Monday, May 11, 2020

நாடாவி கிணறு

நாடாவி கிணறு 🙏

காஞ்சிபுரத்திற்கு அருகில் ஐயங்கார் குளம் எனும் திருத்தலத்தில் உள்ள சஞ்சீவிராயர் சுவாமி கோயிலையொட்டி நடவாவிக் கிணறு ஒன்று உள்ளது.  

இந்தக் கிணற்றுக்குள் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபம் உள்ளது.  

இந்தப் பெரிய கிணற்றில் சித்ரா பௌர்ணமி அன்று ஒரு நாள் மட்டும் உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றி 16 கால் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாளை எழுந்தருளுவர்.

மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்வர். 

இரண்டு நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சுவாமிகளைத் தரிசிக்கலாம்.  

அதன்பின் கிணற்றில் நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும்.
🙏🙏🙏

No comments:

Post a Comment