பஞ்ச சமஸ்காரம்!👌👌👌👌👌
வலது தோளில்
#சக்கரமும்,
இடது தோளில்
#சங்கும் தரிப்பது!
இது #தாப சம்ஸ்காரம்!!
நெற்றி, நாபி, மார்பு,
கழுத்து, இரண்டு தோள்கள்,
பிடரி, பின்இடுப்பு
ஆகிய உடலின் பாகங்களில்
#கேசவ, #நாராயணா,
#மாதவ, #கோவிந்த,
#விஷ்ணு, #மதுசூதன,
#திரிவிக்கிரம, #வாமன,
#ஸ்ரீதர, #ரிஷிகேச,
#பத்மநாப, #தாமோதர
திருநாமங்களைத் தியானித்து
#திருமண் காப்பு அணிதல்!
இது #புண்ட்ர சம்ஸ்காரம்!!
கோத்திரம் சூத்திரம் முதலிய
சரீர சம்பந்தமான
சிறப்புகளை விடுத்து
#அடியேன் எனும் பெயரை ஏற்றல்!
இது #நாம சம்ஸ்காரம்!!
நல் மந்திரங்களை
#உபதேசித்தல்!
இது #மந்திர சம்ஸ்காரம்!!
வழிபாட்டு மூர்த்தியை அமைத்து
#திருவாராதனம் செய்தல்!
இது #யாக சம்ஸ்காரம்!!
இது ஐந்தும் பெற்றவரே
#ஸ்ரீவைணவ #நெறிகளுக்கு
உரிய #அதிகாரி!!
அங்கத்தில்
இந்த ஐந்தும் தரித்தவரே
ஐயங்கார்!!
அய்யங்கார் என்பது
#சாதியன்று!
வைணவத்தின் #அடையாளம்!!
கோமான் இரகுநாதன்
No comments:
Post a Comment