Friday, May 29, 2020

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

💟🌈திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்🌈💟 

🕉️14.  அவன் சிறியனென்றேனோ அழ்வாரைப் போலே!🕉️

      
     💞 காரி மற்றும் உடைய நங்கை இருவரும் வெகு நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள். 

💞அவர்கள் திருக்குறுங்குடி நம்பியிடம் சென்று குழந்தை வரம் கேட்டனர்.

💞 நம்பி தங்களுக்கு எப்படி பட்ட குழந்தை வேணும் என கேட்டார். தம்பதியினர் அவரை போலவே குழந்தை வேணும் என கேட்கவே நம்பி மறுத்து விட்டார்.

💞 எனக்கு நிகர் நானே என்னை போல இன்னொருவன் இல்லை என்றார்.

💞 தம்பதியினர் அப்படி ஆனால் தாங்களே மகனாக வேணும் என கேட்டனர். 

💞நம்பி சரி என்று அவரே விஷ்வ சேனர் ஆக வந்து பிறப்பு எடுத்தார் ஆழ்வார் திருநகிரியில்.

💞 சடம் என்ற வாயு பிறந்த குழந்தையின் தலையை  தீண்டவே அது முற்பிறப்பை பற்றி மறந்து விட்டு அழும்.

💞 ஆனால் நம்மாழ்வாரை அந்த வாயு தீண்டவே இல்லை. 

💞அவர் அந்த காற்றை கோவப்பட்டு முறைத்தார். காற்று அவரை தீண்டாமல் சென்று விட்டது. 

💞சடம் மேல் கோவப்பட்டார் அதனால் சடகோபன் ஆனார்.  இவர் கலியுக தோன்றி 42 வது நாள் பிறந்தார்.

💞 பிறந்து 16 வருடங்கள் ஆகியும் சாப்பிடவும் இல்லை பேசவும் இல்லை.

💞 ஆழ்திருநகிரியில் உள்ள புளிய மரத்தில் உள்ள பொந்தில் பத்மாசனம் வடிவில் உட்காந்து தியானம் செய்தார்.

💞 மனித இனத்தில் இருந்து மாறுபட்டதால் மாறன் என்று அழைக்கபட்டார்.

💞 பெருமாளே விஷ்வ சேனர்  அம்சமாக பிறந்தார். 

💞ஆதி சேஷன் புளியமராக வந்தார். கருடன் மதுரகவியாக வந்தார். 

       💞  மதுரகவி ஆழ்வார் திருக்கோளூரில் பிறந்தார். மதுரகவி அயோத்தி சென்று இருந்தார். 

💞சந்தியா வந்தனம் செய்து கொண்டிருக்கும் போது தெற்கில் ஒரு வெளிச்சம் தோன்றியது. 

💞அது மிகவும் பிரகாசமாக இருந்தது. பார்க்கையில் தெய்வீகமாக இருந்தது.  மதுரகவி அதை தொடர்ந்து வந்தார்.

💞 அகோபிலம் திருவேங்கடம் திருவல்லிக்கேணி ஸ்ரீரங்கம் அழகர் கோவில் திருநெல்வேலி என தொடர்ந்து வந்தார்.

💞 அப்பவும் அந்த வெளிச்சம் தெற்கில் தெரிந்து கொண்டே இருந்தது. 

💞மீண்டும் அவரது பயணத்தை தொடர்ந்தார். இறுதியில் ஆழ்வார் திருநகிரி வந்தடைந்தார்.

💞 அப்போது வெளிச்சம் மறைந்து விட்டது. 

💞கீழே பார்த்தார் மதுரகவி அங்கு நம்மாழ்வார் தியான நிலையில் இருந்தார்.

💞 ஒரு கல்லை அவர் மீது மதுரகவி போட்டார். அவர் என்ன நிலையில் இருக்கார் என்பதை உறுதிபடுத்தவே அவ்வாறு செய்தார்.

💞 நம்மாழ்வார் கண்விழித்தார். 
அவரால் பேச முடியுமா என தெரிந்து கொள்ள மதுரகவி ஒரு கேள்வி கேட்டார் 

💞"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே இருக்கும்? ".  நம்மாழ்வார் பேசுகிறார் முதன் முறையாக "

💞 அதைத் தின்று அங்கே கிடக்கும்" என்றார்.  

💞முதல் 16 வருடங்கள் நம்மாழ்வார் பேசாம இருந்தார். பின் 16 வருடங்கள் 

     
💞நம்மாழ்வாரால் எங்கும் செல்லமுடியாது என்பதை உணர்ந்த மகாலட்சுமி பெருமாளிடம் விண்னப்பிக்க, 

💞அதன் காரணமாக நூற்றிஎட்டு திவ்ய தேசங்களில் உள்ள பெருமாள் அந்தந்த மூர்த்தியாக அவருக்கு சேவை சாதித்தார்

💞பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்ந்த நம்மாழ்வார்,

💞 தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையே நான்கு  வேதங்களின் சாரமாக திருவிருத்தம்,

💞திருவாசிரியம்,
பெரியதிருவந்தாதி,திருவாய்மொழி என்ற பிரபந்தங்களாக இயற்றினார்.

 💞அவரின் பாசுரங்களில்,  அகிலமே கொண்டாடும் நாயகன் அவன், 

💞 வேதங்களில் சொல்லப்பட்டவன் அவன் பரப்பிரம்மம் அவன் ஆனால் அவன் மிகவும் எளிமையானவன் என்கிறார். 

💞யார் பக்தி செய்கிறார்களோ அவர்களுக்கு எளிதில் கிடைப்பான். 

💞யசோதை கட்டி போட்டாள் அந்த பாசத்திற்கு கட்டுப்பட்டான்.

💞 இதையே அவன் சிறியன் என்கிறார் ஆழ்வார்.

💞நம்மாழ்வாரை போன்று  பெருமை தனக்கு இல்லையே என்கிறாள் அப்பெண்.

🌺சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்🌺

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment