வைக்கிறது. 

பரந்தாமனைத்தொடர்ந்து  ஸ்ரீராமானுஜரும் தம்மிடமிருந்த த்ரிதண்டத்தைஅளித்திருக்கிறார். பிரதாப ருத்திரன் என்ற காகதீய வம்சத்து அரசன், தங்கத்தாலான மாலோல நரசிம்மரை அளித்தான். (இந்த மாலோலர் இப்போதும் மடத்து ஜீயருடன் புறப்பாடு கண்டருள்கிறார்.) கி.பி.1300ம் ஆண்டுவாக்கில் நடைபெற்ற இச்சம்பவங்கள்மடத்திலுள்ளசாசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. சடகோப ஜீயரை மீண்டும் ஒருமுறை தரிசித்துநம் சந்தோஷத்தையும், நன்றியையும், தெரிவித்துக்கொள்வோம்.பட்டாபிராமன்தனிச் சந்நதியில் அழகுக் கோலம் காட்டுகிறார். 

இவருக்கு இடப்புறம் சீதை. வலப்புறத்தில்உள்ள லக்ஷ்மணன், வித்தியாசமாக இரு வில்களைத் தாங்கி நிற்கிறார். அண்ணன் பட்டாபிஷேகம்காணும்போது, அதுவரை அவருக்கு உறுதுணையாக இருந்த வில், இப்போது பட்டாபிஷேக  சம்பிரதாயங்களுக்குக் கொஞ்சம் இடைஞ்சலாக இருக்குமென்றுதம்பி கருதினாற் போலிருக்கிறது; அண்ணனுடைய வில்லையும் தானே ஏந்தி நிற்கிறார்!  இவர்களை மண்டியிட்டுத் தொழுதபடி ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கிறார்.பக்கத்தில்கண்ணாடி மண்டபம். அடுத்து தாயார், ஆண்டாள் சந்நதிகள். சற்று தள்ளி ரங்க மண்டபம். அதற்கடுத்தகல்யாண மண்டபம் தனிச் சிறப்பு கொண்டது. 

மிக நுண்ணிய சிற்ப வேலைப்பாடமைந்த 64 தூண்கள்இந்த மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. இது வேமாரெட்டி என்ற மன்னரால் 14ம் நூற்றாண்டில்நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். நவநரசிம்மர்களை தரிசிப்பதற்கான முன்னோடியாகஇந்த இரு மண்டபத் தூண்களிலும், வராஹ நரசிம்மர், வில் ஏந்திய காராஞ்ச நரசிம்மர், 

தூணைப்பிளந்துகொண்டு வெளிப்பட்ட கம்ப நரசிம்மர், ஹிரண்யனைப்  பற்றும் நரசிம்மர், அவனை வதம்செய்து அவன் குடலை மாலையாகப் போட்டுக்கொள்ளும் ஜ்வாலா நரசிம்மர், பிரஹலாதன்மற்றும் கருடாழ்வாருடன் காட்சியளிக்கும் சதுர்புஜ நரசிம்மர், அபய பிரதான நரசிம்மர்,ராம-லக்ஷ்மணருக்குக் காட்சி தந்த பிரத்யக்ஷ நரசிம்மர், வேறு எங்குமே காணவியலாத லக்ஷ்மியைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கும் யோக நரசிம்மர், செஞ்சுலக்ஷ்மித் தாயாருடன் நரசிம்மர், காளிங்க நர்த்தன கிருஷ்ணன்,வெண்ணெய்த் தாழியுடன் கண்ணன், வேணுகோபாலர், சஞ்சீவி மலையைத் தாங்கிய ஆஞ்சநேயர், வராஹப்பெருமாள், யோகானந்த நரசிம்மர், மேற்கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ்க் கரங்களில் மலர்களையும்ஏந்திய மஹாவிஷ்ணு, மன்னன் பிரதாப ருத்ரன், ஆதிவண் சடகோபஜீயருக்கு மாலோலனை வழங்கும்காட்சி என்று பல வடிவங்களைக் கண்டு மகிழலாம்; பிரமிக்கலாம். 

கருவறையில்பெருமாள் தரிசனம் அப்படியே உள்ளத்தைக் கரைக்கிறது. நரசிம்மம் இத்தனை சாந்தமாகக் காட்சியளிப்பதுகண்டு பயபக்திக்கு பதிலாக  விநயபக்திதான் மேலோங்குகிறது. இடது மடியில் மஹாலக்ஷ்மியை இருத்திக்கொண்டுசுதர்சன பீடத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அந்த தோரணை, கருணை மிகுந்த மாமன்னன்தம் குடிகளைக் காக்கும் பாவனையிலேயே அமைந்திருக்கிறது. ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடித்திருக்கிறது.மேற்கரங்கள் சங்கும், சக்கரமும் ஏந்த, கீழ் இடது கரம் லக்ஷ்மியை அரவணைத்திருக்க, கீழ்வலது கரம் அபய ஹஸ்தமாக அருள் பொழிகிறது. 

