Thursday, February 25, 2021

பெரியவாளும் மனுஷா தானே

 "பெரியவாளும் மனுஷா தானே’ என்று பெரியவா கூறிய அடுத்த கணமே நடந்த அதிசயம்"

மகா பெரியவாளுக்குக் கூடவா இப்படியா வரும்!

--நன்றி-தினமணி-16-02-2018

ஒரு நாள் சங்கர மடத்தில் மகா பெரியவாளுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி. சுருண்டு படுத்துக்கொண்டு, கைகளால் அடி வயிற்றைப் பிசைந்து பிசைந்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். சுற்றி நின்றிருந்தவர்கள் அத்தனை பேரும் துடிதுடித்துப் போயினர்.

அங்கிருந்தஒருவர்,‘மகா பெரியவாளுக்குக் கூடவா  இப்படியெல்லாம் வரும்! எங்களாலே தாங்க முடியலையே’ என்று கதறி அழுதார்.

மகா பெரியவாளும் மனுஷா தானே. கர்மாவாலே தான் இந்த உடம்பு வந்திருக்கு. அதற்குண்டான பலாபலன்களை இந்தச் சரீரம் அனுபவித்து தானே ஆகணும்’ என்று கூறினார். சற்று நேரத்தில் வலி குறைந்து தெளிவடைந்தார் பெரியவா.

அங்கிருந்த மடத்து யானை பெயர் காமாட்சி. தீப நமஸ்காரம் முடிந்து மகா பெரியவாளிடம் வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட வந்தது. மகா பெரியவா ஒரு குடிலில் அமர்ந்திருந்தார். பழத்தை கையில் வைத்துக் கொண்டு யானையை உள்ளே அழைத்தார். ஆனால், சிறுவாசலில் அத்தனை பெரிய சரீரம் எப்படி நுழைய முடியும். யானைப் பாகனும் யோசித்தபடி நின்றிருந்தார்.

பெரியவா விடாமல், ‘காமாட்சி, உள்ளே வந்து வாங்கிக்கோ’ என்று மீண்டும் அழைத்தார். அடுத்த கணம் நம்பமுடியாத அதிசயம் நிகழ்ந்தது. அந்தப் பெரிய யானை தன் உடலை மிகவும் அழகாகச் சுருக்கிக் கொண்டு அந்தக் குறுகிய வாசற்படியில் நுழைந்து, பெரியவாளிடம் பழத்தைப் பெற்றுக் கொண்டு, பின்னால் நகர்ந்த படியே வெளியே வந்தது.

‘பெரியவாளும் மனுஷா தானே’ என்று பெரியவா கூறிய அடுத்த கணம் இந்த அதிசயம் நிகழ்ந்தது! என்னே அவரது திருவிளையாடல்



ஜெய் ஆஞ்சநேயா

 ஜெய் ஆஞ்சநேயா 

ஒரு சமயம் மஹாராஷ்டிராவில் யாத்திரை மேற்கொண்ட மகாபெரியவா, அங்கே தனக்கு பணிவிடை செய்வதற்காக ஜமீன்தார் ஒருவரால் அனுப்பப்பட்ட பவார் என்ற இளைஞனை தன்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்பினார். ஜமீந்தார் அதற்குச் சம்மதிக்கவே பவார், பரமாச்சார்யாளின் அணுக்கத் தொண்டனாக மடத்திலேயே சேர்ந்தான்.

ஒரு சமயம் பவார் தனது குடும்பத்தினருடன் திருப்பதி செல்ல ஆசைப்பட்டபோது, அவனுக்கு தாமே திருப்பதி பெருமாளாக தரிசனம் தந்தார். பல வருடங்களுக்குப் பிறகு மற்றொரு சமயம் வடநாட்டு யாத்திரை சமயத்தில் ஒரு நாள் மாலை நேரத்தில் பரமாச்சாரியார் திடீரென்று எங்கோ செல்லப் புறப்பட்டார். தன்னோடு பவாரைத் தவிர வேறு யாரும் வரக்கூடாது என்று உத்தரவிட்டு விட்டு மளமளவென்று நடந்தார்.

அடர்த்தியாக காடுபோல இருந்த மலைப்பிரதேசம் ஒன்றின் வழியாக சிரமப்பட்டு பாதை கண்டுபிடித்து நடந்த பெரியவா, அங்கே இருந்த ஒரு குகைக்கு முன் சென்றதும் நின்றார்.

பவாரைப் பார்த்து, “நீ முதலில் போய்விட்டு வருகிறாயா?” என்று குகை வாயிலைக் காட்டினார். இருட்டாக இருந்த அந்த குகைக்குள் ஏதாவது விஷ ஜந்துகள் இருக்கலாம் என்று பயந்த பவார் தயங்கினான். உடனே மளமளவென்று குகைக்குள் போனார் பரமாச்சார்யாள். கொஞ்ச நேரம் கழித்து, எதையோ பார்த்துவிட்டு வந்த பரமானந்தம் தேஜஸாக முகத்தில் பிரகாசிக்க வெளியே வந்த பரமாச்சார்யாள், பவாரைப் பார்த்து, ‘இப்போது போய் பார்க்கிறாயா?’ என்பது போல ஜாடை காட்டினார்.

ஆச்சார்யாளே போய்விட்டு வந்த பிறகு நாம் அச்சப்பட வேண்டியதில்லை என்று நினைத்து, அப்படி என்னதான் உள்ளே இருக்கிறது என்ற எண்ணத்தோடு குகைக்குள்ளே போனான் பவார். அங்கே அவன் கண்ட காட்சி அவனை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

இருட்டான குகையின் மையப்பகுதியில், கோடி சூர்ய பிரகாசத்துடன், அந்த இடமே தங்கம் போல ஜொலிக்க, நடுவில் சின்ன மேடை போல் இருந்த ஒரு கருங்கல் பீடத்தில் யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தார் அனுமன். அவரைப் பார்த்ததும் பவாரின் உடல் நடுங்கியது. உள்ளம் ஜில்லிட்டது. ராம்… ராம்.. ராம்.. என்றபடியே குகையை விட்டு வெளியே வந்தான் பவார்.

‘என்ன பார்த்துட்டியா?’ என்று மட்டுமே கேட்டார். ஆமாம் என்பது போல தலையை வேகமாக அசைத்தான் பவார்.

அமைதியாக புன்னகைத்த ஆச்சார்யாள், “வா, போகலாம்!” என்று அவனை அழைத்துக் கொண்டு தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பி வந்தார்.

பரமாச்சார்யாளாலேயே பக்த ஆஞ்சநேயரைக் காணும் பாக்யம் பெற்ற பவார் பிறகு சொன்ன அடையாளத்தின் அடிப்படையில் வரையப்பட்ட அனுமன் படம்தான் இது.

ராமநாமத்தை மனதார ஜபித்தபடி இந்த அனுமனை வணங்குங்கள். உங்கள் இருப்பிடம் தேடி சூட்சும உருவில் வந்து, சுபிட்சங்கள் அனைத்தையும் அருள்வான் அந்த ராமபக்த அனுமான்! 

 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏

லால்சந்த் லீலேதேவி முனோத் மருத்துவ மையம்

 * சென்னை *

 சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ மற்றும் பிற சோதனைகள் சந்தை விகிதங்களில் 30% மட்டுமே செய்யப்படும் ஒரு ஆய்வகத்தை நாங்கள் கண்டிருக்கிறோம்.  இது ஒரு சமண ஜெயின் தொண்டு அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது.  இது பல நவீன உபகரணங்களையும் சிறந்த வசதிகளையும் கொண்டுள்ளது.  அவர்களின் முகவரி:

 * லால்சந்த் லீலேதேவி முனோத் மருத்துவ மையம், *
 8 லின்வுட் லேன்,
 மஹலிங்கபுரம்,
 சென்னை.
 Ph-04428251122

 இது அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட ஒரு முழுமையான, நவீன ஆய்வகமாகும்.  தயவுசெய்து இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், வெளியில் ரூ .8000 முதல் 10000 வரை எம்.ஆர்.ஐ விலை இங்கு ரூ .2500 முதல் 3500 வரை மட்டுமே செய்யப்படுகிறது.  மாஸ்டர் பரிசோதனை ரூ₹ 700 / - மட்டுமே.

 *தயவு செய்து பகிரவும்!! தயவுசெய்து எந்த அளவுக்கு உங்களால் இயன்ற அளவு அதிகமாக பகிர்வும்...

உங்க உதவிக்கு (உங்க மனசு நல்ல மனசு) நன்றி...

அரே அல்லா ஒரு முஸ்லிம் அன்பரின் பரவசம்

 "அரே அல்லா..!"

எல்லாவுமாயுள்ள மகா பெரியவா, அல்லாவுமாகக் காட்சி தந்ததில் ஆச்சர்யமில்லை

ஒரு முஸ்லிம் அன்பரின் பரவசம்.

சொன்னவர்-ஓர் அன்பர்

தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

.ஸ்ரீ பெரியவாள் ஹைதராபாத் ஏ.ஸி.ஸி. சிமெண்ட் ஆலையினுடைய காக்னா நதிக்கரையிலுள்ள பம்பிங் ஸ்டேஷனில் தங்கியிருந்தார்கள். அந்தப் பிரதேசம் பழைய ஹைதராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. இப்போது கர்நாடகாவினுள் அடங்கியுள்ளது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பீம்சேனப்பா கிட்டப்பா என்பவருடைய தோட்டம் இருக்கிறது.

அவர் நவாப் ஆட்சியின் போது ரஸாக்கர்களுடைய அட்டூழியத்தை எதிர்த்து வெற்றி கண்டவர். அவர் தன்னுடைய இடத்திற்குப் பெரியவாள் வரவேண்டுமென்று அழைத்தற்கு இணங்க ஒரு நாள் அங்கு சென்றார்கள்.

அன்று மத்தியான வேளையில் ஒரு முஸ்லிம் அன்பர் தரிசனத்திற்கு வந்தார்.

அவரிடம் ஸ்ரீ பெரியவாள், "உன் மனைவி காலையிலேயே பழங்களுடன் வந்து தரிசனம் செய்து கொண்டு போனாளே?" என்றதும் அவருக்கு ஆச்சர்யம்.

அவர் சொன்னார், "நான் ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன், காலையில் ரிக்‌ஷாவைப் பிடித்துக் கொண்டு போனபோது, 'பாபா' என்னைப் பார்த்தீர்கள். எனக்கு அல்லாவையே நேரில்  பார்த்தது போல ஒரு உணர்வு தோன்றியது.  மேலும் என்னுடைய தாய் பாஷையான உருது மொழியில் ஏதோ பேசிய மாதிரி தோன்றியது. வேலை முடித்து இப்போதுதான் வரமுடிந்தது. வீட்டில் என் மனைவியும் தரிசனம் செய்த விஷயத்தைச் சொன்னாள்."

இவ்விதம் சொல்லி வணங்கி எழுந்த அவருக்கு, பழங்கள் கொடுத்து அனுக்ரஹித்தார்கள்.

எல்லாவுமாயுள்ள மகாப் பெரியவாள்.அல்லாவுமாகக் காட்சி தந்ததில் ஆச்சர்யமில்லை.

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம்

 அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ...... "தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/login.php) தபால் மூலம் அனுப்பும் புகார்கள்.... Chief Minister's Special Cell , Secretariat, Chennai - 600 009. Phone Number : 044 - 2567 1764 Fax Number : 044 - 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in

எதை எதையோ சேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ...... "தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/login.php) தபால் மூலம் அனுப்பும் புகார்கள்.... Chief Minister's Special Cell , Secretariat, Chennai - 600 009. Phone Number : 044 - 2567 1764 Fax Number : 044 - 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in

பெரியவாளின் குழந்தைத் தன்மையும் பூகோள ஞானமும்

 "பெரியவாளின் குழந்தைத் தன்மையும் பூகோள ஞானமும்"

ஸ்வாரஸ்ய சம்பாஷணை (ஒரு பகுதி)

( இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கிறதே யூத நாடு. அதைச் சுற்றி எத்தனை முஸ்லீம்  தேசங்கள்  இருக்கின்றன? இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா?")

 சொன்னவர்-எஸ்.மீனாட்சிசுந்தரம்

தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

1971-கார்வேட்-சித்தூர் மாவட்ட காம்ப்

எங்கள் வீட்டில் பெரியவாளைத் தங்கும்படி  நான் வேண்டியவுடன்  பெரியவர்கள் சொன்னார்கள்;

"இந்த ஊரில் புதிதாக வீடு கட்டி குடித்தனம் வராமல் இருக்கும் வீடு ஏதாவது இருந்தால் சொல்லு. அங்கு நான் தங்கிக் கொள்கிறேன்."

உடனே என் நண்பர் முதலியாரின் வீடு ஞாபகத்துக்கு வந்தது.(வீட்டிற்குப் பின்னால்)"இருக்கிறது"

"நான் அங்கேயே தங்குகிறேன்," - பெரியவா.

முதலியார் அவர்கள் மகாபெரியவாள் மீது வைத்திருந்த அத்தியந்த பக்தி அந்த மகானை  அவருடைடைய   வீட்டுக்கே  அழைத்து வந்துவிட்டது.

முதலியார் புளகாங்கிதமடைந்தார்.

சுவாமிகள் புது வீட்டுக்கு வந்து,அறையில் வைக்கோல் பரப்பச்செய்து அதில் சிரமபரிகாரம் செய்யத் தொடங்கினார்.

ஊர்மக்கள் வெகு ஆவலுடன் பெரியவாளைப் பார்க்க திரண்டனர்.பெரியவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஆரவாரமின்றி வரிசையாக மக்களை நிற்க வைத்து சுவாமிகளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார், அப்பகுதி எம்.எல்.ஏ.ஸ்ரீ தியாகராஜன் அவர்கள்.

அடுத்தநாள் விடியற்காலை நாலு மணி இருக்கும்.   கிணற்றடியில் சத்தம் கேட்டது.எங்கள் வீட்டுப் பின்புறம் உள்ள கிணற்றில் மகாபெரியவாள் தன்னுடைய மரத்திலான பாத்திரத்தைக் கொண்டு தண்ணீர் நிறைத்துக் கொண்டிருந்தார்கள்.

உடனே நான் அருகில் சென்றேன்.

"இதோ பார்த்தாயா...இந்த மரச்செம்பு  உடைந்திருக்கிறது கையைக் கிழிக்கிறது.."  குழந்தை மாதிரி பேசிக்கொண்டிருந்தார்.

பின் பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்.

"கிழக்கு வங்காள ரேடியோவில் தினமும்  பகவத்கீதை  வைக்கிறாளாமே...உனக்குத் தெரியுமோ?"

நான் சொன்னேன், "இந்துக்களுக்குப் பாதுகாப்புக்  குறைவாக இருக்கிறது. மற்ற மதங்கள்,முக்கியமாக  இஸ்லாமும்,கிறிஸ்துவமும் உலகம் பூரா  பரவியிருக்கிறது.  அவர்களுக்கு ஒரு நாட்டில் கஷ்டம் என்றால் மற்ற நாட்டிலுள்ளவர்கள் உதவ முன் வருகிறார்கள்.இந்துக்கள் மாத்திரம் பயந்து கொண்டே தான் வாழ வேண்டியிருக்கிறது"

"அப்படியா? இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கிறதே யூத நாடு.அதைச் சுற்றி எத்தனை  முஸ்லீம் தேசங்கள்   இருக்கின்றன? இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா?"

