#ரவை பேரீச்சம்பழ அல்வா 👩🍳
தேவையான பொருட்கள்
ரவை - 1/2 கிலோ
பேரீச்சம்பழம் - 1/2 கிலோ
வேர்க்கடலை - 200 கிராம்
சீனி - 1 /4 கிலோ
ரின் பால் ( மில்க் மெய்ட ்) - 1 /4 கிலோ
நெய் - தேவையானளவு
செய்முறை
முதலில் பேரீச்சம் பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.
கடாயில் நெய்யை ஊற்றி (நெய் அதிகமாக இருந்தால் வாசனையும் நன்றாக இருக்கும்) அதில் பேரீச்சம் பழத்தையும் வேர்கடலையையும் போட்டு நன்கு வதக்கவும்.
பேரீச்சம் நன்கு மசிந்தவுடன் ரவையையும் சீனியையும் பேரீச்சம்பழ கலவைக்குள் கொட்டி நன்றாக கலக்க வேண்டும்.
ரவையும், பேரிச்சம் பழமும் நன்கு கலந்த பிறகு மில்க் மெய்டை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
பின்னர் கடாயை இறக்கி, சூடு தணிவதற்குள் தட்டில் சிறிதளவு நெய்யை தடவி அதில் ஊற்றி விரும்பிய வடிவில் வெட்டவும்.
No comments:
Post a Comment