இவர் தரித்திருக்கும் சாளக்கிராம மாலை தனிப்பொலிவுடன் துலங்குகிறது. இவரது காலடியில் ஆஞ்சநேயர் விநயத்துடன் சிறு வடிவினராகக் காட்சிதருகிறார். உற்சவரான பிரஹலாத வரதனுக்கும் சதுர்புஜங்கள்தான். அவை, சங்கு, சக்கரம்,கதை தாங்கி அபய ஹஸ்தமாகவும் திகழ்கின்றன. இவருடன் தேவி-பூதேவியையும் காணலாம்.இதே சந்நதியில் பாவன நரசிம்மர், மேல் அஹோபிலம் உக்ர நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், ஆண்டாள்,சுதர்ஸனாழ்வார், கிருஷ்ணன், விஷ்வக்சேனர், ராமானுஜர், பலிபேரர், நித்யோத்சவர் ஆகியோரும் உற்சவ மூர்த்திகளாக வாசம் செய்து நமக்குப் பேரானந்த அருள்புரிகிறார்கள். 

கூடுதல்சந்தோஷமாக ஆழ்வார்கள் உற்சவ மூர்த்திகளையும் நாம் தரிசிக்கலாம். இவர்களோடு ஆதிவண் சடகோபஜீயர் தன் கரத்தில் மாலோல நரசிம்மருடன் எழுந்தருளியிருப்பது குறிப்பிடத்தக்கது,பார்த்து நெகிழத்தக்கது. முக்கியமாகஇந்த கீழ் அஹோபிலக்கோயிலிலேயே, மேல் அஹோபிலத்து உற்சவ மூர்த்திகள் எல்லாம் கோயில்கொண்டிருப்பது, மேல் அஹோபிலப் பயணத்தில் கூடுதல் நேரம் செலவிட வேண்டியிருக்காத வசதியை பகவானே ஏற்படுத்தித் தந்திருக்கிறாரோ என்று எண்ண வைக்கிறது. 

வனப் பிரதேசமான மேல் அஹோபிலத்தில்குறைந்த நேரத்தை செலவிடுவதே நமக்குப் பாதுகாப்பு என்று பெருமாளும், அஹோபில நிர்வாகிகளும்நினைத்தார்கள் போலும்! விவரம் தெரிந்தவர்கள் அல்லது ஏற்கெனவே பலமுறை அஹோபிலம் வந்துபெருமாளை வழிபட்டவர்கள் பார்கவ நரசிம்மரின் உற்சவ மூர்த்தியை மேல், கீழ் இரு அஹோபிலக்கோயில்களிலும் காணோமே என்று யோசிக்கலாம். அந்த உற்சவர், வட 

இந்தியாவில்ஆஜ்மீரை அடுத்த புஷ்கரத்தில் கோயில் கொண்டுள்ளார் என்ற தகவல் அந்த சந்தேகத்துக்குத்தீர்வாக அமைகிறது. அடுத்துதனிச் சந்நதியில் மூலவராக அமிருதவல்லித் தாயாரை சேவிக்கலாம். இதே கருவறையில் தாயார் உற்சவராகவும் தரிசனம் நல்குகிறார். 

தாயார் சந்நதி நுழைவாயிலில் இரு துவாரபாலகிகள்-குமுதினி, குமுதாக்ஷிணி. மேல் அஹோபில உக்ர நரசிம்மர் சந்நதியின் உற்சவ தாயாரானசெஞ்சு லக்ஷ்மியும் இதே அறையில் கொலுவிருக்கிறார். இந்தத் தாயார் சந்நதியை ‘அம்மவாருசந்நதி’ என்றழைக்கிறார்கள். தாயாருக்கு அடுத்ததாகதனியே ஆண்டாள் மூலவராக எழுந்தருளியிருக்கிறாள். இந்தக் கோயிலில் புரட்டாசி-ஐப்பசி மாதங்களில் பவித்ரோற்சவமும், மாசி-பங்குனி மாதங்களில்பிரம்மோற்சவமும் அஹோபில மடத்தினரால்அமோகமாக நடத்தப்படுகின்றன. லக்ஷ்மிநரசிம்மப் பெருமாளின் பாதாரவிந்தங்களில் நம் நமஸ்காரங்களை சமர்ப்பித்துவிட்டு மேல்அஹோபிலம் நோக்கிப் பயணத்தைத் தொடருவோம்.மேல் அஹோபிலத்தைஅடைய கீழிருந்து 8 கி.மீ. செல்ல வேண்டும்



அகோபிலம் பயணக்குறிப்பு - பகுதி 2

நல்லமலா காட்டின் நடுவில் ஒரு சிங்கம் 🙏🏻அகோபிலம் 🙏🏻பயணம் பகுதி

நரசிம்ம அவதாரம்..😡

அக்கிரமம் செய்பவன் எத்தனை சலுகைகளைவரங்களாகப் பெற்றிருந்தாலும் அவனால் தப்பிக்கவே முடியாது என்பதை உணர்த்தவே நிகழ்ந்திருக்கிறதுஎன்றே தோன்றுகிறது.இந்த நிகழ்ச்சியைக் கதையாகக் கேட்டு, மனம் விம்மினாலும், அந்த வதை சம்பவம் நிகழ்ந்த இடத்தை,பகவான் நரசிம்மமாக வெளிப்பட்ட இடத்தை, தரிசிக்கவும் முடியும் என்ற உண்மை நம்மை சிலிர்க்கவைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆமாம், அஹோபிலம் என்ற திவ்ய தேசம், நரசிம்மம் பிளந்துகொண்டு வந்த  தூண், ஹிரண்யனின் அரண்மனைமண்டபம் எல்லாம் இன்றளவும் நாம் கண்டு இன்புற காட்சிப் பொருட்களாகத் திகழ்கின்றன. 