நான் பிரமிப்பின் எல்லைக்கே போய்விட்டேன்.   ஆசிரியரான எனக்கு,இவ்வளவு துல்லியமான பூகோள ஞானம் கிடையாது என்பதை வெட்கத்தோடு  ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மகா பெரியவாளின் பரந்த அறிவையும் மனோ  தைரியத்தையும் வியந்து என் அறியாமையை  நினைத்து வெட்கப்பட்டேன்.

காலையில் ஓர் உதவி ஆசிரியரை திருப்பதிக்கு அனுப்பி புதிதாகக் கமண்டலு முதலிய மரப்பாத்திரங்களை வாங்கிவரச் செய்தேன்.

அன்று மாலை புதுப்பாத்திரங்களைப் பெற்றுக்கொண்டு ரொம்ப சந்தோஷப்பட்டு, " என்ன வழவழப்பாக இருக்கிறது..." என்று ஒரு குழந்தை எவ்வாறு புது விளையாட்டு பொம்மையை  வாங்கி ஆனந்தமடையுமோ  அந்த ஆனந்தத்தை   வெளிப்படுத்திக் காட்டினார்.  மகா பாக்கியம்!🙏🙏🙏🙏

அர்ஜுனன் தபஸ்

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - "அர்ஜுனன் தபஸ்"

தகவல்-ரா.வேங்கடசாமி

1962 ஆம் வருடம், இளையாத்தங்குடியில் வியாச பாரத ஆகம சில்ப சதஸ் நடந்து கொண்டு இருந்த சமயம்.

ஒரு நாள் சதஸிற்கு வந்திருந்த ஸ்தபதிகள், தொல் பொருள் இலாகா அதிகாரிகள் எல்லோரையும் பெரியவா கூப்பிட்டு அனுப்பினார். நடைபெறும் மகாநாட்டிற்கு உபயோகமான அறிவுரைகளை வழங்கினார். 

பின்னர், "தமிழ் நாட்டில் எந்த ஊரில் உள்ள சிற்பங்கள் மிக சிறப்பானவை" என்று அந்த மகாநாட்டில் பங்கு பெற்ற வல்லுனர்களிடம் மிகவும் அடிப்படையான சாதாரண கேள்வியாக இதைக் கேட்டார். பதிலளிப்பது மிகவும் எளிதாக இருக்கவே எல்லோரும் ஒருமித்த குரலில், "தமிழ் நாட்டில் பல்லவ ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்ட மாமல்லபுரத்துச் சிற்பங்களே மிக சிறப்பானவை" என்று உடனே பதில் சொல்லிவிட்டனர்.

"சரி.அந்த சிற்பங்களுக்குள் எது மேன்மையானது? என்று ஸ்ரீ பெரியவா அவர்களிடம் கேட்டார்.

"அர்ஜுனன் தபஸ்" என்றனர்.

"அந்த சிற்பத்தின் போட்டோ ஏதாவது இருக்கா?" என்று ஸ்ரீ பெரியவா கேட்க, இவர்கள் போய் தேடி எடுத்து வந்தனர்.

அந்த பெரிய புகைப்படத்தினை அவர்கள் ஸ்ரீ பெரியவாள் முன் வைத்து நிற்க, அதை அவர் சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்தார். பிறகு சொன்னார்.

"இந்த சிற்பத்திலே அர்ஜுனன் பஞ்சாக்னி நடுவிலே தபஸ் பண்ற மாதிரி இருக்கு.இப்படி தபஸ் பண்ற நேரம் உச்சிவேளைன்னு நமக்கு தெரியறது மாதிரி சிற்பி செஞ்சிருக்கார். அது எப்படின்னு யாராவது சொல்ல முடியுமா" என்று கேட்டார்.

புதிர் போன்ற அக்கேள்விக்கு பதில் சொல்ல அங்கே யாருக்குமே தெரியவில்லை. சென்னை தொல் பொருள் ஆராய்ச்சி இயக்குனர் திரு நாகசாமி உட்பட அங்கு வந்திருந்த அனைத்து ஸ்தபதிகளுக்கும் இதற்கான விடை தெரியவில்லை. எல்லோரும் சிந்தித்தபடி நிற்க ஸ்ரீ பெரியவா, "நல்லா யோசனை செஞ்சி பார்த்துண்டு நாளைக்கு வந்து சொல்லுங்களேன்" என்று அவர்களது தர்ம சங்கடத்தை அந்த நேரம் விலக்கி அவர்களை அனுப்பி வைத்தார்.

ஆனால் அதற்கான தக்க பதில் அவர்களின் யோசனையில் உதிக்காததால் அதே தர்ம சங்கடத்துடன் அடுத்த நாளும் ஸ்ரீ பெரியவா சன்னதியில் வந்து நின்றனர். "எங்களுக்கு நிச்சயமா எதுவும் தெரியல்லே. ஸ்ரீ பெரியவா தான் எங்களுக்கு விளக்கம் தரணும்" என்றார்கள் பவ்யமாக.

ஸ்ரீ பெரியவா சொன்னார்: "சுத்திலும் நெருப்பா சூழ்ந்திருக்க பஞ்சாக்னி தபஸ் சரியா பகல் 12 மணிக்கு மேலே ஒரு முகூர்த்த காலம் செய்ய வேண்டிய தபஸ். இதை அர்ஜுனன் அந்த நேரத்திலே தான் செஞ்சிருக்கான்னு சிற்பத்திலே காட்ட முடியாது இல்லையா? அதனாலே சிற்பத்தோட சம்பந்தப்படாம ஒரு ஓரம் வெறும் எலும்புக் கூடாக ஒரு முனிவரை சிற்பி செதுக்கியிருக்கார். அந்த முனிவர் கையால முத்திரை போட்டுண்டு சூரியனை தரிசிக்கிற மாதிரி இருக்கு. எப்பவும் இது போல முத்திரை போட்டு சூரியனை பார்க்கிற நேரம், சூரியன் நடுப்பகல்லே தலைக்கு நேர்மேலே உச்சியிலே வர்ற போதுதான். இதைத்தான் சிற்பி சூரியனையா, அந்த முனிவரை செதுக்கி அந்த நேரத்தை நாம தெரிஞ்சுக்கிற மாதிரி பண்ணியிருக்கார்."

"இப்படி சூட்சுமமான விஷயங்களை ஸ்ரீ பெரியவாளாலே மட்டுந்தான் விளக்க முடியும். எத்தனை படிச்சு இருந்தாலும், எங்களால் இதைத் தெரிஞ்சுக்க முடியாது" என்ற அவர்கள் ஸ்ரீ பெரியவாளை பூர்ணமாக அன்று உணர்ந்து வணங்கி எழுந்தனர்.

பெரியவா சரணம்!

தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural

An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org

என் மவுன விரதம் ஒன்றும் முக்கியம் இல்லை

 காஞ்சிபுரம் மடத்திற்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் 50 மாணவர்களுடன் பரமாச்சாரியாரை காண வந்தார்.

ஆனால் அன்று பரமாச்சாரியார் மவுன விரதம் இருக்கும் நாளாக இருந்தது. இறை தியானத்தில் தோய்ந்திருக்கும் அவர், இது போன்ற நாட்களில் பொதுவாக யாரையும் சந்திப்பதில்லை. சந்தித்தால் பேச நேரிடும். அதிலும் மாணவர்களிடம் கட்டாயம் பேசித்தான் ஆகவேண்டும்.

காஞ்சி பரமாச்சாரியார் மேற்கொண்டது சாதாரண மவுனம் அல்ல, காஷ்ட மவுனம். அதாவது சைகையால் கூடப் பேசாத நாள்.

மடத்தின் பணியாளர் சிந்தித்தார். என்ன ஆனாலும் சரி... பரமாச்சாரியாரிடம் தகவலைத் தெரிவிப்பது தான் சரி என முடிவு செய்தார். அதன் பிறகு என்ன செய்வதென்று பரமாச்சாரியாரே முடிவெடுக்கட்டும். மாணவர்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு பரமாச்சாரியாரிடம் சென்றார் பணியாளர். விஷயத்தை சற்றுத் தயங்கியவாறு தெரிவித்தார்.

பரமாச்சாரியார் கணீரென்ற குரலில் 'அவர்களை உடனே இங்கு அழைத்து வா!' என வாய் திறந்து உத்தரவிட்டார்!

பணியாளருக்கு வியப்பு. மவுனத்தை எதன் பொருட்டும் கைவிடாத பரமாச்சாரியார் இன்று கைவிட்டு விட்டாரே? இது எப்படி?

மாணவர்கள் பரமாச்சாரியார் முன் ஆவலோடு வந்து நின்றார்கள். அவர்களுக்கு பத்து நிமிடம் அருளுரை வழங்கினார் அவர்.

பிரசாதம் கொடுத்து 'அனைவருக்கும் என் ஆசி என்றும் உண்டு!' எனக் கூறி அனுப்பி வைத்தார்.

மாணவர்கள் விடைபெற்றுச் சென்றதும், பணியாளர் வியப்போடும் தயக்கத்தோடும் கேட்டார்:

''சுவாமி! எவ்வளவு பெரிய பதவியில் உள்ளவர்கள் வந்தாலும் இதுபோன்ற நாளில் நீங்கள் ஒருமுறை கூடப் பேசியதே இல்லையே?

எதன் பொருட்டும் விரதத்தைக் கைவிடாத நீங்கள், இன்று கைவிட்ட காரணம் என்ன என்று தெரிந்துகொள்ளலாமா?''பணியாளரை சற்றுநேரம் அருள்பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த பரமாச்சாரியார், புன்முறுவல் பூத்தவாறு விளக்கினார்.*

''வந்த குழந்தைகள் எல்லாம் எந்த ஸ்கூல்லேர்ந்து வந்திருக்கான்னு நீ சொன்னாய் அல்லவா?

நான் என் மவுனத்தை கைவிட்டது அதனால் தான். அவர்கள் எல்லாம் பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் மாணவர்கள். அவர்களுக்கு தரிசனம் என்பது என்னுடைய தோற்றமில்லையே! குரல் தானே!

அதைக் கேட்கத் தானே தொலைதூரத்திலிருந்து ஆவலோடு வந்திருக்கிறார்கள்! பார்வையற்ற, அந்தக் குழந்தைகளை மகிழ்விப்பதை விட என் மவுன விரதம் ஒன்றும் முக்கியம் இல்லை.'

பரமாச்சாரியாரின் பதிலைக் கேட்ட பணியாளர், நெகிழ்ச்சியில் தளும்பிய விழிகளைத் துடைத்துக் கொண்டார்

ஐம்பந்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்

 சுமார் ஐம்பந்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த ஓர் சுவையான சம்பவம்…

ஸ்ரீ சரணாள் சேலம் பகுதியில் யாத்திரையாகப் போய்க் கொண்டிருந்தபோது, அவருடன் சிலரும் நதி வழியாகவும், பரிவாரங்கள் சாலை வழியாகவும் போய்க் கொண்டிருந்தனர். அப்போது குதிரையின் மேல் நகரா அடித்துச் செல்வது வழக்கம். 

இது ஒரு மசூதி வழியாகச் சென்றபோது மசூதி வழியாக இதெல்லாம் போகக் கூடாது என்று குதிரையின் முன் கயிற்றைப் பிடித்துத் தடுத்தார்கள். இதனால் சிறு சலசலப்பு ஏற்பட்டு ,சிலர் மத்யஸ்தம் செய்தார்கள்.

மறுதினம் மேற்படி மசூதியைச் சேர்ந்த ஒருவர் மடத்து அதிகாரிகளிடம் ஸ்ரீசரணாளை தனியாக சந்தித்துப் பேச அனுமதி கேட்டார்கள். மடத்து அதிகாரி, முதல் நாள் சம்பவத்தை மனதில் கொண்டு, அதற்கு மறுப்பு சொல்லி விட்டார். வேண்டுமானால் எல்லாரும் இருக்கும் போது சந்திக்கலாம் என்றும் சொல்லி விட்டார். இந்த விஷயம் ஸ்ரீ சரணாள் காதிற்கு எட்டியது. 

ஆனால் அவர் தனியாகச் சந்திப்பதில் தனக்கு ஆக்ஷபணை எதுவும் இல்லை என்றும் அவரை வரும்படியும் கூறிவிட்டார். இதில் மடத்தில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லாவிடினும், வேறு வழியில்லாமல் எதிரே இருந்த ஒரு வீட்டில் சந்திக்க ஏற்பாடாயிற்று. மறு தினம் பெரியவா அந்த வீட்டு வாசல் கதவை உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தான் அவரிடம் பேசச் சென்றார்.

மடத்து அதிகாரிகள் கலக்கத்துடன் வெளியே காத்திருந்தனர். பெரியவாளிடம் சென்றவர் பெரிய காகித உறை ஒன்றை எடுத்துக் கொடுத்தாராம். அதில் என்ன என்று பெரியவா கேட்டதற்கு பெரியவாளைப் பற்றி தான் எழுதிய சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் என்று சொல்லி அதை அவரே வாசித்துக் காண்பித்தாராம். நாக பந்தம், கருட பந்தம், சக்ர பந்தம் போன்ற சாகித்ய மரபுகளுடன் அழகாக வாசித்தாராம்.

” இதை யார் எழுதியது யார் சொல்லிக் கொடுத்தார்கள்’ என்று கேட்டதற்கு தன் பரம்பரையினர் சம்ஸ்க்ருதத்தில் விசேஷ பயிற்சி பெற்றவர்கள் என்றும், பரம்பரையாக வருவதாகவும் பதில் சொன்னார். அவர்கள் கசாப்புக் கடை நடத்தி வருவதாகவும் கூறினாராம். இதை ஸ்ரீ சரணாள் ஹாஸ்யத்துடன், த்ரில்லிங்காகவும், ஸஸ்பென்ஸாகவும் சொல்லி எல்லா ஜாதியிலும் மதத்திலும் நல்லொழுக்கம், பண்பு உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் குறிப்பிட்டார்.

இவர்தான் பின் நாளில் வேத பாஷ்ய கல்லூரி ஆரம்பிக்க மிக முயற்சி எடுத்துக் கொண்ட ஸப் ஜட்ஜ் திரு கமாலுதீன்!

இந்த சமயத்தில் நான் ஒன்று கூர நினைக்கிறேன். என் சித்தப்பா ஸ்ரீ லக்ஷ்மிகாந்த சர்மாவை அழைத்து பெரியவா ராஜா வேத பாடசாலை கும்பகோணம் , ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதர் அவர்களால் சுமார் நானூற்றைம்பது வருடங்களுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்டது அதன் நிர்வாகத்தைச் சிறப்பாகச் செயல் படுத்த திரு கமாலுதீன் அவர்களை சந்திக்குமாறு சொல்ல சித்தப்பா குடும்ப ஆசாரம் கருதி அதனை தள்ளிப் போட்டு வந்தார். 

ஆனால் ஒரு நாள் பெரியவாள் கொடுத்த நெருக்கடியில் ஜட்ஜ் அவர்களை சந்தித்து ஆசார்யாள் ஆஜ்ஞைப்படி அவருடன் அராபிக் வகுப்புகள் எப்படி நடைபெறுகிறது என்று போய் பார்த்து அதன் பிறகு ராஜா வேத பாடசாலை நிர்வாகத்தை மேற்

கொண்டதுமன்றி, வேத சம்ரக்ஷண பரிபாலன சபை ஒன்று நிறுவி அது இன்றளவில் நல்ல விதமாக நடை பெறுகிறது. 

