Monday, May 25, 2020

திரிலோசனதாசர்

திரிலோசனதாசர் ஒரு பொற்கொல்லர் (நகை செய்பவர்) சிறு கிராமத்தில் வசித்த அவர் கண்ணன் மேல் தீராத பக்தி கொண்டவர் --அவரது மனைவி கனகாபாயும்--கண்ணன் மேல் பக்தி கொண்டவர் --இருவரும் அனுதினமும் கண்ணனை வணங்கி பாமாலை பாடிக்கொண்டே தத்தம் வேலைகளை துவங்குவர் 

திரிலோசனதாஸர் தெய்வ விக்கிரகங்களுக்கு மட்டுமே நகை செய்து கொடுப்பார் ---அதில் வரும் வருமானத்தை கொண்டு வீட்டின் பொருளாதார செலவு போக மீதியை கண்ணனின் புகழ் பாடும் பாகவதர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடுவார் ----

அந்த நாட்டின் அரசனான முஹம்மது அலி தன் மகள் சாந்த் -பீபியின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு திரிலோசனதாசரிடம் நகைகள் செய்து தருமாறு கூறி நகை செய்ய வைரமும் --ரத்தினமும் -தங்கமும் காவலர்களிடம் கொடுத்து அனுப்பினார் --திரிலோசனதாசரோ பகவானை நினைத்து வேலை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது இதில் எங்கே நான் அரசரின் மகளுக்கு நகை செய்து தரமுடியும் வைத்து விட்டு போங்கள் முயற்சி செய்கிறேன் ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றார் காவலர்களிடம் ---

ஆனால் ஒரு வார காலமும் காவலர்கள் கொடுத்த பொன்-மூட்டைகள் அப்படியே இருந்தது திரிலோசனதாசர் அதை பெயருக்கு கூட பிரித்து பார்க்கவில்லை ---காவலர்கள் நகை தயாராக இருக்கும் என்ற நம்பிக்கையில் திரிலோசனதாசர் இல்லம் வந்தனர் ---அவர்களிடம் --என்னை தேடி வந்த கிருஷ்ண-பக்தர்களை உபசரிக்கவே எனக்கும் -என் மனைவிக்கும் நேரம் சரியாக இருந்தது தயவு செய்து வேறு பொற்கொல்லரிடம் நகையை செய்து கொள்ளுங்கள் என்று கூறி பொன் -மூட்டையை திருப்பி கொடுத்தார் ---

காவலர்களும் அவர் கூறியதை அப்படியே அரசரிடம் கூறி பொன்-மூட்டைகளை திருப்பி கொடுத்தனர் ---இதனால் மன்னனுக்கு அவமானம் ஏற்பட்டு அது கோபமாக மாறியது ---என்னை மன்னன் என்றும் பாராமல் என் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் அவமதிக்கிறானா அந்த பொற்கொல்லன் ---காவலர்களே இந்த பொன்-மூட்டையை மீண்டும் அவனிடமே எடுத்து செல்லுங்கள் சரியாக இரண்டு நாட்கள் தான் அவகாசம் அதற்குள் இந்த மூட்டையில் உள்ள பொன்கள்,ரத்தினம்,வைரம் ஆகியவைகளை கொண்டு நகை செய்து தரவேண்டும் அப்படி செய்து தராவிட்டால் பொற்கொல்லனுக்கு மரணதண்டனை என்று தீர்ப்பளிக்கிறேன் என கூறி ஒரு ஓலையில் அதை எழுத்து வடிவமாக எழுதி அரசு முத்திரை குத்தி அதில் கையொப்பம் இட்டு காவலர்களிடம் அரசாணையும்--பொன்மூட்டைகளையும் கொடுத்தனுப்பினார் ---

