திருவெண்காடு 609114
இறைவர் திருப்பெயர்:
சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர்.
இறைவியார் திருப்பெயர்:
பிரமவித்யாநாயகி.
தல மரம்:
ஆல், கொன்றை, வில்வம்,அரசு
தீர்த்தம் :
முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்; முதலில் அக்கினி, பிறகு சூரிய இறுதியாக சந்திர தீர்த்தம் என்றமுறையில் நீராடுவர்.)
காவிரி வடகரைத் தலம்
வழிபட்டோர்:
பிரம்மன், இந்திரன், வெள்ளையானை முதலியோர்.
இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது.
இத்தலம் மூன்று மூர்த்திகள், மூன்று அம்பிகைகள், மூன்று தல மரங்கள், மூன்று தீர்த்தங்கள் (முறையே சுவேதாரண்யர், அகோரர், நடராசர்; பிரம்மவித்யாநாயகி, துர்க்கை, காளி; வடஆலமரம், கொன்றை, வில்வம்; சூரிய, சந்திர, அக்கினி) ஆகியவற்றைப் பெற்றுள்ளது.
இத்திருக்கோயிலில் உள்ள முக்குளத்தில் (வெண்காட்டு முக்குளநீர்) நீராடி இறைவனை வழிபடின் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஞானசம்பந்தர் அமுதவாக்கு.🙏
No comments:
Post a Comment