ராஜா வேத பாடசாலையில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசாங்க உதவித்தொகையும், ஆசிரியர்களுக்கு மத்திய அரசாங்க ஊதியமும் பெற்றுத் தந்தார்.

திரு. கமாலுதீன் அவர் ஜீவன் இருக்கும் வரை எங்கள் அகத்தில் வந்து சாப்பிட்டுச் செல்லும் பழக்கம் இருந்தது. இன்றளவும் அவர்கள் சந்ததியினரும் என் சித்தியைப் பார்த்துச் செல்கின்றனர்.

பெரியவாளிடம் திரு கமாலுதீன் கொண்டிருந்த பக்தி அளவிட முடியாதது. அதுபோல் ஜஸ்டிஸ் கம்பராமாயண விளக்கவுரை எழுதிய இஸ்மாயிலும் பெரியவாளிடம் அளவு கடந்த பக்தியும் மரியாதையும் கொண்டிருந்தார். 

பெரியவாளும் இவர்களிடத்தில் மத இன பேதமின்றி அவர்கள் அறிவு, ஆற்றலுக்கு மிக்க மதிப்பளித்து வந்தார் . பக்தி என்பது ஜாதி, மத இனம் கடந்தது என்பதற்கு இதுவும் ஓர் சான்று

ஶ்ரீ (செங்கண்மால்) பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில்,திருத்தெற்றியம்பலம்,

 இன்றய (சிறப்பு) கோபுர தரிசனம்;

அருள்மிகு ஶ்ரீ செங்கமலவல்லி தாயார் சமேத ஶ்ரீ (செங்கண்மால்) பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில்,

(திருநாங்கூர், பலாசவனம்) திருத்தெற்றியம்பலம்,

நாகப்பட்டினம் மாவட்டம்.

( 'சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றியம்பலத்துளென் செங்கண்மாலை கூரணிந்த வேல்வலவன்...' எனத்தொடரும் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (108-திவ்ய தேசங்களில்,37-வது) வைணவத்திருத்தலம்.

(108-திருப்பதிகளில், இத்தலம் மட்டும்தான் 'அம்பலம்' என்றழைக்கப்படுகிறது)

சுமார் 2000-வருடங்களுக்கு மேல் பழமையான இந்த ஆலய வேத விமானத்தின் கீழ், செங்கண்மால் பெருமாள் 

கிழக்கு நோக்கிய நிலையில் பள்ளிகொண்ட ரங்கநாதராக அழகு அருட்காட்சியளிக்கிறார்.

(சிவபெருமானும், செங்கமல நாச்சியாரும், ஆதிசேஷனும் இத்தல பெருமாளை தரிசனம் கண்டுள்ளனராம்)

ஒரு புராண நிகழ்வின்படி;

பூமியை எடுத்துச்சென்று பாதள உலகத்தில் வைத்த இரண்யாட்சன் என்ற அசுரனை, வராக அவதாரம் எடுத்து (அந்த அசுரனை) அழித்து பூமியை மீட்டு, அது  இருக்க வேண்டிய இடத்தில் மெல்ல சுழல விட்டபின், தன் துணைவி ஶ்ரீமகாலட்சுமிக்கு கொடுத்த வாக்குப்படி  இந்த பலாசவனம் (திருத்தெற்றியம்பலம்) வருகைதந்து, இங்கிருந்த சிவபெருமான், மகாலட்சுமி மற்றும் ஆதிசேஷனுக்கும் அருட்காட்சியளித்த பின்னர், (இங்கேயே) போர்புரிந்த களைப்பு தீர, சிவந்திருந்த அழகான கண்களுடன் பள்ளிகொண்டாராம்.

( இதனால்தான் இத்தல பெருமாள் 'பள்ளிகொண்ட செங்கண்மால் ரங்கநாதர்' என்றழைக்கப்படுகிறாராம்)

வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படும் இந்த ஆலயத்து சயனகோல பெருமாளை வழிபடுவது ஶ்ரீரங்கப்பெருமாளை வழிபடுவதற்கு ஒப்பானதாம்.

 (திருநாங்கூரில் உள்ள 11-திருப்பதிகளில், இந்த ஆலய திருமால், ஶ்ரீரங்கத்திலிருந்து வந்த பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள்)

கணவன் மனைவி கருத்தொற்றுமை கூடவும்,(இழந்த)அரசு பதவிகள் உட்பட செல்வாக்கு சிறப்புக்கள் கிடைக்கப்பெறவும்

இத்தலத்தில் வீற்றிருக்கும் செங்கண்மால் ரங்கநாதப் பெருமாள் தம்பதியினரை வழிபடுகின்றனர்).

🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக:








கனவில் பிறந்த உத்தரவு

 கனவில் பிறந்த உத்தரவு!

சங்கர மடத்திற்குச் சொந்தமான வீடு ஒன்று, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் அருகில் இருக்கிறது. ஒருசமயம், வரதராஜருக்கு திருவிழா நடந்தபோது, பெரியவர் அந்த வீட்டில் தங்கியிருந்தார். மிக முக்கிய விழாவான கருட சேவையன்று, பெருந்திரளாக பக்தர்கள் கூடுவர். அப்போது வெளியூரில் இருந்து வருவோருக்கு சித்ரான்னங்கள் வழங்கினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் பெரியவருக்குத் தோன்றியது.

மடத்தின் ஸ்ரீகார்யத்தை(திருப்பணி செய்பவர்) அழைத்து, ""கருடசேவை தரிசனம் பண்ண வெளியூர் பக்தர் நிறைய வருவா! அவாளுக்கு ஏதானும் சித்ரான்னம் செய்து விநியோகம் பண்ணா நன்னாயிருக்கும். குறைஞ்சது 20 ஆயிரம் பொட்டலத்திற்கு ஏற்பாடு செய்யணும்!'' என்றார்.

ஸ்ரீகார்யம் உணவு தயாரிப்பதில் இருக்கும் சிரமத்தை எல்லாம் எடுத்துச் சொன்னார். உடனடியாக வேலையாட்கள், இடம் எல்லாம் தேடிப்பிடிக்க முடியாது என்று தயங்கினார். இதைக் கேட்ட பெரியவர், "சரி பார்க்கலாம்' என்று சொல்லி மவுனமாகி விட்டார்.

.கருடசேவையன்று, சென்னையைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர், காலை 11.00 மணிக்கு காஞ்சிப்பெரியவர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், சாம்பார்சாதம் என சித்ரான்னம் கட்டிய பொட்டலங்கள் பார்சலாக அவர் வசம் இருந்தது. இது கண்ட ஸ்ரீகார்யத்திற்கு மனதில் ஒரே ஆச்சரியம்!

அந்த பணக்காரரிடம், ""நீங்கள் எதற்காக இந்த பொட்டலங்களை இங்கு கொண்டு வந்திருக்கிறீர்கள் ?'' என்று கேட்டார். அவரோ, ""காஞ்சிப்பெரியவா கனவில வந்து, இது மாதிரி கொண்டு வரச்சொல்லி உத்தரவு போட்டார்'' என்று விளக்கம் அளித்தார்.

கனவில் அவர் சொன்னபடியே, தான் சென்னையில் இருந்து சமையல் கலைஞர்களை காஞ்சிபுரத்திற்கு அழைத்து வந்ததாகவும், காஞ்சிபுரம் காந்தி ரோட்டிலுள்ள, லட்சுமி டாக்கீஸ் மைதானத்தில் சமையல் ஏற்பாடுகளைச் செய்து உணவுகளைத் தயார் செய்ததாகவும், வரதராஜர் கருடசேவையில் தரிசிக்கும் பக்தர்களுக்கு அதை வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

""காஞ்சிப் பெரியவரின் தெய்வீகத் தன்மையை எடுத்துரைக்க வார்த்தைகள் ஏதுமில்லை"" என சங்கர மடத்தின் ஸ்ரீ கார்யம் வியந்தார்.

ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் பகுதி 9

 ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் பகுதி 9

(By Venkatesan Varadharajan 6381369319)

ஶ்ரீகூர்மம்

இத்தலம் அமைய காரணம். ஸ்வேதபுரத்து அரசர் ஸ்வேதனின் மனைவி விஷ்ணுப்ரியா திருமாலின் பக்தை. அவள் ஒரு ஏகாதசி திதியன்று பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது ஸ்வேத மன்னன், மனைவியை தாம்பத்யம் வைத்துக் கொள்ள அழைத்தான். அதற்கு அவனது மனைவி தான் விரதம் என்று தெரிந்தும் மன்னன் இப்படி நடந்து கொள்கிறாரே! விரத பங்கம் ஒரு பக்கம்; பதி விருப்பத்தை நிறைவேற்றாத பாவம் ஒரு பக்கம். என்ன செய்வது? ‘மாதவா நீயே கதி’ என்று திருமாலை மானசீகமாகப் பிரார்த்தனை செய்தாள். அப்போது திடீரென தம்பதியிடையே ஒரு நதி பிரவாகமாக ஓடியது.

அதைக் கண்டு திடுக்கிட்ட மன்னன், அப்போதும் தாபம் குறையாமல், ‘‘மாதவா! நான் இந்த ஆற்றைக் கடக்க, என்னைத் தாங்கிச் செல்லும் கூர்மமாகத் தாங்கள் வரவேண்டும்’’ என வேண்டினான். அப்படியே திருமாலும் கூர்மமாக மாறி நதியில் மிதந்து வர, பளிச்சென்று மன்னனுக்கு ஞானம் பிறந்தது. அந்த அவதாரத் திருவுருவிலேயே திருமாலுக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். பெருமாள் மிதந்து வந்த நதி சுருங்கி ஸ்வேத புஷ்கரணியாயிற்று. அத்தலம் ஸ்வேதபுரம் ஸ்ரீகூர்மம் எனப் பெயர் பெற்றது.

ஸ்வேத மன்னனுக்கு அருளிய திருமால், இத்தலத்தில் கூர்மநாயகித் தாயாருடன் கூர்மநாதராக அருள்புரிகிறார். திருமுகத்தில் திருநாமம் வெள்ளித் தகட்டிலும் விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்ராமத்தாலும் அமையப் பெற்று அதிரூப லாவண்யத்தோடு தரிசனமளிக்கிறார். பஞ்சலிங்க ஆத்மஸ்தலம் எனும் பெயரையும் இத்தலம் பெற்றது குறிப்பிடத்தக்கது

விசாகப்பட்டினம் நகரில் இருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீகாகுளத்தை அடைந்து, அங்கிருந்து நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீகூர்மம் ஊருக்கான கிளைச்சாலை பிரியும். அதனுள் 3 கி.மீ. தொலைவு பயணித்தால் ஸ்ரீகூர்மநாதர் ஆலயத்தை அடையலாம். ஸ்ரீகாகுளத்தில் இருந்து அடிக்கடி நகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

முதலில் இயற்கையாக, படிவுப்பாறையான, ஒரு ஆமையினையே விக்கிரகமாகக் கொண்டு வழிபட்டனர். பிரம்மா, கோபால யந்திரத்தைப் பதித்து, அவ்விக்கிரகத்தை ஸ்தாபித்ததாக உள்ளது. அதாவது, இது மந்திர-தந்திர-யந்திர வழிபாடு நடந்ததைக் காட்டுகிறது. இப்பகுதிகளில் ஆரம்பகால நூற்றாண்டுகளில் ஜைன-பௌத்தர்களின் ஆதிக்கம். இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இக்கோவிலில் இருந்து  வந்துள்ளது. சிவனை வழிபட்டவர்கள், இதனை குமரேஸ்வரர் என்றழைத்தனர். 

திருப்பதியில் மாயனின் மாயலீலைகள் புரிந்து நிலை நாட்டிய இராமானுஜரின் இத்தலத்து லீலைகளை பார்ப்போமா?



அதிசய பனைமலை ஆலயம்

 *`ஜாதகத்தினை அம்பாள் முன்வைத்து வழிபட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் திருமணம் நிச்சயமாகும்

அதிய பனைமலை ஆலயம் !'*

(பல இணையதள முகவரிகளில் படித்த தகவல்களை தொகுத்து நீண்ட பதிவாக இட்டுள்ளேன்.பொறுமையாக படிக்கவும்)

இந்த அதிசிய தலம் எங்கு உள்ளது,அதன் சிறப்புகள் என்ன? என்ற விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படி என்றால் இந்த அதிசிய தலம் நோக்கி நமது பயணத்தை தொடருவோம்!

அந்தத் தலம் பனைமலை என்றும் விழுப்புரம் - செஞ்சி சாலையில் உள்ளது என்றும் அது ஒரு மலைத்தலம். ஈசனின் லிங்கத்திருமேனி, குகைபோன்ற பாறை இடுக்குகளில் அருளும் அம்மன், பழைமை மாறாத ஆலயம் எனக்கேள்விபட்ட கணத்திலிருந்தே அவற்றை தரிசிக்கும் ஆர்வம் அதிகரித்தவண்ணம் இருந்தது. 

கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பரந்து விரிந்த பச்சை கம்பளி போன்ற வயல்வெளி. நெல்நடவு செய்யப்பட்டிருந்தது. 

தூரத்தில் மலைத் தொடர் காட்சிகளும், அங்கிருந்து வீசும் குளிர்காற்றும் நம்மை வரவேற்கின்றன. 

பனி பொழியும் காலமாக இருந்ததால், நடவுகளில் பனி ஒரு மகுடம் போல ஒட்டிக்கொண்டிருந்த காட்சி, மகிழ்ச்சியின் உச்சத்துக்கே நம்மைக் கொண்டு செல்கிறது. .

விழுப்புரம் - செஞ்சி சாலையில், மாத்தூர் வழியே உட்புறமாகச் செல்கிறது ஒரு சாலை.

அதில் சுமார் 9 கி.மீ கடந்து சென்றதும் பனைமலை மேல் உள்ள ஆலய தரிசனம் கிடைக்கிறது.

குன்றின் அடிவாரத்தில், வலதுபுறமுள்ள குன்றில் முழுமுதற் கடவுளான
விநாயகரின் உருவம் புடைப்புச் சிற்பமாக விளங்கும்சந்நிதி உள்ளது. 

விநாயகரின் மகுடம், அங்குசம், பாசம் யாவும் சாய்வான மலையில் செதுக்கப்பட்டுள்ளதால் இவர் சற்று வித்தியாசமாகத் தோற்றமளிக்கின்றார். 

இந்த விநாயகர் தம் இரண்டு கால்களையும் குத்திட்டு அமர்ந்துள்ள பாவனையில் திகழ்கிறார். 

அவரை வணங்கி வழிபட்டு, அருகிலிருக்கும் படிகளின் மீது ஏறத் தொடங்குவோம். 

பாறைகளைச் செதுக்கி படிகள் அமைத்துள்ளனர். 

மலையேறும் வழியில் ஆங்காங்கே சிறு சிறு சுனைகள்.

குன்றின் கிழக்கு திசையில் விவசாயநிலங்கள், வடகிழக்கு திசையில் பிரமாண்ட ஏரி. 

அதன் பின்புலத்தில் மலைத் தொடர்கள் என இயற்கை அங்கு கண்ணுக்கு விருந்து படைக்கிறது. 

இத்தகைய எழிலார்ந்த சூழலில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் மற்றும் கயிலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஜசிம்மன் எனப்படும் இரண்டாம் நரசிம்ம பல்லவனே இந்த ஆலயத்தையும் எழுப்பியிருக்கிறான். 

இந்த ஆலயம் சுமார் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. 

