Saturday, May 30, 2020

கும்பகோணம் டிகிரி காப்பி...

கும்பகோணம் டிகிரி காப்பி...


முன்பெல்லாம் கும்பகோணம் செல்லும்போது கோயிலுக்கு போகிறோமோ இல்லையா  டிகிரி காப்பி நினைவாகவே இருக்கும்.

அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக கும்பகோணம் வீதிகளில் வாக்கிங் போகும் போது காபி ஸ்டால்களில், பளபளவென்று துலக்கிய அந்த பித்தளை பாத்திரம், பாய்லரும் நம்மை இழுக்கும்.

ஒரு ஸ்ட்ராங் டிகிரி காபி என்று ஆர்டர் கொடுத்தவுடன் கள்ளிச் சொட்டு போன்ற பாலும் அதிலே சங்கமமாகும் காபி டிகாசனனும் சர்க்கரையும் சேர்ந்து தேவ பானமாகடபரா டம்ளரில் கொடுக்கும் போது சொட்டு சொட்டாக தொண்டையில் இறங்கும் போதுசொர்க்கம் கண்ணுக்கு தெரியும்.

இப்போது கூட கும்பகோணம் டிகிரி காபி என்று ஹைவேயில் பல இடங்களில் பார்க்கிறேன்.

 ஒரு நாள் கும்பகோணம் ஞாபகத்தில் ஹைவேயில் ஒரு கடையில் நுழைந்தேன்.

ஏதோ காபி.பெயரில் தான் டிகிரி.
But LKG.

காபி என்றால் ஒரு இலக்கணம் உண்டு. தரமான பால், கிரேடு காப்பித் தூள்,perfect mixing எல்லாம் சேர்ந்தால்தான் மெல்லிய கசப்போடு அந்த தேவபானம் கிடைக்கும்.

Star Hotelகளில் கூட பால் தனியாக, டிகாஷன் தனியாக கொடுத்து உயிரை வாங்குவார்கள். விலை மட்டும் பசு மாட்டு விலை போடுவார்கள்.

வீடுகளில் கூட பெரும்பாலோர் டீக்கு மாறிய காரணம் காபி தயாரிப்பின் கம்பசூத்திரம் தெரியாததாலோ என்னவோ.

Brucoffee எல்லாம் substituteதான்.

என்னதான் டீ, இயற்கை மூலிகை டீ, சுக்கு காபி என்று ஆரோக்யம்  கருதி வாதிட்டாலும், காபி காபிதான், காபி பிரியர்களுக்கு

No comments:

Post a Comment