Today's special காஞ்சிபுரம் இட்லி (குடலை) அடியேன் கைவண்ணத்தில்..
உங்களுக்காக Recipe..செய்முறை :
இதற்கு பெயர் காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி - இது காஞ்சிபுரம் கோவிலில் செய்து வரதனுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.
குடலை - சின்ன சின்ன மூங்கில் கூடைகளில் மந்தாரை இலைகள் மற்றும் வாழை இலைகள் வைத்து வார்ப்பார்கள் .
எந்த அளவு மாவு கெட்டியாக இருக்குமோ அந்த அளவு ரொம்ப நல்லா இருக்கும்.
தேவையானவை: ( அளவுக்காக - உங்களுக்கு தேவைக்கு ஏற்ப செய்து கொள்ளவும் )
அரிசி 1 கப்
உளுத்தம் பருப்பு 3/4 கப் ( சமயத்தில் அரிசிக்கு சமமாகவும் உளுந்து போடுவோம் )
மிளகு 1 டீ ஸ்பூன் உடைக்கவும்
சீரகம் 1 டீ ஸ்பூன் உடைக்கவும்
சுக்கு பொடி 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
நெய் மற்றும் உப்பு தேவைக்கு ஏற்ப & கறிவேப்பிலை
எப்படி செய்வது பார்ப்போம்
அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும், 1 மணி நேரம் ஊறினால் போதும். #கொஞ்சம்_கரகரப்பாக அரைக்கணும்.fb:sryasdmurali
இந்த குடல இட்லிக்கு அரைப்பது தான் ரொம்ப முக்கியம். உப்பு போட்டு கரைத்து அப்படியே ஒரு
12 மணிநேரம் வைக்கணும். மறுநாள் காலை, நெய்யை உருக்கி மாவில் விட்டு நன்கு கலக்கவும்.
மேலும் அதில் உடைத்த மிளகு, சீரகம், சுக்கு பொடி, பெருங்காயப்பொடி மட்டும் கறிவேப்பிலை போட்டு நன்கு கலக்கவும். மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
பெரிய எவர்சில்வர் (அவரவர்கள் வசதிக்குஏற்ப) குக்கரில் சிறிய பெரிய round size படி மரக்கா மாதிரியான பாத்திரம் எடுத்து கொள்ளவும்.
அதில் நெய் தடவிய மந்தாரை இலை அல்லது வாழை இலை வைத்து -
Size - 70% அளவுக்கு பாத்திரத்தில் ஊற்றவும் மாவை அதில் ஊற்றவும்.
குக்கரில் சிறிய தட்டு வைத்து இந்த பாத்திரத்தை வைக்கவும்.
அல்லது பெரிய அளவிலான பாத்திரங்களை (professional) வைத்து செய்யும் போது உள்ளே அதிகமான குடலை வைக்க முடியும்.
நம் இல்லங்களில் செய்யும் போது குக்கரில் ஒன்று இரண்டு பாத்திரங்களையே வைக்க முடியும்,
அதில் தண்ணீர் விடுவது தான் முக்கியம் பாத்திரத்தில் மாவு எங்கு உள்ளதோ அந்த அளவுக்கு இருக்கும்படி பார்த்து கொள்ளவும், (remove cooker wait )
அடுப்பு எரியும் தன்மையை பொருத்து 45 முதல் 60 நிமிடங்கள் வேக வைத்தல் வேண்டும்.
பதம் பார்க்க ஒரு கம்பியை எடுத்து இட்லியில் சொருகி பார்க்க ஒட்டாமல் வந்தால் நன்றாக வந்துள்ளது என அறியவும்.
சுவையான 'காஞ்சிபுரம் இட்லி' தயார் .
தொட்டுக்கொள்ள ஏதும் வேண்டாம் வெறுமனவே சாப்பிடலாம் நல்லா இருக்கும். வேண்டுமானால் தோசைமிளகாய் பொடி நல்லா இருக்கும்.இட்லி மேல நல்லெண்ணெய் விட்டு கொண்டும் சாப்பிடலாம்.fb:sryasdmurali
உங்கள் Sryas D. Murali Battachariar
No comments:
Post a Comment