ஆலயத்தின் பழைமை தெரியாமல் இன்றும் கம்பீரமாய்க் காட்சி தருகிறது ஆலயம்.

கோயில் அமைப்பு:

கோயிலின் தெற்கு மண்டபம் கம்பீரமாக வரவேற்கின்றது. 

உண்ணாழி (கர்ப்பக்கிரகம்), 

அர்த்த மண்டபம், முன்மண்டபம், மகாமண்டபம், 

திருச்சுற்று மண்டபம், சிற்றாலயங்கள் என்று இக்கோயில் அமைந்திருக்கிறது. 

தூண்கள் கீழ்ப்புறம் செவ்வக வடிவிலும், மேற்பகுதி சதுர வடிவிலும் இடைப்பகுதி சதுரம், பட்டைகள் கொண்டு நிற்கின்றன

ஆலயத்தின் வாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 

ஆலயத்தின் பிரமாண்டமான மகா மண்டபத்தில் 108 தூண்கள். 

அவை வெறும் தூண்கள் அல்ல. அத்தனையும் கலைப் பொக்கிஷங்கள். 

அனைத்துத் தூண்களிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டு காண்பவர் 
கவனத்தைக் கவர்கின்றன.

ராஜ சிம்ம பல்லவன் கட்டிய அருள்மிகு குன்றுடை(றை) நாதர் சிவன் கோயில்கிழக்கு, வடக்குப் பகுதிகளில் உள்ளன. 

வடக்கே 18 தூண்களும் கிழக்கே 10 தூண்களும் மண்டபத்தைத் தாங்குகின்றன. 

பிற்காலச் சோழர்கள் உருவாக்கிய மண்டபங்கள் இவை. 

தூண்களில் விநாயகர், ரிஷபாருடர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

சுற்று மண்டபத்தின் ஈசான்ய மூலையில் தெற்கு நோக்கிப் பைரவர் சிலையும், மேற்கு நோக்கிச் சூரியன் சிலையும், நடுவில் நவகிரகங்கள் அமைந்த மேடையும் காணப்படுகின்றன. 

கிழக்குச் சுற்று மண்டபத்தில் இறைவனைப் பார்த்த நிலையில் பலிபீடம், 
நந்தி உள்ளன. 

கொடி மரத்திற்குரிய துவாரம் மேல்தளத்தில் காணப்படுகின்றது

ராஜ சிம்ம பல்லவன் கட்டிய அருள்மிகு குன்றுடை(றை) நாதர் சிவன் கோயில், முன் மண்டபத்திலிருந்து தனித்துக் காணப்படுகிறது. 

இறைவனைக் காண அர்த்தமண்டபம் நுழைவதற்கு ஏதுவாக, முன் மண்டபத்திலிருந்து இணைப்பாக நான்கு கருங்கல் பலகைகள் பாவப்பட்டிருக்கின்றன. 

அஸ்த தாளாம்பிகை

இறைவனார் கோயில் தனித்தும் அதனைச் சுற்றி நீராழி மண்டப அமைப்பும் தென்படுகின்றன. 

நீராழி, முன்மண்டபத்தைப் பிரித்துக் காட்டுகிறது. 

அர்த்த மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும், நேராக கர்ப்பக்கிரகத்தில் மிகப் பெரிய,பதினாறு பட்டை வடிவச் சிவலிங்கத்தையும், ஆவுடையாரையும் தரிசிக்கலாம். 

மிக அழகிய, பளபளப்பான கரியநிறக் கருங்கல்லில் சிவலிங்கம். செதுக்கப்பட்டு ஒளிவீசிக் கொண்டிருக்கிறது  

அர்த்த மண்டப பக்கச் சுவர்களில், வலது பக்கம் திருமால்-மகாலட்சுமி, இடது பக்கம் நான்முகன்-கலைமகளும் இரு தம்பதியரும் அமர்ந்த கோலத்தில் இறைவனின் பார்வையில் படுமாறு மிக நேர்த்தியாக சுவரில் செதுக்கப்பட்டு பொலிகின்றனர்

ஆலயத்தின் வடக்கு திசையில் இரண்டு லிங்கங்களும், தெற்கு திசையில் இரண்டு லிங்கங்களும், முருகன் சந்நிதிக்கு அருகில் ஒரு லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்த லிங்கத் திருமேனிகள் 16 பட்டைகள் கொண்ட தாரா லிங்கங்களாகக் காட்சி தருகின்றன. 

இத்தகைய தாரா லிங்கங்களை தரிசனம் செய்வது மிகவும் விசேஷம் என்கிறார்கள் அடியார்கள். 

மேலும் சற்று சிதிலமடைந்த நிலையில், வழக்கமான வடிவில் ஒரு லிங்கமும் இங்கு உள்ளது.

முழுக்க முழுக்க கருங்கற்களால் எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தின் சதுர வடிவக் கருவறையில் கிழக்கு நோக்கி அருள்மிகு தாளகிரீஸ்வரர் அஸ்த தாளாம்பிகை உடன் இங்கு அருள் பாலிக்கிறார்.

தாளகிரீஸ்வரரை வேண்டிக்கொண்டால் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும், நிலம் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு உரிய தீர்வும் விரைவில் கிடைக்கும் என்கிறார்கள் அடியார்கள்.

அ/மி தாளகிரீஸ்வரர் காலையில் பச்சை நிறம் மாகவும் மாலையில் பொன் நிறமாகவும் மாறும் அதிசயத்தை இங்கு காணலாம்.  

முற்காலங்களில் இப்பகுதி பனைமரங்கள் சூழ்ந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும். 

`தாளம்' என்றால் பனை. பனை மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு மலைமீது குடி கோயில்கொண்டுள்ள இறைவன் என்பதால், இவருக்கு தாளகிரீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள் பக்தர்கள். 

ஆனால், இவ்வூரை மலைகள், குன்றுகள் சூழ்ந்துள்ளன. அவை உருண்டைக் கற்களை குவித்து வைத்ததுபோல், ஒரே கல்லால் மிகவும் பருத்தும், பெரியதாகவும், உயர்ந்தும் காணப்படுவதால், இதனைப் ‘பணைமலை’ என்றே குறிப்பிடுகின்றனர்.

கோயில் மகாமண்டபத்தின் இடப்புறத்தில் கிழக்கு சந்நிதியில் முருகப்பெருமானும் 

வடகிழக்குத் திசையில் தென்திசை நோக்கியவாறு தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பிகையும் அருள்பாலிக்கின்றனர்.

அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் அம்மன் திருவுரு காட்சியளிக்கின்றது. 

அம்மனை ‘அஸ்த தாளாம்பிகை’ என்று போற்றுகிறார்கள். 

அம்மனின் மேற்கைகள் அங்குசத்தையும், பாசத்தையும் தாங்கியுள்ளன.

கீழ் வலக்கை அபய முத்திரை, கீழ் இடதுகை வரத முத்திரை காட்டுகின்றன. 

அம்மன் திருமுகம் அன்றலர்ந்த தாமரைப் போலக் கோடி சூரியப் பிரகாசமாய் மின்னுகின்றது

இங்கு அன்னை ‘அஸ்த தாளாம்பிகை’ என்றும் ‘தாள கிரீஸ்வரி’ என்றும் அழைக்கப்படுகிறாள். 

திருமணமாகாதவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து தங்களின் ஜாதகத்தினை அம்பாள் முன்வைத்து வழிபட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் திருமணம் நிச்சயமாகும் என்கிறார் இந்த ஆலயத்தின் அர்ச்சகர் காசி சிவாசார்யர்

மகா மண்டபத்தின் வாயிலில் விநாயகரும், ஆறுமுகனும் சந்நிதி கொண்டருள்கிறார்கள். 

இங்கு பைரவர், சனிபகவான், சூரிய பகவான், சந்திரபகவான் ஆகியோரும்  சந்நிதி கொண்டு அருள்கின்றனர். 

தனியாக ஒரு நவகிரக சந்நிதியும் இங்கு உள்ளது. .

சிறப்பு மிக்க குகை துர்கை சந்நிதி

ஆலய தரிசனம் முடிந்து கீழே இறங்கி வருகையில், வலப் புறமாகச் செல்லும் படிகளின் வழி இறங்கினால் சிறுகுகை போன்ற அமைப்பை அடையலாம். 

குகை நுழைவிலேயே பலிபீடம், யானை, சூலம் ஆகியவை காணப்படுகின்றன. 

இக்குகைக் கோயிலிலுள்ள இறைவியை துர்க்கை, கொற்றவை, மகிஷாசுரமர்த்தினி என்று போற்றி மக்கள் வழிபடுகிறார்கள்.

துர்க்கை அன்னை, தலையில் ராசகிரீடம் புனைந்து எட்டுத் திக்குகளையும் எட்டுக் கரங்களாகக் கொண்டு, இடது மேல் கரத்தில் தண்டம் (வில்) பிடிக்க, மற்ற கைகள் சங்கம், கேடயம் ஏந்தியும், நான்காவது கை தண்டத்தை அணைத்தவாறு அன்னையின் இடது தொடைமீது படிந்துள்ளது.

வழக்கமாக எல்லா ஆலயங்களிலும் துர்கை சூலம் ஏந்தியிருப்பாள். 

ஆனால் இங்கோ அன்னையின் நான்காவது கரத்தில் தண்டமே காணப்படுகிறது. 

இந்த அன்னை, தன் வலது காலைத் தரையில் ஊன்றியும், இடது காலை 

சிம்மத்தின் மீது வைத்தும், எட்டு கரங்களுடன் வீராவேசமாகக் காட்சி கொடுக்கிறாள்.

அம்மனின் வலது மேற்கைகள் சக்கரம், பெருவாள் பிடித்தும், ஒரு கை கடக முத்திரையோடும், மற்றொரு கையைத் தன் இடைமீது கடிகஸ்தமாகவும் வைத்திருக்கிறாள். 

காதுகளில் தடித்த குழைகளும், கழுத்தில் மங்கல அணியும், மேற்கையில் தோள்வளையும், மார்பில் மேலிருந்து கீழாக நூலாடையும், முன்கையில் கைவளையும், இடையில் கச்சையும், இடையின் முன் இடைவாரும், பக்கங்களில் ஆடையும், காலில் பாத சரமும் கொண்டிருக்கிறாள். 

அம்மனைத் தாங்கும் சிம்மம், முன்பக்க இடது காலைத் தரையில் ஊன்றி, முன் வலது காலை மேலே தூக்கிச் சற்றே சாய்ந்த நிலையில், கம்பீரமாகச் சிலிர்த்தெழுவதுபோலக் காட்சியளிக்கின்றது.

(இந்த அன்னையின் படம் கீழே!)

இந்த அன்னையின்  திருமுகத்தில் வெற்றிப்புன்னகை தவழ்கிறது. 

இந்த அன்னையை வேண்டிக்கொண்டால் நம் துன்பங்கள் எல்லாம் பறந்துஓடும் என்கிறார்கள் பக்தர்கள்.

இந்த அன்னைக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் ராகுகாலத்தில் மட்டுமே பூஜைகள் நடைபெறுகின்றன. 

இந்த ராகுகால பூஜையில் கலந்துகொண்டு மூன்று வகையான எண்ணெய் கலந்து 11 விளக்குகள் ஏற்றி அன்னையை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது இங்கு வந்து தரிசனம் செய்யும் மக்களின் நம்பிக்கை.

இந்த துர்கை சந்நிதியில் வழிபட்டு குழந்தை பாக்கியம் வேண்டும் தம்பதிகளுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்பதும் கண்கூடு” என்கிறார் காசி சிவாசார்யர்.

இந்தஆலயத்தின் காசி சிவாசார்யர் இந்த ஆலயத்இல் நடைபெற்று வரும் பூஜைகள், திருவிழாக்கள் பற்றி மேலும் கூறுகிற தகவல்கள் கீழே!

“தற்போது இந்த ஆலயத்தில் ஒரு  கால பூஜை மட்டுமே நடந்து வருகிறது. 

சிவராத்திரியன்று மட்டும் நாலு கால பூஜை நடைபெறும். 

இவை தவிர்த்து மாதம்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி மற்றும் ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகியன சிறப்பாக நடைபெறும்.

காணும் பொங்கலன்று இங்கு நடைபெறும் பாரிவாட்டம் விசேஷமானது. 

இந்த விழாவின்போது பனைமலை,பேட்டை, துத்திப்பட்டி, சித்திரசுவர், அனந்தபுரம், காந்தி நகர் எனச் சுற்றியுள்ள 6 ஊர்களுக்கும் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளித் திரும்புவர்.

பக்தர்கள் பலரும் ‘ஓம் நமசிவாய’ என 108 துண்டு சீட்டுகளில் எழுதி அதை மாலையாகத் தொடுத்து ஈசனுக்கு சாத்தி வழிபடுகிறார்கள். 

இவ்வாறு செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஆலயத்தை பற்றி கல்வெட்டுகள் சொல்லும் செய்தி...

இங்கு பிரதான ஆலயத்திலும் துர்கை யின் சந்நிதியிலும் கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. 

இதுகுறித்துக் கல்வெட்டு ஆய்வாளர் ரமேஷ் கூறியுள்ளதாவது.

“இந்தக் கோயிலில் காணக்கிடைக்கும் கல்வெட்டுகளின் மூலம் இந்த ஆலயம் இரண்டாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது என்பதை அறியமுடிகிறது. 

இயற்கையாக அமைந்த குகையில், துர்கையின் சிற்பத்தைத் தனி பலகையில் வடித்து உள்ளே பிரதிஷ்டை செய்துள்ளனர். 

துர்கையின் சிற்பம் தாய் பாறையில் வடிக்கப்படவில்லை.

இங்குள்ள கல்வெட்டில் இரண்டாம் நரசிம்ம பல்லவனுடைய இயற்பெயர்களான ராஜசிம்மன், ரணஜயன், சித்திரக்கார்முகன், சிவனைத் தன் தலையில் சூடியவன் ஆகியவை பல்லவர்கால கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. 

இந்தக் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து வடிவம் தெளிவாகவும், பறவைகளை போன்ற வடிவிலும் பொறிக்கப் பட்டுள்ளன.

இங்குள்ள விநாயகர் சிற்பம் மட்டும் பிற்காலத்தைச் சேர்ந்தது.

தாளகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் பல்லவர்கால கிரந்த எழுத்து வடிவிலும், சம்ஸ்கிருத மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளன. 

‘பரத்வாஜர், அஸ்வத்தாமன் வழிவந்த வம்சாவழியினர்’  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இங்குள்ள தாரா லிங்கங்கள் ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உயர்ந்த ரக கறுப்புக் கற்களினால் செய்யப்பட்டவை” என்கிறார் ரமேஷ்.

சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் புராதனப் பெருமைகளில் ஒன்று, இங்கு காணப் படும் 1,300 ஆண்டுகாலப் பழைமை வாய்ந்த ஓவியம். 

ஆலயத்தின் வடமேற்கில் காணப்படும் அழகும் நுட்பமும் வாய்ந்த இந்த ஓவியத்தில் எழில்மிகு சோமாஸ்கந்தர் காட்சிகொடுக்கிறார்.

காலத்தின் தொன்மை காரணமாக ஓவியம் சற்று அழிந்திருந்தபோதிலும் அதன் அழகும் கலையும் நம்மைக் கவர்கின்றன. 

சிவபெருமான் நடனமாட, பார்வதிதேவி அதைக் காண்பதுபோல ஓவியத்தில் காணப்படுகிறது. 