இரண்டாகப் பிளந்து நிற்கும் மலைதான் அந்தத் தூண், ஆங்காங்கேசிதறிக் கிடக்கும்மலைப் பிஞ்சுகள், நரசிம்மம் வெளிப்பட்டபோதுஉண்டான பூகம்ப அதிர்ச்சியின் அடையாளங்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. கருடன் வேண்டிக்கொண்டபடி மஹாவிஷ்ணு நரசிம்மஅவதாரத்தை 

அவருக்காக மறுபடியும் நிகழ்த்திக் காட்டினார் என்கிறது அஹோபில தலபுராணம். கருடனுக்கு அந்த அவதாரத்தைக் காண்பித்த பரந்தாமன், கலியுகத்தில் நாமெல்லாம் வணங்கி,போற்றிக் கொண்டாடும் வகையில் நரசிம்மத்தின் ஒன்பது தத்துவங்களையும் விளக்கும் வகையில்

ஒன்பது அர்ச்சாவதார மூர்த்திகளாகக் காட்சியளிக்கிறார். திருமங்கையாழ்வார் பத்துப் பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்து மகிழ்ந்திருக்கிறார். 

மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்  கோளறியாய் அவுணன் பொன்ற ஆகம் வள்ளுகிரால்  போழ்ந்த புனிதனிடம்நின்றபசுந்தீ மொன்டு சூறை  நீள் விசும்பூடிரியசென்றுகாண்டற் கரிய கோயில்  சிங்கவேள் குன்றமே

‘‘சிம்மஉருவினனாக, வாள் போன்ற கூரிய பற்களைக் கொண்டவனாக, தன் கூரிய நகங்களால் ஹிரண்யன் உடலைக்கிழித்து, பிளந்து தன் கோபத்தை வெளிப்படுத்திய தலம் இந்த சிங்கவேள் குன்றம்.

 இங்கு மூட்டப் படும் தீயானது வானையே தொடும் அளவுக்கு நீண்டு செல்லும். மிக உயரமான மலைகளைக் கொண்ட, அவ்வளவு எளிதாகச் சென்றடைந்துவிட முடியாத இந்த சிங்க வேள் குன்றத்தில் எம்பெருமான்திவ்ய தரிசனம் நல்குகிறார்,’’ என்கிறார் ஆழ்வார்.இந்ததிவ்ய தேசம் இரண்டு பகுதிகளாகப் போற்றி வணங்கப்படுகிறது. கீழ் அஹோபிலம், மேல் அஹோபிலம் என்று மலைக்குக் கீழே உள்ள கோயில்களையும், மேலே உள்ள கோயில்களையும் சேர்த்து ஒரே திவ்யதேசமாக வழிபடுகிறோம். 

தன் விருப்பத்தைநிறைவேற்ற எம்பெருமான் தனக்கு நரசிம்மராகக் காட்சி அளித்ததோடு, தன் லீலைகளையும் காட்சிகளாக்கிக்கொடுத்துத் தன்னை உய்வித்தப் பேரருளை எண்ணி வியந்த கருடன், ‘அஹோபிலம், மஹாபலம்’ என்றுபோற்றிப் பணிந்தார். உயர்ந்த மலையில் ஒரு குகையில் இவ்வாறு காட்சி தந்ததாலேயே (பிலம்என்றால் குகை) பெருமைமிக்க, பலம் வாய்ந்த அஹோபிலம் என்ற கருடனின் கூற்றாலேயே இத்தலம் இப்பெயர் பெற்றது. 

மகா பெரியஅசுரன் ஒருவனை எந்த ஆயுதமும் கைக்கொள்ளாமல், விரல் நகங்களாலேயே வதம் செய்த பராக்கிரமத்தைக் கண்ட தேவர்கள், ‘ஆஹா,பரந்தாமனுக்குதான் என்ன பலம்!’ என்று வியக்க, அந்த ஆச்சரியமே ‘அஹோப(பி)லம்’ என்ற பெயரை இத்தலத்திற்கு அளித்ததாகவும் சொல்வார்கள்.

முதலில்கீழ் அஹோபிலத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தை தரிசிப்போம். இவர் நவநரசிம்மர்களில்ஒருவர் அல்ல என்றாலும், மிகவும் பிரபலமானவர். நவநரசிம்மர் தரிசனம் காண இவரத அருளையும்,ஆசியையும் முதலில் பெறுவது பொதுவான சம்பிரதாயம். இந்தக்கோயில் அமைந்திருக்கும் சந்நதித் தெருவின் முனையில் ஆஞ்சநேயருக்கான ஒரு சந்நதி அமைந்திருக்கிறது.இவர் பீகாள ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். இவர் ஊருக்கு மட்டுமல்லாமல், அஹோபிலம்கோயிலுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்ந்திருக்கிறார். 

