குழந்தைகளின் பசியைத் தூண்டும் பொடி
சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் ஆகிய ஐந்தும் சம அளவில் எடுத்துக் கொள்ளவும்.சுக்கை மேல் தோல் நீக்கி, லேசாகப் பொன் நிறமாக வறுக்க வேண்டும்.இதை அனைத்தையும் நன்றாக சேர்த்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.இந்தப் பொடி அளவுக்கே ஆர்கானிக் வெல்லம் இருந்தால், அதை சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான்… பசியைத் தூண்டும் பொடி ரெடி.
குழந்தைகளின் காலை உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன், அரை டீஸ்பூன் இந்தப் பொடி எடுத்து, தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.வெல்லம், தேன் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.பசியும் எடுக்கும். குழந்தைகள் அடம் பிடிக்காமல் சாப்பிடுவார்கள்.
7 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்குகூட ஏற்றது.
No comments:
Post a Comment