இந்த ஓவியம் நீலம், சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பச்சை போன்ற வண்ணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்லவர்காலச் சுவர் ஓவியம் என்பது மிகவும் அரிதான ஒன்று. 

அதனால்தான் இந்திய தொல்லியல்துறை இதை தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.

வாய்ப்புக்கிடைக்கும்போது, நீங்களும் பனைமலை சென்று வாருங்கள். 

அருள்மிகு தாளகிரீஸ்வரரின் திருவருள் ஸித்திக்கும். அம்பிகையின் அருளால் உங்களின் எதிர்காலம் சிறக்கும்.

நீண்ட காலமாக திருமணம் நடைபெறால் திருமணத்தடை உள்ளவர்கள் கட்டாயம் இந்த ஆலயத்திற்கு சென்று தங்களது ஜாதகத்தை தாளகிரீஸ்வரி அன்னையின் பாதத்தில்

வைத்து மனதார வழிபட்டு  மூன்று மாதங்களுக்குள் திருமணத்தை நிச்சயம் செய்து கொள்ளுங்கள்.

இந்த ஆலயத்திற்கு எப்படிச் செல்வது?: 

விழுப்புரம் - செஞ்சி சாலையில், மாத்தூர் வழியே 9 கி.மீ பயணித்தால் பனமலை தாளகிரீஸ்வரர் கோயிலை அடையலாம். 

பேருந்து வசதிகள் உண்டு (தொடர்புக்கு: காசி சிவாசார்யர் - 80568 63301).



ராமாநுஜரும் கூரத்தாழ்வாரும் வழி பட்ட மிக புராதன ஆலயம்

 ராமாநுஜரும் கூரத்தாழ்வாரும் வழி பட்ட மிக புராதன ஆலயம்.

(பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்)

சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் ஸ்வாமி ராமாநுஜரும் அவரின் முதன்மைச் சீடர் கூரத்தாழ்வாரும் அன்றைய கால கட்டத்தில் அங்கிருந்தோரின் எதிர்ப்பையும் சூழ்ச்சியையும் சமாளித்து விசிஷ்டாத்வைதக் கோட்பாட்டை நிலைநாட்டினார். கல்விக்கு தேவதையான ஸ்ரீ சரஸ்வதி தேவியே ராமானுஜரை மெச்சி ஸ்ரீ பாஷ்யகாரர் என்னும் பட்டம் சூட்டியுள்ளார்.

ராமானுஜரின் மானசீக குரு ஶ்ரீ ஆளவந்தார் தம் காலத்தில் நிறைவேற்ற முடியாத 3 ஆசைகளை ராமானுஜர் முடித்து வைக்கப் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டார். முதல் ஆசையான வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்துக்கு விரிவான வியாக்யானம் எழுத வேண்டும். அதை மிக விரைவில் முடிக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். பிரம்ம சூத்திரத்துக்கு ஏற்கனவே போதாயான மஹரிஷி என்னும் வேதவியாஸரின் சிஷ்யர் எழுதியுள்ள போதாயன விருத்தி என்னும் பாஷ்யத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தார். போதாயன விருத்தி மூலம் 2 லட்சம் படிகளை உடையது. ஆனால் அந்தக் கிரந்தம் எங்கும் கிடைக்க வில்லை. அதனுடைய சுருக்கம் ஒன்று காஷ்மீரத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். காஷ்மீரில் இருந்த சுருக்கம் 25000 படிகளை மட்டுமே கொண்டது. உடனே கூரத்தாழ்வாருடன் ஶ்ரீரங்கத்திலிருந்து காஷ்மீருக்குப் புறப்பட்டார். மூன்று மாதங்கள் நடந்து சென்று காஷ்மீரை அடைந்தனர்.

காஷ்மீர் மன்னரிடம் அங்குள்ள சரஸ்வதி பீடத்தில் வைக்கப் பட்டிருக்கும் போதாயன விருத்தி கிரந்தத்தைத் தருமாறு கேட்டார். மன்னர் இசைந்தாலும் அங்கிருந்த பண்டிதர்கள் ஒரு முறை மட்டுமே படிக்க அனுமதித்தனர். ராமானுஜர் கூரத்தாழ்வாரை அரசவையில் படிக்கச் சொல்லிக் கேட்டார். மன்னர் நீங்கள் கேட்டதின் சாராம்சத்தை எழுதிக் கொடுங்கள் அதை சரஸ்வதி தேவி ஒப்புக் கொண்டால் நீர் கிரந்தத்தை எடுத்துச் செல்லலாம் என்றார். ராமானுஜர் அப்பொழுதே சாராம்சத்தை மட்டுமல்லாது தமது தத்துவார்த்த விளக்கத்தையும் ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொடுத்தார். மன்னர் அந்த ஓலைச்சுவடியை சரஸ்வதியின் காலடியில் சமர்ப்பித்து கோவிலைப் பூட்டி விடும்படி பணித்தார். மறுநாள் காலை மன்னர் பண்டிதர்கள் ராமானுஜர் கூரத்தாழ்வார் ஆகியோர் கோவிலைத் திறந்து பார்த்த போது சரஸ்வதியின் திருவடியில் வைத்த ராமானுஜரின் ஓலைச்சுவடிகள் சரஸ்வதியின் திருமுடியில் இருந்தது கண்டு அனைவரும் பிரமித்தனர்.

மன்னர் மிக வியந்து ராமானுஜரின் மகத்துவத்தை உணர்ந்து அவருக்குத் தண்டம் சமர்ப்பித்து கிரந்தத்தை ராமானுஜர் எடுத்துச் செல்வதற்கு அனுமதித்தார். ஆனால் அங்கிருந்த பண்டிதர்கள் ராமானுஜர் புதிய விளக்கவுரை எழுதினால் தங்கள் முக்கியத்துவம் பறி போய்விடும் என்று அஞ்சினர். எனவே ராமானுஜரும் கூரத்தாழ்வாரும் திரும்பிச் சென்ற வழியில் ஒர் இரவு தங்கியிருந்த இடத்திலிருந்து அந்த ஓலைச் சுவடிகளைக் கவர்ந்து கொண்டு சென்று விட்டனர். 

சுவடிகளைப் பறிகொடுத்த ராமானுஜர் கலக்கமடைந்து கூரத்தாழ்வாரிடம் இனி என்ன செய்வது? என்று சோகப்பட கூரத்தாழ்வார் ஸ்வாமி அடியேன் ஒரு முறை படித்து விட்டதால் அப்படியே பதத்துக்குப் பதம் நினைவிருக்கிறது இங்கேயே சொல்லவா? ஸ்ரீரங்கத்தில் சொல்லவா என விண்ணப்பித்தார். எத்தகைய சீடரைப் பெற்றிருக்கிறோம் என்று பெருமைப்பட்டார் ராமானுஜர். 

ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்த பின் பிரம்ம சூத்திரத்திற்கு அற்புதமான வியாக்யான உரை எழுதி முடித்தார். ராமானுஜர் சொல்லச் சொல்ல கூரத்தாழ்வார் ஓலைச் சுவடிகளில் எழுதினார். அந்த உரையே ராமானுஜர் இயற்றிய கிரந்தங்களில் மிக முக்கியமான ஶ்ரீ பாஷ்யம் எனப்படுகிறது.

ராமாநுஜர் தம் இரண்டாவது காஷ்மீர் விஜயத்தில் ஶ்ரீ சரஸ்வதி தேவியைச் சேவிக்க சரஸ்வதி பீடத்துக்குச் சென்றார். அவரை சரஸ்வதி தேவியே பீடத்திலிருந்து இறங்கி வந்து வரவேற்றார். இவரது ஸ்ரீபாஷ்ய கிரந்தத்தைத் தம் சிரசால் வகித்து தன் கையை நீட்டி உடையவர் திருக்கையைப் பிடித்துக் கொண்டு போய் இது பிரஷிப்தமன்று சுத்தமாயிருந்தது என்று அங்கீகரித்து இவருக்கு ஶ்ரீ பாஷ்யகாரர் என்று திருநாமம் சாத்தினார். மேலும் ஶ்ரீ சரஸ்வதிதேவி தாம் வணங்கி வந்த லக்ஷ்மிஹயக்கிரீவர் விக்ரகத்தையும் ராமானுஜருக்குத் தந்தருளினார்.

இந்த வைபவத்தைக் கேள்வியுற்ற காஷ்மீர் மன்னர் ராமானுஜரின் பரம சீடராகி அவருடைய அருளுரைகளைத் தினமும் கேட்டு வந்தார். இதனால் பொறாமையடைந்த அரசவைப் பண்டிதர்கள் மந்திர தந்திரங்களால் ராமானுஜரைக் கொல்லத் தீர்மானித்து அதற்கான ஷூத்ர ஜபங்களில் இறங்கினார்கள். ஆனால் விபரீதமாக சூன்யம் வைத்தவர்கள் மீதே ஷூத்ர தேவதைகள் திரும்ப அரசவைப் பண்டிதர்கள் திடீரெனத் தெருக்களில் பைத்தியக்காரர்களாக நிர்வாணமாகத் தலை முடியைப் பிய்த்துக் கொண்டு ஓடினார்கள். ஒருவர் கழுத்தை இன்னொருவர் பிடித்துப் புரண்டனர்.

இதைப் பார்த்த மன்னர் ராமானுஜர் திருவடிகளில் தண்டனிட்டு இந்த அபராதிகளை மன்னித்து அருளவேண்டும் என்றார். மன்னா அடியேன் இவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஷீத்ர தேவதைகளை இன்னொருவர் மீது ஏவும் போது அணுக

வேண்டியவர் அவை அணுக முடியாத சுத்தன் ஆக இருந்தால் அவைகள் ஏவியவர் மீதே திரும்பி விடும் என்றார். ராமானுஜர் மன்னரின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் மீது தம் ஶ்ரீபாததீர்த்தத்தைப் புரோஷிக்க அவர்கள் சித்த ஸ்வாதீனமடைந்து உடையவரைச் சரணடைந்தனர். ராமானுஜரைக் கண்டு பிரமிப்பும் மரியாதையும் அடைந்த மன்னர் அவருக்கும் அவருடன் வந்த சீடர்களுக்கும் உயர்ந்த மரியாதைகள் செய்து அவர்களுடன் பல மைல்கள் நடந்து வந்து வழியனுப்பி வைத்தார்.

சரஸ்வதி கோவில் (சாரதா பீடமும் இது தான்) இன்றைய நிலை சரஸ்வதி கோவில் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதியில் நீலம் நதிக்கரையில் சாரதா என்னும் குக்கிராமத்தில் (ஶ்ரீநகரிலிருந்து 70 மைல்-கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில்)மிகச் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. பூஜைகள் ஆராதனைகள் எதுவும் நடைபெறுவதில்லை. 2007 ல் பாகிஸ்தான் அரசின் அனுமதி பெற்று இங்கு சென்ற காஷ்மீர் பண்டிதர்களையும் கோவில் வளாகத்துள் விடவில்லை. பண்டைக் காலத்தில் இந்த ஊர் பெரு நகரமாக சர்வ ஞான பீடம் ஆகத் திகழ்ந்தது. இங்கிருந்து சாரதா பண்டார் என்னும் நூல் நிலையம் உலகின் மிகப் பெரிய நூல் நிலையமாக பல அரிய ஓலைச் சுவடிகளின் பெட்டகமாகத் திகழ்ந்தது. 

பல நாடுகளிலிருந்தும் பல சமயங்களைச் சேர்ந்த அறிஞர்களும் பண்டிதர்களும் இங்கு வந்து ஞானம் பெற்றுச் சென்றுள்ளனர். ஆன்மீகம் அறிவுடமை அமைதி விளைந்த மண் உலகமே நிமிர்ந்து பார்த்த உன்னத இடம் வேதத்தை எதிர்ப்போர் பயங்கரவாதிகள் மண்டிக் கிடக்கும் இடமாக மாறி விட்டது. 

காஷ்மீர் மீண்டும் பழைய பொலிவுடன் கலாசார பீடமாக மலர ஶ்ரீ லக்ஷ்மிஹயக்கிரீவரையும் ஶ்ரீ சரஸ்வதி தேவியையும் ஸ்ரீராமாநுஜரையும் நெஞ்சம் நெகிழப் பிரார்த்திப்போம்.

Wednesday, February 24, 2021

மசாலா_பொடிகள் எப்படி செய்வது

#மசாலா_பொடிகள் சிலவற்றை எப்படி செய்வது என்று செய்து பார்ப்போம்

1. #சாம்பார் பொடி...

2. #வத்தக்குழம்பு பொடி

3. #கரம் மசாலா பொடி

4. #கொத்தமல்லி இலை பொடி

ஸ்5. #பஜ்ஜி போண்டா ரெடி மிக்ஸ்

6. #லெமன் ரைஸ் லெமன் சேவை ரெடி மிக்ஸ்

7. #பருப்பு உசிலி ரெடி மிக்ஸ்.....

💖பெண்களைவிட ஆண்கள் அதிக விருப்பத்துடன் சமையல் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள்.🤩

#சாம்பார் பொடி...

#தேவையானபொருட்கள்....

மிளகாய் வத்தல் - 1/4 கிலோ, தனியா - 1/4 கிலோ, சீரகம் - 100 கிராம், கடலைப்பருப்பு - 25 கிராம், துவரம்பருப்பு - 25 கிராம், வெந்தயம் - 25 கிராம்

#செய்முறை...

மிளகாய் வத்தலை வெயிலில் 4 மணி நேரம் வெயிலில் காயவைக்கவும். மீதி பொருள்களை லேசாக வறுக்கவும்.வத்தல் காய்ந்ததும் எல்லா பொருள்களையும் ஒன்றாக சேர்த்து மிசினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இது தான் எனது சாம்பார் பொடி....

#வத்தக்குழம்பு பொடி

#தேவையானபொருட்கள்...

மிளகாய் வத்தல் -100 கிராம்,மல்லி - 150 கிராம்,சீரகம் - 50 கிராம்,மிளகு - 25 கிராம்,கடலைப் பருப்பு - 25 கிராம்,வெந்தயம் - 25 கிராம்,கறிவேப்பிலை - 1 கப்

#செய்முறை....

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், மல்லி, மிளகு, கடலைப்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் தனித்தனியே போட்டு மிதமான சூட்டில் வைத்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.

அடுப்பை ஆப் பண்ணி விட்டு கடாயில் இருக்கும் சூட்டில் கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.

சீரகத்தை வறுக்க தேவை இல்லை. அதை வறுத்த பொருள்களுடன் சேர்த்து கலந்து விட்டு அனைத்தையும் ஆற விடவும்.

ஆறிய பின் மிசினில் கொடுத்து அரைத்து கொள்ளவும். இது தான் வத்தக்குழம்பு பொடி....

#கரம் மசாலா பொடி

#தேவையானபொருட்கள்....

பெருஞ்சீரகம் (சோம்பு) - 100 கிராம்,பட்டை - 10 கிராம்,கிராம்பு - 10 கிராம் ,அன்னாசிப்பூ - 10 கிராம் 

ஏலக்காய் - 10 கிராம்

#செய்முறை....

எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும்.

அல்லது அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.

நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் திரிக்கவும்.இது தான் கரம் மசாலா பொடி....

#கொத்தமல்லி இலை பொடி

#தேவையானபொருட்கள்.....

கொத்தமல்லி - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் வற்றல் - 5, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

#செய்முறை....