காவலர்களும் திரிலோசனதாசரிடம் பொன்-மூட்டைகளை கொடுத்து அரசர் கூறிய விவரத்தை கூறி சென்றனர் ---திரிலோசனதாசர்--இரண்டு நாட்களுக்குள் எப்படி நகை செய்ய முடியும் எப்படியும் ஒரு வாரம் பிடிக்குமே நகை செய்ய ---அரசர் கட்டளையிட்டால் இட்டதுதான் எப்படியும் நம் உயிர் இன்னும் இரு நாட்களில் போக போகிறது --போகும் இந்த உயிர் கண்ணனை நினைத்து கொண்டாவது போகட்டுமே என்று நினைத்து --காட்டுக்குள் சென்று கண்ணனை நினைத்து கொண்டே தியானத்தில் ஆழ்ந்து விட்டார் ---இங்கே இல்லத்தில் அவர் மனைவி நம் கணவர் உயிர் போன பின்பு நாமும் உடன் கட்டை ஏறுவதே சரியென நினைத்து அவளும் பூஜை அறையில் அமர்ந்து கண்ணனை நினைத்து தியானம் செய்தாள்---

நடப்பவையெல்லாம் வைகுண்டத்தில் இருந்து பார்த்து ரசித்து கொண்டிருந்த திருமால் --மஹாலக்ஷ்மியோடு பூலோகம் வந்தார் ---மஹாலக்ஷ்மியிடம் --திருமகளே ---செல்வத்தை வாரி வழங்கும் நீ இன்று என் அன்பன் திரிலோசனதாசருக்காக---எம்மோடு சேர்ந்து பொன் -மூட்டைகளை கொண்டு நகை செய்ய உதவி புரிய வேண்டும் என்று கூறி திரிலோசனதாசர் உருவத்துக்கு திருமாலும் அவர் மனைவி கனகாபாய் உருவத்துக்கு திருமகளும் மாறி திரிலோசனதாசர் இல்லம் வந்து வேலை செய்ய துவங்கினர் --இரண்டு நாட்களும் இருவரும் எந்த வித உணவும் உறக்கமும் இன்றி வேலை செய்து பொன்-நவரத்தினம்-வைரங்களை --மாலையாக இணைந்து அழகான வேலைப்பாடுகளுடன் நகைகள் செய்த இருவருமே திரிலோசனதாசர்--அவர் மனைவியின் உருவத்தோடு அரசரிடம் சென்று நகைகளை கொடுத்தனர் --

நகைகளை பிரமிப்பாக பார்த்தார் அரசர் காரணம் நகைகளை இரண்டு நாட்களுக்குள் இத்தனை பிரமாதமாக இந்த பொற்கொல்லர் செய்து கொடுத்துள்ளாரே என்று நினைத்து மகிழ்ந்து பொற்கொல்லரே எனது அன்பு பரிசாக பொன்னும் பொருளும் தாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறி ஒரு பெட்டியில் பொன்னையும்--பொருளையும் அடுக்கி கொடுத்தார் மன்னர் ---திரிலோசனதாசர் உருவில் இருந்த திருமாலோ--மன்னா ---இரு நாட்களும் உணவும் உறக்கமும் இன்றி நகை செய்துள்ளேன் அதனால் எனக்கும் எனக்கு நகை செய்ய உதவி புரிந்த என் மனைவிக்கும் மிகவும் அசதியாக உள்ளது சற்று ஓய்வு எடுத்து விட்டு நாளை வந்து வாங்கி கொள்கிறோம் என்று கூற --மன்னனும் ---சரி என்று அவர்களுக்கு நன்றி கூறி வழியனுப்பி வைத்தான் ---