ஆமாம், அஹோபில மடத்தின் ஆதரவில்கோயில் நிர்வாகம் மேற்கொள்ளப்படுமுன் கோயில் சாவிகளை இந்த ஆஞ்சநேயரிடம் சமர்ப்பித்து,பிறகு அவரது ஆசியுடன் எடுத்துச் சென்று கோயிலைத் திறப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.இந்த சந்நதிக்கு அருகில் தேரடி அமைந்திருக்கிறது. தொடர்ந்து போகும்போது இவ்வழியாகவீதிவுலா வரும் பெருமாள் எழுந்தருளும் திருவேந்திக்காப்பு மண்டபத்தைக் காணலாம். 

அதையும் கடந்து சென்றால் நரசிம்ம தீர்த்தம் என்னும்புஷ்கரிணி எதிர்ப்படுகிறது. சற்றே தலை நிமிர்ந்தால் ஐந்து நிலை ராஜகோபுரம் நம்மை ஆசீர்வதிக்கிறது. லக்ஷ்மி நரசிம்மர்,சேஷசயனர் முதலானோரின் சிற்பங்களுடன் கோபுரம் அழகுற மிளிர்கிறது. நம்மை இன்னும் அண்ணாந்து பார்க்க வைக்கிறது, கோபுர வாசலருகே நிலை கொண்டிருக்கும் ஒரு ஸ்தம்பம். வெற்றித்தூண்அதாவது, விஜயஸ்தம்பம் என்ற பெயர் கொண்டிருக்கும் இத்தூண், 80 அடி உயரத்திற்குஒரே கல்லால் உருவாகி, நெடிதுயர்ந்து நிற்கிறது. பூமிக்குக் கீழே முப்பது அடி ஆழத்திற்குஇத்தூண் வேரூன்றியிருக்கிறது என்று கேள்விப்படும்போது வியப்பாக இருக்கிறது. 

மாமன்னர்கிருஷ்ண தேவராயர் தாம் அடைந்த வெற்றியைக் குறிக்கும் சின்னமாக இதனை நிறுத்தியிருக்கிறார்.இதனருகே நின்று நம் பிரார்த்தனைகளை சமர்ப்பித்தோமானால் அவை எல்லாமேநிறைவேறுகின்றன என்பது காலங்காலமாக இங்கே நிலவி வரும் நம்பிக்கை. இந்தத்தூணுக்குக் கீழே 

ஆஞ்சநேயர் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். இவருக்கு மலர் சமர்ப்பித்துஅனைவருமே வழிபடலாம். சந்நதி மண்டப முகப்பில் லக்ஷ்மி நரசிம்மரை சிற்ப ரூபமாகதரிசிக்கலாம். சற்றருகே கருடாழ்வார் சந்நதி. 

இவருக்குப் பக்கத்தில் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த வசந்த மண்டபம். இதனைக் கடந்தால் ஊஞ்சல் மண்டபம். பிராகாரச்சுற்றில், முதலில் ஶ்ரீநிவாசர் சேவை சாதிக்கிறார். இவருடன் அலர்மேல் மங்கைத் தாயார்,விஷ்வக்சேனர் மற்றும் கிருஷ்ணரும் மூலவர்களாகவே திவ்ய தரிசனம் தருகிறார்கள். தமது திருமணத்திற்குப்பிறகு நிவாசனும், பத்மாவதிதாயாரும் இத்தலம் வந்து இந்த லக்ஷ்மி நரசிம்மரை வணங்கியதாகவும் அந்த சம்பவத்தின் ஆதாரசாட்சியாகத்தான் இவ்விருவரும் கருவறையில்இடம் பெற்றிருக்கிறார்கள் என்றும்  தெரிய வருகிறது.

படங்கள் 1)கோபுரம்2)மண்டபம் 3)கொடி மரம்





அகோபிலம் பயணக்குறிப்பு - பகுதி 1

நல்ல மலா காட்டின் நடுவில் ஒரு சிங்கம் (அகோபிலம் பயணம்..

.(எனது பத்ரி கேதார் பயண அனுபவங்களை பகிர்ந்தது போல் அவ்வளவு கடினம் இல்லையெனினும் இரண்டே நாட்களில் செல்லும் வண்ணம் ஆந்திராவில் அமைந்த எனது அகோபிலம் பயணக்குறிப்பு...V.V)🙏பகுதி...1

சாதாரணமாக நம் வாழ்க்கையில் ஒருநாளில் மனதில் நிற்கும் ஓர் அனுபவம் இருந்தால் அதிகம். பயணத்தில் அனுபவங்களால் நினைவுப்பெட்டகம் நிறைந்து வழிகிறது. காட்சிகள் மனதில் நிறைந்து கண்மூடும்போதெல்லாம் இமைகளுக்குள் விரிகின்றன. பயணங்களில் நாம் பலமடங்கு வாழ்கிறோம். அனுபவங்களை வைத்துத்தான் நம் அகம் காலத்தை எடைபோடுகிறதென்பதனால் பயணங்களில் நம் காலம் மிகப்பெரிது. ஆகவே அது அதிவேகமாக ஓடிச்செல்கிறது.