கொத்தமல்லி இலையை ஆய்ந்து சுத்தம் செய்து துணியில் போட்டு நிழலில் உலர்த்தி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். கொத்தமல்லி இலையை சூடான வெறும் கடாயில் போட்டு எடுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கும் பொடியை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். இதுதான் பச்சை கொத்தமல்லி இலை பொடி.

#குறிப்பு...

இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சைட் டிஷ் ஆக தொட்டு சாப்பிடலாம். கொத்தமல்லி கிடைக்காதபோது இந்த ரெடி மிக்ஸை ரசம், சாம்பாருக்கு போடலாம்.

#பஜ்ஜி போண்டா ரெடி மிக்ஸ்

#தேவையானபொருட்கள்....

கடலைப்பருப்பு - 500 கிராம், பச்சரிசி - 50 கிராம், மிளகாய் வற்றல் - 5, உப்பு - தேவையான அளவு.

#செய்முறை....

கடலைப்பருப்பு, பச்சரிசி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து மெஷினில் அரைத்து வாங்கி, அதில் தேவையான அளவு உப்பு கலந்து டப்பாவில் போட்டு வைக்கவும். இதுதான் பஜ்ஜி - போண்டா ரெடி மிக்ஸ்.

பஜ்ஜி தேவைப்படும்போது, தேவை யான அளவு ரெடி மிக்ஸுடன் ஒரு சிட்டிகை சோடா உப்பு, ஒரு டீஸ்பூன் மைதா சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். பஜ்ஜி செய்யும் விதத்தில் நறுக்கிய வாழைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், பெரிய பச்சை மிளகாய், காலிஃப்ளவர் எது தேவையோ அதை பஜ்ஜி மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு, வெந்து பொன்னிறம் ஆனதும் திருப்பிவிட்டு, பிறகு எண்ணெய் வடித்து எடுக்கவும்.

போண்டா என்றால்... நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை கரைத்து வைத்த மாவில் கலந்து உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

#லெமன் ரைஸ் லெமன் சேவை ரெடி மிக்ஸ்

#தேவையானபொருட்கள்....

லெமன் சால்ட் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 6, பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை. இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

#செய்முறை....

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும். பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில், பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை - இஞ்சியை மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும். லெமன் சால்ட், உப்பையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி பொடியாக்கி எடுக்கவும். இதில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கலந்தால்... லெமன் ரைஸ் - லெமன் சேவை ரெடி மிக்ஸ் தயார்.

லெமன் சாதம் / லெமன் சேவை தயாரிக்க வேண்டும் என்றால், சாதம் / சேவையில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து, தேவையான அளவு ரெடி மிக்ஸ் போட்டு லேசாக கலந்து மூடி வைத்து, 5 நிமிடம் கழித்து பரிமாறலாம். சிப்ஸ், வடாம் இதற்கு சரியான சைட் டிஷ்.


#பருப்பு உசிலி ரெடி மிக்ஸ்.....

#தேவையானபொருட்கள்

 துவரம்பருப்பு - ஒரு கப், மிளகாய் வற்றல் - 4.

#செய்முறை....

துவரம்பருப்புடன் மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக மெஷினில் அரைத்து வாங்கவும் (மிக்ஸியிலும் அரைத்து எடுக்கலாம்). இதுதான் பருப்பு உசிலி ரெடி மிக்ஸ்.

தேவைப்படும்போது பருப்பு உசிலி மிக்ஸில் தண்ணீர் தெளித்து பிசிறி 30 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... 

பிசிறி வைத்த பருப்பு உசிலி மிக்ஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். பருப்பு வெந்ததும் வேக வைத்த காய்கறியை தண்ணீர் வடித்து சேர்த்து, சூடுபட கிளறி இறக்கவும்.

#குறிப்பு.... கொத்தவரங்காய், பீன்ஸ், வாழைப்பூ, கோஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி பருப்பு உசிலி செய்யலாம்.

https://chat.whatsapp.com/ElAwFnIUujXHhJ7GVLrlFd

✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

சிதம்பரம் தில்லை காளியம்மன் ஆலயம்

 தில்லை காளியம்மன் ஆலயம்

சிதம்பரத்தில் இரண்டு முக்கியமான ஆலயங்கள் உள்ளன. அனைவரும் அறிந்தது சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயமே. ஆனால் அந்த தில்லை நடராஜர் ஆலயத்துக்குச் செல்பவர்கள் அந்த ஆலயத்தில் இருந்து அரை கிலோ தொலைவில் உள்ள தில்லை காளியம்மனையும் தரிசிக்காமல் வந்தால் தில்லை நடராஜரை தரிசித்தப் பலன் கிடைக்காது  என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சிதம்பர ஆலயத்தில் இருந்து இடதுபுறமாகச் சென்று முதலில் வரும் இடது திருப்பத்தில் திரும்பி நேராகச்  சென்றால் அந்த சாலையின் இறுதியில் தில்லை காளியம்மன் ஆலயம் உள்ளது. அது மட்டும் அல்ல அந்த தில்லை காளியம்மன் வரக் காரணமாக இருந்த   இரண்டு முனிவர்களான ‘ஆனந்தீஸ்வரர்’  மற்றும் ‘இளமையாக்கினார்’  போன்றவர்களின் சமாதிகளும் அந்த ஊரில் எங்கோ உள்ளது என்றும், அங்கும் போய் அவர்களை தரிசிப்பது இன்னும் விசேஷம் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த முனிவர்களின்  சமாதி உள்ள இடம் எனக்கு கிடைக்கவில்லை. தில்லை காளியம்மன்  ஆலயத்தின்  வரலாறு மற்றும் மகிமைகள்  என்ன ?  இனி படியுங்கள்.

சில காலத்துக்குப் பின்னால் நடக்க இருந்த ஒரு சம்பவத்தில் பார்வதியே வேறு அவதாரம் எடுத்து ஒரு அரக்கனை அழிக்க வேண்டும். அந்த அரக்கனை பார்வதியால் மட்டுமே அழிக்க முடியும் என்பது தேவ விதியாக இருந்தது. ஆகவே பார்வதி சிவபெருமானை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றால் பார்வதி உக்ரக குணத்தைக் கொண்டு அந்த அவதாரத்தை எடுக்க முடியாது.

மேலும் பார்வதி முன்னர் ஒரு கட்டத்தில் பெற்று இருந்த சாபத்தினால் சிவபெருமானை பிரிந்து சில காலம் வாழ வேண்டும்.  இவை அனைத்தையும் அந்த ஈசன் அறிந்து இருந்தார். ஆகவே அதற்காக அவர் ஒரு நாடகத்தை நடத்தத் துவங்கினார்.

அதற்கேற்ப ஒரு முறை தேவ  லோகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்படுகின்றது.  அது நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை  சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக  கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சாபம் தந்து விடுகிறார்.

சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத  பார்வதி அழுது புலம்பி தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொண்டப் பின் சாப விமோசனம் பெற்று மீண்டும் அவரை எப்படி அடைவது எனக் கேட்க அதற்கு சிவபெருமான் கூறினார் “இன்னும் சிறிது காலத்தில்  அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ  இதே காளி உருவில் தேவர்களுக்காக போரிட்டு அசுரர்களை அழிப்பாய். அப்போது நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். அப்போது ஒரு கட்டத்தில்  உன்னுடன் சேர்ந்து நடனமாடி உன்னை என்னுடன் மீண்டும் அழைத்துக் கொள்வேன்”.

காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களை துன்புறுத்தி  வரலானான். தேவர்களும் ரிஷி முனிவர்களும் மும்மூர்த்திகளிடம்  சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர்.  அவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் ஆலோசனைக் கேட்க அவர் காளி உருவில் இருந்த பார்வதியை  அதற்கு அனுப்பினார்.

காளி உருவில் இருந்த பார்வதி யுத்தகளத்துக்குச் சென்றாள். தாரகாசூரனையும் அவன் சேனையும் அழித்தப் பின் வெற்றி அடைந்தாள். ஆனால்  அவனை வெற்றி கொண்டபின்னும் அவள் கோபம் அடங்கவில்லை. வெறியாட்டம் போல ஊழித்தாண்டவம் ஆடத் துவங்கினாள்.

தாரகாசுரன் அழிந்தாலும் முனிவர்களின் தொல்லை தொடர்ந்தது. அவர்கள் சிவபெருமானிடம் மீண்டும் சென்று வேண்டினார்கள். அனைவரும் சிவபெருமானையே மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைவது காளிக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவளுக்கு சிவபெருமான் மீது கோபம் ஏற்பட்டது.

அவரை  விட தானே பெரியவள் என முன்னர் கொண்டு இருந்த எண்ணம் இன்னமும் குறையவில்லை.  வெறியும் அடங்கவில்லை. அவளுடைய உக்ரஹத்தினால்  அனைத்து முனிவர்களும் ரிஷிகளும் சொல்லொண்ணத் துயருக்கு  ஆளாகினார்கள்.

அந்த நேரத்தில் அங்கு இருந்த வியாக்கிரபாதர்  மற்றும் பதஞ்சலி முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் அவர்களுக்கு தில்லையில் திருநடனக் காட்சி தந்தார். அதை மெச்சி அனைவரும் அமர்ந்து இருந்த வேலையில் காளி சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள்.

போட்டியில் யார் தோற்றாலும்  அந்த ஊரின் எல்லைக்கு சென்று விட வேண்டும் என்பது நிபந்தனை. நடனம் துவங்கியது. அனைத்து தேவர்களும் கடவுட்களும் இசை ஒலிகளை எழுப்ப காளி மற்றும் சிவபெருமானின் நடனப் போட்டி  தொடர்ந்தது. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது சிவபெருமான்  ஊர்த்துவத் தாண்டவம்  என்பதை ஆடிக் காட்டினார். அதில் அவர் தனது காலால் கீழே விழுந்த குண்டலத்தை எடுத்து காலை மேலே தூக்கி தனது காதில் அணிந்து கொள்ள அதே  ஊர்த்துவத் தாண்டவத்தை பெண்ணான காளியினால் செய்ய முடியாமல் நாணம் தடுத்தது.  பெண்ணினால் எப்படி காலை மேலே தூக்கிக்  காட்டுவது? அதனால் போட்டியில் தோற்றுப் போனாள்.

சிவபெருமான் காலை  மேலே  தூக்கி  ஆடிய  ஊர்த்துவத் தாண்டவம்

போட்டியில் தோற்று போனதும் அவமானம் அடைந்தவள் ஊர் எல்லைக்குச் சென்று உக்ரஹமாக வட எல்லைக் காளியாக அமர்ந்தாள். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். சக்தி இல்லையேல் சிவனும் இல்லை.  இருவரும் இணைந்து இல்லாதவரை  பிரபஞ்சம் எப்படி இயங்கும் என கவலைப்பட அனைத்து தேவர்களும், மகாவிஷ்ணுவும் பிரும்மாவும் ஒன்று சேர்ந்து  காளியிடம் சென்று அவளை சாந்தமடையுமாறு  வேண்டிக் கொண்டனர்.

பிரும்மா அங்கேயே அமர்ந்து கொண்டு காளியை புகழ்ந்து வேதங்களை ஊதி அவளை பூஜிக்க    அவர் பூஜையை ஏற்றுக் கொண்ட காளி  பிரும்மசாமுண்டேஸ்வரி  என்ற பெயரால் நான்கு முகம் கொண்ட சாந்தநாயகி  ஆகி  அதே இடத்தில் இன்னொரு  சன்னதியில் சென்று அமர்ந்தாள்.

ஆக அந்த ஆலயத்தில் ஒரு சன்னதியில் உக்ரஹ காளி தேவியாக பல ஆயுதங்களையும் ஏந்திய  எட்டுக் கைகளைக் கொண்ட தில்லைகாளியாகவும்  இன்னொரு சன்னதியில் சாந்தமான  நான்கு முக பிரும்மசாமுண்டேஸ்வரி அம்மனாகவும் காட்சி தந்தவாறு பக்தர்களை ரட்சித்து வருகிறாள்.

காளி சொரூபத்தில் உள்ளவள் பில்லி சூனியப் பேய்கள், சினம், பகை, கொடிய வியாதிகள், ஆணவம், அகம்பாவம் போன்றவற்றை அழித்து வருகிறாள். சாந்தமான  பிரும்மசாமுண்டேஸ்வரி கல்வி, ஐஸ்வர்யம் , வீரம் போன்ற அனைத்தையும் அளித்து வருகிறாள்.

தில்லை காளியம்மன்

இந்த ஆலயத்தை பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அதாவது  1229 AD மற்றும் 1278 AD ஆண்டுகளில் கோபெருங்ஜிங்கன்    என்ற மன்னன் கட்டினான் என்று தெரிகின்றது. அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த பழக்கத்தின்படி போரில் வெற்றி அடைவதற்காக தமது தலையையே தருவதாக வேண்டிக் கொண்ட படையினர் சிலர் போர்களில் வெற்றிப் பெற்றப் பின் அங்கு வந்து தமது தலைகளையே வெட்டிக் கொண்டு மரணம் அடைந்ததாக வாய்மொழிக் கதைகளும் உள்ளதாம்.

ஆலயம் மிகப் பெரியது அல்ல ஆனால் மிகப் பழமையானது.  உள்ளே நுழைந்ததும் வலது பக்கத்தில் உள்ள தனி சன்னதியில் ஆனந்த நர்த்தனமாடும் விநாயகரும், இடதுபுற தனிச் சன்னதியில்  முருகனும் கிழக்கு திசையை நோக்கிப் பார்த்தவாறு இருந்து கொண்டு பக்தர்களை காத்து அருளுகிறார்கள்.  முதல் மண்டபமான தியான மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும்  அலுவலக அறைகள் உள்ளன.

தியான மண்டபத்தில்  பக்தர்கள் நெய் விளக்குகளை ஏற்றி தேவிகளை ஆராதிக்க விளக்கு  பீடமும் வைக்கப்பட்டு உள்ளது.  அடுத்த மண்டபத்தில் உள்ள   சன்னதிகளில்   நாம்  காணுவது  கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அமர்ந்து உள்ள தில்லைக் காளி அம்மனும்  மேற்கு நோக்கி அமர்ந்து உள்ள பிரும்ம சாமுண்டியும் ஆவர்கள்.

அவர்கள் அங்கு அமர்ந்தவாறு பக்தர்களை ரட்சித்து  கொண்டு உள்ளனர். அந்த மண்டப  நுழை வாயிலில்  இருபுறமும்  பிரும்மாண்டமான காவல் தேவதைகள்  நின்று கொண்டு உள்ளார்கள். சுவறுகளில் சில கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

பிரும்ம சாமுண்டி

தில்லை காளியம்மனுக்கு வெள்ளைப் புடவையை மட்டுமே சாத்துகிறார்கள்.  தினமும் அவளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மட்டுமே நடைபெறுகின்றது. காளி சாந்தம் அடையக்கூடாது என்பதற்காக உஷ்ணம் தரும் எண்ணையான நல்லெண்ணை மட்டுமே உபயோகிக்கின்றார்களாம்.  உடம்பு முழுவதும்  மஞ்சளினால் ஆன குங்குமம் கொட்டப்பட்டு ( அதைக் காப்பிடுதல் என்று கூறுகிறார்கள்)  வெள்ளைப் புடவையால் உடல் மறைக்கப்பட்டு உள்ளது.