அரண்மனையை விட்டு வெளியே வந்த திருமாலும் --திருமகளும் நேரே வைகுண்டம் சென்றனர் ----காட்டில் தியானம் செய்த திரிலோசனதாசர் விழிப்பு ஏற்பட்டு இல்லம் வந்தார் ---இங்கே அவரது மனைவியும் தியானத்தில் இருந்து விழித்து எழுந்தார் --திரிலோசனதாசர் ---மனைவியிடம் ---கனகா காவலர்கள் என்னை கைது செய்ய வருமுன் --அரச கட்டளையை ஏற்று நான் அரண்மனை செல்கிறேன் ---நீ---நம் இல்லம் தேடி வரும் பாகவதர்களுக்கு வயிறார உணவு கொடுத்து தவறாது உபசரிக்க வேண்டும் என்று கூற--- -கனகாவோ---ஸ்வாமி நீங்களே போன பிறகு எனக்கு ஏது வாழ்வு உங்களுடன்-கட்டை ஏறுவதே எனக்கு சிறப்பென கருதுகிறேன் என்னை வற்புறுத்த வேண்டாம் என்று கூற ----திரிலோசனதாசரும் மனைவியின் வார்த்தைக்கு மதிப்பளித்து --- இருவரும் அரண்மனை வந்தனர் --

வந்த இடத்தில இருவருக்கும் ஏக --போக வரவேற்பு ----இருவரையும் ஆசனத்தில் அமர வைத்து உபசரித்தனர் அரண்மனை ஊழியர்கள் ---திரிலோசனநாதருக்கோ வியப்பு மரண-தண்டனை எதிர்பார்த்து வந்த தனக்கு உபசரிப்பா என்று யோசித்து கொண்டிருக்கும்போது அரசர் வந்தார் அங்கே --பொற்கொல்லரே இரண்டே நாட்களில் மிகவும் தத்துரூபமாக --அழகாக நகைகள் செய்து கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி இந்தாருங்கள் நான் நேற்று உம்மிடம் கூறியபடி பொன்னும் பொருளும் அடங்கிய பெட்டி காவலர்கள் சுமந்து வருவார்கள் இல்லத்திற்கு எடுத்து செல்லுங்கள் என்று அரசர் கூற----மன்னர் கூறியதை கேட்ட திரிலோசனதாசருக்கோ ஒன்றும் புரியவில்லை --மன்னா---நான் நகை கொடுத்தேனா எங்கே நான் செய்த நகைகளை எடுத்து வாருங்கள் பார்ப்போம் என்றார் ---

அரசர் மந்திரிக்கு கண்ணசைக்க--அவர் நேற்று திரிலோசனதாசர் வடிவில் வந்து திருமால் செய்த நகையை அவரிடம் காண்பித்தார் ---அதை பார்த்ததும் திரிலோசனதாசருக்கு உண்மை புரிந்தது கலங்கிய கண்களுடன் தான் காட்டில் தியானம் செய்ய சென்றதையும் --தன மனைவி பூஜையறையில் தியானம் செய்ததையும் கூறி --மன்னா உம் மகள் மிகவும் கொடுத்து வைத்தவள் ---கண்ணனின் கை--வண்ணத்தில் நகை செய்து அதை அணியும் பாக்கியம் யாருக்கு கிடைக்கும் என்று கூற ---அரசனோ --திரிலோசனதாசரின் பாதங்களில் விழுந்து --அய்யா உங்களுக்காக இறைவனே உங்கள் உருவில் வந்து இரவும் பகலும் பாராது வேலை செய்துள்ளான் என்றால் நீர் எவ்வளவு பெரிய பாக்கியசாலி இதோ என் அன்பு காணிக்கையாக இந்த பொன்னும் --பொருளும் ஏற்றுக்கொள்ளும் என்று கூற ----

திரிலோசனதாசர் --மன்னா கண்ணன் செய்த வேலைக்கு எனக்கு கூலியா ---இந்த பொன்னையும் பொருளையும் அவனது அடியார்களுக்கு அற்பணியுங்கள் என்று கூறி விட்டு திரிலோசனதாசரும் ---அவரது மனைவியும் இல்லம் வந்தனர் ----

என் கருத்து ---இறைவன் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையே நம்மை காப்பாற்றும் ---போற்றுவோம் கண்ணனை ---கண்ணனை போற்றி பாடும் அடியவர்களையும் போற்றி பாடுவோம் பெறுவோம் அவனது அருளை ---- கிருஷ்ணார்ப்பணம் ----/\-----

No comments:

Post a Comment