எனவே108 வைணவக்கோயில்களில் ஆந்திராவில்திருப்பதியை அனைவரும் அறிந்தாலும் நரசிம்மர் கோயில் கொண்ட சிங்கவேள் குன்றம் என ஆழ்வார்களால் பாடல் பெற்ற அகோபிலம் செல்ல தீர்மானித்தோம். அகோபிலம்தான் தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடம். தமிழ்நாட்டிலிருந்து வைணவர்கள் இங்கே வந்துகொண்டே இருக்கிறார்கள். கல்யாணம்,சிரார்த்தம் என்று. இதனால் இநத ஊரில் நல்ல தமிழ் எங்கும் ஒலிக்கிறது. சென்னையில் இருந்து நேரடியாக வந்துசேர நாநூறு கிலோமீட்டர் ஆகும். இங்குள்ள காட்டுக்குள் கிட்டத்தட்ட ஏழு கிலோமீட்டர் தூரத்துக்குக்குள் நரசிம்ம மூர்த்திக்கு கட்டப்பட்டுள்ள ஒன்பது ஆலயங்கள்தான் இதன் சிறப்பாகும்.அகோபிலம் என்றால் ‘மாபெரும் குகைக்கோயில்’ என்று பெயர். குன்றின் அடிவாரத்தில் பிரகலாதவத வரதரின் கோயில் உள்ளது. 

தலவரலாற்றின்படி இந்த இடம் கருடகிரி [ கருடாச்சலம், கருடசைலம்] என்று அழைக்கப்படுகிறது. கருடருக்கு காட்சி கொடுக்கவே ஒன்பது இடங்களில் பெருமாள் நரசிம்மராக தோற்றம் அளித்தாராம். இங்கே ஹிரணியனைக் கொன்றபின் பிரகலாதனுக்கு வரம்கொடுக்கும் தோற்றத்தில் பெருமாள் கோயில்கொண்டிருக்கிறார். 

இன்னொரு கதையின்படி இப்பகுதியில் வாழ்ந்தபழங்குடியினர் செஞ்சுக்கள். அவர்களின் குலத்தில் மகாலட்சுமி செஞ்சுலட்சுமியாக வந்து பிறந்தார். அவரை பெருமாள் அவரே வந்து கைப்பிடித்தார். செஞ்சுபழங்குடியினர் வழிபட்ட நரசிம்மர்கோயில்கள் இவை.

அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது.  தமிழ்ப் பண்பாட்டின் முக்கியமான ஆளுமையான இவரைப்பற்றி இங்கே அதிகம்பேசப்படுவதில்லை. அவர் கன்னடர். இயற்பெயர் கிடாம்பி ஸ்ரீனிவாசாச்சார். கர்நாடக மாநிலத்தில் மேல்கோட்டே என்று அழைக்கப்படும்திருநாராயணபுரத்தில் 1398 ல் பிறந்தவர். அவரை அவரது தந்தை கிடாம்பி கேசவாச்சார் கல்விக்காக காஞ்சீபுரம் கடிகைக்கு அனுப்பினார். 

அவரது 20 வயதில் கனவில் ஒரு காவியணிந்த துறவி வந்து அகோபிலத்துக்குச் செல்லும்படி ஆணையிட்டிருக்கிறார். அகோபிலம் அப்போது யாருமே அறிந்திராத ஊர். அடர்ந்தகாடுகளுக்குள் பழங்குடிகள் வாழ்ந்துவந்த இடம். இப்போதுகூட அது காடுதான். ஸ்ரீனிவாசாச்சார் தன் குருவான கடிகாசதம் அம்மாள் என்று அழைக்கப்பட்ட  வரதவிஷ்ணுவாச்சாரிடம் ஆலோசனைகேட்க அவர் அந்த கனவை பின்பற்றும்படி ஆலோசனை சொன்னார். ஸ்ரீனிவாசாச்சார் கால்நடையாகவே பலகாலம் பயணம்செய்து பலரிடம் தொடர்ந்து விசாரித்து அகோபிலக் காட்டுக்குவந்துசேர்ந்தார்.

ஸ்ரீனிவாசாச்சாரியார் அக்காட்டுக்குள் இருந்த குகைகளிலேயே தங்கி அங்குள்ள பழங்குடியினரை வைணவர்களாக்கி நரசிம்மருக்கான குகைக்கோயில்களை நிறுவினார்.அப்பகுதியின் அதிபனாக இருந்த முகுந்தராயன் என்பவனுக்கும் கனவில் பெருமாளின் ஆணைவந்ததாம். அவன் வந்து ஸ்ரீனிவாசாச்சாரியாரை பணிந்தான்.ஸ்ரீனிவாசாச்சாருக்கும் பெருமாளே கனவில்வந்து துறவு அளித்ததாக ஐதீகம். அகோபிலமடம் அவ்வாறாக உருவானது. 