கண்கள் மட்டும் ஜொலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தில் காட்சி தருகின்றது.  தில்லை காளியை    அந்த கோலத்தில்  மட்டுமே தரிசிக்க முடிந்தது. (படத்தைப் பார்க்கவும்). அவள் சன்னதிக்கு பக்கத்திலேயே அவளை ஆராதித்து  தீபம் ஏற்றி  வேண்டிக்  கொள்ள   விளக்கு  பீடமும் வைக்கப்பட்டு உள்ளது.  அந்த சன்னதியில் தில்லை காளியை தரிசிப்பவர்கள் கண்டிப்பாக அவள் உக்ரஹமான கண்களை உற்று நோக்கி அவளை வேண்டிக் கொண்டால்தான் பலன் உண்டு.

ஆனால்  அதற்கு மாறாக  பிரும்ம சாமுண்டிக்கோ அனைத்து விதமான அலங்காரங்களும் செய்யப்பட்டு தேன், பால், போன்ற அபிஷேகங்களும் செய்யப் படுகின்றனவாம்.

வெள்ளைப் புடவையால் உடல் மறைக்கப்பட்டு,உடம்பு முழுவது குங்குமத்தினால் காப்பிடப்பட்டு (மூடப்பட்டு ), கண்கள்  வெள்ளை பொட்டினால் பளபளத்த நிலையில்காட்சி தந்து கொண்டு இருந்த தில்லைக் காளி அம்மன் அவள் சன்னதிக்கு பக்கத்தில் சுமார் ஆறு அல்லது ஐந்து அடி  உயரமும்    நான்கு அல்லது ஐந்து அடி சுற்றளவும் கொண்ட  மிகப் பெரிய நாகதேவர் சிலை உள்ளது. காளியை வணங்கியப் பின் அவரையும் வணங்க வேண்டுமாம். அதன் பக்கத்திலேயே போர் வீரர்கள் தமது தலைகளை வெட்டிக் கொண்டு பலி தந்தக் காட்சியைக் காணலாம்.

மேலும் அந்த சன்னதிக்குள் அனைத்து பகுதிகளிலும் பைரவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர்  போன்றவர்களும் காட்சி தருகிறார்கள்.

ஆலய விலாசம்
ஆலய நிர்வாக அதிகாரி,
அருள்மிகு தில்லை  காளியம்மன் ஆலயம் ,
சிதம்பரம், கடலூர் மாவட்டம்,
தமிழ்நாடு,
தொலைபேசி எண்:- 04144-230251

தொடர்ப்பு கொள்ள இ மெயில் முகவரி: info@thillaikali.com

பழைய சீவரம் ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோயில்

 சென்னைக்கு அருகில் செங்கல்பட்டு அடுத்த பழைய சீவரத்தில் உள்ளது ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோயில். செய்யாறு, பாலாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகளின் சங்கமத்தில் ஆற்றங்கரையையொட்டியே இந்த ஆலயம் கம்பீரமாக அமைந்துள்ளது. இந்த கோயிலில், கையில் சங்கு, சக்கரம் இருப்பதால் விஷ்ணு ரூபமாகவும், தலையில் ஜடாமுடியும், நெற்றிக்கண்ணும் இருப்பதால் சிவரூபமாகவும், கையிலும், திருவடியிலும் தாமரை புஷ்பம் இருப்பதால் பிரம்மரூபமாகவும் வெங்கடேச பெருமாள் காட்சி தருகிறார்.

பெருமாளின் திருமார்பில் அலமேலு மங்கை ஒரு புறமும், பத்மாவதி தாயார் மறு புறமும் உள்ளனர். நாச்சியார், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு தனிக்கோயில்கள் உண்டு.

மேலும் தாயார் அலமேலு மங்கை, ஆண்டாள், சக்கரத்தாழ்வார், கருமாணிக்க வரதர் மற்றும் கர்ண குண்டல அனுமார் சன்னதியும் இங்கு உள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயம் வரலாற்று சிறப்புக்கும் உரியதாகும். முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறொன்றிற்கும் அவன் தலைவணங்கவில்லை என்று தண்டன் தோட்டம் பட்டயம் கூறும் நந்திவர்ம பல்லவன் ஆண்ட காஞ்சியின் கிழக்கு திசையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் அருகே இரு குன்றுகளுக்கு இடையே பாய்ந்தோடும் நதி, முப்புறமும் பச்சைப்பசேல் என திகழும் வயல்வெளிகள் என உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ள இயற்கை எழில் எல்லோரையும் மயங்க வைப்பதாகும்.

தொண்டைமான் சக்ரவர்த்தி, திருப்பதி சீனிவாச பெருமாள் மீது அளவுகடந்த பக்தி கொண்டு நாட்டை மகனிடம் ஒப்படைத்து விட்டு திருப்பதி செல்கிறார். அப்போது பெருமாள் அசரீரி குரலில் நாட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு மன்னனுக்கு கூறுகிறார். அதனை பொருட்படுத்தாமல் சீனிவாச பெருமாள் வசம் சரணாகதி அடைந்தார் மன்னன். அப்போது சீனிவாச பெருமாள் தன் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை அனுப்பி தொண்டமானின் நாட்டை காப்பாற்றினார்.

அதன் பின் திருப்பதி செல்லும் போது பெருமாளின் சங்கு, சக்கரம் திருமுக்கூடல் ஆலயத்திலேயே தங்கி விட்டது. அதனால் தான் இன்றும் அந்த கோயில் சங்கு, சக்கரம் மட்டும் தனியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அப்பன் வெங்கடேச பெருமாள் :

பிறகு பெருமாளின் கட்டளைக்கு இணங்க தொண்டமான் சக்கரவர்த்தி திருமுக்கூடலுக்கு திரும்பி அப்பன் சீனிவாச பெருமாளை வணங்க வந்தார். அப்போது சயன கோலத்தில் இருந்த பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் வடிவமாக ஒன்று கலந்து ஓருருவில் காட்சி கொடுத்தார். அதை பார்த்த தொண்டமான் சக்கரவர்த்தி, அப்பன் வெங்கடேசா என்று பெருமாளை கட்டித்தழுவி கசிந்துருகி வேண்டினர்.

அதனால் தான் இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு பிருகு முனிவரின் தவத்திற்கு பெருமாள் காட்சி அளித்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.

ஒப்பிலியப்பன் போல் பெருமாளின் திருவடியில் பூமாதேவியும், மார்க்கண்டேயனும் இங்கு தவம் செய்கிறார்கள். திருப்பதி சீனிவாச பெருமாளின் கையில் உள்ள சங்கு சக்கரமும் இங்கு உள்ளது.

இத்தலத்தின் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு என்னவென்றால் இங்கு உறையும் பெருமாள் மார்க்கண்டேயனுக்கு நாதனாகவும், பூமாதேவிக்கு கண்ணனாகவும், காஞ்சியை ஆண்ட தொண்டைமானுக்கு திருப்பதி சீனிவாச பெருமாளாகவும் காட்சி கொடுத்தார் என்பதே.

கடன் தொல்லை தீர :

இங்குள்ள ஆஞ்சநேயர் கர்ணகுண்டல ஆஞ்சநேயராகவும் திருக்கோலம் பூண்டுள்ளார். இவருக்கு வடமாலைக்கு பதிலாக தென்குழல் மாலை சாற்றப்படுகிறது. இவரை வணங்கினால் கடன் தொல்லை நீங்கி செல்வ வலம் பெரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்பன் வெங்கடேசனை தொழுதாலும் கடன் சுமைகள் தீரும் என்பது ஐதீகம்.

63 நாயன்மார்களில் ஒருவரான அப்பரும் (திருநாவுக்கரசர்) பழைய சீவர பெருமானை நெக்குருகி புகழ்ந்து பாடியுள்ளார். ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் என்று அப்பரால் அழைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலின் ஸ்தல விருட்சம் வன்னிமரம். சந்தன மரம் ஆகும்.

108 திவ்யதேசங்கள் - பதிவு 80 வைகுண்ட நாதர் திருக்கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 80 🌹🌹🌹


தன் பக்தனுக்காக திருடன் வடிவில் அரண்மனைக்குச் சென்ற பெருமாளாம் இந்த "கள்ளபிரான்" பெருமாள் அருள்புரிந்து ஆசி வழங்கும் அற்புதத் திவ்யதேசம்.

நவதிருப்பதி என்றழைக்கப்படும் நவக்கிரகங்களுடன் தொடர்புடைய திருத்தலங்களில் இன்று நாம் முதலாவதாக பார்க்கப்போவது சூரியனுக்குரிய தலம்.

அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோவில் :-

திரு ஸ்ரீவைகுண்டம்
மூலவர்: ஸ்ரீ வைகுண்ட நாதன், கள்ளப்பிரான்
தாயார்: வைகுந்தவல்லி, பூதேவி
உற்சவர்: கள்ளப்பிரான்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: சந்திர விமானம்
தீர்த்தம்: பிருகு தீர்த்தம், தாமிரபரணி ஆறு, கலச தீர்த்தம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ வைகுந்தவல்லீ ஸமேத ஸ்ரீ கள்ளப்பிரான் ஸ்வாமிநே நமஹ
ஊர்: ஸ்ரீவைகுண்டம்

🌺🌺 தலவரலாறு:-

வைகுண்ட வாசனான இறைவன் நாராயணன் திருவருள் பேர் வேண்டிய பிரம்மாவிற்கு அத்தகைய வைகுண்ட காட்சியையே பூமியில் தந்து அருளிய அற்புதத் தலம் இதுவாகும்.

ஒருமுறை பிரம்மா குடிகொண்டுள்ள சத்யலோகம் முதல் பூவுலகம் வரை அனைத்திலும் பிரளய வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

சோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்த படைப்புத் தொழில் செய்வதற்குத் தேவைப்படும், சிருஷ்டி ரகசிய கிரந்தங்கள் அடங்கியுள்ள ஏடுகளை பலவந்தமாகப் பறித்துச் சென்றான். இதனால் படைப்புத்தொழில் நின்று போனது.

மனம் வருந்திய பிரம்மா, இறைவன் நாராயணரை வேண்டி பூலோகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி கொடுத்த இறைவன், அசுரனை அழித்து கிரந்தங்களை மீட்டுத் தந்தார்.

பிரம்மாவின் வேண்டுதலுக்காக வைகுண்ட வாசனே இங்கு எழுந்தருளியதால் இத்தல இறைவன், "வைகுண்ட நாதர்" என்ற திருநாமம் பெற்றார். இத்தலமும் திருவைகுண்டம் என்று பெயர் பெற்றது.

🌺🌺 கள்ளபிரான் பெயர்க்காரணம்:-

அது என்ன பெருமாளின் திருநாமம் இங்கு கள்ளபிரான்? ஏன் அந்த பெயர் பெருமாளுக்கு வந்தது என்று நாம் காரணம் அறிய வேண்டாமோ இல்லையா? பெயர்க்காரணம் அறிந்திடலாம் இதோ தொடர்ந்து படியுங்கள்.

இத்தல இறைவன் ஸ்ரீவைகுண்ட நாதர் பக்தனான காலதூசகன் என்ற திருடன், தான் திருடியதில் பாதியை கோவில் சேவைக்கும், மீதியை தான, தர்மங்கள் செய்யவும் செலவிட்டான்.

ஒருசமயம் மணப்படை என்ற ஊரில், அரண்மனை பொருட்களைத் திருடச் சென்ற போது, காலதூசகனுடன் சென்றவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதனால் அரண்மனை சேவகர்கள் காலதூசகனைத் தேடி வந்த வேளையில், இத்தலத்து பெருமாளே, திருடன் வடிவில் அரண்மனைக்குச் சென்றார்.

மன்னன் முன் நின்ற "பக்தர்களின் மனதைக் கவரும் கள்வன், மணிவண்ணன், பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனான இறைவன்", தனக்கு பணப்பற்றாக்குறை இருப்பதால் திருடுவதாகக் கூறினார்.

ஒருவனுக்கு பணப்பற்றாக்குறை இருக்கிறதென்றால், அந்நாட்டு மன்னனின் ஆட்சி சரியில்லை என்று அர்த்தம். தன்னிடம் பொருள் இல்லாததால் தான் திருடியதாகக் கூறி அறநெறிகளை அரசனுக்கு உபதேசம் செய்தார்.

இதைக்கேட்ட மன்னர் திடுக்கிட்டு, ஒரு திருடனால் இப்படித் தைரியமாகப் பேசமுடியாது எனப் புரிந்து கொண்டு, இங்கே வந்திருக்கும் தாங்கள் யார்? என்று கேட்டார்.

பிரம்மானுக்குத் தன் திருக்கோலத்தைக் காட்டிய இந்த வைகுண்ட வாசன், மன்னருக்குத் தன் சுயரூபம் காட்டி அருளினார்.

எம்பெருமான் கள்ளனாக வந்து அறநெறிகளை உபதேசித்ததால் இத்தல இறைவனுக்கு "கள்ளபிரான்" என்று மற்றொரு திருநாமமும் உண்டானது.

🌺🌺 நவதிருப்பதிகள்:-

108 திவ்யதேசங்களில் 9 திவ்யதேசங்கள் "நவதிருப்பதிகள்" என்றும், இத்தல பெருமாள் நவக்கிரகங்களுடன் தொடர்புடையதாக கருதியும், வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர். அதில் ஸ்ரீவைகுண்டம் திருத்தலம் "சூரியனுக்குரிய தலமாக" வழிபடப்படுகிறது.

சூரியன் - ஸ்ரீவைகுண்டம்
சந்திரன் - திருவரகுணமங்கை (நத்தம்)
அங்காரகன் - திருக்கோளூர்
புதன் - திருப்புளியங்குடி
குரு - திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
சுக்கிரன் - தென்திருப்போரை
சனி - திருக்குளந்தை (பெருங்குளம்)
ராகு - திருத்தலைவில்லி மங்கலம் (இரட்டை திருப்பதி)
கேது - திருத்தலைவில்லி மங்கலம் (இரட்டை திருப்பதி)

🌺🌺 மங்களாசாசனம் :-

இத்தல பெருமாளை நம்மாழ்வார் 2 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

"புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து
வைகுந்தத்துள் நின்று தெளிந்த
என் சிந்தை அகங்கழியாதே என்னை யாள்வாய்
எனக்கருளி நளிர்ந்த சீருலகம்
மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம்
போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே!!!"

- நம்மாழ்வார்.

விளக்கம் :-

நம்மாழ்வார் தனது பாசுரத்தில், "புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று" என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

"பசியாக இருக்கும் ஒருவர் சமையல் முடியும் வரையில், படுத்திருந்து காத்திருப்பார். பசி கூடும் போது, ஆர்வத்தில் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் முடிய இன்னும் தாமதமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். அவர் பக்தியில் உயர்நிலை அடையும் வரையில் முதலில் புளியங்குடியில் கிடந்தும், (படுத்த கோலம்), பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இத்தலத்தில் நின்றும் காட்சி தருகிறார்" என வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப் பெருமாள், நம்மாழ்வாரின் பாசுரத்திற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்.

🌺🌺 வழித்தடம் :-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தின் அருகாமையிலேயே இத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வேலியிருந்து 31 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திருநெல்வேலி - திருச்செந்தூர் இரயில் மார்க்கத்தில் ஸ்ரீவைகுண்டம் இரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

அருள்மிகு வைகுண்டநாதர் திருவடிகளே சரணம்.
அருள்மிகு வைகுண்டவல்லி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோவில் - திருவரகுணமங்கை திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

108 திவ்யதேசங்கள் - பதிவு 79 தோதாத்ரிநாதன் திருக்கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 79 🌹🌹🌹


எல்லாத் திருக்கோவிலிலும் ஒரு சுயம்பு மூர்த்தியைத் தான் நாம் தரிசித்திருப்போம். ஆனால் இங்கு 11 சுயம்பு மூர்த்திகள் காட்சி தந்து அருள்கிறார்கள்.

