ஸ்ரீதேவி நீளாதேவி பூமாதேவி ஸமேத ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் திருத்தங்கல் திவ்யதேசம், விருதுநகர் மாவட்டம் .
பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டியெழ தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம் புரிந்தார். பெருமாள் ஸ்ரீதேவியை மணம்புரிந்தருளிய திருத்தலம். மகாலட்சுமித் தாயார் தவம் புரிந்த தலம் அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் தலம்.தான் விரும்பியவரை மணமுடிக்க வைக்கும் நின்ற நாராயணப் பெருமாள் கோவில்.
பெருமாளின் மங்களாசாசனம் அடைந்த 108 திவ்ய தேசங்களில் இக்கோவில் 91வது திவ்ய தேசமாகும். தங்காலமலை மேல் அமைந்துள்ள இது குடைவரைக் கோவிலாகும். இக்கோவில் அமைந்துள்ள மலையின் மீதே சிவன் மற்றும் முருகனுக்குக் கோவில்கள் உள்ளன. பெருமாளின் சன்னதியில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி, ஜாம்பவதி ஆகிய நான்கு தாயார்கள் உள்ளனர். ஜாம்பவதியை இத்தலத்தில் வைத்தே பெருமாள் திருமணம் செய்தார்.

ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க 'தங்காலமலை' என்னும் இத்தலத்திற்கு வந்து "செங்கமல நாச்சியார்" என்ற பெயரில் கடும் தவம் புரிந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், இவளுக்கு காட்சி கொடுத்து இவளே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்டார். திருமகள் தங்கியதால் இத்தலம் "திருத்தங்கல்' என்ற பெயர் ஏற்பட்டது.
திருத்தங்கல் பெருமாள் கோயில் "தங்காலமலை' மீது அமைந்துள்ளது.சுவேத தீவில் இருந்த ஆலமரத்திற்கு தந்த வரத்தின்படி பெருமாள் இங்கு மலையாக நிற்கும் ஆலமரத்தின் மேல் தங்கி இருப்பதால் 'தங்காலமலை" என்றும் "தங்காலப்பன்" என்று மூலவருக்கும் திருநாமம்!
கருடாழ்வார் இங்கு நான்கு திருக்கரங்களுடன் உள்ளார். முன்னிரு கரங்கள் வணங்கிய நிலையிலும், பின் கரங்களில் அமிர்த கலசம், வாசுகி நாகத்துடனும் நின்ற கோலத்தில் உள்ளார். தனக்கு எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இத்தலத்தில் மட்டுமே. நாகதோஷம் நீக்கும் தலமுமாம்!
No comments:
Post a Comment