ஆதிவண் சடகோப மகாதேசிகரே அதன் முதல் ஜீயர். இந்த சம்பவம் கீழே உள்ள நரசிம்மர் ஆலயத்தின் தூண்களில் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது. அகோபிலமடத்தின் கடவுள் நரசிம்மமூர்த்தியே.ஜீயருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு. இங்குள்ள மூலவர் ‘மாலோலன்’ [தீராத விளையாட்டுப்பிள்ளை] என்று அழைக்கப்படுகிறார்.  முதல் ஜீயரின் கனவில்வந்த பெருமாள் மாலோல நரசிம்மரின் உத்சவ மூர்த்தியுடன் சென்று வீடுதோறும் சென்று அங்குள்ள மக்களுக்கு ஞான உபதேசமளிக்கும்படி ஆணையிட்டதாக ஐதீகம் சொல்கிறது. ஆகவே மாலோலரின் உற்சவமூர்த்தி அழகிய சிங்கரால் பயணங்களில் கொண்டுசெல்லப்படுகிறது.

 மாலோல மூர்த்தியுடன் முதல் ஜீயரான சடகோபர் ஆழ்வார்திருநகரிக்கு வந்ததாகவும் பாண்டியர் ஆட்சியில் சைவத்தால் கிட்டத்தட்ட ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த வைணவத்தை தென் தமிழ்நாட்டில் புத்துயிர் பெறச்செய்ததாகவும் வரலாறு. இன்று தமிழ்நாட்டின் வைணவர்கள் நடுவே அதிக செல்வாக்குள்ள மடம் அகோபிலம்தான். குறிப்பாக வடகலை சம்பிரதாயத்தின் ஒரு பிரிவிற்கு அகோபிலமே தலைமை மடம் என்று சொல்றார்கள். தமிழ்நாட்டு வைணவ ஆலயங்களில் பெரும்பாலானவற்றில் அகோபில மடத்துக்கு நிர்வாகப்பங்கு ஐதீகப்படி அளிக்கப்பட்டுள்ளது. இப்போதைய ஜீயர் குருபரம்பரையில் நாற்பத்து ஆறாவதாக வருபவர். திருமங்கையாழ்வார் அகோபில நரசிம்மரைப்பற்றி ஒரு பதிகம் இயற்றியிருக்கிறார்.

அகோபிலமடத்தின் கோட்பாட்டின்படி பிரஸ்தான திரயம் எனப்படும் [உபநிடதங்கள், பிரம்மசூத்ரம், கீதை] மூலநூல்களுக்கு நிகராகவே நாலாயிர திவ்விய பிரபந்தமும் மூலநூல் ஆகும். அதற்கு சதுர்வேதங்களுக்கு நிகரான இடம் அளிக்கப்பட்டுள்ளது. நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் கல்வியுடைய வைணவர்கள் இதனாலேயே ‘உபய வேதாந்த’ [நிகரான வேதமுள்ள] என்ற பட்டம் அளித்து குறிப்பிடப்படுகிறார்கள். அகோபிலமடம் ஆந்திராவிலிருந்தாலும் முழுக்கமுழுக்க தூயதமிழ் மடம். தமிழுக்கும் வைணவ இலக்கியத்துக்கும் அதன் பங்களிப்பும் மிக அதிகம்.

அகோபிலத்தை ஒருநாளில் பார்த்து முடிப்பது கஷ்டம். குறைந்தது நான்குநாள் அங்கேயே தங்கி ஆட்டோ அல்லது ஜீப் வைத்துக்கொண்டு குறுகிய மலைப்பாதைகளில் பயணம்செய்துதான் அங்குள்ள எல்லா நரசிம்மர் ஆலயங்களையும் பார்க்க முடியும். நல்லமலா காட்டுக்குள் அக்கோயில்கள் சிதறிக்கிடக்கின்றன. 

சிலகோயில்கள் புராதனமான குகை ஆலயங்கள். அடர்ந்த காட்டுக்குள் ஒற்றையடிப்பாதைவழியாக நடந்துசென்று தரிசிக்கவேண்டிய கோயில்களும் சில உண்டு. ...

கடப்பா வரை ட்ரெயினில் சென்றோம்.பின்னர் அல்லகட்டா வரை 80km பஸ் நிறைய உண்டு.பின்னர் 23 கமீ உள்ள அகோபித்திற்கு டவுன் பஸ் ஷேர் ஆட்டோ,கார் என வசதிப்படி செல்லலாம்.அகோபில மடத்திலேயே யார் வேண்டுமானாலும் தங்கும்படி guest house,அடிவார அகோபிலத்திலேயே உண்டு(sri Malola guest house 08519_252045,09490515284).அவர்களே 7 கிமீ தூரத்தில் நிறைய guest house கட்டி போட்டிருப்பதால் காரில் வருபவர் பயன்படுத்தலாம்.மேலும் APgovt guest house தனியார் விடுதிகளும் உள்ளன....இனி நவ நரசிம்மர்களையும் தரிசிக்கும் வழி முறைகளை காணலாம்..( தொடரும்)