இத்தகைய அற்புதமான திருக்கோலத்தை இங்கு மட்டுமே நாம் தரிசிக்க முடியும். தரிசிக்க செல்லலாமா?

அருள்மிகு தோதாத்ரிநாதன் திருக்கோவில்:-
திருவரமங்கை (என்ற) வானமாமலை
மூலவர்: தோதாத்ரிநாதன்
தாயார்: ஸ்ரீவரமங்கை தாயார், ஸ்ரீதேவி, பூதேவி
உற்சவர்: தெய்வநாயகன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: நந்தவர்தன விமானம்
தீர்த்தம்: இந்திர, சேற்றுத்தாமரை தீர்த்தம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்

நாமாவளி: ஸ்ரீ ஸ்ரீவரமங்கை நாச்சியார் ஸமேத ஸ்ரீ தோதாத்ரி தெய்வநாயாகாய

ஊர்: நாங்குநேரி, வானமாமலை

🌺🌺 நாங்குநேரி :-

திவ்ய நாத மூர்த்தியாம் திருமால், தனது திருமார்பில் திருமகள் தாயாருக்காக இடமளித்தார். அத்தகைய மகத்தான வரம் பெற்ற அன்னை, திருவரமங்கை என்ற திருநாமத்தில் இத்தலத்தில் குடிகொண்டுள்ளார்.

தாயாரின் திருநாமத்திலேயே இத்தலம் "திருவரமங்கை" என பெயர் பெற்று விளங்குகிறது.

இத்தலத்திற்கு வானமாமலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. அக்காலத்தில் இவ்விடம் வனங்களும், மலைகளும், சூழ்ந்த பகுதியாக இருந்ததனால் "வானமாமலை" எனப் பெயர் பெற்று அதுவே பிற்காலத்தில் வானமாமலை என்ற ஆனதாகக் கூறப்படுகிறது.

மேலும், இவ்வூருக்கு நாங்குநேரி என்ற பெயரும் உண்டு. அக்காலத்தில் இவ்வூரைச் சுற்றிலும், நான்கு ஏரிகள் இருந்ததாகவும், அதனால் "நான்கு ஏரி"எனப்பெயர் பெற்று அதுவே பிற்காலத்தில் "நாங்குநேரி" என்று ஆனதாகக் கூறப்படுகிறது.

🌺🌺 தலவரலாறு :-

கிருதயுகத்தில் தட்ச பிரஜாபதி என்பவருக்கு கதறு, வினதை என்று பெயர் கொண்ட இரண்டு மகள்கள் இருந்தனர். இவ்விருவரையும் கஸ்யப முனிவர் மணந்து கொண்டார்.

ஒருநாள் கஸ்யபர் தனது சிருஸ்டியால் பிள்ளை வரம் கொடுக்க வந்த போது உங்களுக்கு எத்தகைய பிள்ளைகள் வேண்டும் என்று கேட்டார்.

ஆனால் ஒரு நிபந்தனை, முட்டையிட்டு தான் குஞ்சு பொரிக்க வேண்டும் என்றார். அதற்கு கதறு, ஏராளமான பிள்ளைகள் வேண்டும் என்றாள்.

உடனே பாம்புகள் பிள்ளையாக பிறக்கும்படி வரமளித்தார். அவ்வாறு ஆயிரக்கணக்கான முட்டைகள் இட்டு ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்கோடகன் போன்ற ஏராளமான பாம்புகளைப் பெற்றாள்.

பின்பு வினதையிடம் கேட்ட போது, விவேகமுள்ள பிள்ளைகள் இரண்டு இருந்தால் போதும் என்றாள். உடனே இரண்டு முட்டைகளை தருகிறார். பேர் சொல்லும் பிள்ளையாக பிறப்பார்கள், ஆனால் முட்டை பொரிக்கும் வரை அமைதி காக்க வேண்டும் என்று கூறி சென்றார்.

500 ஆண்டுகள் காத்திருந்தும் முட்டை பொரியவில்லை. பொறுமையை ஒழந்த வினதை அவசரத்தில் ஒரு முட்டையை உடைத்தாள். பலவந்தமாக பிரசவித்த பிள்ளை, கால் ஊனமான நிலையில் வந்தது.

உடனே அப்பிள்ளை "அவசரத்தில் என்னை ஈன்று என்னை குறைமகன் ஆக்கியதால் நீ அடிமையாக வாழக் கடவது", என்று சபித்தது.

பிள்ளையைப் பார்க்கும் ஆவலில், தாய்மை உணர்வின் காரணமாகவே இவ்வாறு செய்ததாக கூறி கதறி அழுதாள். அப்போது உண்மையை உணர்ந்த அப்பிள்ளை இரண்டாவது முட்டை பொரியும் வரை பொறுத்திருக்கும்படி வேண்டியது.

மேலும், அப்பிள்ளை அடிமைத் தலையில் இருந்து விடுவிக்கும் என்று சாப விமோசனம் அளித்தது. ஊனமுள்ள அப்பிள்ளைக்கு அருணன் என்று பெயர் வைத்தனர். அவன் ஊனமானவன் ஆயினும், வலிமையுள்ளவன் என்பதால் சூரிய பகவானின் தேர் ஓட்டுகின்ற சாரதியாக பிரம்மா நியமித்தார். இந்த அருணனே சூரிய பகவானின் சாரதி ஆவார். இதன் காரணமாகவே இன்றும் சூரிய உதயத்திற்கு பிறகு அருணோதயம் வருகிறது என்பர்.

அடுத்த முட்டை பொரிக்க அதிலிருந்து கருடன் உதித்தான். அத்தகைய மகத்துவம் வாய்ந்த வலிமை பொருந்திய கருடனையே திருமால் தனது வாகனமாகக் கொண்டுள்ளார்.

இறைவனுக்கு வாகனமாகும் பாக்கியத்தை இத்தலத்தில் தான் கருடன் பெற்றதாகத் தலவரலாறு கூறுகிறது.

🌺🌺 ஒன்பது பேர் காட்சி:-

ஒவ்வொரு தலத்திலும் ஒரு மூலவமூர்த்தி மட்டுமே இருப்பார். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் தோதாத்ரி நாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேர்கள் காட்சி தருகின்றனர்.

🌺🌺 சிறப்புகள்:-

மூலவர் தோதாத்ரிநாதன், ஸ்ரீ தேவி, பூமிதேவி, சூரியன், சந்திரன், பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை என ஒன்பது பேர்களுடன் காட்சி தரும் திருத்தலம்.

திருமகள் பிராட்டி வரமங்கை தாயார் என்ற திருநாமத்தில் காட்சி தரும் அற்புதத் திவ்யதேசம்.

நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 11 சுயம்பு மூர்த்திகள்:-

ஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும். ஆனால் மூலஸ்தானத்திலுள்ள ஒன்பது பேரும், அர்த்த மண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக 11 பேரும் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது.

பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வடஇந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோவில் மூடியிருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசனம் பண்ணலாம்.

ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும். இந்த எண்ணெயை ஒரு கிணற்றில் ஊற்றி வைப்பார்கள். தோல்வியாதி உள்ளவர்கள், இந்த எண்ணெயை உடலில் தேய்த்து, சில சொட்டுகள் சாப்பிட்டால் குணமாகிவிடும்.

🌺🌺 திருப்பதியில் இருந்து வந்த தாயார்:-

இங்குள்ள தாயாரின் உற்சவர் சிலை முதலில் திருப்பதியில் இருந்து தான் வந்ததாம். அங்குள்ளவர்கள் திருவேங்கடப் பெருமாளுக்கு ஸ்ரீ வரமங்காதேவியை கல்யாணம் செய்ய இருந்தனர். அப்போது பெரிய ஜீயரின் கனவில் தாயார் தோன்றி, "இவள் நாங்குநேரியிலுள்ள வானமாமலைப் பெருமாளுக்காக இருப்பவள்", எனக் கூறியதால் இத்தலத்திற்கு வந்துவிட்டாள் தாயார்.

மணவாள மாமுனிகளால் ஸ்தாபிக்கப்பட்ட அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான வானமாமலை ஜீயர் அவர்களின் தலைமையிடம் இங்கு உள்ளது.

🌺🌺 மங்களாசாசனம்:-

நம்மாழ்வார் 11 பாசுரங்கள் இத்தல பெருமாளை பாடியருளியுள்ளார்.

"ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா
என்றும் என்னையாளுடை வான
நாயகனே மணி மாணிக்கச் சுடரே தேனமாம்
பொழில் தண்சீரிவர
மங்கலத்தவர் கைதொழவுறை வான மாமலையே
அடியேன் தொழ வந்தருளே!!!"

🌺🌺 வழித்தடம் :-

திருநெல்வேலியிருந்து திருக்குறுங்குடி செல்லும் அனைத்து பேருந்துகளும் இத்தலத்தின் வழியாகவே செல்கின்றன.

அருள்மிகு தெய்வநாயகன் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு வரமங்கை தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

நாளைய பதிவு முதல் நவதிருப்பதி என்றழைக்கப்படும் ஒன்பது நவகிரகங்களுக்குரிய திருத்தலங்களில், முதலாவதான திருத்தலம் அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோவில் - திரு ஸ்ரீவைகுண்டம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

108 திவ்யதேசங்கள் - பதிவு 78 அழகிய நம்பி திருக்கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 78 🌹🌹🌹


இன்று முதல் பாண்டி நாட்டு திவ்யதேசங்கள் ஆரம்பம்.

ஆறு மூர்த்திகளின் கோலத்தில் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் காட்சி தரும் திவ்யதேசம். கொடிமரம் விலகிய நிலையில் அமைந்துள்ள அற்புதமான திவ்யதேசம். அருள்மிகு அழகிய நம்பி திருக்கோவில்:-

திருக்குறுங்குடி
மூலவர்: நின்ற நம்பி, குறுங்குடி நம்பி, பரிபூரணன், வடுகநம்பி
தாயார்: குறுங்குடிவல்லி நாச்சியார்
உற்சவர்: அழகிய நம்பி, வைணவ நம்பி
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: பஞ்சகேதக விமானம்
தீர்த்தம்: திருப்பாற்கடல், பஞ்சதுறை, சிந்து நதி

மங்களாசாசனம்: பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்

நாமாவளி: ஸ்ரீ குறுங்குடிவல்லீ ஸமேத ஸ்ரீ வைஷ்ணவநம்பி ஸ்வாமிநே நமஹ.

ஊர்: திருக்குறுங்குடி

🌺🌺 திருக்குறுங்குடி:-

உலகையே அளந்த உத்தமராம் இறைவன் நாராயணன், திருவிக்கிரம அவதார திருக்கோலத்தை குறுக்கி சிறிய திருமேனியாக காட்சி தந்து அருள்வதால் இத்தலத்திற்கு "திருக்குறுங்குடி" என்பது பெயர்.

இத்தலத்தைப் பற்றிய வரலாறு வராகபுராணம் மற்றும் கைசிக புராணத்தில் இடம் பெற்றுள்ளது.

🌺🌺 ஆறு நம்பிகள்:-

திருக்குறுங்குடி தலத்தை தரிசிக்கச் செல்பவர்கள் ஆறு மூர்த்திகளை தரிசிக்கலாம்.

1. நின்ற நம்பி
2. கிடந்த நம்பி
3. இருந்த நம்பி
4. திருப்பாற்கடல் நம்பி
5. வைணவ நம்பி
6. மலைமேல் நம்பி

நின்ற நம்பியே இங்கு மூலவ மூர்த்தியாகப் போற்றப்படுகிறார். முதல் மூன்று நம்பிகள் திருக்குறுங்குடி தலத்தின் உள்ளேயே தனியாக சன்னதி கொண்டு அருள்கிறார்கள்.

திருப்பாற்கடல் நம்பி சன்னதி, கோவிலிலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் "திருப்பாற்கடல்" என்னும் ஓடையின் கரையில் அமைந்துள்ளது.

இதற்கு அருகில் "திருப்பரிவட்டப்பாறை" என்ற இடத்தில் வைணவ நம்பி சன்னதி உள்ளது.

திருக்குறுங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள மலையின் மேல் "மலை மேல் நம்பி" சன்னதி அமைந்துள்ளது.

🌺🌺 விலகிய கொடிமரம்:-

இத்தலத்திற்கு மேற்கே உள்ள மகேந்திரகிரி என்னும் இடத்தில் ஆழ்வார்களில் ஒருவரான "திருப்பாணாழ்வார்" அவதரித்த, தாழ்ந்த வகுப்பாண பாணர் வகுப்பில் அவதரித்தவர் "நம்பாடுவான்" என்பவராவார்.

அவர் பல காலமாக ஏகாதசி விரதம் அனுஷ்டித்து வந்தார். ஏகாதசி விரதத்தின் மகிமை பாத்ம புராணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நம்பாடுவான் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. இவரது பக்திக்கு மனமிறங்கிய இறைவன் ஒருநாள் கொடிமரத்தை விலக்கி நம்பாடுவான் முன்னே வந்து, நின்ற நம்பி பெருமாள் கிட்சி தந்து அருளினார்.

இதன் காரணமாகவே இன்றளவும் இக்கோவில் கொடிமரம் விலகிய நிலையில் உள்ளது.

🌺🌺 முக்தி கண்ட ஆழ்வார்:-

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரின் வேண்டுகோளுக்கு இணங்க, குறுங்குடி நம்பி முக்தி அளித்ததாக ஐதீகம்.

திருவரங்கம் சென்ற ஆழ்வாரிடம் அரங்கநாதப் பெருமாள் குறுங்குடி செல்லும்படி கட்டளையிட்டதாகவும், அவ்வாறே இங்கு வந்து பல காலம் தங்கி முக்தியடைந்ததாகவும் கூறப்படுகிறது.

🌺🌺 மங்களாசாசனம் :-

நம்மாழ்வார் - 13 பாசுரங்கள், பெரியாழ்வார் - 1 பாசுரம், திருமழிசை ஆழ்வார் - 1 பாசுரம், திருமங்கையாழ்வார் - 25 பாசுரங்கள் என மொத்தம் 40 பாசுரங்களால் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

"கரண்ட மாடு பொய்கையுள் கரும்பணைப்
பெரும் பழம் புரண்டு வீழ வாளை பாய்
குறுங்குடி நெடுந்தகாய் திரண்டு
தோளி ரணியன் சினங்கொளாக
மொன்றையும் இரண்டு கூறு செய்துகந்த
சிங்க மென்ப துண்ணையே!!!"

- திருமழிசை ஆழ்வார்.

🌺🌺 சிறப்புகள்:-

கொடிமரம் விலகிய நிலையில் அமைந்துள்ள திவ்யதேசம்.

திருமகள் பிராட்டி குறுங்குடிவல்லி நாச்சியார் என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

நான்கு ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம்:-

திருநெல்வேலியிலிருந்து மேற்கு திசையில் 42 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில் வள்ளியூர் சென்று, அங்கிருந்து திருக்குறுங்குடி செல்லலாம்.

அருள்மிகு அழகிய நம்பி திருவடிகளே சரணம்.
அருள்மிகு குறுங்குடிவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில்:-

அருள்மிகு தோதாத்ரிநாதன் திருக்கோவில் - திருவரமங்கை திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"