Wednesday, May 27, 2020

பஞ்சதந்திரக் கதை

⚡ பஞ்சதந்திரக் கதையில் ஓர் அழகிய சிறுகதை 

ஓர் ஊரில் ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான் 

பிச்சையெடுத்துக் கஞ்சி வடித்துக் குடித்தான் 

ஒருநாள், மிஞ்சிய கஞ்சிக் கலயத்தைக் கூரையில் கட்டித் தொங்க விட்டுவிட்டு 

அதன் கீழ் கட்டிலில் படுத்துக்கொண்டு கஞ்சிக் கலயத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் 

"பஞ்சம் வந்தால், அதை நூறு ரூபாய்க்கு விற்கலாம் 

அதில் இரண்டு ஆடுகள் வாங்கலாம் 

ஆறுமாதத்தில் ஆடுகள் பெருகும்

அப்புறம், ஆடுகள், மாடுகள் பெருகும் 

மாட்டை விற்று எருமைகள் வாங்கலாம் 

எருமைகள் பெருக 

குதிரைகள் வாங்கலாம் 

குதிரைகள் விற்றுத் தங்கம் வாங்கலாம் 

அப்புறம் ஒரு பணக்காரன் தன் மகளைத்தர வரதட்சணையுடன் வீடு தேடி வருவான் 

அவளை மணப்பேன் 

மகன் பிறப்பான் 

அவனுக்குச் "சந்திரப்பிரபு" என்று பெயர் வைப்பேன் 

நான் ஒரு புத்தகம் எடுத்துக் கொண்டு குதிரை லாயத்தில் அமர்ந்து படிப்பேன் 

சந்திரப்பிரபு என்னைப் பார்ப்பான் 

அவன் தன் தாயின் மடியிலிருந்து குதித்தோடி வந்து 

என் முழங்காலின் மீது ஏறி, லாயத்திற்குள் ஓடுவான் 

எனக்குக் கோபம் வரும் 

'பையனை இழுத்துக்கொண்டு போடி! '

என்று என் மனைவியிடம் கத்துவேன் 

ஆனால் 

அவள் அவசர வேலையாய் இருப்பாள் 

சொன்னபடி கேட்காததால் 

நான் எழுந்து சென்று அவளை இப்படி அடிப்பேன்..."

என்று எழுந்து, எதையோ எடுத்து ஓங்கி அடித்தான் 

கஞ்சிக் கலயம் உடைந்தது 

கஞ்சி அவன் மேல் வழிந்தது 

மிஞ்சியது தரையிலும் சிந்தியது 

மனிதன் ஆசைக் கனவுகள் கண்டுகொண்டே இருக்கிறான் 

ஆனால் 

அவன் அங்கேயேதான் இருக்கிறான் 

கடைசியில் அவன் கையில் மிஞ்சியிருப்பது 

ஆசை கனவுகளின் வெறும் சாம்பல் மட்டுமே 

அதற்கு மேல் மிஞ்சுவது கண்ணீரும் கூடத்தான் ⚡

✨ ஓஷோ ✨

No comments:

Post a Comment