----------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய அஹோபிலம் பற்றிய கட்டுரைக்கு திரு சந்த்ர சேகர் அவர்களின் விளக்கம்

அஹோபிலம் மடம்  பற்றிய  பதிவில் ஸ்ரீநிவாஸாச்சார்ய ஸ்வாமி கனவில் பெருமாள்  வந்து துறவு நீடியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதுவரை அடியேன் படித்ததில் நேரடியாகத் துறவி ரூபத்தில் வந்து அஹோபில க்ஷேத்திரத்தில் ஸந்யாஸ தீக்ஷை அளித்ததாகவே தகவல் கிடைத்துள்ளது. ஆதார பூர்வமான தகவல் எது எனப் பதிவிடவும். பெருமாள் இவ்வாறு துறவி வடிவில் தீக்ஷை அளித்து விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் ''ஸந்யாஸ க்ருத்'' என்ற திருநாமத்தைச் சரிதார்த்தம் செய்து (மெய்ப்பித்துக்) கொண்டார் என்பது சிறப்பு. அறிந்த வரை ஸ்ரீவைஷ்ணவத்தில் இவர் ஒருவருக்கே துறவறம் முறையாக ஒரு துறவி மூலம் அளிக்கப் பட்டிருக்கிறது. பிறர் அனைவரும் ஐதீகப்படி விருத்தாந்தங்களினால் துறவிகளாகக் கருதப் படுகின்றனர். 

Ahobila Matam is a Sri Vaishnava religious institution establsihed 600 years ago in a place called Ahobilam by Srimad Athivan Satakopan. He was originally known as Kidambi Srinivasachar. He was a student under Gadikasadam Ammal in Kanchipuram. One day, the Lord of Ahobilam, Sri Lakshminrisimha, appeared in Srinivasachar's dream and instructed him to come to the temple town of Ahobilam. After consulting with his Acharya, he proceeded to Ahobilam.

இந்தப் பகுதியை அஹோபில மடத்தின் தளத்திலிருந்து அனுப்புகிறேன். இதில் பெருமாள் கனவில் துறவறம் பூணுமாறு கூறியதாகத் தெரிவிக்கவில்லை. அவ்வாறு கனவில் கூறியிருந்தால் அது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அவரோ  முகம் தெரியாத அஹோபிலத்திற்குச் சென்றிருந்தார். அவரது பூர்வோத்தரம் கல்வித் தரம், ஆச்சார அனுஷ்டானங்கள் பற்றி யாருக்குமே அங்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிறர் அவர் கூற்றை எங்ஙனம் நம்பினார்கள்? ஆதலால் யான் படித்த வண்ணம் ஒரு துறவி வடிவில் பெருமாள் வந்து துறவு அனுமதித்துப்  பின்னர் அனைவரும் காணும் வண்ணம் உடனே 'அந்தர் தியானம்' ஆகியிருக்க வேண்டும். 

இதில் இன்னொரு தகவல் இடைவெளி உள்ளது. அவர் மேல்கோட்டையில் யாருடைய வம்சம்?  ஒரு வேளை பிரம்மச்சாரியாக இருந்தால் தாயின் அனுமதி பெற்றாரா?அவருக்குத் திருமணம் ஆகியிருந்ததா? ஆயின் அவர் தம் மனைவியின் ஒப்புதல் பெற்றாரா என்பன. இம்மடத்தில் கிருஹஸ்தாசிரமத்தின் பின்னரே சன்யாசம் பெறுவது வழக்கமாகக் காண்கிறோம்.இது அவருக்குப் பின் பல காலம் கழிந்து ஏற்பட்ட வழக்கமா என்பதும் ஆய்வுக்குரியது.

Srimad Adivan Satakopan

At Ahobilam, the Lord himself initiated Srinivasachar into Sanyasam (monasticism) and gave him the title, "Satakopa Jeeyar". (Later, Lord Athippiran of Azhvar Thirunagari added the title Van and Nammazhvar added the title Athi. Thus the Jeeyar came be be known as "Athivan Satakopan".)

      By Mr Chandrasekar

சென்னையிலிருந்து திருப்பதி - பகுதி −2

 (சென்னையிலிருந்து திருப்பதி மார்க்கம்..)

(பகுதி −2..)

திருப்பதியை நோக்கிய எங்களது பயணத்தில், முதல் திருத்தலமாக, தமிழக எல்லையோரத்தில், ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில், சென்னை − திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகலாபுரம் என்ற சிறு கிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற வேதநாராயண ஸ்வாமி திருக்கோயிலை நாங்கள் முதலில் சென்றடைந்தோம்..

சுமார் அறுநூறு வருடங்களுக்கு மேற்பட்ட புராதனமான திருக்கோயில்..

விஜய நகர மன்னரான கிருஷ்ண தேவராயரால் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மன்னர், தனது தாயார் நாகலா தேவியின் நினைவாக இந்த ஊரை உருவாக்கி "நாகலாபுரம்" என்று பெயர் சூட்டியதாகத் தெரியவருகிறது.

திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் உபயத்தினால், தற்பொழுது கோயில் பளிச்சென்று மின்னுகிறது!..

நான்கு ராஜ கோபுரங்களுடன் பிரம்மாண்டமாகக் காட்சி தருகின்ற இத்தலத்தில்...

....இருபுறமும் ஜெய விஜயர்கள் பெருமானை ரக்ஷணம் செய்து கொண்டிருக்க,

 "வேத நாராயண" பெருமாள் மேற்கு நோக்கி "நின்ற" திருக்கோலத்தில் ஶ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிக்கிறார்...

கண்களில் நுழைந்து, மனதை ஆக்ரமிக்கின்ற பேரழகுப் பெருமான்!..

திருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவதான மச்ச ரூபமே எம்பெருமானின் திருவடியாகக் காட்சியளிக்கின்ற கவின்கோலம்...

மச்ச அவதாரமெடுத்து, நான்கு வேதங்களையும் மீட்டு பிரம்மனிடம் இத்தலத்தில் கொடுத்ததன் காரணமாக...

....இந்தப் பெருமான் 

"வேத நாராயணப் பெருமாள்" என்ற பொருத்தமான திருநாமத்தோடு விளங்குகிறார்!..

தாயார் "வேதவல்லி" எனும் திருநாமத்துடன் கிழக்கு நோக்கி தனிச்சந்நிதியில் எழுந்தருளி, தனது அருளை வாரி வழங்குவதற்காக, நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறாள்..

இந்தத் திருக்கோயிலில் நம்மை எப்பொழுதும் ரக்ஷணம் செய்கின்ற லக்ஷ்மிநரசிம்மனின் சந்நிதியும்...

தனது வீரத்தை பறைசாற்றிக் கொண்டிருப்பது போல் விளங்குகின்ற வீர ஆஞ்சநேயர் சந்நிதியும்...

பக்திக்கு இலக்கணமான "பக்த" ஆஞ்சநேயன் சந்நிதியும்...

இலக்குவனோடும், ஜானகியோடும் சேவை சாதிக்கின்ற இராமபிரான் சந்நிதியும்....

தனித்தனியே அழகுற அமைந்திருக்கின்றன..

இந்தத் திருக்கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாயார் திருமஞ்சனம் கண்டு அருள்வதும்...

பெருமான் சனிக்கிழமை தோறும் திருமஞ்சனம் கண்டு அருள்வதும் வழக்கமான நிகழ்வாகவே இருக்கிறது!..

இதைத் தவிர பிரதிவருடம் சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் ப்ரம்மோற்சவமும்..

மார்கழியில் வைகுண்ட  ஏகாதசிப் பெருவிழாவும்...

தை மாதத்தில் மகர சங்கராந்தி மற்றும் ரதசப்தமி விழாக்களும்..

தெலுங்கு வருடப் பிறப்பான "யுகாதி"ப் பண்டிகையும் வெகு சிறப்பாக இங்கே கொண்டாடப்படுகிறது..

எங்கும் காணா அதிசயமாக, இத்திருத்தலத்தில் சூரியபகவான் எம்பெருமானை பங்குனி மாதம் 12, 13, 14 தேதிகளில் வழிபடுவதாகவும், அதைக்காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்றும் கூறுகின்றனர்..

அந்நாட்களில், தலைவாசல் படியிலிருந்து கர்ப்பகிரகம் வரையிலான சுமார் 360 அடியைக் கடந்து சூரிய ஒளி எம்பெருமான் மீது வந்து வீழ்கிறது என்று பட்டர் கூறிய செய்தி நம்மை வியக்க வைத்தது!..

முதல்நாளன்று சூரியஒளி எம்பெருமானின் பாதத்தை தீண்டுவதாகவும்,

இரண்டாவது நாளன்று எம்பெருமானின் நாபியைத் தீண்டுவதாகவும்,

மூன்றாம் நாளன்று எம்பெருமானின் சிரசில் ஒளிரும் க்ரீடத்தைத் தீண்டுவதாகவும் பட்டர் சொல்லிக் கேட்டபொழுது...

...மனம் அந்நாட்களில் அங்கு வந்து அந்த அத்புதத்தை தரிசிக்கின்ற பாக்கியத்தை எம்பெருமான் நமக்கும அனுக்ரஹிக்க வேணும் என ஏங்கியது...

கடைசியாக ஒரு செய்தி...

நாம் பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மத்ஸ்ய அவதாரத்தில் கண்டிருக்கும் எம்பெருமானை, மத்ஸ்ய ரூபத்தில் மூலவராக சேவிப்பது இந்த ஒரு திருத்தலத்தில் மட்டுமே!..

எனவே, அவசியம் வாழ்நாளில் ஒரு முறையேனும் இவனைத் தரிசிக்கின்ற பாக்கியத்தை, அந்த எம்பெருமானே நமக்கெல்லாம் அனுக்ரஹிக்க வேணுமென்று ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து கொள்வோம்!..

திருமதி பத்மா கோபால் 

(வளரும்..)